Tag Archives: டிவிட்ட‌ர்

டிவிட்டர் வழியே யூடியூப் விடியோ

யூடியூப்பில் வெளியாகும் வீடியோக்களை பார்த்து ரசிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன.அவற்றில் இன்னும்  ஒருவழியாக ஜூப்ஸ் இணையதளத்தை கொள்ளலாம்.

யூடியூப்பில் பதிவேறும் வீடியோ படங்களை பார்க்க யூடியூப் தளமே போதுமானது தான். ஆனால் யூடியூப்பில் மூழ்கி திளைத்தவர்களுக்கு தான் அதில் உள்ள பொக்கிஷங்களை தேடிப்பிடிக்கும் நுணுக்கம் தெரியும்.மற்றவர்களுக்கு குறிப்பாக புதியவர்களுக்கு யூடியூப்பில் கொட்டிக்கிடக்கும் வீடியோ கோப்புகள் மிரள வைக்கலாம்.

யூடியூப் வீடியோ கடலில் சுவாரஸ்யமானவற்றை கண்டுபிடிப்பது சவால் தான்.

யூடியூப்பிலியே ஊறிக்கொன்டிருந்தால் தான் லேட்டஸ்ட் ஹிட்டை சட்டென்று அடையாளம் காண முடியும்.

இத‌ற்கு மாறாக‌ அவ‌ப்போது யூடியூப்பில் ஹிட்டான வீடியோ என்று மீடியா ஊதிப்பெரிதாக்கும் காட்சிக‌ளை க‌ண்டு ர‌சிக்க‌லாம் தான். ஆனால் எல்லா ந‌ல்ல‌ காட்சிக‌ளையும் காண்ப‌த‌ற்கில்லை.

ஒரு சில‌ த‌ள‌ங்க‌ள் யூடியூப்பின் சிற‌ந்த‌ வீடியோக்க‌ளை திர‌ட்டித்த‌ருகின்ற‌ன‌.அந்த‌ வ‌கையில் ஜூப்ஸ் டிவிட்ட‌ர் வ‌ழியே மேலோங்கும் யூடியூப் காட்சிக‌ளை தொகுத்து அளிக்கிற‌து.

அதாவ‌து டிவிட்ட‌ர் ப‌திவுக‌ளில் அதிக‌ம் குறிப்பிட‌ப்ப‌டும் வீடியோ காட்சிக‌ளை அப்ப‌டியே உருவி பார்வைக்கு வைக்கிற‌து.

இப்போது தான் ந‌ல்ல‌தாக‌ எதைப்பார்த்தாலும் டிவிட்ட‌ரில் ப‌கிர்ந்து கொள்ளும் ப‌ழ‌க்க‌ம் இணைய‌வாசிக‌ளூக்கு இருக்கிற‌து அல்ல‌வா? என‌வே யூடியூப் பிரிய‌ர்க‌ள் தாங்க‌ள் பார்க்கும் வீடியோ ப‌ற்றி டிவிட்ட‌ரில் குறிப்பிடுகின்ற‌ன‌ர்.வ‌ர்க‌ளின் பின்தொடர்பாள‌ர்க‌ள் ம‌ட்டுமே ப‌டிக்க‌ கூடிய‌ இந்த‌ குறிப்புக‌ளை அல‌சி ஆராய்ந்து அத‌ன‌டிப்ப‌டையில் வீடியோ காட்சிக‌ளை ஜூப்ஸ் தொகுத்த‌ளிக்கிற‌து.

இதன் முக‌ப்பு ப‌க்க‌த்தில் பெட்டி பெட்டியாக‌ விடியோ காட்சிக‌ள் க‌ண் சிமிட்டுகின்ற‌ன‌. எது ந‌ம்மை க‌வ‌ர்கிறதோ அத‌னை கிளிக்கி பார்க்க‌லாம்.

ஒவ்வொரு வீடீயோவிலும் எத்த‌னை முறை பார்க்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து,எத்த‌னை முறை டிவிட்ட‌ரில் குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து போன்ற‌ விவ‌ர‌ங்க‌ளூம் இட‌ம்பெற்றுள்ள‌ன.
ச‌மீப‌த்திய‌ வீடியோக்க‌ள் ,ம‌ற்றும் ப‌ல‌வேறு த‌லைப்புக‌ளீன் கீழும் வீடியோக்க‌ளை காண‌ முடியும். க‌ட்டாய‌ம் பார்க்க‌ வேண்டிய‌வை ர்ர்ன்னும் ப‌ரிந்துரையும் உண்டு.

அறிமுக‌மாகி ஒரே வார‌த்தில் அபார்மான‌ வ‌ர‌வேற்பை இந்த‌ த‌ள‌ம் பெற்றிருப்ப‌தாக‌ அத‌ன் உரிமையாள‌ர்க‌ள் பெருமையோடு குறிப்பிட்டுள்ள‌ன‌ர். இணைய‌வாசிக‌ள் யோச‌னைப்ப‌டி தேட‌ல் வ‌ச‌தி உள்ளிட்ட‌வ‌ற்றை அறிமுக‌ம் செய்ய‌ உத்தேசித்திருப்ப‌தாக‌வும் கூறியுள்ள‌ன‌ர்.

டிவிட்ட‌ரில் பேசப்ப‌டுவ‌தை கொண்டு யூடியூப் வீடியோக்க‌ளை பார்ப்ப‌த‌ற்கான‌ புதிய‌ வ‌ழி என்று வ‌ர்ணிக்க‌ப்ப‌டும் இந்த‌ த‌ள‌ம் ஓயாம‌ல் டிவிட்ட‌ரில் யூடீயூப் தொட‌ர்பான‌ ப‌திவுக‌ளை ப‌ரிசிலித்து அதிக‌ம் பேச‌ப்ப‌டும் வீடியோக்க‌ளை தேர்வு செய்வ‌தாக‌ தெரிவிக்கிற‌து.

யூடியூப்பில் ச‌மீப‌த்திய‌ ம‌ற்றும் சுவார‌ஸ்ய‌மான‌ வீடியோக்க‌ளை க‌ண்டு ர‌சிப்ப‌த‌ற்கான‌ இட‌ம் இந்த‌ த‌ள‌ம் என்று குறிப்பிட‌ப்ப‌ட்டிருப்ப‌தோடு, க‌வ‌ன‌மாக‌ இருங்க‌ள் இந்த‌ த‌ள‌ம் ஒரு மோக‌மாக‌ மாறிவிடும் அள‌வுக்கு உங்க‌ளை க‌வ‌ர்ந்து விடும் என்றும் எச்ச‌ரிக்கிற‌து.

யூடியூப் ம‌ற்றும் வீடியோ பிரிய‌ர்க‌ளுக்கான‌ விருந்து இந்த‌ த‌ள‌ம்.

———-

http://www.zoofs.com/

திருடர்களுக்கு வழிகாட்டும் இணையதளம்

எங்கள் வீட்டுக்கு திருட வாருங்கள் என்று யாராவது அழைப்பு விடுத்தால் எப்படி இருக்கும்? இத்தகைய வியப்பு கலந்த திகைப்பை தான் புதிதாக அறிமுகமாகியுள்ள இணையதளம் ஏற்படுத்தியுள்ளது.

இணைய உல‌கில் பெரும் பரபரப்பையும் கூடவே விவாதத்தையும் உண்டாக்கியிருக்கிறது அந்த தளம். பிளீஸ்ராப்மீ என்பது தான் அந்த தளத்தின் பெயர்.அதாவது என்னை கொள்ளையடி என்று பொருள்.இன்னும் சரியாக சொல்வதனால் எங்கள் வீட்டிற்கு திருட வாருங்கள் என்று அழைப்பு விடுப்பது போல் தான்.

இதென்ன வம்பாக இருக்கிறதே என நினைக்க தோன்றுகிறதா? உண்மையில் இந்த தளம் அதை தான் செய்கிறது. யாரெல்லாம் தங்கள் வீடுகளை பூட்டி விட்டு செல்கின்றனர் என்னும் விவரத்தை பட்டியலிடுவது தான் இந்த தள‌த்தின் நோக்கம்.

இந்த‌ விவ‌ர‌த்தை திர‌ட்டுவ‌து ஒன்றும் க‌டின‌மான‌ விஷ‌ய‌ம் அல்ல‌.டிவிட்ட‌ர்,ஃபேஸ்புக் போன்ற‌ த‌ள‌ங்க‌ளில் ப‌ல‌ரும் இந்த‌ விவ‌ர‌ங்க‌ளை அவ‌ர்க‌ளாக‌வே விரும்பி ப‌கிர்ந்து கொள்கின்ற‌னர்.அவ‌ற்றை எல்லாம் ஒரே இட‌த்தில் திர‌ட்டித்த‌ருகிற‌து இந்த‌ த‌ள‌ம்.

இந்த‌ விவ‌ர‌ங்க‌ள் திருட‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌தாகி விடுமே என்று கேட்க‌லாம்.இந்த‌ தள‌த்தைப்பார்த்து விட்டு திருட‌ர்க‌ள் த‌ங்க‌ளின் இல‌க்கை தேர்வு செய்து கைவ‌ரிசை காட்டுவ‌து சுல‌ப‌மாயிற்றே என்னும் ச‌ந்தேக‌மும் நியாய‌மான‌து தான்.

இந்த‌ த‌ள‌ம் செய்ய‌ விரும்புவ‌தும் இதை தான்.திருட‌ வாருங்க‌ள் என்று அழைப்பு விடுப்ப‌த‌ல்ல;ஆனால் திருட‌ வாருங்க‌ள் என்று அழைப்பு விடுப்ப‌த‌ற்கான‌ வாய்ப்பு இருப்ப‌தை உண‌ர்த்துவ‌து தான் இத‌ன் உண்மையான‌ நோக்க‌ம். அதிர்ச்சி வைத்திய‌ம் என்று சொல்வார்க‌ள் இல்லையா?அதே போல இணைய‌த்தில் ப‌கிர்ந்து கொள்ள‌ப்ப‌டும் விவ‌ர‌ங்க‌ள் எந்த‌ அள‌வுக்கு ஆப‌த்தான‌வை என்ப‌தை திருட‌ர்க‌ளுக்கான‌ அழைப்பு மூல‌ம் இந்த‌ த‌ள‌ம் சுட்டிக்காட்டுகிற‌து.

டிவிட்ட‌ர் போன்ற‌ வ‌லைப்பின்ன‌ல் சேவைகளில் ப‌ல‌ரும் த‌ங்க‌ளைப்ப‌ற்றிய‌ அந்த‌ர‌ங்க‌ விவ‌ர‌ங்க‌ளை எந்த‌வித‌ த‌ய‌க்க‌மும் இன்றி ப‌கிர்ந்து கொள்கின்ற‌ன‌ர்.பார்த்த‌து,ப‌டித்த‌து, கேட்ட‌து எல்லாவ‌ற்றையும் வெளியிடுப‌வ‌ர்க‌ள் ஊருக்கு போகும் போது ம‌ற‌க்காம‌ல் டிவிட்ட‌ரிலும் சொல்லிவிட்டு சொல்கின்ற‌ன‌ர்.அதே போல‌ விடுமுரைக்கு செல்லும் போதும் டிவிட்ட‌ரில் தெர்விக்கின்ற‌ன‌ர். ஃபேஸ்புக் உறுப்பின‌ர்க‌ள் ப‌த்தியிலும் இந்த‌ ப‌ழ‌க்க‌ம் இருக்கிற‌து.

 இணைய‌ ந‌ண்ப‌ர்க‌ள் த‌ம‌து ப‌யண‌ திட்ட‌த்தை அறிந்திருப்ப‌து ந‌ல்ல‌து ம‌ற்றும் அவ‌சிய‌ம் என்னும் எண்ன‌த்தில் ப‌ல‌ரும் இத‌னை செய்கின்ர‌ன‌ர். சில‌ருக்கு த‌ங்க‌ள் செய‌ல்க‌ளை இணைய‌த்தில் ப‌றைசாற்ரிக்கொள்ளாவிட்டால் த‌லையே வெடித்து விடும்.

என்வே அதையும் ப‌கிர்ந்து கொள்ள அவ‌ர்க‌ள் த‌ன்முனைப்பு உந்தி த‌ள்ளுகிற‌து. இந்த‌ ப‌கிர்வு க‌லாச்சார‌ம் இண்டெர்நெட் கால‌ இய‌ல்பு என்றாலும் கூட‌ இதில் உள்ள‌ ஆப‌த்தை பெரும்பாலானோர் உண‌ர்வ‌தில்லை.

 இணிடெர்நெட்டில் ஒரு த‌க‌வ‌லை ப‌கிரும் போது உங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ட்டும் அத‌னை பார்ப்ப‌தில்லை.வேன்டாத‌வ்ர்க‌ளும்,விஷ‌மிக‌ளும் அவ‌ற்றை பார்க்கும் வாய்ப்பு இருக்கின்ற‌து.

