இணையத்தில் நீங்கள் தேடுவதை கண்டறிவது எப்படி?

தவறாக வழிகாட்டக்கூடிய தன்மை கொண்டது கூகுள் வரைப்படம் மட்டும் அல்ல: கூகுள் தேடியந்திரமும் தான். கூகுள் முன்வைக்கும் தேடல் பட்டியல் முட்டுச்சந்துகளையும், தவறான வழிகாட்டுதல் பலகைகளையும் கொண்டிருக்கிறது. இதை உணராமல் கூகுள் தேடலை கண்ணை மூடிக்கொண்டு நம்பினால், தகவல் விபரீதம் தான்.

ஒரு உதாரணம் பார்க்கலாம்.

’இண்நெர்நெட் ஆர்கிலாஜி’ எனும் இணையதளம் ஒன்று இருந்ததை அறிய முடிகிறது. 90 களைச் சேர்ந்த பழைய இணையதளங்களுக்கான தேடலில் ( 1998 ந் சிறந்த இணையதளங்கள்) கூகுள் இந்த இணையதளம் பற்றிய குறிப்பு அடங்கிய இணையதளத்தின் பதிவை ஒன்றை சுட்டிக்காட்டுகிறது.

மாக்பிளஸ் (https://www.mockplus.com/blog/post/90s-website-design ) எனும் அந்த இணையதளம், நீங்கள் அறிய வேண்டிய 90 களின் காவிய இணைய வடிவமைப்பு எனும் தலைப்பில், அந்த கால இணையதளங்களின் பழைய தோற்றத்தை பட்டியலிடுகிறது.

யாஹு, டெல், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவன இணையதளங்களின் 90 கள் தோற்றத்தோடு, சிறு குறிப்புகள் அடங்கிய இந்த பதிவின் பின் பகுதியில், இண்டர்நெட் ஆர்கிலாஜி (Internet Archaeology) தளம் பற்றிய குறிப்பு வருகிறது.

இணைய அகழ்வு என பொருள்படும் இந்த இணையதளம் பற்றிய குறிப்பை பார்த்ததுமே, இப்படி ஒரு பழைய இணையதளமா எனும் ஆச்சர்யத்தோடு, அந்த தளத்தின் உள்ளடக்கம் பற்றி அறியும் ஆர்வம் உண்டானது.

பிளாஷ் அனிமேஷன், எழுத்துக்கள் என 90 களின் வடிவமைப்பு நெடி கொண்டிருந்தாலும் மற்ற 90 கள் தளம் போல மோசமாக இல்லாமல் நல்ல இடைமுகம், தெளிவான எழுத்துருவை கொண்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இணைய தளத்தின் திரைபிடிப்பும் ஆர்வத்தை உண்டாக்கவே, இந்த தளம் பற்றி மேலும் அறிய கூகுளில் தேடினால் குழப்பமும், ஏமாற்றமுமே மிஞ்சியது.

ஏனெனில், இண்டெர்நெட் ஆர்கிலாஜி எனும் தேடலுக்கு கூகுள் இதே பெயரிலான இணைய சஞ்சிகை இணைப்பு (https://intarch.ac.uk/ ) ஒன்றை அடையாளம் காட்டுகிறது. இதன் இணைய முகவரி வேறுபட்டிருப்பதோடு, சுட்டிக்காட்டப்பட்ட தளம் இது தானா என்பதை அறிய வழியில்லை. அகழ்வாய்வு தொடர்பான இந்த சஞ்சிகை 1996 ல் இருந்து செயல்பட்டு வந்தாலும், இது தான் இண்டெர்நெட் ஆர்கிலாஜி என சுட்டிக்காட்டப்பட்ட தளமா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

இணையத்தின் மற்றொரு முக்கிய தளமாக இதை அறிய முடிந்தாலும், தேடிக்கொண்டிருக்கும் இணையதளம் இதுவல்ல எனும் சந்தேகம் உண்டானது. ஏனெனில், சுட்டிக்காட்டப்பட்ட அறிமுக குறிப்பிற்கு ஏற்ப இந்த தளம் அமைந்திருக்கவில்லை. இதே குறிச்சொல்லுக்கான கூகுள் தேடல் பட்டியலின் முடிவுகளும் இந்த சந்தேகத்திற்கு விளக்கம் தரும் வகையில் அமையவில்லை. எல்லாமே இணைய சஞ்சிகை தளம் தொடர்பாகவே அமைந்துள்ளன.

சுட்டிக்காட்டப்பட்ட இண்டெர்நெட் ஆர்கிலாஜி தளம் எப்படி இருந்தது, என்னவாக இருந்தது என்பதை அறியும் முயற்சியாக, இந்த தளத்துடன், 1990 கள், 1996 , 1998 போன்ற பதங்களை இணைத்து தேடிய போதும், இப்படி ஒரு இணையதளம் இருந்ததற்கான குறிப்புகளே இல்லை.

சோதனையாக இந்த தளத்தை சுட்டிக்காட்டிய குறிப்பும் அதற்கான இணைப்பை கொண்டிருக்கவில்லை. கூடுதல் வழிகாட்டும் எந்த குறிப்பும் இல்லாமல் மிக தட்டையாக இருந்தது.

