கூகுள் விமர்சன குறிப்பு-

’நீங்களே செய்து கொள்ளுங்கள்’ (” Do it yourself ” – ” DIY “) ) என வழிகாட்டி ஊக்கம் அளிக்கும் இணையதளங்கள் பல இருக்கின்றன. இதே போல, மேக் இட் யுவர்செல்ப் (Make It Yourself ) என வழிகாட்டும் இணையதளம் ஒன்றும் அறிமுகமாகி இருக்கிறது.  இந்த தளம் பற்றி மேலும் அறிவதற்காக கூகுளில் Make It Yourself என தேடிப்பார்த்தால், இதே பெயரிலான யூடியூப் சேனல் முதல் முடிவாக வந்து நிற்கிறது. தேடலின் இலக்கான இணையதளம் (https://makeityourself.org/ ) மூன்றாவதாக இருந்தாலும், இரண்டாவதாக இடம் பெற்றுள்ள தளம், ராயல் என்பீல்டு பைக்கிற்கானது.

பைக் பிரியர்கள் பலரது கனவு வாகனம் என்பீல்டு. இந்த வாகனத்தை தங்கள் விரும்பிய வகையிலான அம்சங்கள் கொண்டதாக தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பை என்பீல்டு நிறுவனம் வழங்குகிறது. இதற்கான இணைய பக்கமே, ’மேக் இட் யுவர்ஸ்’ என அமைந்துள்ளது. ஆனால், பயனாளிகளே தங்களுக்கான பொருட்களை செய்துகொள்வதற்கான செய்முறை குறிப்புகளை வழங்கும் இணையதளத்தை தேடும் போது, என்பீல்டின் இந்த பக்கம் முன்னணியில் வந்து நிற்பது நெருடலாக உள்ளது.

மேக் இட் யுவர்செல்ப் தேடல் குறிப்பை கொண்டு, இந்த இணைய பக்கம் கூகுளில் முன்னுரிமை பெறும் அளவுக்கு திறம்பட வடிவமைக்கப்பட்டுள்ளதாக கொள்ளலாம். இதற்கான குறிச்சொல் உத்திகள் சரியாக பின்பற்றப்பட்டிருக்கலாம். இருந்தாலும், இந்த இணையதளம் முன்னிலை பெறுவது இயற்கையான தேர்வாக தோன்றவில்லை.

இதே குறிச்சொல்லை பிங் தளத்தில் தேடினால், நீங்களே செய்து பாருங்கள் வாசகத்திற்கான விக்கிபீடியா பக்கம் முதலில் வருகிறது. அடுத்த முடிவு சுயமாக துணிகளை வடிவமைக்க வழிகாட்டும் ஆல்பிரிஸிவிங் தளமாக அமைகிறது. மூன்றாவது முடிவு, நீங்களே செய்யும் திட்டங்களுக்கான இணையதளம்.

அடுத்த தளம், இந்த பிரிவின் முன்னணி இதழான மேக் இதழின் இணையதளம். இன்ஸ்டரக்டபில்ஸ் தளமும் பட்டியலில் வருகிறது. ஆனால், மேகிட்யுவர்செல்ப்.ஆர்க் தளம் வரவில்லை.

கூகுள் தேடல் முடிவுகள் போல விளம்பர நெடி இல்லை என்றாலும், பிங் தேடல் இலக்கு தளத்தை கோட்டை விட்டுள்ளது. கூகுள் அந்த தளத்தை பட்டியலிட்டாலும், விளம்பர தளங்களை முன்னிறுத்தி அதிருப்தியில் ஆழ்த்துகிறது.

ஆக, ஒற்றை தேடியந்திரத்தை சார்ந்திருக்க கூடாது என்பது நீது. மோஜீக் தளத்தில் தேடிப்பார்த்தால், சாண்ட்விச்பைக் உள்ளிட்ட தளங்களை பட்டியலிடுகிறது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *