நடிகர் விஜய், டிக்டாக் தலைமுறையின் தலைவரா?

பேஸ்புக் போன்ற ஒரு சமூக வலைப்பின்னல் சேவையை இன்னொருவரால் உருவாக்க முடியுமா? எனும் கேள்வியை, எம்.ஜி.ஆர் போல, இன்னொருவரால் அரசியல் கட்சி துவங்கி தமிழ்நாட்டின் முதல்வராக முடியுமா? எனும் கேள்வியுடன் ஒப்பிட முடியுமா என்றுத்தெரியவில்லை. இருப்பினும் இந்த கேள்விகள் முக்கியமானவை என்பதை பலரும் ஒப்புக்கொள்ளலாம். குறிப்பாக, எம்.ஜி.ஆர் போல இன்னொரு நடிகரால் முதல்வராக முடியுமா? எனும் கேள்வி, நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்தி காட்டியிருக்கும் நிலையில் பலரது கவனத்தை ஈர்க்கலாம்.

இருப்பினும், எனது ஆர்வம் எம்.ஜி.ஆரைவிட பேஸ்புக் தொடர்பான கேள்வியில் தான் இருக்கிறது. ஆனால் இரண்டு கேள்விகளுக்கான பதில்களுமே சாட்ஜிபிடி யுகத்தில் முக்கியமானவை. இப்போது பேஸ்புக் கேள்விக்கு வருவோம்.

பேஸ்புக் போல ஒரு சமூக வலைப்பின்னல் தளத்தை தனிநபர் ஒருவரால் உருவாக்க முடியுமா?

கேள்வி பதில் தளமான குவோராவில் கேட்கப்பட்டிருக்கும் இக்கேள்விக்கான பதில்களை வாசிக்கும் போது, ஒரு விஷயம் தெளிவாக புரிகிறது. ஆம் அல்லது இல்லை என வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக பதில் அளிக்க முடியாமல், ஆம் மற்றும் இல்லை என இரண்டும் கலந்த பதிலே இதற்கு பொருத்தமாக இருக்கும் என்பது தான் அது.

ஏனெனில், பேஸ்புக்கின் வளர்ந்து வெற்றி பெற்றிருக்கும் விதத்தையும், அதன் தற்போதைய வீச்சையும், தாக்கத்தையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, பேஸ்புக் போன்ற வெற்றிகரமான சமூக வலைப்பின்னல் தளத்தை தனிநபரால் உருவாக்க முடியாது என்று சொல்லத்தோன்றும். இதற்கான காரணங்களை அடுக்கொண்டே போகலாம்.

பேஸ்புக்கிற்கு முன்னரும் சரி பின்னரும் சரி, அதே போன்ற எண்ணற்ற சமூக வலைப்பின்னல் தளங்கள் உருவாகி பல்வேறு கட்டங்களில் பல்வேறு காரணங்களினால் பலவித அளவுகளில் தோல்வியைத் தழுவியுள்ளன. அதோடு, கூகுள் போன்ற இணைய பெரு நிறுவனங்களினாலேயே ( கூகுள் பிளஸ் ) பேஸ்புக்கை ஒன்றும் செய்ய முடியவில்லை.

அதோடு, பேஸ்புக் பெற்ற வெற்றி என்பது ஒரு நாளில் அல்லது ஓராண்டில் வந்தது அல்ல. பல ஆண்டுகளாக படிப்படியாக வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது.

பேஸ்புக் தனது வளர்ச்சிக்காக பல விஷயங்களை சரியாக செய்திருக்கிறது. வளர்ச்சி சாத்தியமான பிறகு விரிவாக்கத்திற்கான வியூகங்களையும் வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கிறது. கையகப்படுத்தலையும் சரியாக மேற்கொண்டது.

மேலும் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாக கொண்ட, லாபவேட்கையின் உந்துதலில் அறம் பற்றி எல்லாம் கவலைப்படாமல், பயனாளிகளை தன்வசமாக்கி கொள்வதற்கான பல உத்திகளை கையாண்டுள்ளது.

வளர்ச்சிக்கு தேவையான நிதி அதற்கு கொட்டியது. அந்த நிதியை மேலும் பெருக்கி கொள்ள விளம்பர வலை விரித்தது. தொழில்நுட்ப ஆற்றலும் கைகொடுத்தது.

இவைத்தவிர, பேஸ்புக்கிற்கு சாதகமாக புற காரணிகள் பலவும் அமைந்தன.

பேஸ்புக் எப்படி வெற்றி பெற்றது என்பது உண்மையில் இன்னமும் விரிவான அலசலுக்கும் ஆய்வுக்கும் உரியது.

பேஸ்புக் போல ஒரு வலைப்பின்னல் தளத்தை துவக்குவது சாத்தியம் இல்லை என சொல்லும் போது, பேஸ்புக் பெற்ற வெற்றியை மனதில் கொண்டு, அதற்கான காரணங்களை அலசிப்பார்த்து அது போல இன்னொரு தளம் துவக்குவது சாத்தியம் இல்லை எனும் முடிவுக்கு வருவதாக கொள்ளலாம்.

ஆனால், அப்படியும் சொல்லிவிட முடியாது. தர்க நோக்கில் பார்த்தால், பேஸ்புக் போல ஒரு சமூக வலைப்பின்னல் தளத்தை உருவாக்குவது சாத்தியமே. பேஸ்புக் போலவே தோற்றமும், செயல்பாடும் கொண்ட ஒரு தளத்தை உருவாக்கி கொள்வதற்கான எல்லா தொழில்நுட்பங்களும் இருக்கின்றன. ஆனால் அவற்றை கொண்டு இன்னொரு பேஸ்புக்கை வளர்த்தெடுக்க முடியுமா எனும் கேள்விக்கான பதில் விவாத்திற்கு உரியது.

நிற்க, இப்போது இதே கேள்வியை சாட்ஜிபிடியிடம் கேட்டுப்பார்த்தால் என்ன பதில் அளிக்கும். ஆச்சர்யப்படும் வகையில், சாட்ஜிபிடியும் ஆம் அல்லது இல்லை என பதில் அளிக்காமல், பேஸ்புக் போன்ற தளத்தை உருவாக்குவது கடினம் என்று சொல்லி, அதற்கான சில காரணங்களை பட்டியலிட்டு கடைசியாக இருந்தாலும், பேஸ்புக் போல ஒரு தளத்தை உருவாக்கலாம் என்பது போல பதில் அளிக்கிறது.

சாட்ஜிபிடி பதில் வியக்க வைத்தாலும், அதை சரியான பதில் அல்லது புத்திசாலித்தனமானது என ஏற்க முடியுமா என்பது முக்கிய கேள்வி. ஏனெனில், சாட்ஜிபிடி பதிலில், வெற்றிகரமான எனும் சொல் இல்லை. அதற்கான காரணங்களும் இல்லை. தேவையில்லாத இடங்களில் எல்லாம் அடைமொழிகளை கொட்டும் சாட்ஜிபிடி, பேஸ்புக் அழுத்தத்தை உணர்த்த வேண்டிய இடத்தில் அடைமொழி இல்லாமல் சாதாரணமாக சொல்கிறது. மனித மனம் பேஸ்புக்கை உணர்ந்து பேசும்.

அதோடு, பேஸ்புக் போன்ற ஒரு தளத்தை உருவாக்குவது தொடர்பான கேள்விக்கான சரியான பதில், ஏன் இன்னொரு பேஸ்புக் தேவை எனும் எதிர்கேள்வியாகவும் அமையலாம். இதற்கான நியாயங்களாக பேஸ்புக் எனும் சேவையின் தீய தாக்கங்களையும், அறமற்ற வர்த்தக உத்திகளையும் விளக்கலாம்.

சாட்ஜிபிடி போன்ற ஏஐ பாட்களிடம் இத்தகைய புரிதலையும், நுணுக்கங்களையும் எதிர்பார்க்க முடியாது.

இப்போது எம்ஜி.ஆர், விஜய்க்கு வருவோம்.

விஜய், அரசியல் எதிர்கால தாக்கத்தை கணிக்க அவரை எம்ஜிஆருடன் ஒப்பிடுவது தவிர்க்க இயலாதது. எனில், எம்ஜிஆரைப்போல, விஜயால் ஆட்சியை பிடிக்க முடியுமா ? எனும் கேள்விக்கு சாட்ஜிபிடியிடம் கேட்டால் என்ன பதில் அளிக்கும்? அதைவிட அந்த பதில் எந்த அளவுக்கு சரியானதாக இருக்கும்.

விஜய் அரசியல் எதிர்காலம் பற்றிய சாட்ஜிபிடி போன்ற சாட்பாட்களின் அலசல் இயற்கையானதாக, ஏற்புடையதாக இருக்குமா? என்பது ஒரு பக்கம் இருக்க, சாட்ஜிபிடி அளிக்க கூடிய பதில் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தலாம். இதன் காரணமாகவே, அதற்கு வாய்பூட்டும் போடப்படலாம்.

நிற்க, பேஸ்புக் கேள்வி போலவே இதற்கும், எம்ஜிஆர் போல, ஏன் இன்னொரு நடிகர் வெற்றி பெற வேண்டும் என்றும் பதில் அளிக்கலாம். எப்படி பேஸ்புக் மீதான விமர்சனங்கள் இதற்கு காரணமாகிறதோ அதே போல அரசியல் களத்தில் எம்ஜிஆர் மீதான விமர்சனங்களை இதற்கான காரணங்களாக கொள்ளலாம்.

ஆனால் ஒன்று, பேஸ்புக்கைவிட நடிகர் விஜய்க்கு டிக்டாக் உதாரணமே பொருத்தமாக இருக்கும். ஏனெனில், இணைய உலகம் பேஸ்புக்கில் இருந்து டிக்டாக் யுகத்திற்கு வந்துவிட்டது. டிக்டாக் குறும் காணொலிகளே ஆதிக்கம் செலுத்துவதோடு, இணைய தகவல் தேடலுக்கான மையமாகவும் மாறியிருக்கிறது.

டிக்டாக் ஏன் வெற்றி பெற்றது என்பதற்கான காரணங்கள் ஆய்வுக்கு உரியது. அவை புதிய இணைய யதார்த்தத்தை உணர்த்துகின்றன. எனவே, டிக்டாக்கை அலசி ஆராய மாறுபட்ட கருவிகளும் பார்வையும் தேவை. அப்படி தான் நடிகர் விஜயின் அரசியலும். விஜய் அரசியலில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை டிக்டாக் யுக கண்ணாடியுடன் அணுக வேண்டும். ஆனால், பேஸ்புக்கில் இருந்து டிக்டாக் வேறுபட்டது என்பதை மீறி, தாக்கத்திலும், தீங்கிலும் இன்னொரு பேஸ்புக் தான். எனவே இன்னொரு டிக்டாக் ஏன் தேவை என்று கேட்பதே பொருத்தமாக இருக்கும். இதன் பொருள், விஜய் வடிவில் இன்னொரு எம்ஜிஆர் ஏன் தேவை என்பது தான்.

நிற்க இது அரசியல் பதிவு அல்ல: அரசியல் சார்ந்த கேள்வி பதில் அலசலோடு சாட்ஜிபிடி போன்ற ஏஐ சாட்பாட்கள் பயன்பாடு சார்ந்த பதிவு. உண்மையான அலசல்களுக்கும், ஆய்விற்கும் ஏஐ சாட்பாட்களை நாடாதீர்கள் என்பதே நீதி.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *