Tag Archives: maps

வரலாற்று வரைபடங்களுக்கான இணையதளம்

mapsவரைபடங்கள் மீது, அதிலும் வரலாற்று கால வரைபடங்கள் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு ஓல்டுமேப்ஸ்ஆன்லைன் இணையதளம் ஏற்றதாக இருக்கும். பெயர் உணர்த்துவது போலவே இந்த தளம் பழைய வரைபடங்களின் இருப்பிடமாக திகழ்கிறது.

இந்த தளத்தில் வரலாற்று கால வரைப்படங்களை தேடிப்பார்க்கலாம். வரலாற்றின் குறிப்பிட்ட காலம் கட்டம் அல்லது குறிப்பிட்ட இடத்தை தெரிவித்து தேடும் வசதி இருக்கிறது.

தேடலில் ஈடுபடும் போதே அந்த கால சென்னை தொடர்பான பல்வேறு வரைபடங்களி பரிந்துரைக்கப்படுகிறது. தென்னக ரெயில்வே, தென்னிந்தியா, மலபார், கோரமண்டல் என பல விதமான வரைபடங்களை பார்க்க முடிகிறது.

வரலாற்று ஆர்வம் கொண்டவர்களுக்கு இந்த தளம் பொக்கிஷமாக அமையும். வரைபடங்களை அச்சிட்டுக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கான செயலி வடிவமும் இருக்கிறது.

 

இணைய முகவரி: http://www.oldmapsonline.org/

 

செயலி புதிது: கேரளா சுற்றுலா அழைக்கிறது

go-kerala-app-1210x500சுற்றுலா தொடர்பான தகவல்களை எளிதாக செயலி மூலம் பெறுவதை தான் ஸ்மார்ட்போன் பிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் கேரள மாநில சுற்றுலாத்துறை, மாநில சுற்றுலா தொடர்பான தகவல்களை உள்ளங்கையில் கொண்டு வரும் வகையில் விசிட் கேரளா அட்வென்சர் எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த செயலி மூலம் கேரளாவில் உள்ள சுற்றுலா மையங்கள் தொடர்பான தகவல்களை தெரிந்து கொண்டு பயணங்களை திட்டமிடலாம். ஒவ்வொரு இடம் தொடர்பான தகவல்களோடு ஒளிப்படங்கள் மற்றும்க் வீடியோக்களையும் காணலாம்.

மேலும் தகவல்கள் விளையாட்டு பாணியில் சுவாரஸ்யமாக அளிக்கப்பட்டுள்ளன. சலுகை கூப்பன்களை பெறும் வாய்ப்பும் உள்ளது.

சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஒட்டல்கள் அளிக்கும் சலுகைகளையும் பெறும் வாய்ப்புள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு: https://www.keralatourism.org/

 

இணையம் இல்லாத இடங்களை தேடி!

3062125-inline-10-this-app-will-help-you-find-the-edge-of-the-internetஎங்கே சென்றாலும், அங்கு இணைய இணைப்பு வேகமாக இருக்குமா? வயர்லெஸ் சிக்னல் வலுவாக இருக்குமா? போன்ற கேள்விகளே மனதில் எழுகின்றன. இணையத்தின் தேவை தான் இப்படி கேட்க வைக்கின்றன. இணைய வசதி உள்ள இடங்களில் கூட, அதன் தரத்தை சீர் தூக்கி பார்க்கவே தோன்றுகிறது. இணையம் அந்த அளவுக்கு முக்கியமாகி இருக்கிறது.

இவை நவீன வாழ்க்கையின் இயல்பு என்றாலும், எப்போதாவது இணையம் இல்லாத இடங்கள் பற்றி யோசித்திருக்கிறோமா? நெதர்லாந்து நாட்டைச்சேர்ந்த வடிவமைப்பாளரான ரிச்சர்டு விஜ்ஜென் (Richard Vijgen ) இந்த கேள்வியை கேட்டு அதற்கான பதிலை தேட உதவும் செயலியை உருவாக்கி இருக்கிறார்.
ஒயிட் ஸ்பாட்ஸ் எனும் பெயரிலான அந்த செயலி பற்றி பார்ப்பதற்கு முன் விஜ்ஜென் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

விஜ்ஜெட் டிஜிட்டல் கலைஞர்கள் என்று குறிப்பிடக்கூடிய நவீன பிரிவின் கீழ் வருகிறார். கலைக்காக அவர் கையாளும் சாதனங்கள் மட்டும் புதிதல்ல, அவர் உருவாக்கும் கலையும் புதுமையானவை. அது மட்டும் அல்ல, கலையின் மூலமாக அவர்கள் உணர்த்த முற்படும் செய்தி நம் காலத்திற்கான புரிதலை அளிக்க கூடியதாக இருக்கிறது. அந்த வகையில் விஜ்ஜென் தன்னை சமகால தகவல் கலாச்சார் பரப்பில் செயல்படுபவராக குறிப்பிடுகிறார். ஆய்வு மற்றும் வடிவமைப்பு வாயிலாக பிக் டேட்டா எனப்படும் தரவுகளின் குவியல்களில் இருந்து பெரிய கதைகளை தேட முற்படுவதாகவும் அவர் சொல்கிறார். தனது கலை முயற்சிகள் டிஜிட்டல் பரப்பில் வேரூன்றி இருந்தாலும் எப்போதுமே அவை பெளதீக அல்லது சமூக பரப்பிலும் தொடர்பு கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

தகவல்களை காட்சியாக உருவகப்படுத்தி பார்க்கும் வகையிலான டிஜிட்டல் படைப்புகளை அவர் உருவாக்கி கொண்டிருக்கிறார். இந்த வரிசையில் தான் சமீபத்திய செயலியான ஒயிட் ஸ்பேஸ் வருகிறது.
இந்த செயலி பற்றி பார்க்கும் முன், இதற்கு முன்பாக அவர் உருவாக்கிய செயலியை அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும். ஏனெனில் அந்த செயலியின் தொடர்ச்சியாகவே இது அமைந்துள்ளது.
விஜ்ஜென் உருவாக்கியுள்ள செயலிகள் நாம் வழக்கமாக அறிந்திருக்கும் செயலிகளை போன்றது அல்ல. நோக்கம்,செயல்பாடு இரண்டிலுமே அவை வித்தியாசமானவை. அவை அடிப்படையில் டிஜிட்டல் கலைபடைப்புகள். அதே நேரத்தில் நம் காலத்து தகவல்களை புரிய வைப்பவை!

ஒலியின் கட்டிடக்கலை என பொருள்படும் வகையிலான ஆர்கிடெக்சர் ஆப் சவுண்ட் என்பது தான் விஜ்ஜென் இதற்கு முன்னர் உருவாக்கிய செயலி. நம்மைச்சுற்றியுள்ள கண்ணுக்குத்தெரியாத தகவல் உலகை காட்சிப்படுத்தி பார்க்க வழி செய்யும் செயலி இது. ஜெர்மனியில் உள்ள கலைக்கூடத்தை இதை கண்காட்சியாக நிறுவி அதற்கு துணையாக ஒரு ஐபேடு செயலியையும் உருவாக்கி இருந்தார்.

நாம் இணையத்தை எளிதாக பயன்படுத்துகிறோம். ஆனால் இணயத்தை நம்மால் கண்ணால் பார்க்க முடிவதில்லை. இதை பார்க்கச்செய்யும் வகையில், இந்த செயலி ஜி.பி.எஸ் மூலம் இருப்பிடத்தை உணர்ந்து கொண்டு சுற்றியுள்ள செல்போன் கோபுரங்கள், செயற்கைகோள்கள் ஆகியவற்றை சுட்டிக்காட்டுகிறது. அதோடு, வை-பை ரவுட்டர்கள் மற்றும் கேபிள்கள் மூலம் நம்மைச்சுற்றி சுழன்று கொண்டிருக்கும் தரவுகளின் கட்டமைப்பையும் பார்க்க வைக்கிறது.

