ஏஐ சேவைகளை தேர்வு செய்வது எப்படி?

ஏஐ சேவைகளை எப்படி பயன்படுத்துவது என்று அறிவதற்கு முன், உங்களுக்கும், உங்கள் துறைக்கும் ஏற்ற ஏஐ சேவைகளை கண்டறிந்து தேர்வு செய்ய அறிந்திருக்க வேண்டும். ஏனெனில் பொதுவாக அறிமுகம் செய்யப்படும், பரபரப்பாக பேசப்படும் ஏஐ சேவைகள் உங்களுக்கு ஏற்றதாக அமையாமல் போகலாம் என்பதோடு, மிகைத்தன்மையை நீக்கிப்பார்க்கும் போது அவற்றின் பயன்பாடும் ஒன்றும் இல்லாமல் போகலாம்.

சரியான ஏஐ சேவையை தேர்வு செய்வதற்கான முதல் அளவுகோள், குறிப்பிட்ட அந்த சேவை மூல சேவையா அல்லது துணை சேவையா? என அறிவதாகும். மூல சேவை எனில், சாட்ஜிபிடி அல்லது கூகுள் ஜெமினி போன்றது. துணை சேவை எனில், ரைட்சானிக் அல்லது நைட்கேப் போன்றவை. அதாவது, இவை அளிப்பது சொந்த சேவை அல்ல, மற்ற மூல ஏஐ நுட்பம் சார்ந்த சேவைகளை இவை அளிக்கின்றன.

துணை சேவைகளில் முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம், அந்த சேவை வெறும் அணுகல் வசதியை அளிக்கிறதா அல்லது அதனளவில் மேம்பட்ட ஒரு தன்மையை கொண்டிருக்கிறதா என்பதாகும். அதாவது, சாட்ஜிபிடியின் கட்டணம் செலுத்தும் வசதியை பயன்படுத்த வழி செய்யும் துணை சேவையால் பெரும்பாலும் அதிக பயனில்லை. அதே போல தான் கூகுள் மொழிபெயர்ப்பு சேவை ஏபிஐ அணுகல் வசதியை அளிக்கும் சேவையாலும் அதிக பயனில்லை.

தேவை எனில் பயனாளிகளே நேரடியாக கட்டணம் செலுத்தி பயன்படுத்தலாம் எனும் போது, முகமூடி துணை சேவைகள் ஏன்? என யோசிக்க வேண்டும். இவை கட்டணம் வசூலித்தாலும் பிரச்சனை, இலவசம் என்றாலும் பிரச்சனை. இலவசம் எனில், அதற்கான நோக்கத்தை ஆராய வேண்டும்.

ஏஐ சேவைகள் எப்படி இயங்குகின்றன, அதாவது அவற்றின் அடிப்படை தொழில்நுட்பம் என்ன என்பதை முதலில் அறிய வேண்டும். மூல சேவை என்றால், தேவைக்கேற்ப தேர்வு செய்து கொள்ளலாம். துணை சேவை எனில், மூல சேவையை ஏதேனும் விதத்தில் மேம்படுத்துகிறதா? என அறிய வேண்டும்.

முக்கியமாக, துணை சேவையாக அமைபவை, அது பற்றி குறிப்பிடுகின்றனவா? என பார்க்க வேண்டும். துணை சேவை என குறிப்பிடாமல், மூல தொழில்நுட்பம் பற்றிய விளக்கமும் இல்லாமல், புதிய சேவை எனும் தோற்றத்தை தரும் வெற்று வார்த்தை விளையாட்டுகளை கொண்ட சேவை எனில் அவற்றை தவிர்ப்பது நல்லது.

மூல சேவைகளை அறிவதற்கான சிறு குறிப்பு: பெரும்பாலான ஏஐ சாட்பாட்கள், எல்.எல்.எம்., எனப்படும் மொழி மாதிரிகள் கொண்டு செயல்படுகின்றன. மூல மொழி மாதிரிகள் என எடுத்துக்கொண்டால், ஜிபிடி, கூகுள் லாம்டா, கிளாடு, ஹக்கிங்சாட், லாமா என விரல் விட்டு எண்ணக்கூடியவை தான் இருக்கின்றன. மற்ற சேவைகள் எல்லாம் இந்த மொழி மாதிரிகள் சார்ந்தவையே.

துணை சேவைகள் என வரும் போது, ஆகச்சிறந்ததாக ஏஐ தேடியந்திரம் பிரெப்லக்சிட்டியை குறிப்பிடலாம். மொழி மாதிரிகளை அடிப்படையாக கொண்டு செயல்படும் சேவை என்ற வகையில், ஜிபிடி உள்ளிட்ட மாதிரிகளை பயன்படுத்தினாலும், ஏஐ சார்ந்த தேடலில் பல முன்னோடி அம்சங்களை கொண்டிருக்கிறது. மேலும் டீப்சீக் உள்ளிட்ட பல மொழி மாதிரிகளை அணுகும் வசதியை அளிக்கிறது. அதோடு, தற்போது சொந்த மொழி மாதிரி( லாமா சார்ந்தது), சொந்த தேடல் அட்டவனை ஆகியவற்றையும் உருவாக்கி வருகிறது.

ஆக, நீங்கள் பயன்படுத்த இருக்கும் ஏஐ சேவை இவற்றில் எந்த வகை என்று தெரிந்து கொண்டு பயன்படுத்துங்கள்!

நிற்க, ஏஐ சேவைகள் தேர்வு என வரும் போது, இன்னும் எண்ணற்ற அம்சங்களை மனதில் கொள்ள வேண்டும். அந்த வகையில், இணைய சேவைகளின் சிறந்த வழிகாட்டிகளில் ஒருவரான கேரி பிரைஸ், மூன்று முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டுகிறார்.

  • ஏஐ சேவைகள் கையாளும் தரவு பட்டியலை தேர்வு செய்யும் வாய்ப்பு.
  • ஏஐ சேவைகள் அளிக்கும் பதில்களின் ஆதாரங்களை காணும் வசதி
  • ஏஐ சேவைகளின் தனியுரிமை கொள்கை

கேரி பிரைஸ் சாட்பாட்கள் பயன்பாடு பற்றி இதை குறிப்பிட்டாலும் ஏஐ சேவைகளுக்கு பொருத்தமானது. – https://www.choice360.org/libtech-insight/beyond-chatgpt-gary-prices-top-ai-tools-for-librarians/

நீங்கள் அறிந்திருக்க வேண்டிய இணையதளங்கள் -1 ( ஏஐ இணையதளங்கள்)

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *