Tag Archives: யூடியூப்

யூடியூப் வீடியோக்களை சேர்த்து வைப்பதற்கான இணையதளம்.

ஆற‌ அம‌ர‌ இணைய‌த்தில் உலா வ‌ருவ‌தென்ப‌து வேறு.ஆனால் அந்த பாக்கியம் எல்லா நேரத்திலும் கிடைப்பதில்லை. பெரும்பாலும் வேலைக்கு நடுவே அவசர கதியில் தான் இணையத்தில் உலாவ நேர்கிறது.அதிலும் பலர் அலுவலக நேரத்தில் தான் இண்டெர்நெட்டை பயன்படுத்துபவர்களாகவும் இருப்பதால் அரக்க பரக்க சமைக்கும் இல்லத்தலைவியைப்போல தான் இணையதளங்களையும் பார்க்க வேண்டியுள்ளது.

சிலருக்கு இண்டெர்நெட்டில் உலாவுவதே வேலையாகவும் அமையலாம்.அவர்களும் கூட வேலைக்கு நடுவே தங்களுக்கு பிடித்தமான தளங்களை போகிற போக்கில் தான் மேய வேண்டும்.

இந்த பீடிகை எதற்காக என்றால் இப்படி அவசரமாக இனைய உலா மேற்கொள்ளும் இணையவாசிகளுக்கு உதவக்கூடிய அருமையான இணைய சேவையை அறிமுக செய்வதற்காக தான்.

அதிலும் குறிப்பாக‌ யூடியூப் பிரிய‌ர்க‌ளுக்கான‌து.இன்னும் குறிப்பிட்டு சொல்ல‌ வேண்டும் என்றால் இசைம‌ய‌மான‌ யூடியூப் பிரிய‌ர்க‌ளுக்கான‌து.

மியூப் என்னும் அந்த‌ இணைய‌த‌ள‌ம் உங்க‌ள் க‌ண்ணில் ப‌டும் யூடியூப் விடியோ கோப்புக‌ளை சேமித்து வைத்துக்கொள்ள‌ உத‌வுகிற‌து.

அதாவ‌து வேலைக்கு ந‌டுவே யூடியூப் ப‌க்க‌ம் எட்டிப்பார்க்கும் போது ந‌ல்ல‌தாக‌ ஒரு விடியோ தென்ப‌ட‌லாம்.3 அல்ல‌து 4 நிமிட‌ங்க‌ள் ஓட‌க்கூடியு வீடியோ என்றாலும் அப்போது உட‌ன‌டியாக‌ பார்ப்ப‌து சாத்திய‌ம் இல்லாம‌ல் போக‌லாம்.அதிலும் இசை ஆல்பம் தொடர்பான வீடியோ காட்சி என்றால் கொஞ்சம் ஆர அமர கேட்டும் பார்த்தும் ரசிக்க தோன்றும்.

உட‌னே என்ன‌ செய்வீர்க‌ள்?பின்னர் பார்த்து ரசிக்கலாம் என்று ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ வீடியோவை ம‌ன‌தில் குறித்து வைத்து கொள்வீர்க‌ள்.அத‌ன் பிற‌கு ம‌ற‌ந்து போய் விடுவீர்க‌ள்.நேர‌ம் கிடைக்கும் போது நினைத்துப்பார்த்தால் அந்த‌ முக‌வ‌ரியும் ம‌ற‌ந்து போயிருக்கும்.அல்ல‌து ச‌ரியாக‌ நினைவில் இருக்காது.

எதையும் காகித‌த்தில் குறித்து வைக்கும் ப‌ழ‌க்க‌ம் இருந்தால் பிர‌ச்ச‌னையில்லை.ஆனால் ந‌ம்மில் ப‌ல‌ருக்கு அந்த‌ ப‌ழ‌க்க‌ம் இல்லையே.

இது போன்ற‌ நேர‌ங்க‌ளில் இணைய‌ ப‌க்க‌ங்க‌ளை புக்மார்க்காக‌ குறித்து வைக்க‌லாம் .ஆனால் யூடியூப் வீடியோக்க‌ளுக்கு இது ச‌ரிப‌ட்டு வ‌ருமா?

ஒரு க‌ட்டுரையை ம‌ட்டும் பின்ன‌ர் ப‌டிக்கமாம் என்று சேமித்து வைப்ப‌து போல‌ யூடியூப் வீடியோவையும் அப்ப‌டியே செமித்து வைக்க‌ முடிந்தால் எப்ப‌டி இருக்கும்?மீயூப் த‌ள‌ம் அத‌னை தான் செய்கிற‌து.

இந்த‌ த‌ள‌த்தில் உறுப்பின‌ரான‌ பின்ன‌ர் அவ‌ப்போது யூடியூபில் க‌ண்ணில் ப‌டும் அழ‌கான‌ வீடியோக்க‌ளை உங்க‌ள் க‌ண‌க்கில் சேமித்து கொள்ள‌லாம்.நேர‌ம் கிடைக்கும் போது அவ‌ற்றை சாவ‌காச‌மாக‌ பார்த்து ர‌சிக்க‌லாம்.

ஆக‌ இந்த‌ சேவையை ப‌யன்ப‌டுத்தினால‌ யூடியூப் விடியோக்களை மற‌தியால் த‌வ‌ற‌விடும் வாய்ப்பே இல்லை.

இந்த‌ த‌ள‌த்தில் நீங்க‌ள் பார்க்க‌ வேண்டிய‌ வீடியோக்க‌ளை சேமித்து வைப்ப‌தோடு ஏற்க‌னெவே ம‌ற்ற‌வ‌ர்க‌ள் சேர்த்து வைத்துள்ள‌வ‌ற்றையும் க‌ண்டு ர‌சிக்க‌லாம்.அந்த‌ வ‌கையில் புதிய‌ வீடியோக்க‌ளை பார்த்து ர‌சிப்ப‌த‌ற்கான‌ வ‌ழியாக‌வும் இது விள‌ங்குகிற‌து.புதிய வீடியோ காட்சிகளை பார்ப்பதற்கான ஒன்னொரு வழியாக இந்த‌ த‌ள‌த்திலேயே பிர‌ப‌ல‌மான‌ வீடியோ காட்சிக‌ளூம் ப‌ட்டிய‌லிட‌ப்ப‌ட்டுள்ள‌து.

இந்த‌ த‌ள‌ம் ம‌ற்றும் யூடியூப்பில் தேடும் வ‌ச‌தியும் உண்டு.

——–

http://www.muube.com/

கூகுல் விள‌ம்ப‌ர‌ம் மூல‌ம் கிடைத்த‌ வேலை

கூகுலின் விள‌ம்ப‌ர‌ சேவையான‌ ஆட்வேர்ட்சை இத‌ற்கு முன்ன‌ர் த‌னிந‌ப‌ர்க‌ள் இத்த‌னை அழ‌காக‌ ப‌ய‌ன‌ப்டுத்திக்கொன்டிருக்கின்ற‌ன‌ரா என்று தெரிய‌வில்லை.உண்மையில் ஆட்வேட்ஸ் சேவையை த‌னிந‌ப‌ர்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தியுள்ள‌ன‌ரா என்றும் தெரிய‌வில்லை. பொதுவாக‌ வ‌ர்த்த‌நிறுவ‌ன‌ங்க‌ளே இந்த‌ சேவையை அதிக‌ம் ப‌யன்ப‌டுத்துகின்ற‌ன‌.அதோடு சிறிய‌ அள‌விலான‌ நிறுவ‌ங்க‌ல் ம‌ற்றும் இணைய‌ தொழில் முனைவோர் ப‌ய‌ன்ப‌டுத்துகின்ற‌ன‌ர்.

இதில் விய‌ப்ப‌த‌ற்கு ஒன்றுமில்லை.

ஆட்வேர்ட்ஸ் விள‌ம்ப‌ர‌ சேவையான‌து அத‌ன் இய‌ல்பு ப‌டியே நிறுவன‌ங்க‌ளுக்கான‌து தான்.

எல்லாவிதமான‌ இணைய‌த‌ள‌ங்க‌ளிலும் ஆட்வேர்ட்ஸ் விள‌ம்ப‌ர‌ங்க‌ளை பார்க்க‌லாம். நோட்டு புத‌த‌க‌த்தில் ப‌க்க‌வாட்டில் குறிப்பெழுதுவ‌து போல‌ இணைய‌ப‌க்க‌ங்க‌ளின் ஓர‌த்தில் கூகுல் விள‌ம‌ப‌ர‌ங்க‌ள் என்னும் குறிப்போடு குட்டி குட்டியாக‌ இந்த‌ விள‌ம்ப‌ர‌ங்கள் இட‌ம்பெற்றிருக்கும்.

ஒரு வ‌ரி த‌லைப்பின் கீழ் ஒரிரு வ‌ரி அறிமுக‌த்தோடு விள‌ம்ப‌ர‌ம் த‌ரும் இணைய‌த‌ள‌த்திற்கான‌ இணைப்பு கொடுக்க‌ப்ப‌ட்டிருக்கும்.ம‌ற்ற‌ விளம்ப‌ரங்க‌ளுக்கும் கூகுல் விளம்ப‌ர‌த்துக்கும் உள்ள‌ முக்கிய‌ வித்தியாச‌ம் பெரும்பாமும் இவை பொருத்த‌மான‌தாக‌ இருக்கும்.அதாவ‌து ஒருவ‌ர் ப‌டித்திக்கொண்டிருக்கும் இணைய‌ ப‌க்க‌த்தில் உள்ள‌ விஷ‌ய‌த்திற்கு தொட‌ர்புடைய‌தாக‌வே இவை இருக்கும்.

இத‌ன் கார‌ண‌மாக‌ இந்த‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ள் கிளிக் செய்ய்ப்ப‌டும் வாய்ப்பு கூடுத‌லாக‌ இருப்ப‌தோடு ம‌ற்ற‌ விள‌ம்ப‌ர‌ம் போல‌ எரிச்சல் உண‌ர்வை தாராம‌ல் இருக்கும்.

அதே போல‌ கூகுல் விளம்ப‌ர‌த்துக்கு க‌ச‌ட்டு மேனிக்கு க‌ட்ட‌ண‌ம் கேட்காம‌ல் கிளிக்கிற்கி இத்தனை காசு என்ற‌ க‌ண‌க்கிலேயே க‌ட்ட‌ண‌ம் வ‌சுலிக்கிற‌து.அதாவ‌து ஒவ்வொரு கிளீக்கிற்கும் காசு வாசுலிக்க‌ப்ப‌டுமே த‌விர‌ மொத்த‌மாக‌ எந்த‌ க‌ட்ட‌ண‌மும் கிடையாது.இத‌னால் விள‌ம்ப‌ரம் த‌ருப‌வ‌ருக்கும் அதிக‌ செல‌வு கிடையாது.’

அது ம‌ட்டுமல்ல‌ கிளிக்கிற்கு எவ்வ‌ள‌வு காசு த‌ர‌ த‌யாராக இருக்கிறோம் என்ப‌தையும் நிறுவ‌ங்க‌ள் தெரிவிக்க‌ முடியும். கீவேர்டு அடிப்ப‌டையிலேயே விள‌ம்ப‌ர‌ங்க‌ல் இட‌ம்பெற‌ச்செய்யப்ப‌டும் என்ப‌தால் பொருத்த‌மான‌ கீவேர்டுக்கு ஏலத்தின் அடிப்ப‌டையில் கூகுல் க‌ட்ட‌ன‌ம் வாங்குகிற‌து.

பொதுவாக‌ வ‌ர்த்த‌க‌ நிறுவ‌ன‌ங்க‌ளே இந்த‌ ஏல‌த்தில் ப‌ங்கேற்கும்.பிர‌ப‌லாமான கீவேர்டு என்றால் போட்டியும் அதிக‌ம் இருக்கும். விலையும் அதிக‌மாக‌ இருக்கும்.எந்த‌ கீவேர்டு த‌ங்க‌ள் விள‌ம்ப‌ர‌த்துக்கு ஏற்ற‌தாக‌ இருக்குமோ அத‌னை நிறுவ‌ன‌ங்க‌ள் ஏல‌ம் எடுத்தால் அந்த‌ கீவேர்டு வ‌ரும் ப‌க்க‌ங்களில் எல்லாம் விள‌ம்ப‌ர‌த்தை கூகுல் இட‌ம்பெற‌ வைக்கும்.

ப‌ல‌ரும் இத்த‌கைய‌ விள‌ம்ப‌ர‌த்தை த‌ங்க‌ள் த‌ள‌ம் அல்ல‌து வ‌லைப்ப‌திவில் இட‌ம்பெற‌ச்செய்து சென்ட்க‌ளாக‌ அள்ளிக்குவிக்க‌ முய‌ல்கின்ற‌ன‌றே த‌விர‌ தாங்க‌ளும் இப்ப‌டி விள‌ம்ப‌ர‌ம் கொடுத்து பய‌ன்பெற‌ முடியும் என‌ யாரும் க‌ருதிய‌தில்லை.சொல்ல‌ப்போனால‌ வ‌லைப்ப‌திவாள‌ர்க‌ள் அறிந்த‌ ஒரே வ‌ருமான‌ம் ஈட்டும் வ‌ழி கூகுல் விள‌ம்ப‌ர‌மாக‌த‌தான் இருக்கும்.
கூகூல் விளம்பரத்தை பெறுவதற்கான வழிகளை தான் பலரும் தேடிக்கொண்டிருந்தனரே தவிர தாங்கள் கூகுல் விளம்பரம் கொடுக்கலாம் என்று தனிநபர்கள் முயன்றதாக தெரியவில்லை.

ஆனால் அமெரிக்காவை சேர்ந்த அலெக் பிரவுன்ஸ்டியன் என்பவர் கூகுல் விளம்பரம் மூலம் தனக்கான புதிய வேலையை தேடிக்கொன்டிருக்கிறார்.

பொதுவாக வேலை தேடுபவ‌ர்கள் வேலை வாய்ப்பு தொடர்பான விளம்பரங்களை தானே நாடுவார்கள்.அதற்கு மாறாக இந்த வாலிபர் வேலைக்கு விளம்பரம் செய்து தான் விரும்பிய வேலையை பெற்றிருக்கிறார்.

வேலை தேடுவதற்காக கூகுலில் விளம்பரம் செய்யலாம் என்ற எண்ணம் அலெக்கிற்கு எப்படி வந்தது என்பதை புரிந்து கொள்ள கூகுலிங் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இண்டெர்நெட்டில் தகவ‌ல்களை தேட கூகுல் தேடியந்திரத்தை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருவது தெரிந்த‌தே.தேட‌ல் என்றால் கூகுல் என்று சொல்லும் அள‌வுக்கு தேட‌லில் கூகுல் செல்வாக்கு பெற்று விள‌ங்குகிற‌து.

த‌க‌வ‌ல்க‌லை தேட‌ ம‌ட்டும் அல்லாமல் கூகுலில் த‌ங்க‌ள் பெய‌ரை டைப் செய்து தேடினால் என்ன‌ வித‌மான‌ முடிவுகள் வருகின்றன என்று அறியும் ஆர‌வ‌ம் ப‌ல‌ரிட‌ம் உள்ள‌து.த‌ன் முனைப்புக்கு தீனி போடும் இந்த‌ ப‌ழ‌க்க‌ம் கூகுலிங் என்று அழைக்க‌ப்ப‌டுகிற‌து.யார் வேண்டுமானாலும் தங்கள் பெயரை கூகுலிங் செய்து பார்க்கலாம்.

இந்த‌ கூகுலிங் ப‌ழ‌க்க‌த்தை தான் அலெக் கூகுல் விள‌ம்ப‌ர‌த்தோடு புத்திசாலித்த‌னமாக‌ ப‌ய‌ன்ப‌டுத்திக்கொண்டார்.

விள‌ம்ப‌ர‌ நிறுவ‌ன‌ம் ஒன்றில் வேலை பார்க்கும் அலெக் இந்த‌ துறையில் பெரிதும் ம‌திக்கும் புள்ளிக‌ள் சில‌ர் இருக்கின்ற‌ன‌ர்.பிர‌ப‌ல விள‌ம்ப‌ர‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் கிரியேட்டிவ் ஹெட் ப‌த‌வியில் இருக்கும் இவ‌ர்க‌ளின் கீழ் ப‌ணியாற்ற‌ வேண்டும் என்ப‌து அலெக்கின் விருப்ப‌ம் ம‌ற்றும் க‌ண‌வாக‌ இருந்த‌து.

இந்த‌ நிபுண‌ர்க‌ளின் க‌வ‌ன‌த்தை ஈர்க்க‌ தான் புதுமையான‌ வ‌ழியாக‌ கூகுல் விள‌ம்ப‌ர‌த்தை தேர்வு செய்தார்.

இங்கே க‌வ‌னிக்க‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம் என்ன‌வென்றால் அலெக்கிற்கும் த‌ன‌து பெய‌ரை கூகுலிங் செய்யும் ப‌ழ‌க்க‌ம் உண்டு என்ப‌து தான்.

ஒரு முறை கூகுலிங் செய்து கொன்டிருந்த‌ போது த‌ன‌து பெய‌ரை ம‌ட்டும‌ அல்லாம‌ல் த‌ன்னுடைய‌ அபிமான‌ கிரியேட்டிவ் ஹெட்க‌ளின் பெய‌ர்க‌ளையும் கூகுலில் தேடிப்பார்த்தார்.அப்போது அவ‌ர்க‌ளுக்கான‌ தேட‌ல் முடிவுக‌ளூக்கு அருகே கூகுல் விள‌ம்ப‌ர‌ங்க‌ள் எதுவும் இல்லாத‌தை பார்த்தார்.இது கொஞ்ச‌ம் விய‌ப்பை அளித்த‌து என்றே சொல்ல‌ வேண்டும்.

விள‌ம்ப‌ர‌த்துறையின் மிக‌ப்பெரிய‌ கிரியேட்டிவ் இய‌க்குன‌ர்க‌ளின் பெய‌ர்க‌ளை யாருமே கீவேர்டாக‌ வாங்காம‌ல் இருக்கின்ற‌ன்றே என்று யோசித்துக்கொண்டே இருந்தார்.அந்த‌ நொடியில் இத‌னை நாம் ஏன் ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்ள‌ கூடாது என‌ ஒரு எண்ண‌ம் மின்ன‌ல் போல‌ தோன்றிய‌து.

உட‌னே த‌ன‌து அபிமான‌ கிரியேட்டிவ் இய‌க்குன‌ர்க‌ளின் பெய‌ர்க‌ளை கீவேர்டாக‌ வாங்க‌ கூகுலை அணுகினார்.அவ‌ற்றை ஏல‌ம் எடுக்க‌ போட்டிக்கு யாரும் இல்லாத்தால் மிக‌வும் ம‌லிவாக‌வே வாங்கி விட்டார்.

அடுத்த‌ வேலையாக‌ ஒரு இணைய‌ ப‌க்க‌த்தை உருவாகி அதில் த‌ன‌து ப‌யோ டேட்டா போன்ற‌வ‌ற்றை இட‌ம்பெற‌ வைத்தார். த‌ன‌து வேறு சில‌ திட்ட‌ங்க‌ள் ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ளையும் போட்டு வைத்தார்.

இந்த‌ இணைய‌த‌ள‌த்திற்கான‌ இணைப்பை த‌ன‌து கூகுல் விள‌ம்ப‌ர‌த்தில் கொடுத்தார்.

ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ கிரியேட்டிவ் இய‌க்குன‌ர்க‌ள் எப்போதெல்லாம் த‌ங்க‌ள் பெய‌ர்க‌ளை கூகுலிங் செய்கின்ற‌ன‌ரோ அப்போதெல்லாம் இந்த விள‌ம்ப‌ர‌ம் வ‌ந்து நிற்கும்.அதை கிளிக் செய்தால் அவ‌ர்து இணைய‌த‌ள‌மும் ப‌யோ டேட்டாவும் எட்டிப்பார்க்கும். இத‌ன் மூல‌ம் த‌ன‌க்கு வேலை கிடைக்கும் என்ப‌து அவ‌ர‌து எதிர்பார்ப்பு.

இத‌ற்கு ஏற்ற‌ வ‌கையில் ,கூகுலிங் செய்வ‌து ம‌ட்டும‌ல்ல‌ சுவார‌ஸ்ய‌மான‌து என்னை வேலைக்கு அம‌ர்த்திக்கொள்வ‌தும் சுவார‌ஸ்ய‌மான‌து என்று குறிப்ப‌ட்டிருந்தார்.

அவ‌ர் எதிர‌பார்த்த‌து போல‌வே சில‌ நாட்க‌ளில் ஒரு கிரியேட்டிவ் இய‌க்குன‌ர் இந்த‌ இணைப்பை பார்த்து அட‌ என‌ விய‌ந்த‌வ‌ராய் அவ‌ரை அழைத்து த‌ன‌து நிறுவ‌ன‌த்தில் ந‌ல்ல‌ வேலை கொடுத்து விட்டார்.

வேலை கிடைத்த‌து ம‌ட்டுமல்ல‌ புதுமையான் வ‌ழியில் வேலை தேட‌ இண்டெர்நெட்டை மிக‌ நூத‌ன‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்திக்கொன்ட‌த‌ற்காக‌ விருதுகளும் கிடைத்துள்ள‌ன‌.

வேலை தேட‌லில்  டிவிட்டர்  ம‌ற்றும் பேஸ்புக் போன்ற‌வ‌ற்றை ப‌ல‌ரும் ப‌ய‌ன்ப‌டுத்தியிருந்தாலும் கூகுல் விள‌ம்ப‌ர‌த்தை வேலைக்காக‌ ப‌ய‌ன்ப‌டுத்திக்கொண்ட‌ முத‌ல் ந‌ப‌ராக‌ அலெக் பாராட்ட‌ப்ப‌டுகிறார்.அப்ப‌டியே த‌ன‌க்கான‌ த‌னி முத்திரையையும் ப‌தித்திருக்கிறார்.

—————

http://alecbrownstein.com/

டிவிட்டர் வழியே யூடியூப் விடியோ

யூடியூப்பில் வெளியாகும் வீடியோக்களை பார்த்து ரசிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன.அவற்றில் இன்னும்  ஒருவழியாக ஜூப்ஸ் இணையதளத்தை கொள்ளலாம்.

யூடியூப்பில் பதிவேறும் வீடியோ படங்களை பார்க்க யூடியூப் தளமே போதுமானது தான். ஆனால் யூடியூப்பில் மூழ்கி திளைத்தவர்களுக்கு தான் அதில் உள்ள பொக்கிஷங்களை தேடிப்பிடிக்கும் நுணுக்கம் தெரியும்.மற்றவர்களுக்கு குறிப்பாக புதியவர்களுக்கு யூடியூப்பில் கொட்டிக்கிடக்கும் வீடியோ கோப்புகள் மிரள வைக்கலாம்.

யூடியூப் வீடியோ கடலில் சுவாரஸ்யமானவற்றை கண்டுபிடிப்பது சவால் தான்.

யூடியூப்பிலியே ஊறிக்கொன்டிருந்தால் தான் லேட்டஸ்ட் ஹிட்டை சட்டென்று அடையாளம் காண முடியும்.

இத‌ற்கு மாறாக‌ அவ‌ப்போது யூடியூப்பில் ஹிட்டான வீடியோ என்று மீடியா ஊதிப்பெரிதாக்கும் காட்சிக‌ளை க‌ண்டு ர‌சிக்க‌லாம் தான். ஆனால் எல்லா ந‌ல்ல‌ காட்சிக‌ளையும் காண்ப‌த‌ற்கில்லை.

ஒரு சில‌ த‌ள‌ங்க‌ள் யூடியூப்பின் சிற‌ந்த‌ வீடியோக்க‌ளை திர‌ட்டித்த‌ருகின்ற‌ன‌.அந்த‌ வ‌கையில் ஜூப்ஸ் டிவிட்ட‌ர் வ‌ழியே மேலோங்கும் யூடியூப் காட்சிக‌ளை தொகுத்து அளிக்கிற‌து.

அதாவ‌து டிவிட்ட‌ர் ப‌திவுக‌ளில் அதிக‌ம் குறிப்பிட‌ப்ப‌டும் வீடியோ காட்சிக‌ளை அப்ப‌டியே உருவி பார்வைக்கு வைக்கிற‌து.

இப்போது தான் ந‌ல்ல‌தாக‌ எதைப்பார்த்தாலும் டிவிட்ட‌ரில் ப‌கிர்ந்து கொள்ளும் ப‌ழ‌க்க‌ம் இணைய‌வாசிக‌ளூக்கு இருக்கிற‌து அல்ல‌வா? என‌வே யூடியூப் பிரிய‌ர்க‌ள் தாங்க‌ள் பார்க்கும் வீடியோ ப‌ற்றி டிவிட்ட‌ரில் குறிப்பிடுகின்ற‌ன‌ர்.வ‌ர்க‌ளின் பின்தொடர்பாள‌ர்க‌ள் ம‌ட்டுமே ப‌டிக்க‌ கூடிய‌ இந்த‌ குறிப்புக‌ளை அல‌சி ஆராய்ந்து அத‌ன‌டிப்ப‌டையில் வீடியோ காட்சிக‌ளை ஜூப்ஸ் தொகுத்த‌ளிக்கிற‌து.

இதன் முக‌ப்பு ப‌க்க‌த்தில் பெட்டி பெட்டியாக‌ விடியோ காட்சிக‌ள் க‌ண் சிமிட்டுகின்ற‌ன‌. எது ந‌ம்மை க‌வ‌ர்கிறதோ அத‌னை கிளிக்கி பார்க்க‌லாம்.

ஒவ்வொரு வீடீயோவிலும் எத்த‌னை முறை பார்க்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து,எத்த‌னை முறை டிவிட்ட‌ரில் குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து போன்ற‌ விவ‌ர‌ங்க‌ளூம் இட‌ம்பெற்றுள்ள‌ன.
ச‌மீப‌த்திய‌ வீடியோக்க‌ள் ,ம‌ற்றும் ப‌ல‌வேறு த‌லைப்புக‌ளீன் கீழும் வீடியோக்க‌ளை காண‌ முடியும். க‌ட்டாய‌ம் பார்க்க‌ வேண்டிய‌வை ர்ர்ன்னும் ப‌ரிந்துரையும் உண்டு.

அறிமுக‌மாகி ஒரே வார‌த்தில் அபார்மான‌ வ‌ர‌வேற்பை இந்த‌ த‌ள‌ம் பெற்றிருப்ப‌தாக‌ அத‌ன் உரிமையாள‌ர்க‌ள் பெருமையோடு குறிப்பிட்டுள்ள‌ன‌ர். இணைய‌வாசிக‌ள் யோச‌னைப்ப‌டி தேட‌ல் வ‌ச‌தி உள்ளிட்ட‌வ‌ற்றை அறிமுக‌ம் செய்ய‌ உத்தேசித்திருப்ப‌தாக‌வும் கூறியுள்ள‌ன‌ர்.