பழைய இணையதளங்களின் அருங்காட்சியாக விளங்கும் வெப் டிசைன் மியூசியம் தளத்தில் தேடினாலும் இப்படி ஒரு தளம் இருந்ததை அறிய முடியவில்லை.

இது போன்ற தருணங்களில் வழிகாட்டக்கூடிய இணைய காப்பகமான வேபேக்மிஷின் தளத்தில் தேடினாலும், இன்நெட்நெட் ஆர்கிலாஜி தளத்திற்கான வடிவத்தை காண முடியவில்லை.

இணைய அகழ்வின் அம்சங்களை கொண்ட இந்த தளம் பற்றிய உண்மையை அறிவது எப்படி எனும் கேள்வியோடு, சுட்டிக்காட்டப்பட்ட குறிப்புடன் இருந்த திரைப்பிடிப்பு படத்தை கொண்டு ’டின் ஐ’ (TinEye) தேடியந்திரத்தில் தேடினால், இந்த படம் இடம்பெற்ற மூன்று இணையதளங்கள் அடையாளம் காட்டப்பட்டது.

தலைகீழ் உருவ தேடியந்திரம் என ’டின் ஐ’ வர்ணிக்கப்படுகிறது. தகவல்களுக்கு பதில் இதில் உருவம் அல்லது படங்களை கொண்டு அவற்றின் முந்தைய வடிவனங்களை தேடலாம். கூகுளிலும் இந்த வசதி இருக்கிறது.

இந்த மூன்று குறிப்புகளில் ஒன்று பயனற்றது. இன்னொன்று ஜெர்மனி மொழி தளமாகவும், மூன்றாவது சீன மொழி தளமாகவும் இருந்தது. ஜெர்மனி தளம், நன்கறியப்பட்ட ஸ்பிஜல் பெயரை தாங்கியிருந்தது. ஆனால் குறிப்போ ஜெர்மனி மொழியில் இருந்தது. அதிர்ஷ்டவசமாக கூகுள் மொழிபெயர்ப்பு வசதி மூலம், அந்த குறிப்பை மொழி பெயர்த்து பார்த்த போது, ஜியோசிட்டீஸ் காலத்து இணையதளங்களை சேமிக்கும் இணையதளம் என அறிய முடிந்தது. அதன் இணைய முகவரியும் கண்டறிய முடிந்தது. – internetarchaeology.org.

இந்த முகவரியை கொண்டு வேபேக் மிஷினில் தேடிப்பார்த்த போது, அதன் பழைய வடிவங்களை காண முடிந்தது. ஆனால், 2009 ல் இருந்தே இந்த தளம் செயல்பட்டதை அறிய முடிந்தது. திரைப்பிடிப்பு தோற்றம் இந்த தளம் தான் என்பதை உறுதி செய்ததால், இது குறித்து மேலும் குழப்பம் ஏற்படவில்லை.

இண்டெர்நெட் ஆர்கிலாஜி.ஆர்க் தளம் அருமையான இணைய முயற்சியாக இருப்பதையும், அதன் நிறுவனர் ரைடர் ரிப்ஸ் மகத்தான டிஜிட்டல் கலைஞராக இருப்பதையும் அறிய முடிந்தது.

இந்த இணைய அகழ்வு பெரும் ஆசுவாசத்தை அளித்த நிலையில், கூகுளில் சுட்டிக்காட்டப்பட்ட மோக்பிளஸ் தளத்தின் பதிவு தவறாக இந்த தளத்தை 90 களின் தளமாக பட்டியலிட்டுள்ளதை உணர முடிந்தது. 90 களின் வடிவமைப்பு எனும் சுவாரஸ்யமான தலைப்பில், இணையத்தில் காணக்கூடிய தகவல்களை எந்த சரி பார்த்தலும் இல்லாமல் தொகுத்தளித்த இந்த இணையதள பதிவை தான் கூகுளும் முதல் பத்து இடத்திற்குள் பட்டியலிடுகிறது.

தேடியந்திரம் என்ற வகையில் கூகுள் சுட்டிக்காட்டும் தளங்களின் உள்ளடக்கத்திற்கு அது பொறுப்பேற்க முடியாது தான். ஆனால், மோசமான, பிழையான உள்ளடக்கத்தை முன்னணியில் பட்டியலிடுவதற்கு கூகுள் பொறுப்பேற்க வேண்டும் அல்லவா?

பி.கு: ஆக இணையத்தில் நீங்கள் தேடுவதை கண்டறிய வேண்டும் எனில் முதலில் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். அதன் அடிப்படையில் கூகுள் முன்வைக்கும் முடிவுகளை சீர் தூக்கிப்பார்த்து தேவை எனில் மாற்று வழிகளை தேடிச்செல்ல வேண்டும். மாறாக கூகுள் சுட்டிக்காட்டுவதை கண்ணை மூடிக்கொண்டு நம்பினால் அது பிழையாக அமையலாம்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *