இன்று பலரும் ஏஐ என்றால் சாட்ஜிபிடி (ChatGPT ) என நினைத்துக்கொண்டிருக்கின்றனர். சாட்ஜிபிடி தான் ஏஐ என்றும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர்” என்கிறார் கேரன் ஹவோ (Karen Hao ).
இப்படி குறிப்பிடும் ஹவோ, சாட்ஜிபிடி இயங்கும் விதம் பற்றியும் அழகாக குறிப்பிடுகிறார்.
சாட்ஜிபிடியை எது இயக்குகிறது என்றால், பெரும் மொழி மாதிரி என சொல்லப்படும் மிகப்பெரிய ஏஐ மாதிரி. இது நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கான தரவுகள் கொண்டு மற்றும் நினைத்துப்பார்க்க முடியாத அளவு ஆற்றலை உறிஞ்சும் சூப்பர் கம்ப்யூட்டர்கள் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தரவுகள், எரிசக்தி இரண்டுமே உலகில் இல்லாமல் போய்விடும் என்று அஞ்சும் அளவுக்கு இந்த இரண்டும் இத்தகைய ஏஐ மாதிரிக்கு தேவைப்படுகிறது. ஏற்கனவே, தரவுகளுக்கான ஆதாரமான இணையம் வரண்டுபோய் க்கொண்டிருக்கிறது என ஏஐ உருவாக்குனர்கள் அலறுகின்றனர் என்றால், சூப்பர் கம்ப்யூட்டர் உருவாக்கினர்கள், 1000 முதல் 2000 வாட்கள் கொள்திறன் தேவைப்படக்கூடிய ஒற்றை தரவு மையங்களை உருவாக்கும் தேவை பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர். இந்த எரிசக்தி சான்பிரான்சிஸ்கோ போன்ற பெரிய நகரின் பாதி தேவை ஆகும். இவை எல்லாம் எதற்காக, புதிய தேடலாக மாற விரும்பும் ஒரு சாட்பாட்டை உருவாக்குவதற்காக? ஆனால் இந்த புதிய தேடல் கூகுளை விட பத்து மடங்கு எரிசக்தி தேவைப்படுவதாக இருக்கிறது. அதோடு, இந்த சாட்பாட் என்ன செய்கிறது என்றால், அடிப்படையில் நம்பகம் இல்லாத, பிழைகள் மலிந்த (hallucinations.) நிகழ்தகழ்வு முறை சார்ந்து உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றது”.
இதைவிட சாட்ஜிபிடி செயல்படும் விதத்தை யாராலும் கிழித்து தொங்க விட முடியாது என நினைக்கிறேன்.
ஏஐ நுட்பம் மற்றும் அதன் பின் உள்ள நிறுவனங்கள் தொடர்பாக ஆழமான அலசல் செய்திக்கட்டுரைகளை எழுதி வரும் அமெரிக்க இதழாளரான ஹவோ, தனது ஏஐ இதழியல் அனுபவம் பற்றி விவரிக்கும் அருமையான கட்டுரையில் சாட்ஜிபிடி பற்றி இவ்வாறு விளக்கம் அளிக்கிறார்.
எஐ நுட்பம் தொடர்பாக நாம் எப்படி எழுத வேண்டும், என்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்றும் அவர் இந்த கட்டுரையில் விவரிக்கிறார். ஏஐ என்றால் என்ன என வலுவாக விளக்கம் அளிக்கும் அற்புதமான கட்டுரை (https://www.technologyreview.com/2018/11/10/139137/is-this-ai-we-drew-you-a-flowchart-to-work-it-out/ ) ஒன்றையும் அவர் எழுதியிருக்கிறார்.
ஏஐ யுகத்தில் கவனிக்க வேண்டிய இதழாளர்கள், வல்லுனர்களில் இவரும் ஒருவர்.
ஹவோ கட்டுரையை வாசிக்கும் போது, இணைய வசதி பரவலாக இல்லாத பல நாடுகளில் பேஸ்புக் தான் இணையம் என பலரும் பிழை எண்ணம் கொண்டிருந்ததாக குறிப்பிடப்படுவது நினைவுக்கு வருகிறது. அது போன்றது தான் சாட்ஜிபிடி தான் ஏஐ என நினைப்பதும். அதோடு பேஸ்புக் போலவே சாட்ஜிபிடியும் ஆபத்தானது தான். சாட்ஜிபிடியின் தோற்றம், இந்த நுட்பம் செயல்படும் விதம், தொடர்புடைய சிக்கல்கள் குறித்து சாட்ஜிபிடி சரிதம் புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளேன். சாட்ஜிபிடியின் வரலாற்று பாதையை விளக்கும் எலிசா சாட்பாட் முதல் இதர முக்கிய சாட்பாட்களையும் இந்த புத்தகத்தில் அறியலாம்.