டிவிட்ட‌ரில் பேசப்ப‌டுவ‌தை கொண்டு யூடியூப் வீடியோக்க‌ளை பார்ப்ப‌த‌ற்கான‌ புதிய‌ வ‌ழி என்று வ‌ர்ணிக்க‌ப்ப‌டும் இந்த‌ த‌ள‌ம் ஓயாம‌ல் டிவிட்ட‌ரில் யூடீயூப் தொட‌ர்பான‌ ப‌திவுக‌ளை ப‌ரிசிலித்து அதிக‌ம் பேச‌ப்ப‌டும் வீடியோக்க‌ளை தேர்வு செய்வ‌தாக‌ தெரிவிக்கிற‌து.

யூடியூப்பில் ச‌மீப‌த்திய‌ ம‌ற்றும் சுவார‌ஸ்ய‌மான‌ வீடியோக்க‌ளை க‌ண்டு ர‌சிப்ப‌த‌ற்கான‌ இட‌ம் இந்த‌ த‌ள‌ம் என்று குறிப்பிட‌ப்ப‌ட்டிருப்ப‌தோடு, க‌வ‌ன‌மாக‌ இருங்க‌ள் இந்த‌ த‌ள‌ம் ஒரு மோக‌மாக‌ மாறிவிடும் அள‌வுக்கு உங்க‌ளை க‌வ‌ர்ந்து விடும் என்றும் எச்ச‌ரிக்கிற‌து.

யூடியூப் ம‌ற்றும் வீடியோ பிரிய‌ர்க‌ளுக்கான‌ விருந்து இந்த‌ த‌ள‌ம்.

———-

http://www.zoofs.com/

பிரசவத்திற்கு உதவிய கூகுல்

ஏற்க‌னவே யூடியூப் பிரசவத்திற்கு உதவியுள்ளது.இப்போது கூகுலும் கொடுத்துள்ளது.

இங்கிலாந்தைச்சேர்ந்த லிராய் ஸ்மித் என்பவர் பிரசவ வலியால் துடித்துக்கொன்டிருந்த மனைவிக்கு கூகுலின் துனையோடு பிரசவம் பார்த்திருக்கிறார்.

அவருடைய மனைவி எம்மா நிறைமாத கர்பினியாக இருந்ததால் எந்த நேரத்திலும் பிரசவம் ஆகலாம் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தாராம்.எனவே பிரசவம் பார்ப்பதற்காக நர்சையும் அழைத்திருந்தார்.எம்மாவை கவனித்து வந்த நர்ஸ் பிரசவ வலி ஏற்படாத காரணத்தால் மறு நாள் வருவதாகச்சொல்லி விடைபெற்றுச்சென்றிருக்கிறார்.

ந‌ர்ஸ் சென்ற‌துமே எம்மாவுக்கு பிர‌ச‌வ‌ வ‌லி வ‌ந்து விட்ட‌து.உட‌னே அவ‌ர் ந‌ர்சுக்கு போன் செய்து ப‌ர‌ப‌ர‌ப்போடு காத்திருந்தார்.ஆனால் ம‌னைவி வ‌லியால் துடிப்ப‌தை பார்த்த‌தும் ந‌ர்ஸ் வ‌ருவ‌த‌ற்குள் குழ‌ந்தை பிற‌ந்துவிடும் என்று புரிந்த்த‌து. என‌வே தானே பிர‌ச‌வ‌ம் பார்ப்ப‌தை த‌விர‌ வேறு வ‌ழியிலை என்று தீர்மானித்தார்.

மூன்று குழ‌ந்தைக்கு த‌ந்தை என்ற‌ போதிலும் பிர‌ச‌வ‌ம் அவ‌ருக்கு ஒரு அட்ச‌ர‌மும் தெரியாது. என்ன‌ செய்வ‌து என‌ திகைத்த‌வ‌ர் கூகுலின் துணையை நாடினார்.

த்ன்னிட‌ம் இருந்த‌ பிளாக்பெரி போனை எடுத்து அதில் கூகுல் ப‌க்க‌த்தை அழைத்து பிர‌ச‌வ‌ம் பார்ப்ப‌து எப்ப‌டி என‌ டை செய்து தேடினார். அடுத்த‌ நொடிக்குள்ளாக‌ கூகுல் விக்கி ஹ‌வ் த‌ள‌த்தில் இருந்து பிர‌ச‌வ‌ வ‌ழிக்காட்டியை கொண்டுவ‌ந்து காட்டிய‌து.

அந்த‌ நெருக்க‌டியிலும் ஸ்மித் அதிகம் ப‌த‌ட்ட‌ம‌டைந்து விடாம‌ல் பிர‌ச‌வ‌ வ‌ழிகாட்டியை ப‌டித்து அதில் குறிப்பிட்டிருந்த‌ ப‌டி ம‌னைவிக்கு உத‌வி செய்தார்.க‌ண‌வ‌ன் கைகொடுக்க‌ ம‌னைவியும் குழ‌ந்தையை பெற்றெடுத்தார்.குவா குவா ச‌த்த‌ம் கேட்ட‌ நிலையில் ந‌ல்ல‌வேளையாக‌ ந‌ர்சும் வ‌ந்துவிட்டார். ந‌ல்ல‌ காரிய‌ம் செய்தீர்க‌ள் என்று பார‌ட்டிய‌ப‌டி அவ‌ர் குழ‌ந்தையின் தொப்புள் கொடியை துண்டித்து எஞ்சிய‌ பொறுப்புக‌ளை ஏற்றுக்கொன்டார்.