ஒரு தகவல் கலைஞராக நம்மால் பார்க்க முடியாமல் இருப்பதை காட்சி படுத்தி காட்டுவதே தனக்கு சுவாரஸ்யம் அளிப்பதாக அவர் சொல்கிறார். 24 மணி நேரமும் நாம் இணையம் அல்லது வயர்லெஸ் மூலம் சாதனங்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறோம். ஆனாலும் வானொலி காலத்தில் இருந்து போல அல்லாமல் இப்போது தகவல் உலகின் அடிப்படைய கட்டமைப்பு நம் கண்ணில் படாமல் மறைந்து இருக்கிறது என்கிறார் அவர். வை-பை ரவுட்டர்கள் புத்தக அலமாரியின் பின்னே மறைந்து இருக்கின்றன. செல்போன் கோபுரங்கள் கட்டிடங்களுடன் கட்டிடங்களாக கலந்திருக்கின்றன.

இப்படி கண்ணுக்குத்தெரியாமல் இருக்கும் டிஜிட்டல் பரப்பை, உருவகப்படுத்துவதன் மூலம் ஐபேடில் பார்க்க வைக்கிறார் விஜ்ஜென். இதென்ன அத்தனை முக்கியமா? என்று கேட்கலாம்.
நம்முடைய காலத்தில் எது நீக்கமற நிறைந்திருக்கிறதோ அதை நம்மால் பார்க்க முடியாமல் இருப்பதி என்னை கவலையில் ஆழ்த்துகிறது என்கிறார் விஜ்ஜென். தொழில்நுட்பம் மேலும் மேலும் வெளிப்படையான தன்மை கொள்ளும் போது, நம் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கும் தரவுகளுடன் தொடர்பு கொள்ள காட்சிப்படுத்தல் உதவுகிறது என்றும் அவர் சொல்கிறார்.

இதை தான் நம்மைச்சுற்றியிருக்கும் தகவல் மண்டலமாக அவர் உருவாகப்படுத்தி காட்டியிருக்கிறார்.
இதன் தொடர்ச்சியாக தான் ஒயிட் ஸ்பாட்ஸ் செயலியை வடிவமைத்துள்ளார். இந்த செயலியை இயக்கியதுமே அது நம்மைச்சுற்றியுள்ள செல்போன் கோபுரங்களையும், அவை நம்முடன் எப்படி தொடர்பு கொண்டுள்ளன என்பதையும் பார்க்க முடியும். நாம் இருக்கும் இடத்தில் இருந்து அவை எவ்வளவு தொலைவில் உள்ளன என்பதை தெரிந்து கொள்ளலாம். ஸ்மார்ட்போனை உயர்த்தி பார்ப்பதன் மூலம் இந்த விவரங்களை திரையில் காணலாம். இதன் மூலம் நம்மை சுற்றியுள்ள இணைய உலகை காட்சிப்படுத்திக்கொள்ளலாம். இது முதல் பகுதி தான். இனி அடுத்த கட்டமாக, இணையம் இல்லாத இடங்களுக்கு அழைத்துச்செல்லவும் என கட்டளையிட்டால், திரையில் வெள்ளை கோடுகள் தோன்றுகின்றன. இவை எல்லாம் இணைய வசதி இல்லாத இடங்கள். இவை பெரும்பாலும் கடல் பரப்பில் அமைந்திருதாலும், நிலப்பரப்பிலும் பல பகுதிகளில் வெள்ளை கோடுகளை பார்க்கலாம். அங்கெல்லாம் இணைய இணைப்போ வயர்லெஸ் வசதியோ இல்லை என புரிந்து கொள்ளலாம்.
பொதுவாக இணையத்தை நாம் புவியியல் நோக்கில் பார்ப்பதில்லை ,ஆனால் அது அத்தன்மை கொண்ட்தே என்கிறார் விஜ்ஜென். அவரது செயலி இதை புரிய வைக்கிறது. பூவியியல் பரப்பில் இணையம் இல்லாத இடங்கள் நமக்கு பல விஷயங்களை உணர்த்தகூடியதாக இருக்கின்றன. பொருளாதார காரணத்தில் துவங்கி பல விஷயங்கள் இதற்கு பின்னே உள்ளன.

21ம் நூற்றாண்டில் இணைய வசதி இல்லாத இடங்களில் இருப்பவர்கள் எந்த தரவுகளையும் உற்பத்தி செய்வதில்லை, அவர்களை கூகுளில் தேட முடியாது, மேலும் அவர்கள் இணையம் மூலம் புரிந்து கொள்ளப்படும் உலகில் அங்கம் வகிக்காதவர்களாக இருக்கின்றனர் என்கிறார் விஜ்ஜென்.
இவற்றை எல்லாம் உணரக்கூடிய வகையில், இணைய வசதி இல்லாத பகுதிகளில் வசிப்பவர்களிடம் எடுக்கப்பட்ட கதைகள் மற்றும் வீடியோக்களையும் வரைபடத்தின் மூலம் அணுக வழி செய்யப்பட்டுள்ளது.

இந்த செயலியை ஆண்ட்ராய்டு போன்களில் அணுகலாம். – http://www.white-spots.net/ இணைய உலகம் தொடர்பான புதிய புரிதலுக்கு இது நிச்சயம் உதவும்.

ரிச்சர்ட் விஜ்ஜென் படைப்புகள் பற்றி அறிய: http://www.richardvijgen.nl/

கூகுள் ஸ்டிரீட் வியூ சர்ச்சை ஏன்? ஒரு அறிமுகம்

Googles-Street-View
கூகுள் ஸ்டிரீட் வீயூ என்றால் என்ன?

முன்னணி தேடியந்திரமான கூகுள் நிறுவனத்தின் துணை சேவைகளான கூகுள் வரைபடம் மற்றும் கூகுள் பூமி ஆகியவற்றில் உள்ள ஒரு தொழில்நுட்ப வசதி இது. கூகுள் ஸ்டீரீட் வியூ மூலம் நிலப்பரப்பு காட்சிகளை நம்மைச்சுற்றிலும் அனைத்து கோணத்திலும் பார்க்க உதவுகிறது. பனோரெமிக் வியூ என அழைக்கப்படுகிறது. உலகின் நகரங்களையும், நகரத்து தெருக்களையும், நினைவுச்சின்னங்களையும் இந்த தோற்றத்தில் பார்க்கலாம்.

எப்போது துவங்கியது?

கூகுள் ஸ்டிரீட் வியூ சேவை 2007 ல் அறிமுகமானது. கூகுள் நிறுவனர் லாரி பேஜ் படித்த ஸ்டான்போர்டு பல்கலை வளாகத்தில் முதலில் அறிமுகமானது. 2008 ல் அமெரிக்காவின் நியுயார்க் நகரில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டது. தனிநபர்களின் பாதுகாப்பு கருதி முகங்கள் துல்லியமாக தெரியாமல் மறக்கப்பட்டன.

எப்படி செயல்படுகிறது?

ஸ்டிரீட் வியூ இம்மர்சிவ் மீடியா எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இது எப்படி செயல்படுகிறது என்றால், குறிப்பிட்ட இருப்பிடம் அதன் சகல திசைகளிலும் எண்ணற்ற கோணங்களில் புகைப்படும் எடுக்கப்படுகின்றன. பின்னர் அந்த புகைப்படங்கள் அனைத்தும் மென்பொருள் உதவியுடன் ஒன்றாக கோர்த்து தைக்கப்பட்டு முழு தோற்றமாக உருவாக்கப்படுகிறது. வழக்கமான புகைப்படத்தின் தட்டையான தன்மையுடன் அல்லாமல், ஒரு இடத்தை சுற்றிலும் பார்க்கும் அனுபவத்தை இது அளிக்கும். புகைப்படத்தை அங்கும் இங்கும் , மேலும் கீழும் இழுத்து பார்க்கலாம்.

என்ன சிறப்பு?

இருந்த இடத்தில் இருந்து புதிதாக இரு இடத்தை சுற்றிப்பார்த்தது போன்ற உணர்வை இந்த சேவை அளிக்கும். அந்த இடத்தில் நாம் இருப்பது போன்ற உணர்வை பெறலாம்.

ஸ்டிரீட்வியூ கார்!

இந்த வசதியை அளிக்க கூகுள் பிரத்யேகமான காரை பயன்படுத்துகிறது. அந்த காரில் சின்ன ரோபோ போன்ற காமிரா உண்டு. கார் வீதி வீதியாக காமிரா சுழன்று 360 கோணங்களிலும் படம் எடுக்கும். இந்த படங்கள் பின்னர் ஒன்றிணைக்கப்படும். கார்கள் செல்ல முடியாத இடங்களில் காமிராவை கையில் வைத்துச்செல்வதும் உண்டு. கடலுக்கடியிலும் கொண்டு சென்றுள்ளனர்.
Googles-Street-View

GoogleStreetViewCar_Subaru_Impreza_at_Google_Campus
என்ன பார்க்கலாம்?

கூகுள் ஸ்டிரீட் வியூ சேவை உலகின் 76 நாடுகளில் இருக்கிறது. இந்த நாடுகளில் உள்ள நகரத்து காட்சிகளை காணலாம். நகரங்கள் மட்டும் அல்ல, எகிப்து பிரமிடு உள்ளிட்ட நினைவுச்சின்னங்கள், அமேசான் மழைக்காடுகள், பனிக்கரடிகளின் துருவப்பகுதி, நெல்சன் மண்டேலா சிறைவாசம் அனுபவித்த சிறைச்சாலை என பல முக்கிய இடங்களையும் பார்க்கலாம்.

என்ன சர்ச்சை?

ஸ்டிரீட் வியூ சேவை ஆரம்பம் முதலே சர்ச்சைக்குறியதாக இருக்கிறது. பல நாடுகளில் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே பெங்களூருவில் முயற்சிக்கப்பட்ட போது அனுமதி மறுக்கப்பட்டு தற்போது மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனிநபர் பாதுகாப்பு மற்றும் தேசத்தின் பாதுகாப்பு ஆகியவை முக்கிய பிரச்சனைகளாக இருக்கின்றன.
நகரங்களின் கட்டிடங்கள் உள்ளிட்ட இருப்பிடங்களை அப்படியே முழுவதுமாக பார்க்க முடிவது பாதுகாப்பு நோக்கில் ஆபத்தானதாக கருதப்படுகிறது. இந்த படங்களின் விவரங்களை தீவிர்வாதிகள் தாக்குதல் திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. இதன் காரணமாகவே இந்திய அரசும் அனுமதி மறுத்துள்ளது. மேலும் தனி நபர்கள் பார்வையில் பார்க்கும் போது அவர்கள் வீடுகள் படம் பிடிக்கப்பட்டு பொது வெளியில் இடம்பெறுவது ஏற்கதக்கதாக இல்லை.
கூகுள் பழைய காட்சிகளை பயன்படுத்துவதாகவும், முகங்களை மறைத்துவிடுவதாகவும் கூறினாலும் தனியுரிமை மீறல் தொடர்பான அச்சங்கள் நீடிக்கிறது. கூகுள் ஸ்டிரீட் வியூ காட்சியில் தற்செயலாக சிக்கிய காட்சிகள் தொடர்பாக பல விநோத கதைகள் உள்ளன.

பயன்பாடு

சர்ச்சைக்குறிய சேவை என்பதை மீறி இந்த சேவை சுவாரஸ்யமானதாகவும்,பயனுள்ளதாகவும் இருக்கிறது. நகரத்து காட்சிகள் தான் சர்ச்சைக்குறியதாக இருக்கின்றவே த்தவிர மழைக்காடுகளையும், நினைவுச்சின்னங்களையும் பார்த்து ரசிக்க ஏற்ற சேவை இது. எகிப்து பிரமிடுகள் முதல் பூட்டான் அரன்மணை வரை உலகின் பல பகுதிகளை பார்க்கலாம். இந்தியாவில் கூட தொல்பொருள் ஆய்வுத்துறையுடன் இணைந்து தாஜ்மகால் உள்ளிட்ட முக்கிய நினைவுச்சின்னங்கள் கூகுள் ஸ்டிரீட் வீயுவில் பார்க்கலாம்.

இணைப்புகள்: கூகுள் ஸ்டிரீட் வியூ பக்கம்: https://www.google.com/maps/streetview/understand/

முந்தைய முக்கிய பதிவுகள்: 1.கூகுள் ஸ்ட்ரீட்வியூவில் மண்டேலா சிறைச்சாலை; http://cybersimman.com/2015/05/08/google-83/

2. கூகிள் வரைபடத்தில் உலககோப்பை கால்பந்து அரங்குகள்!; http://cybersimman.com/2014/06/10/google-75/

3. கூகுள் மூலம் ஆழ்கடலில் உலாவுங்கள்! http://cybersimman.com/2015/06/11/google-84/

4. கூகுள் வரைபடத்தில் எவரெஸ்ட்டை சுற்றிப்பார்க்கலாம்.; http://cybersimman.com/2015/03/21/online-19/

வரைபடத்தில் விக்கிபீடியா

geopedia sunday river
கட்டற்ற களஞ்சியமான விக்கிபீடியாவில் இடம்பெற்றுள்ள தகவல்களை கொஞ்சம் சுவாரஸ்யமான முறையில் அணுக வழி செய்கிறது ஜியோபீடியா இணையதளம்.

இந்த தளம் உலக வரைபடத்தையும் ,விக்கிபீடியா கட்டுரைகளையும் ஒன்றாக்கி தருகிறது. இந்த தளத்தில் தோன்றும் வரைபடத்தில் உள்ள இடங்கள் மீது கிளிக் செய்தால் அந்த இடம் தொடர்பாக விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகள் அணுகலாம்.

நாம் தேர்வு செய்த இடத்தில் இருந்து எத்தனை கி.மீ தொலைவில் உள்ள இடம் பற்றி கட்டுரைகள் வேண்டும் என்றும் தேர்வு செய்து கொள்ளலாம். அதே போல கட்டுரைகளின் எண்ணிக்கையையும் தீர்மானிக்கலாம்.
சுவாரஸ்யமான வழி என்பதோடு இருப்பிடம் சார்ந்த தகவல்களை இணையத்தில் தேடும் போது இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்.

பயனாளிகள் இருப்பிடம் சார்ந்த கட்டுரைகளை தேடலாம். விக்கிபீடியா போலவே தன்னார்வலர்கள் பங்களிப்பால் உருவான வரைபட சேவையான ஓபன்ஸ்டீரிட் மேப் வசதியை பயன்படுத்தி இந்த ஜியோபீடியா உருவாக்கப்பட்டுள்ளது.

இணையதள முகவரி: http://www.geopedia.de/

RamadanGif

ரம்ஜான் நோண்புக்கு உதவும் கூகுள் இணையதளம்

உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்கள் ரம்ஜான் மாத நோண்பு தொடர்பான தகவல்களை எளிதாக பெறும் வகையில் கூகுள் ரம்ஜான் கம்பேனியன் எனும் இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது.
முஸ்லீம்களுக்கு ரம்ஜான் மாதம் புனித மாதமாக அமைகிறது. இந்த மாதம் முழுவதும் அவர்கள் நோண்பு கடைபிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் முஸ்லீம்கள் சரியான நேரத்தில் நோண்பை கடைப்படித்து வருகின்றனர்.

இந்த புனித மாதத்தில் முஸ்லீம்களுக்கு உதவும் வகையில் கூகுள் ரம்ஜான் தொடர்பான இணையதளம் ஒன்றை அமைத்துள்ளது.ரம்ஜான் கம்பேனியன் எனும் அந்த இணையதளத்தில் சரியான நேரத்தில் நோண்பை கடைபிடிக்க வசதியாக தினந்தோறும் சூரியன் உதிக்கும் மற்றும் அஸ்தமனமாகும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. பயனாளிகள் தங்கள் இருப்பிடத்தில் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் ஆகிய நேரங்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
Google_Play_Ramadan_framed
இது தவிர இந்த புனித மாதத்திற்கான உணவுகளை செய்யும் முறைகள் மற்றும் பார்க்க கூடிய வீடியோக்கள் தொடர்பான தகவல்களையும் அளிக்கிறது. இப்தார் விருந்துக்கு குறித்த நேரத்திற்கு செல்லும் வகையில் பயணத்தை திட்டமிட போக்குவரத்து தகவல்களையும் அளிக்கிறது.

மேலும் கூகுள் நவ் வசதி மூலம் பயனாளிகள் தங்கள் பகுதியில் உள்ள ஹலால் ரெஸ்டாரண்ட் உள்ளிட்ட தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் கூகுள் தனது ஆன்ராட்டு பிளே ஸ்டோரில் ரம்ஜான் மாதம் தொடர்பான சிறப்பு செயலிகளை அடையாளம் காட்டும் வெல்கம்மிங் ரம்ஜான் 2015 எனும் பகுதியையும் துவக்கியுள்ளது.

இணையதள முகவரி:https://ramadan.withgoogle.com/#/