கத்தோலிக்க மதத்தலைவரான போப் பெனிடிக்ட் டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.போப்பாண்டவர் பெயரில் டிவிட்டர் கணக்கு துவக்கப்படாவிட்டாலும் வாட்டிகன் டிவிட்டர் பக்கம் மூலம் அவர் தனது முதல் டிவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.
வாட்டிகன் சார்பாக அமைக்கப்பட்டுள்ள செய்தி வலைவாசல் பற்றிய அறிவிப்பை அவர் டிவிட்டர் மூலம் வெளியிட்டார்.
நணபர்களே என துவங்கிய அந்த செய்தியில் இப்போது தான் நியூஸ்.விஏ செய்தி வலை வாசலை துவக்கி வைத்தேன் என்று கூறியிருந்த போப்பாண்டவர் இயேசு பிரானை பணிவதாகவும் தெரிவித்திருந்தார்.
ஐபேட் சாதனத்தில் இருந்து இந்த டிவிட்டர் செய்தியை அவர் வெளியிட்டிருந்தார்.வாட்டிகனும் அதன் தலைவருமான போப்பாண்டவர் தொழிநுட்பத்தின் பக்கம் நெருங்கி வருவதை இது குறிப்பதாக கருதலாம்.
வாட்டிகன் சார்பில் ஏற்கன்வே யூடியூப் சானல் உள்ளது.போப் 2யூ என்னும் ஐபோன் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.கத்தோலிக்க பாதிரியார்கள் வலைப்பதிவு மூலம் கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்டவர்களை சென்றடைய வேண்டும் என்றும் அவர் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாகவே போப்பாண்டவர் டிவிட்டருக்கு வந்துள்ளார்.
வருங்காலத்தில் போப்பாண்டவர் முழுவீச்சில் டிவிட்டர் செய்யலாம்.அப்போது பக்தர்கள் அவரை டிவிட்டரிலேயெ பின்தொடரலாம்.போப்பாண்டவரும் முக்கிய அறிவிப்புகளையும் ,அருளாசியையும் டிவிட்டர் வழியேவே வழங்கலாம்.
மிகுந்த இறை நம்பிக்கை கொண்ட கிறிஸ்துவர்கள் டிவிட்டர் மூலமே தேவனின் நெருக்கத்தை உணரலாம்.