உதார‌ண‌த்திற்கு ஒருவ‌ர்,தான் வெளியூருக்கு செல்வ‌தை தெரிவிக்கிறார் என‌ வைத்துக்கொள்வோம். அப்போது அவ‌ர் தன‌து ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் த‌க‌வ‌ல் சொல்ல‌வில்லை. த‌ன‌து வீடு பூட்ட‌ப்ப‌ட்டிருக்கும் என்ப‌தையும் திருடும் எண்ண‌ம் கொண்ட‌வ‌ர்க‌ளுக்கு தெரிவிக்கின்ற‌ன‌ர்.

என‌வே டிவிட்ட‌ர் ப‌திவை பார்த்து விட்டு ஒருவ‌ர‌து வீடு பூட்ட‌ப்ப‌ட்டிருக்கும் என்ப‌தை தெரிந்து கொண்டு க‌ய‌வ‌ர்க‌ள் க‌ண்ண‌ம் வைக்க‌கூடும்.ஏற்க‌ன‌வே ஒரு சில‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ல் இப்ப‌டி ந‌ட‌ந்துள்ள‌ன‌.எதிர்கால‌த்தில் திருட‌ர் ம‌ற்றும் கொள்ளைய‌ர்க‌ள் டிவிட்ட‌ர் போன்ற‌ சேவைகளில் உலா வ‌ருவ‌த‌ன் முல‌மே த‌ங்க‌ளுக்கான‌ சுல‌ப‌ இல‌க்கை தேர்வு செய்து விட‌ முடியும் என‌ அஞ்ச‌ப்ப‌டுகிற‌து.

வ‌லைப்பின்ன‌ல் த‌ள‌ங்க‌ளை ப‌ய‌ன்ப‌டுத்தும் போது எதை வெளியிடுவ‌து அதை வெளியிடாம‌ல் இருப்ப‌து என‌ எச்ச‌ரிகையாக‌ இருக்க‌ வேண்டும் என்று நிபுண‌ர்க‌ள் கூறுகின்ற‌ன‌ர். அது ம‌ட்டும் அல்லாம‌ல் இப்போது போர்ஸ்கொய‌ர் போன்ற‌ இருப்பிட‌ன் உண‌ர் சேவை மூல‌ம் ஒருவ‌ரின் இருப்பிட‌ம் சார்ந்த‌ விவ‌ரங்கள் இணைய‌த்தில் வெளியிட‌ப்ப‌டுகிற‌து.

இவையெல்லாம் திருட‌ வ‌ரலால் என‌ அழைப்பு அன்றி வேரென்ன‌?என்று சொல்லாம‌ல் சொல்வ‌த‌ற்காக‌ நெத‌ர்லாந்தை சேர்ந்த‌ இளைஞ‌ர‌க‌ள் பிளீஸ் ராப்மீ த‌ள‌த்தை அமைத்துள்ள‌ன‌ர். இண்டெர்நெட்டில் வெளியிட‌ப்ப‌டும் விவ‌ர‌ங்க‌ளால் ஏற்ப‌ட‌க்கூடிய‌ ஆப‌த்துக்க‌ள் ப‌ற்றி ப‌ல‌வித‌ங்களில் நிபுண‌ர்க‌ள் எச்ச‌ரித்த‌ போதும் பெரும்பாலானோர் அத‌ன் தீவிர‌த்தை உண‌ர்ந்த‌தாக‌ தெரிய‌வில்லை.

ஆனால் இந்த‌ த‌ள‌த்தில் யாரெல்லாம் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார்க‌ள் என்னும் விவ‌ர‌ம் திருட‌ வாருங்க‌ல் என்னும் அழைப்போடு வெளியாவ‌தை பார்க்கும் போது ப‌கீர் என்று இருக்கும் அல்லவா?அந்த‌ நொடியில் டிவிட்ட‌ர் ப‌கிர்வுக‌ள் எத்த‌கைய‌ அபாய‌ம் மிக்க‌வை என்ப‌து உரைக்கும் அல்ல‌வா? அத‌னை தான் செய்வ‌தாக‌ இந்த‌ த‌ள‌த்தின் நிறுவ‌ன‌ர்க‌ள் சொல்கின்ர‌ன‌ர்.

முத‌ல் பார்வைக்கு இந்த‌ த‌ள‌ம் திருட‌ர்க‌ளுக்கு ஆத‌ர‌வான‌து போன்ர‌து என்றாலும் உண்மையில் விழிப்புண‌ர்வை ஏற்ப‌டுத்துவ‌து தான் இத‌ன் குறிக்கோள். இந்த‌ த‌ள‌ம் இண்டெர்நெட் உல‌கில் ப‌ர‌வ‌லான‌ க‌வ‌னிப்பை பெற்றுள்ள‌து.ப‌ல‌ர் இந்த‌ த‌ள‌த்தை பொருப்ப‌ற்ற‌ செய‌ல் என்று விம‌ர்சித்துள்ள‌ன‌ர். ஆனால் இந்த‌ தள‌த்தில் குறிப்பிட‌ப்பிட‌ப்ப‌ட்டிருப்ப‌து போல் நீங்க‌ள் வெளியூர் செல்வ‌தை அறிவிக்கும் போது நீங்க‌ள் வீட்டில் இல்லாத‌தை உல‌கிற்கு அறிவித்துக்கொண்டிருக்கிறீர்க‌ள் என்ப‌தை இந்த‌ த‌ள‌ம் மிக‌ அழ‌காக‌ உண‌ர்த்துகிற‌து.

ந‌ம் கால‌த்து பிர‌ச்ச‌னைப்ப‌ற்றிய‌ விழிப்புண‌ர்வை ஏற்ப‌டுத்தும் அழாகான‌ த‌ள‌ம் இது என்றே தோன்றுகிற‌து. அத்ற்கேற்ப‌வே இத‌ன் உரிமையாள‌ர்க‌ள் இந்த‌த‌ள‌த்தை இண‌டெர்நெட் அந்த‌ர‌ங்க‌ பிர‌ச்ச்னைக‌ள் சார்ந்த‌ விழிப்புண‌ர்வு ப‌ணிக்கு வ‌ழ‌ங்க‌ த‌ய‌ராக‌ இருப்ப‌தாக‌ அறிவித்துள்ள‌ன‌ர்.

———-

http://pleaserobme.com/

ஒபாமாவின் முதல் டிவீட்

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா முதல் முறையாக டிவிட்டரை பயன்படுத்தியிருக்கறார். ஹைதி பூக‌ம்ப‌ நிவார‌ண‌ ப‌ணிக‌ளை ஊக்குவிக்கும் வ‌கையில் அவ‌ர் டிவிட்ட‌ரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

ஒபாமா டிவிட்ட‌ருக்கு புதிய‌வ‌ர் அல்ல‌. அவ‌ர‌து பெய‌ரில் டிவிட்ட‌ர் முக‌வ‌ரி க‌ண‌க்கு இருக்கிற‌து.மேலும் அதிப‌ர் தேர்த‌லின் போது ஒபாமா பிர‌சார‌த்திற்காக‌ டிவிட்ட‌ர் ம‌ற்றும் ஃபேஸ்புக் போன்ற‌ வ‌லைப்பின்ன‌ல் சேவைக‌ள் தீவிர‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ன.வ‌லைப்பின்ன‌ல் சேவை மூல‌ம் ஒபாமா குழு நிதி திர‌ட்டிய‌ வித‌மும் வேக‌மும் ப‌ர‌வ‌லாக‌ பார‌ட்ட‌ப்ப‌ட்ட‌ன.

தேர்த‌ல் பிர‌சார‌த்தில் இண்டெர்நெட்டை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தில் ஹாவ‌ர்டு டீன் போன்ற‌வ‌ர்க‌ள் முன்னோடியாக‌ க‌ருத‌ப்ப‌டும் வேளையில் ஒபாமா வ‌லைப்பின்ன‌ல் சார்ந்த‌ பிர‌சார‌த்தில் முன்னோடியாக‌ புக‌ழ‌ப்ப‌ட்டார்.

அதிப‌ராக‌ ப‌த‌வியேற்ற‌ பிற‌கும் ஒபாமா நிர‌வாக‌த்தில் பொதும‌க்க‌ளின் க‌ருத்தை அறிய‌ இண்டெர்நெட் ப‌ய‌ன்பாட்டை ஊக்குவித்தே வ‌ந்துள்ளார். மேலும் டிவிட்ட‌ரில் அதிக‌ பின்தொட‌ர்ப‌வ‌ர்க‌ளை கொண்ட‌வ‌ர்க‌ள் ப‌ட்டிய‌லில் அவ‌ரே முத‌ல் இட‌த்தில் இருந்து வ‌ந்தார்.

இந்நிலையில் க‌ட‌ந்த‌ ஆண்டு சீன‌ விஜ‌ய‌த்தின் போது ஒபாமா டிவிட்டரை தான் பயன்படுத்தியதில்லை என்றும் டிவிட்டர் தனக்கு புரியவில்லை என்றும்  ஒரு குண்டை தூக்கி வீசினார்.ஒபாமா டிவிட்ட‌ரில் பிர‌ப‌ல‌மாக‌ இருப்ப‌தாக‌ க‌ருதப்ப‌ட்டு வ‌ந்த‌ நிலையில் இந்த‌ க‌ருத்து பெரும் அதிர்ச்சியை அளித்த‌து.

ஒபாமா டிவிட்ட‌ர் ப‌ய‌ன்பாட்டில் முன்னுதார‌ன‌மாக‌ திக‌ழ்கிறார் என்று பார‌ட்டிய‌வ‌ர்க‌ள் எல்லாம் அவ‌ர‌து டிவிட்ட‌ர் அறியாமையை கேட்டு திகைத்துப்போயின‌ர்.

பின்ன‌ர் தான் விஷ‌ய‌ம் விள‌ங்கிய‌து.ஒபாமா பெய‌ரில் டிவிட்ட‌ர் க‌ண‌க்கு இருக்கிற‌தே த‌விர‌ உண்மையில் அவ‌ர் அத‌னை நேர‌டியாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த்வில்லை. தேர்த‌ல் பிரசார‌த்தின் போது அவ‌ர‌து பிர‌ச்சார‌ குழுவின‌ர் அவ‌ர் சார்பில் டிவிட்ட‌ர் செய்து ஆத‌ர‌வு திர‌ட்டியுள்ள‌ன‌ர்.அதிப‌ரான‌ பின்ன‌ரும் இதே முறையை அவர‌து உத‌வியாள‌ர்க‌ள் பின‌ப்ற்றி வ‌ந்துள்ள‌ன‌ர்.

நோப‌ல் ப‌ரிசு அறிவிக்க‌ப்ப‌ட்ட‌ போது கூட‌ அதிப‌ர் சார்பில் நெகிழ்ந்து போனேன் என்று டிவிட்ட‌ர் செய்துள்ள‌ன‌ர்.

இதையெல்லாம் வைத்து தான் ஒபாமா டிவிட்ட‌ர் செய்கிறார் என்று க‌ருத‌ப்ப‌ட்ட‌து.

இப்ப‌டியிருக்க‌ ஒபாமா இப்போது முத‌ல் முறையாக‌ டிவிட்ட‌ர் செய்துள்ளார்.

ஹைதியில் ஏற்ப‌ட்ட‌ பூக‌ம்ப‌ம் பெரும் சேத்தையும் பேர‌விவையும் உண்டாக்கியுள்ள‌ நிலையில் ச‌ர்வ‌தேச‌ செஞ்சிலுவை ச‌ங்க‌ம் நிவார‌ண‌ப்பணிக‌ளை மேற்கொள்வ‌தில் ப‌ம்ப‌ர‌மாக‌ சுழ‌ன்று கொண்டிருக்கிற‌து.தாம‌திக்கும் ஒவ்வொரு நிமிட‌மும் உயிர் ப‌லி என்ப‌தை உண‌ர்ந்து நிவார‌ண‌ப் ப‌ணிக‌ளை ச‌ங்க‌ம் ஒருங்கிணைத்து வ‌ருகிற‌‌து.

உயிர் காக்கும் உன்ன‌த‌ ப‌ணியில் ஈடுப‌ட்டுள்ள‌ செஞ்சிலுவை ச‌ங்க‌த்தின் செய‌ல்பாடுக‌ளை ஊக்குவிப்ப‌த‌ற்க்காக‌ ஒபாமா ம‌னைவியோடு ச‌ங்க‌த்தின் த‌லைமை அலுவ‌ல‌க‌த்திற்கு விஜய‌ம் செய்தார்.அரும்பணி ஆற்றி வ‌ரும் உங்க‌ளை பாராட்டி ஊக்க‌ப்ப‌டுத்த‌வே வந்துள்ளேன் என்று அறிவித்த‌ ஒபாமா பின்ன‌ர் அங்கு சுற்றிப்பார்த்து வ‌ருகையில் ஒரு க‌ம்ப்யூட்ட‌ரில் டிவிட்ட‌ர் ப‌க்க‌த்தை க‌ண்டார்.

அதிப‌ர் ம‌ற்றும் அவ‌ர் ம‌னைவி நிவார‌ண‌ப்ப‌ணிக‌ளை பார்வையிட்டு வ‌ருகின்ற‌ன‌ர் என‌ அவ‌ர் குறிப்ப்ட்டு டிவிட்ட‌ர் செய்தார்.அத‌ன் பிற‌கு ஒபாமா முத‌ன் முத‌லில் டிவிட்ட‌ர் செய்துள்ளார்‌ என அவரே உறுதிப்ப‌டுத்தி அடுத்த‌ செய்திய‌ ப‌திவு செய்தார்.

நிற்க‌ பூக‌ம்ப‌ நிவார‌ன‌ முய‌ற்சிக‌ளில் டிவிட்ட‌ர் போன்ற‌ தொழில்நுட்ப‌ சேவைக‌ள் பெரும் ப‌ங்காற்றி வ‌ருகின்ற‌ன‌.எஸ் எம் எஸ் மூல‌ம் நிதி திர‌ட்டுவ‌திலும் திவிராம் காட்ட‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.

பாசுவுக்கு டிவிட்டர் வண‌க்கம்

ஜோதி பாசு எந்த அளவுக்கு ம‌திக்கப்பட்ட தலைவராக இருந்தார் என்பதை அவரது மரணம் உணர்த்தியுள்ளது.பத்து நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் காத்திருந்த மார்க்சிஸ்ட் தொண்டர்கள் அவரது மறைவுக்காக கண்ணீர் சிந்தும் காட்சியும், கட்சி வேறுபாடின்றி தலைவர்கள் பாசுவின் நற்பண்புகளை உளமாற புகழ்ந்திருப்பதும் இதற்கு சாட்சி.

அதே போல‌ குறும்ப‌திவு சேவையான‌ டிவிட்ட‌ரிலும் பிர‌ப‌ல‌ங்க‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ம‌றைந்த‌ த‌லைவ‌ருக்கு த‌ங்க‌ள் டிவீட் மூல‌ம் இறுதி ம‌ரியாதை செலுத்தியுள்ள‌ன‌ர்.
ம‌த்திய‌ அமைச்ச‌ரும் டிவிட்ட‌ர் முன்னோடியுமான‌ ச‌ஷி த‌ரூர் ,ஜோதி பாசு (1914…2010)ஆர் ஐ பி என‌ குறிப்பிடிருந்தார். டிவிட்ட‌ர் மொழியில் ஆர் ஐ பி என்றால் ஆத்மா சாந்தி அடைய‌ட்டும் என்று பொருள்.
ப‌த்திரிக்கையாள‌ரும் திரைப்ப‌ட‌ த‌யாரிப்பாள‌ருமான‌ பிரித்திஷ் ந‌ந்தி பாசு த‌ன‌து விச்கியையும் மார்க்சிஸ‌த்தையும் அதே வ‌ரிசையில் நேசித்தார்,ஆனால் ஈடு இணையில்லாத‌ மனிதர்  என்று த‌ன‌க்கே உரிய‌ பாணியில் இர‌ங்கல் தெரிவித்தார்.

தொழில‌திப‌ரான‌ ஆன‌ந்த் ம‌கிந்திரா,பாசுவை ச‌ந்தித்த‌ த‌ருண‌த்தை நினைவு கூறி அப்போது ப‌த‌வியில் இல்லை.எனினும் ஒருபோதும் அதிகார‌மில்லாத‌வ‌ராக‌ தோன்ற‌ மாட்டார் என்னும் உண‌ர்வை அளித்த‌தாக‌ கூறியுள்ளார்.

அமிதாப் ப‌ச்ச‌ன் த‌ன‌து வ‌லைப்ப‌திவில் பாசு ப‌ற்றி விரிவாக‌வே குறிப்பிட்டுள்ளார்.

ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் பாசு மீதான‌ ம‌திப்பை டிவிட்ட‌ர் மூல‌ம் வெளிப்ப‌டுத்தியுள்ள‌ன‌ர்.நிக‌ரில்லாதா த‌லைவ‌ராக‌ வாழ‌ந்து ம‌றைந்த பாசு ப‌ற்றி அறிய‌ அவ‌ர‌து அதிகார‌பூர்வ‌ இணைய‌த‌ள‌த்திற்கு சென்று பாருங்க‌ள்.

 ———–

http://jyotibasu.net/

டிவிட்டரில் ஷாருக்கிற்கு போட்டி

ஷாரூக் டிவிட்டரில் அடியெடுத்து வைத்து முதல் சில நாட்களிலேயே அதிக பின்தொடர்பவர்களை பெற்று பரபரப்பை ஏற்ப‌டுத்தியுள்ளார்.ஷாரூக் டிவிட்டரை பயன்ப‌டுத்தும் விதம் குறித்து பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் டிவிட்டரில் அவ‌ருக்கு போட்டியும் உருவாகியுள்ளது.
போட்டி என்றால் ரசிகர் ஒருவர் ஷாரூக் பெயரிலேயே போலி டிவிட்டர் பக்கம் ஒன்றை உருவாக்கி ஷாரூக் போலவே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த போலி ஷாரூக்கிற்கும் பின்தொடர்பாளர்கள் கிடைத்திருக்கின்றனர்.

டிவிட்டரில் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் பக்கத்தை அமைக்கலாம்.பெரும்பாலும் பலர் தங்கள் பெயரில் டிவிட்டர் பக்கம் அமைத்து தங்கள் சுயபுராண‌த்தை பதிவு செய்வது உண்டு.ஒரு சில‌ர் ம‌ட்டும் விவ‌கார‌மாக‌ பிர‌ப‌ல‌ங்க‌ளின் பெய‌ரில் டிவிட்ட‌ர் ப‌க்க‌த்தை துவ‌க்கி விளையாடுவ‌துண்டு.சில‌ நேர‌ங்க‌ளில் ர‌சிக‌ர்க‌ள் த‌ங்க‌ள் அபிமான‌ ந‌ட்ச‌த்திர‌த்தின் புக‌ழ்பாட இவ்வாறு செய்வ‌துண்டு.சில‌ வேண்டுமென்றே விவ‌கார‌மாக‌ இத‌னை செய்வ‌தும் உண்டு.
க‌வ‌ன‌த்தை ஈர்ப்ப‌து உட்ப‌ட‌ இத‌ற்கு ப‌ல‌வித‌ நோக்க‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌.இத‌னை க‌ட்டுப்ப‌டுத்த‌வே டிவிட்ட‌ர் பிர‌ப‌ல‌ங்க‌ளைப்பொருத்த‌வ‌ரை அவ்ர்க‌ளுக்கான‌ அதிகார‌பூர்வ‌ டிவிட்ட‌ர் ப‌க்க‌த்த‌ உறுதிசெய்த் கொள்ளும் வ‌ச‌தியை அறிமுக‌ம் செய்துள்ள‌து.டிவிட்ட‌ர் ப‌க்க‌த்தின் வ‌ல‌து புற‌த்தில் ச‌ரிபார்க்க‌ப்ப‌ட்ட‌ ப‌க்க‌ம் என்ற‌ வாச‌க‌ம் இட‌ம்பெற்றிருக்கும்.
அக்மார்க் முத்திரையைப்போல‌ ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ பிர‌ப‌ல‌த்திற்கு உரிய‌ ப‌க்க‌ம் இது என‌ உண‌ர்த்தும் சான்றித‌ழ் இது,

ஆனால் இந்த‌ க‌ட்டுப்ப‌ட்டையும் மீறி போலி ப‌க்க‌ங்க‌ள் உருவாக்க‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌.ஷாரூக் விஷ‌ய‌த்தில் அவ‌ர் ‘iamsrk’,என்ற‌ பெய‌ரில் டிவிட்ட‌ர் ப‌க்க‌த்தை அமைத்துள்ளார‌ என்றால் அவ‌ர‌து போலி ‘imsrk. என்னும் பெய‌ரில் டிவிட்ட‌ர் செய்து வ‌ருகிறார்.

இந்த‌ செய‌லை எதிர்த்து ஷாரூக் டிவிட்ட‌ர் நிர‌வாக‌த்திட‌ம் முறையீடு செய்து நிவார‌ண‌ம் தேட‌லாம். அவ்வாறு செய்கிறாரா என்று தெரிய‌வில்லை.

————

இது போலி ஷாரூக்;http://twitter.com/imsrk