இந்தானுப‌வ‌ம் ம‌ற‌க்க‌ முடியாத்து என‌ நான்காவ‌து முறையாக‌ த‌ந்தையாகியுள்ள‌ ஸ்மித் நெகிழ்ந்து போய் கூறுகிறார்.ம‌னைவிக்கு பிர‌ச‌வ‌ம் பார்க்க‌ முடியும் என‌ நினைத்துகூட‌ பார்த்த‌தில்லை என்று கூறும் அவ‌ர் ந‌ல்ல‌வேலையாக‌ பிளாக்பெரி ம‌ற்றும் கூகுல் துணை நின்று காப்பாற்றின‌ என்கிறார்.குழ‌ந்தை த‌லை வெளியே வ‌ரும் போது கையால் தாங்கிகொள்ள‌ வேண்டும் பிற‌கு தாயின் மார்பின் மீது குழ‌ந்தையை கிட‌த்த‌ வேண்டும் என்று பிர‌ச‌வ‌ வ‌ழிக்காட்டியில் குறிப்பிட்டிருந்ததை அப்ப‌டியே பின்ப‌ற்றிய‌தாக‌ அவ‌ர் பட‌ப‌ட‌ப்புட‌ன் கூறியுள்ளார்.

நிற்க‌ இந்த‌ இண்டெர்நெட் பிர‌ச‌வ‌த்தில் சுவார‌ஸ்ய‌மான‌ விஷ்ய‌ம் ‌,இந்த‌ த‌ம்ப‌திக்கு இத‌ற்கு முன் பிற‌ந்த‌தெல்லாம் ஆன் குழ‌ந்தைக‌ளாம். அவ‌ர்க‌ள் ஆசைப்ப‌ட்ட‌ ப‌டி முத‌ல் பெண் குழ‌ந்தை இப்போது பிற‌ந்திருக்கிற‌தாம்.

அது ம‌ட்டும‌ல்ல‌ ஸ்மித் எப்போதுமே த‌ன‌து பிளாக்பெரியை நோண்டிய‌ப‌டி இருபார் என‌ப‌தால் ம‌னைவிக்கு அத‌னை பிடிக்காதாம் ஆனால் இப்போது பிர‌ச‌வ‌த்திற்கு உத‌வியுள்ள‌தால் பிளாக்பெரிக்கு ஒ கே சொல்லிவிடாராம்.

‍‍‍‍‍‍‍‍‍…………

பிகு;விக்கி ஹ‌வ் போன்ற‌ த‌ள‌ங்க‌ளின் ம‌கிமை இப்போது உண‌ர்ந்திருப்பபீர்க‌ள்.என‌வே ஒரு முறை அந்த‌ த‌ள‌த்திறுகு சென்று பாருங்க‌ள்.(link;
http://www.wikihow.com/Main-Page

பார்க்க ‘யுடியூப் பிர‌ச‌வம்’ ப‌ற்றிய‌ என் முந்தைய‌ ப‌திவு..
link1;
http://cybersimman.wordpress.com/2009/05/02/youtube-3/
—-

வங்கிக்கு எதிராக யூடியூப் புரட்சி

youtuberevoltபொருத்தது போதும் என பொங்கி எழுந்திருக்கிறார் அமெரிக்க கடனாளி ஒருவர்.தனது வங்கிக்கு எதிராக யூடியூப் விடீயோ மூலம் அவர் அறைகூவல் விடுத்து கடனாளிகளின் புரட்சிக்கு வித்துட்டுள்ளார்.இந்த போர்க்கொடி வீடியோ மூலம் அவர் யூடியூப்பில் நட்சத்திரமாகியிருக்கிறார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரைச்சேர்ந்த ஆன் மிர்ச் என்னும் அந்த பெண்மணிக்கு 41 வயதாகிறது.பாங்க் ஆப் ஆமெரிக்காவின் வாடிக்கையாளரான அவர் சமீபத்தில் வங்கி தன்னுடைய கிரிடிட் கார்டு தவணை தொகைக்கான வட்டித்தொகையை அநியாயமாக உயர்த்திய போது கொதித்துப்போய்விட்டார்.

பத்தாண்டுகளுக்கு மேலாக அவர் தன்னுடைய தவணைகளை ஒழுங்காக செலுத்தி வருபவர்.

இந்நிலையில் சமீபத்தில் வங்கி தவணைக்கான வட்டியை 13 சதவீத்திலிருந்து 30 சதவீதமாக உயர்த்தியது.வங்கிகள் அவப்போது வட்டியை உயர்த்துவது வாடிக்கை என்றாலும் இப்படி ஒரேடியாக 30 சதவீதமாக உயர்த்துவது எவருக்குமே அதிர்ச்சியளிக்க கூடியது தான்.அதிர்ச்சி அளிப்பது ஒரு புறம் இருக்க தவனையை திருப்பிச்செலுத்துவதும் அநேகமாக சாத்தியமில்லை.

இந்த விஷயத்தில் வங்கிகளுக்கு வானாளாவிய அதிகாரம் இருப்பதாகவே தோன்றுகிறது.வங்கிகள் இஷ்டத்திற்கு வட்டி விகித்ததை உயர்த்திக்கொள்ளலாம்.அதற்கான காரனத்தை கூட விளக்க வேண்டும் என்ற அவசியமில்லை.அப்படியே கேட்டால் கூட வங்கிகள் பதில் சொல்லும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.

பெரும்பாலும் வாடிக்கையாளர்களால் இத்தகைய சர்வாதிகாரத்தை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது.புலம்பலாம்.முறையிடலாம்.பலன் கிடைக்குமா என்று தெரியவில்லை.

ஆன் மிர்ச்சும் இத்தைகைய கையறு நிலையில் தான் இருந்தார்.ஆனால் பாங்க் ஆப் அமெர்க்காவின் அடவடியை பொருத்துக்கொள்ள முடியவில்லை.எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார்.

வெற்று புலம்பல் புலம்புவதை விட பிரச்சனையை இணைய மன்றத்திற்கு கொண்டு செல்ல தீர்மானித்தார்.யூடியூப் தான் இதற்கான வழி என்று வெப்கேமிரா முன் அமர்ந்து தனது மனக்குமுறலை விடியோ பதிவாக்கி அதனை யூடியூப்பில் பதிவேற்றினார்.

விரிவாகவும் விளக்கமாகவும் அந்த வீடியோ பதிவு அமைந்திருந்தது.

வாழ்க்கையில் எதாவது ஒரு கட்டத்தில் நாம் நியாயத்திற்காக போராட தியாகம் செய்ய முன் வந்தாக வேண்டும் என்ற கூறிய அவர் தானும் இப்போது அது போன்ற தருணத்தில் தான் இருப்பதாக கூறியிருந்தார்.தன்னுடைய போராட்டம் வெற்றி பெற்றால் அமெரிக்க வரலாற்றில் கடனாளிகளின் புரட்சிக்கான முதல் படியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

14 ஆண்டுகளாக வங்கியின் வாடிக்கையாளராக இருக்கும் தனக்கு வஙகி இழைத்த அநீதியை விவரித்துவிட்டு பாங்க் ஆப் அமெரிக்காவுக்கும் மற்ற பெரிய வங்கிகளுக்கும் ஒரு பாடம் புகட்ட முடிவு செய்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

வ‌ங்கிக‌ள் மத்தியதர வாடிக்கையாள‌ர்க‌ளை சுர‌ண்டுவ‌தாக‌ குற்ற‌ம் சாட்டியிருந்த‌ அவ‌ர் இத‌ற்கு முடிவு க‌ட்டுவ‌த‌ற்காக‌ வ‌ங்கிக்கு செலுத்த‌ வேண்டிய‌ த‌வ‌ணையை திருப்பிச்செலுத்த‌ப்போவ‌தில்லை என்று கூயிருயிருந்தார்.அதாவ‌து வ‌ங்கி வ‌ட்டி விகித‌த்தை மாற்றி ப‌ழைய‌ விக‌த‌த்திற்கு மாற்றாத‌ வ‌ரை இந்த‌ ந‌ட‌வ‌டிக்கை தொட‌ரும் என்று குறிப்பிட்டிருந்தார்.

க‌ட‌னாளிக‌ளின் புர‌ட்சி என்று இந்த‌ செய‌லை வ‌ர்ணித்த‌ அவ‌ர் யூடியூப் த‌ள‌த்தில் இத‌னை ப‌திவேற்றினார்.

அவ‌ர்து குர‌லில் இருந்த‌ கோப‌மும் அதில் இருந்த‌ நியாய‌மும் இணைய‌வாசிக‌ளை க‌வ‌ர்ந்திருக்க‌ வேண்டும்.அந்த‌ கோப்பை பார்த்த‌வ‌ர்க‌ள் ம‌ற்ற‌வ‌ர்க‌ளூக்கு அத‌னை ப்ரிந்துரை செய்த‌ன‌ர்.அவ‌ர்க‌ள் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு ப‌ரிந்துரைத்த‌ன‌ர்.

அத‌ன்பிற‌கு யூடியூப் ர‌சிக‌ர்க‌ள் ம‌த்தியில் அந்த‌ கோப்பு பிக‌வும் பிர‌ப‌ல‌மாகிவிட்ட‌து. அத‌னை பார்த்த‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து மோச‌மான‌ வ‌ங்கி அனுப‌வ‌த்தை ப‌கிர்ந்து கொண்ட‌ன‌ர்.ஒரு சில‌ர் த‌ங்க‌ள் ப‌ங்கிற்கு ஒரு விடியோ கோப்பை ப‌திவேற்றி ஆத‌ர‌வு தெரிவித்த‌ன‌ர்.

முத‌ல் சில‌ நாட்க‌ளில் 2.5 ல‌ட்ச‌ம் பேர் அந்த‌ கோப்பை பார்த்திருந்த‌ன‌ர்.இத‌ற்குள் இந்த‌ அவேச‌ யூடியூப் போர‌ட்ட‌ம் ப‌ற்றீ நாளித‌ழ்க‌ளில் செய்தி வெளீயான‌து.

வ‌ங்கிக‌ளின் அடாவ‌டியை எதிர்த்து வாடிக்கையாள‌ர் ஒருவ‌ர் யூடியூப் மூல‌ம் நியாய‌ம் கேட்டு போராடும் வித‌ம் பாராட்ட‌ப்ப‌ட்ட‌து.இண்டெர்நெட் யுக‌த்தில் நுக‌ர்வோர் த‌ங்க‌ள் குர‌லை ம‌க்க‌ள் ம‌ன்ற‌த்திற்கு எடுத்துச்செல்லும் வாய்ப்பு இருப்ப‌தை இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் மீண்டும் நிருபித்திருப்ப‌தாக‌ க‌ருத‌ப்ப‌டுகிற‌து.

இத‌னிடையே ச‌ம்ப‌ந்த‌ப‌ப்ட்ட் வ‌ங்கி இற‌ங்கி வ‌ந்து ஆனின் வ‌ட்டி விகித‌த்தை குறைக்க‌ முன்வ‌ந்திருப்ப‌தாக‌ செய்தி வெளியாகியுள்ள‌து.யூடியூப் வ‌ழி போராட்ட‌த்திற்கான‌ வெற்றியின் அடையாள‌மாக‌ இது பார்க்க‌ப்ப‌டுகிற‌து.