உங்களுக்காக ஒரு சாட்பாட் தோழன்

கவலைப்படாதே சகோதரா என்பதை ஒரு சாட்பாட் சொன்னால் எப்படி இருக்கும். அதுவும், ஒருவர் வருத்தத்திலோ, கவலையிலே இருப்பதை தெரிந்து கொண்டு, இதுவும் கடந்து போகும் என ஆறுதல் அளிக்கும் வகையில் அந்த சாட்பாட் பேசினால் எப்படி இருக்கும்?

புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் ’டாட்’ (https://new.computer/ ) சாட்பாட் இப்படி தான் இருக்கும் என்கிறது இதன் பின்னணியில் உள்ள நியூ கம்ப்யூட்டர் நிறுவனம்.

மனிதர்கள் நட்பு வளர்த்துக்கொள்ள உதவும் அல்லது அவர்களுக்கான தோழமையாக விளங்க கூடிய சாட்பாட்கள் ஏற்கனவே இருக்கின்றன. மனிதர்கள் தங்களது ஏஐ காதலன்/ காதலிகளை உருவாக்கி கொள்ளும் ரெப்லிகா ரக சாட்பாட்களும் இருக்கின்றன. உளவியல் அறிந்தவர் போல, சிகிச்சை அளிக்கும் சாட்பாட்களும் இருக்கின்றன.

இந்த வரிசையில், அறிமுகம் ஆகியிருக்கும் டாட் சாட்பாட், பயனாளிகளுடன் முதலில் பழகி அவர்களைப்பற்றி தனிப்பட்ட முறையில் தெரிந்து கொண்டு அதனடிப்படையில் அவர்களோடு உரையாடி ஆலோசனைகளையும் ஆறுதலையும் அளிக்கும் திறன் பெற்றதாக இருப்பதாக அறிய முடிகிறது. (டெக்கிரஞ்ச் தளத்தின் மிக விரிவான அறிமுகம் )

ஆனால் இந்த சாட்பாட் மனிதரும் அல்ல, நண்பரும் அல்ல, சிகிச்சையாளரும் அல்ல, மனித பேச்சையும், அனுதாபத்தையும் பிரதியெடுக்க கூடிய ஏஐ சாதனம் மட்டுமே என்று இதன் நிறுவனர்களில் ஒருவரான ஜேசன் யூவான் கூறியிருக்கிறார்.

நட்புக்கோ, உறவுக்கோ, சிகிச்சைக்கோ இந்த சாட்பாட் மாற்று அல்ல என கூறும் ஜேசன், இது நமக்கான கண்ணாடி என்கிறார்.

அதாவது நமக்கு நாமே பேசிக்கொள்வது போல இந்த சாட்பாட்டுடன் பேசலாம் என்கிறார்.

பயனாளிகள் பேசும் விஷயங்கள் அடிப்படையில் அவர்கள் இயல்பையும், தேவையையும் புரிந்து கொண்டு இந்த சாட்பாட் அவர்களுடன் பேசத்துவங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பயனாளிகளை புரிந்து கொள்வதற்காக முதலில், டாட் பாட், ஏதோ வேலைக்கான நேர்காணல் போல அடுத்தடுத்து கேள்விகள் கேட்கிறது. பதில்கள் அடிப்படையில் அடுத்தடுத்த கேள்விகளை கேட்கும் சாட்பாட், பதிலின் தன்மைக்கேற்ப தனது கேள்வியை மாற்றிக்கொள்ளும் திறனும், பெற்றிருக்கிறது.

உதாரணமாக திரைப்படத்தில் ஆர்வம் என்றால், அடுத்த வெற்றிமாறானாகும் கனவு இருக்கிறதா என்பது போல கேள்வி கேட்டு, அதெல்லாம் இல்லை ஆர்வம் மட்டும் தான் என பதில் வந்தால், சரி உங்கள் வாழ்க்கையின் இலக்கு என கேட்டு உரையாடலை முன்னெடுத்துச்செல்கிறது.

இவ்விதமாக பயனாளிகளை புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்ற வகையில் பதில் அளித்து வழிகாட்டும் திறன் பெற்றிருக்கிறது. சும்மாயில்லை சாட்ஜிபிடி, கூகுள் ஜெமினி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மொழி மாதிரிகள், ஏஐ மாதிரிகளை கொண்டு இயங்குகிறது.

ஸ்மார்ட்போன் திரைப்பார்த்து உரையாடி பழகியவர்களுக்கு இந்த சாட்பாட் தோழமை ஏற்றதாக தோன்றலாம். பல நேரங்களில் பயனுள்ளதாகவும் கூட இருக்கலாம். ஆனால், நம்மை தெரிந்து கொண்டு நமக்கேற்ற வகையில் உரையாடும் திறன் கொண்ட சாட்பாட் என்பது எதிர்பாராத சிக்கல்களையும் ஏற்படுத்தலாம் என அஞ்சத்தோன்றுகிறது.

பார்க்கலாம் இந்த சாட்பாட் எப்படி வளர்கிறது என்று!

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *