ஆண்ட்ராய்டு அமைப்பில் நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்

socஆண்ட்ராய்டு போன்களில் வழக்கமான அம்சங்கள் தவிர எண்ணற்ற துணை வசதிகளும் இருக்கின்றன. இந்த துணை வசதிகள் உங்கள் ஆண்ட்ராய்டு அனுபவத்தை மேம்படுத்த வல்லவை என்றாலும், இவற்றில் பெரும்பாலானவை விருப்பத்தின் பேரில் பயன்படுத்தும் தன்மை கொண்டவை. எனவே செல்போன் முகப்பு பக்கங்களில் இவற்றை பார்க்க முடியாது. செட்டிங்ஸ் பகுதிக்குச்சென்று தேடி கண்டுபிடித்து பயன்படுத்த வேண்டும். அதிலும் ஆண்ட்ராய்டுக்கான புதிய அம்சங்களும், வசதிகளும் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில், பல பயனுள்ள துணை வசதிகள் செட்டிங்ஸ் பகுதியில் நமக்குத்தெரியாமலேயே மறைந்திருக்கலாம். இந்த வசதிகளை அறிந்து வைத்திருப்பது, கையில் இருக்கும் போனை மேலும் சிறப்பாக பயன்படுத்த உதவுவதோடு, பிரைவசி பாதுகாப்பிலும் கைகொடுக்கும்.

இந்த நோக்கில் நீங்கள் அறிந்திருக்க வேண்டிய ஆண்ட்ராய்டு அம்சங்கள்:

லாக் ஸ்கீரின் ரகசியம்

நீங்கள் விரும்பினால் ஆண்ட்ராய்டு போனில் லாக் ஸ்கீரின் அமைத்துக்கொள்ளலாம். இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. நீங்கள் விரும்பினால் லாக் ஸ்கீரினிலேயே நோட்டிபிகேஷன்களை பெற்று, பதிலளிக்கவும் செய்யலாம். இதுவும் புதிதல்ல. ஆனால் சிக்கல் என்னவெனில், இவ்வாறு லாக் ஸ்கீரினில் நோட்டிபிகேஷனை கையாளும் போது மற்றவர்களும் அவற்றை நோக்கும் வாய்ப்பு இருக்கிறது. போன் லாக் செய்யப்பட்டிருந்தால் கூட, நோட்டிபிகேஷன் தகவல்களை பார்க்கலாம். இதை தவிர்க்க ஒரு எளிய வழி இருக்கிறது.

போனில் பாஸ்வேர்டு அல்லது பேட்டர்ன் லாக் பாதுகாப்பை அமைத்துக்கொண்டு, செட்டிங்ஸ் பகுதிக்குச்சென்று நோட்டிபிகேஷன் வாய்ப்பு மற்றும் லாக் ஸ்கீரின் வாய்ப்புகளை கிளிக் செய்து, முக்கிய தகவல்களை மறைப்பதற்கான, ஹைடு சென்சிட்டிவ் நோட்டிபிகேஷன் காண்டெண்ட் வாய்ப்பை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த பூட்டு போட்ட பிறகு உங்களுக்கு வரும் நோட்டிபிகேஷன் தகவல்களை மற்றவர்கள் பார்க்க முடியாது.

இதே போல ஆட்டோ லாக் வசதியும், உடனே தோன்றுமாறு அமைத்துக்கொள்ளலாம். பொதுவாக போன் தானாக அனைந்த பிறகு, ஆட்டோலாக் இயக்கம் பெற சில நொடிகள் ஆகலாம். இந்த இடைவெளியில் விஷமிகள் போனை அணுகுவதை தவிர்க்க உடனடி லாக் வசதியை நாடலாம். சில போன்களில் இந்த வசதியை தேடல் பகுதி மூலம் கண்டுபிடிக்க வேண்டியிருக்கலாம்.

விளம்பரமே போ!

இணையத்திலும், ஸ்மார்ட்போன்களிலும் உங்களின் பல நடவடிக்கைகள் நிறுவனங்களால் கண்காணிக்கப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பின்னணியில் உள்ள கூகுள் நிறுவனத்திற்கு பயனாளிகள் பற்றி எந்த அளவுக்கு தகவல்கள் தெரியும் என்பதை தெரிந்து கொண்டால் அதிர்ச்சியாக இருக்கும். பயனாளிகளுக்கு ஏற்ற விளம்பரங்களை அளிப்பதற்காகவே பெரும்பாலும், இவ்வாறு இணையவாசிகளின் சுவடுகள் கண்காணிக்கப்படுகின்றன.

ஆனால் இதிலிருந்து ஓரளவு தற்காத்துக்கொள்ள வழி இருக்கிறது. செட்டிங்ஸ் பகுதிக்குச்சென்று, கூகுள் ஆட்ஸ் வாய்ப்பை வரவைத்து அதில் தோன்றும், ’ஆப்ட் அவுட் ஆப் ஆட்ஸ் பர்சனலைசேஷன்’ வாய்ப்பை தேர்வு செய்வதன் மூலம் இதிலிருந்து வெளியேறலாம். இப்படி செய்த பிறகும், விளம்பரங்கள் தோன்றும். ஆனால் அவை நீங்கள் விஜயம் செய்த தளங்களின் உள்ளட்டத்திற்கு ஏற்ப அமையாமல் பொதுவாக இருக்கும்.

ஜிபோர்டு வசதி

ஸ்மார்ட்போன்களுக்காக என்று கூகுள் உருவாக்கியுள்ள, விர்ச்சுவல் விசைப்பலைகையான ஜிபோர்டு செயலியை நீங்கள் அறிந்திருக்கலாம். விரைவாக டைப் செய்வதற்காக இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தி வரலாம். இல்லை என்றாலும், ஜிபோர்டு செயலியை பயன்படுத்துவது பற்றி பரிசீலிக்கலாம். கிளைடு டைப்பிங் உள்ளிட்ட வசதிகளை அளிக்கும் இந்த விசைப்பலகை எண்களை டைப் செய்வதில் உள்ள சிக்கலுக்கான தீர்வையும் அளிக்கிறது.

போனில் டைப் செய்யும் போது, சில நேரங்களில் எண்களை டைப் செய்ய வேண்டிய தேவை வரலாம். இது போன்ற நேரங்களில் எண்களுக்கும், எழுத்துக்களுக்குமாக மாறுவது சிக்கலாக இருக்கும். இதனால் நேரமும் விரையமாகும். இதை தவிர்க்க, ஜிபோர்ட் செட்டிங்ஸ் பகுதியில் , கீபோர்டு தேர்வுக்கு சென்று, பிரபரன்ஸ் வாய்ப்பு மூலம் நம்பர் ரோ வசதியை வர வைத்தால், கீபோர்டு மேல் பகுதியில், எழுத்துக்களுக்கு மேல், எண்கள் வரிசை தோன்றும். இதன் மூலம் எண்களுக்கு மாற வேண்டிய தேவை இல்லாமல் வேகமாக டைப் செய்யலாம். குரல் வழி டைப்பிங் வசதியையும் இது அளிக்கிறது.

உடனடி ஆப்கள்

செயலிகளில் புதிய வசதியான இன்ஸ்டண்ட் ஆப்ஸ் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். புதிய செயலிகளை இன்ஸ்டால் செய்யாமலேயே முன்னோட்டம் பார்க்க இந்த வசதி வழி செய்கிறது. முதலில் ஆண்ட்ராய்டு ஓரியோ வெர்ஷனில் அறிமுகமான இந்த வசதி படிப்படியாக லாலிபாப் உள்ளிட்ட வர்ஷன்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த வசதியை இயக்க வேண்டும். செட்டிங்ஸ் பகுதியில் கூகுள் சேவைகளுக்குச்சென்று, அதில் உடனடி ஆப்ஸ் வசதி இருக்கிறதா எனப்பார்த்து இயக்கி கொள்ளலாம். கூகுள் செட்டிங்ஸ் பகுதியில் உள்ள மற்ற வசதிகளையும் ஒரு பார்வை பார்த்து வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக கனெட்க்டட் ஆப் பகுதியில், எந்த எந்த செயலிகளுக்கு எல்லாம் எந்த தகவல்கள் பெற அனுமதி அளித்துள்ளீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட செயலிகளுக்கு அனுமதி தேவையில்லை என நினைத்தால் அதை ரத்து செய்யலாம்.

உடனடி ஆப்ஸ் வசதியை இயக்கிய பிறகு அதன் மூலம் செயலிகளை தேடலாம். இப்போதைக்கு அதிக செயலிகள் இல்லை என்றாலும் மிகவும் பயனுள்ள வசதி இது.

மேலும், கூகுள் செட்டிங்ஸ் பகுதியில் லொகேஷன் வசதியை தேர்வு செய்து, கூகுள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் உங்கள் சாதனத்தின் இருப்பிடத்தை டிராக் செய்வதையும் மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

இவை எல்லாம் பயனாளிகளுக்கான வசதிகள். இவைத்தவிர டெவலப்பர்களுக்கான பிரத்யேக வசதிகளும் ஆண்ட்ராய்டு போன்களில் இருக்கின்றன. இது பொதுவாக தொழில்நுட்ப விஷயம் தெரிந்தவர்களுக்கானது என்றாலும், சாதாரண பயனாளிகளும் இவற்றில் உள்ள அம்சங்களை அறிந்து வைத்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

ஆண்ட்ராய்டு அமைப்பு தொடர்பான அதிகாரபூர்வ வழிகாட்டுதல்களுக்கு: http://bit.ly/2kD9Aas

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

One Comment on “ஆண்ட்ராய்டு அமைப்பில் நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்

  1. Ravichandran R

    உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே! பல வசதிகளை இந்தமாதிரி யாராவது சொல்லும் போதுதான் தெரிகிறது.

    Reply

Leave a Comment to Ravichandran R Cancel Reply

Your email address will not be published.