சாட்ஜிபிடிக்கு எதிரான கேள்விகளும், கூகுளின் அமைதியும்!

தேடியந்திர அறம் என்று ஒன்று இருக்கிறது. இணைய தேடலுக்கான முடிவுகளை வழங்கும் போது சார்பில்லாமல் நேர்மையாக நடந்து கொள்வது இதில் முக்கியமானது. உதாரணமாக, ஒரு தேடியந்திரம் தன்னைத்தானே முன்னிறுத்திக்கொள்ளக்கூடாது. அதாவது தேடியந்திரம் அல்லது சிறந்த தேடியந்திரம் எனத் தேடும் போது, சொந்த தேடியந்திரத்தை முன்னிறுத்தாமல் போட்டி தேடியந்திரங்களை பட்டியலிடும் தன்மை கொண்டிருக்க வேண்டும்.

கூகுள் பெரும்பாலும், வெளிப்படையாக தேடல் அறத்தை மீறுவதில்லை. ஆனால், அதன் உள்ளார்ந்த செயல்பாடுகள் பெரும்பாலும் தேடல் உலகின் முன்னிலையை தக்க வைப்பதை மையமாக கொண்டவை என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால், தேடியந்திரம் தொடர்பாக கூகுளில் தேடும் போது, அதன் தேடல் முடிவுகளில் பெரும்பாலும் போட்டி தேடியந்திரங்களை அடையாளம் காட்டும் முடிவுகளை பார்க்கலாம். கூகுளுக்கு எதிரான மாற்று தேடியந்திரங்களையும் அடையாளம் காட்டும்.

இதே அடிப்படையில், கூகுளை சோதனைக்குள்ளாக்கலாம் எனும் எண்ணத்தில், சாட்ஜிபிடிக்கு எதிரான கேள்விகள்’ என தேடிப்பார்த்த போது, கூகுள் நன்றாக சிந்தித்து பின் மவுனமானதை உணர முடிந்தது.

அதாவது, இந்த தேடலுக்கான ஏஐ பறவை பார்வை பதிலை கூகுள் வழங்க மறுத்துவிட்டது.

ஏஐ தேடியந்திரங்களோடும், தனக்கு போட்டியாக வந்திருக்கும் சாட்ஜிபிடியுடனும் போட்டியிடும் வகையில் கூகுள், இப்போது தேடல் முடிவுகளை வழங்குவதோடு, ஏஐ ஓவர்வியூ எனும் ஏஐ பறவை பார்வை தேடல் பதிலை முன்வைப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

தேடப்படும் அம்சத்திற்கு ஏற்ப சாட்பாட் போல நேரடி பதில் அளிக்கும் அம்சமாக இது அமைகிறது.

கூகுளில் தேடும் போது, பல நேரங்களில், இந்த ஏஐ ஓவர்வியூ வசதி பின்னணியில் செயல்பட்டு பதில் வருவதை பார்க்கலாம். ஆனால், சாட்ஜிபிடிக்கு எதிரான கேள்விகள்” என குறிப்பிட்ட பின், கூகுள் வழக்கமாக யோசித்துப்பார்த்து, இந்த தேடலுக்கு ஏஐ ஓவர்வியூ வசதி இல்லை என்று கூறிவிட்டது.

இதை கூகுளின் புத்திசாலித்தனம் என்றும் கொள்லலாம். எதற்கு வம்பு என பதிலை வடிகட்டியதாகவம் கருதலாம்.

சாட்ஜிபிடிக்கு எதிரான கேள்விகள் எனும் போது, அந்த நுட்பத்தை விமர்சனத்திற்கு உள்ளாக்கும் கேள்விகள் என புரிந்து கொள்ளலாம். இதற்கான பதில்கள், சாட்ஜிபிடியின் இன்னொரு பக்கத்தை அலசுவதாக அமையலாம். எப்படியும் இந்த கேள்விகள் முக்கியமானவை. ஆனால், இந்த கேள்விகளை கூகுள் ஓவர்வியூ மூலம் அறிய முடியவில்லை.

ஆனால் ஒன்று கூகுள் இந்த கேள்விக்கான தேடல் முடிவுகளில், சாட்ஜிபிடியிடம் கேட்க கூடாத கேள்விகள் போன்ற முடிவுகளை பட்டியலிட்டாலும், இதற்கான பதிலை ஏஐ நுட்பம் கொண்டு தொகுத்தளிக்கவில்லை. மாறாக, இந்த தேடலுக்கு ஏஐ தொகுப்பு பதில் இல்லை என்கிறது. ஏன்?

இதே கேள்விக்கு, சாட்ஜிபிடிக்கு எதிரான கேள்விகள் என்றால், அதன் தாய் நிறுவனமான ஓபன் ஏஐக்கு எதிரான கேள்விகள் என்று கூட நாம் பதில் சொல்லிவிடலாம். ஆனால், போட்டி நிறுவனத்திற்கு எதிரான கேள்வி என்று கூகுள் யோசித்து அமைதி காக்கிறது பாருங்கள், அங்கு நிற்கிறது கூகுள்.

இதன் பொருள் ஏஐ நுட்பத்தின் பின்னே கண்ணுக்குத்தெரியாத வடிகட்டல்கள் நிகழ்கின்றன என்பதும் மனித கரங்களை அதை தீர்மானிக்கின்றன என்பதும் தான். இத்தகைய அம்சங்களை அறிந்தே ஏஐ சேவைகளை பயன்படுத்தவும்.

இதே கேள்விக்கு ஏஐ தேடியந்திரமான பிரெப்லக்சிட்டி, தேடல் முடிவுகளை தொகுத்து வழவழப்பான பதிலை அளிக்கிறது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *