வருங்கால தொழில்நுட்பம்

pro3

4தமிழ்மீடியாவில் வருங்கால தொழில்நுட்பம் எனும் தலைப்பில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுப்டம் தொடர்பாக தொடர் எழுது வருகிறேன். அதற்கான அறிமுகம் மற்றும் இணைப்பு:

விஞ்ஞானமும் , தொழில்நுட்பம் வியக்க வைக்கின்றன. அவற்றின் முன்னேற்றம் அதை விட அதிமாக வியக்க வைக்கிறது. தொழில்நுட்பம் சார்ந்த ஆய்வுகள் சோதனை என்ற நிலையில் இருந்து நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் அன்றாட வாழ்வில் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றன.

புதிதாக அறிமுகமாகும் நவீன தொழில்நுட்பங்கள் புதிய வசதியை அளிப்பதுடன் நடைமுறை பிரச்சனைகளுக்கான தீர்வாகவும் அமைந்துள்ளன. கம்பூட்டர் , ஸ்மார்ட் போன்கள், இணைய சேவை என ஏற்கனவே தொழில்நுட்பம் பல விதங்களில் நம் வாழ்வில் இரண்டற கலந்து விட்ட நிலையில் எதிர்காலத்தில் மேலும் பல நுட்பங்கள் நம் வாழ்வில் இணைய காத்திருக்கின்றன.

கம்ப்யூட்டர்களையே ஆடையாக அணியலாம் என்கின்றனர். எங்கும் சென்சார்கள் நிறைந்து எல்லாமே விழிப்புணர்வு பெற்றிருக்கும் என்கின்றர். கார்கள் தானாக இயங்கும் என்கின்றனர். எண்ணத்தை புரிந்து கொண்டு செயல்படும் நுட்பங்களும் சாத்தியமாகலாம் என்கின்றனர். இதனிடையே இயந்திர மனிதர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்ற எச்சரிக்கையும் செய்யப்படுகிறது.

இன்று ஆய்வுக்கூடங்களில் உள்ள பல நுட்பங்கள் நாளை நம் வாழ்வில் இணைந்து நினைத்து பார்க்க முடியாத மாற்றங்களை ஏற்படுத்த இருக்கின்றன. இத்தகைய வருங்கால தொழில்நுட்பங்களை இந்த தொடர் மூலம் உலகம் முழுவதும் உள்ள 4தமிழ்மீடியா வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தற்கு மகிழ்கிறேன் என்கிறார் கட்டுரையாளர் இரா.நரசிம்மன்.

இரா.நரசிம்மனை உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் பத்திரிகையாளர், தொழில்நுட்ப வலைப்பதிவாளர் மற்றும் ’இணையத்தால் இணைவோம்’ புத்தக ஆசிரியர் . இணையம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து தொடர்ந்து ஆர்வத்துடன் எழுதி வரும் சைபர் சிம்மனை நிச்சயம் நீங்கள் அறிந்திருப்பீர்கள், வாசித்திருப்பீர்கள்.

விகடன்.காம், சுட்டி விகடன், தமிழ் இந்து, தமிழ் கம்ப்யூட்டர் உள்ளிட்ட இதழ்களிலும் இவரது கட்டுரைகள் வெளியாகி உள்ளன. சைபர்சிம்மன் வலைப்பதிவில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் இணையம் சார்ந்து எழுதி வருகிறார். இவரது முதல் புத்தகமான ’இணையத்தால் இணைவோம்’, இணைய பயன்பாட்டிறகு வழிகாட்டும் வகையில் மிகச்சிறந்த இணையதளங்கள் பற்றிய விரிவான அறிமுகங்களின் தொகுப்பாக அமைந்துள்ளது.

புதிய தொழில் நுட்பங்கள் தொடர்பாக தமிழில் அழகாகவும், சிறப்பாகவும், எழுதி வரும் சைபர் சிம்மனின் “வருங்கால தொழில்நுட்பம்” இந்தப் புதிய தொடர், 4தமிழ்மீடியா வாசாகர்களுக்கு மட்டுமல்லாது தமிழர்கள் அனைவருக்குமே புதிய விடயங்களை அறிமுகம் செய்து தரும் எனும் பெரு நம்பிக்கையுடன் உங்கள் முன், அவரை அழைத்து வருகின்றோம்.- 4Tamilmedia Team
—————

http://www.4tamilmedia.com/knowledge/information/25464-9