டிவிட்டரால் நடந்த திருட்டு

வருங்காலத்தில் டிவிட்டர் திருடர்கள் உருவாக வாய்ப்பிருக்கிறது என்று சொன்னால் நம்பமுடிகிறதா? அதாவது கண்ணம் வைத்து திருடுவதைப்போல டிவிட்டரில் வேவு பார்த்து திருட்டுக்கான இலக்கை தேர்வு செய்து திருடும் ஆசாமிகள்.
இத்தகைய அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய சம்பவம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது. அநாட்டின் அரிசோனா நகரை சேர்ந்த இஸ்ரேல் ஹைமன் என்னும் வாலிபர் தனது வீட்டில் திருட்டு நடந்துள்ளதாகவும் அதற்கு டிவிட்டரே காரணம் என்றும் கூறியுள்ளார்.
இஸ்ரேல் டிவிட்ட‌ர் செய்யும் ப‌ழ‌க்க‌ம் கொண்ட‌வ‌ர். அவ‌ர‌து டிவிட்ட‌ர் ப‌க்க‌த்தில் ப‌திவாகும் த‌க‌வ‌ல்க‌ளை தெரிந்துக்கொள்ள‌ இர‌ண்டாயிர‌ம் பேர் ஆர்வ‌ம் கொண்டுள்ள‌ன‌ர்.
ச‌மீப‌த்தில் க‌ன்சாஸ் ந‌க‌ருக்கு சென்ற‌ இஸ்ரேல் இந்த‌ ப‌ய‌ண‌ம் ப‌ற்றி டிவிட்ட‌ர் க‌ண‌க்கில் குறிப்பிட்டிருந்தார். ஊருக்குப்போகிறேன் ப‌த்து ம‌ணி நேர் கார் ப‌ய‌ண‌ம் என‌ எழுதிய‌ அவ‌ர் பின்ன‌ர் க‌ன்சாஸ் ந‌க‌ரை அடைந்துவிட்டேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
எதை செய்தாலும் அதை டிவிட்டரில் பகிர்ந்துகொள்வது என்பது டிவிட்டர் கலாச்சாரம் அல்லவா?அதன் படி தான் ஊருக்கு போவதை அவர் டிவிட்டரில் சொல்லிவிட்டு சென்றார்.
இத‌னால் பெரிய‌ பாத‌க‌ம் ஏற்ப்ப‌ட‌போகிறது என‌ அவ‌ர் எதிர்பார்க்க‌வில்லை. ஆனால் சில‌ நாட்க‌ள் க‌ழித்து வீட்டுக்கு திரும்பிய‌ போது திடுக்கிட்டுப்போனார்.கார‌ண‌ம் அவ‌ர‌து வீட்டில் யாரோ நுழைந்து ப‌ண‌ம் ம‌ற்றும் வீடியோ சாத‌ன‌த்தை திருடிச்சென்றிருந்த‌ன‌ர்.

இந்த திருட்டுக்கு டிவிட்டரே காரணமாக இருக்க வேண்டும் என அவர் சந்தேகிக்கிறார். தான் ஊருக்கு போகும் தகவலை டிவிட்டர் மூலம் யாரோ தெரிந்துகொண்டு திருடிச்சென்றிருக்க வேண்டும் என அவர் நினைக்கிறார்.

இது தற்செயலாக இருக்கலாம். டிவிட்டருக்கும் இதற்கும் தொடர்பில்லாமல் இருக்கலாம்.

ஆனால் இந்த சந்தேகம் நியாயமானதே.
டிவிட்டரில் அந்தரங்கமான தகவல்கள் பகிரப்பட்டு வருவதால் விஷமிகள் அதனை தங்களுக்கு சாதகமாக்கிகொள்ள வாய்ப்பிருக்கிறது.

. தொலைபேசியில் தன்னை மறந்து சத்தமாக பேசி வீட்டு விஷயங்களை சொல்பவர்கள் அதனால் வம்பில் மாட்டிக்கொள்ள வாய்ப்பு இருப்பது போல டிவிட்டரில் அந்தரங்க விவரங்களை பகிர்ந்து கொண்டாலும் பிரச்சனை ஏற்படலாம். அது ம‌ட்டும் அல்ல‌ ந‌வீன‌ திருட‌ர்க‌ள் த‌ங்க‌ள் இறையை தேர்வு செய்ய‌ டிவிட்ட‌ரில் உலா வ‌ர‌வும் நேர‌லாம்.

எனவே டிவிட்ட‌ரில் ப‌கிர்ந்துகொள்ளும் த‌க‌வ‌ல்க‌ள் குறித்து எச்ச்ரிக்கையாக‌ இருப்ப‌து ந‌ல‌ம் என்கின்ற‌ன‌ர்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “டிவிட்டரால் நடந்த திருட்டு

  1. ஹிஹிஹி…. நானெல்லாம் டிவிட்டரை இன்னும் உபயோகப்படுத்த ஆரம்பிக்கவில்லை… எனவே இந்த மாதிரி பிரச்சினை நோ ப்ராப்ளம். தவிர, என் அறைக்கு வந்து எதையும் திருடிவிட முடியாது – ஒருசில புத்தகங்களைத் தவிர… :)))

    Reply
    1. cybersimman

      புத்தகம் என்றால்ம் எடுக்க நான் வருகிறேன்

      Reply
  2. :)).

    பதிவைப்படித்ததும் சிரிப்பு தான் வந்தது. அது என்ன பழக்கம், பாத்ரூம் போகிறேன்.. படுக்கப்போகிறேன் என்றெல்லாமா டிவிட்டுவார்கள். என்னமோ போங்க.. எங்கும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் போலிருக்கிறது.

    Reply
    1. cybersimman

      எல்லாம் டிவிட்டர் படுத்தும் பாடு

      Reply
  3. Yes you are correct, iam using twitter. Iam also updating silly things in twitter & i can see many of them doing worser than me.

    Reply
  4. என்ன கொடுமை சார் இது?

    கொஞ்ச நாளா உங்க பதிவுகள் எதையும் காணோமே! ஒரே சமயத்தில் நிறைய பதிவுகள் போடுவதற்கு பதிலாக சீரான இடைவெளியில் போட்டால் நன்றாக இருக்குமே!

    Reply
    1. cybersimman

      பத்திரிக்கையாளனான நான் பணிக்கு நடுவே பதிவு செய்கிறேன். சில நேரங்களில் பணிச்சூழல் பதிவு பக்கம் வர அனுமதிப்பதில்லை.எனினும் எப்ப‌டியும் தினம் ஒரு பதிவேனும் செய்துவிட வேண்டும் என்றே முயற்சிக்கிறேன்.தொடர்ந்து படித்து வருவதற்கும் பதிவிடவில்லை என்று உரிமையோடு கேட்டதற்கும் ந‌ன்ற்.

      Reply
  5. சுபாஷ்

    ம்ம் நடக்கட்டும்.
    சிலரின் டிவிட்டரில் பாத்ரூதில் பல் தேய்ப்பதுமுதல்கொண்டு எழுதுவார்கள். அவர்களிற்கு தேவைதான். 🙂

    Reply
  6. //பத்திரிக்கையாளனான நான் பணிக்கு நடுவே பதிவு செய்கிறேன். சில நேரங்களில் பணிச்சூழல் பதிவு பக்கம் வர அனுமதிப்பதில்லை.//

    உங்களோட எழுத்து நடையை வைத்து எனக்கு இந்த சந்தேகம் இருந்தது..ஒரு எழுத்தாளனுக்குரிய நடையுடன் எழுதும் போதே நினைத்தேன், இது எப்படி என்று!

    வாழ்த்துக்கள் ..முடிந்த வரை ஒரே நேரத்தில் அதிக பதிவுகள் போடாமல் எழுதி இருந்தாலும் சீராக வெளியிட்டால் அலுப்பு ஏற்படாமல் இருக்கும்..இது என் கருத்து

    Reply
    1. cybersimman

      உங்கள் கருத்து சரி தான். தொடர்ந்து சீராகவே எழுத முயல்கிறேன்

      Reply

Leave a Comment

Your email address will not be published.