Archives for: September 2010

மார‌டைப்பை டிவிட்ட‌ர் செய்த‌ ம‌னித‌ர்

டிவிட்டரின் பலமே அதன் உடனடி தன்மை தான்.காலையில் டிபன் சாப்பிட்ட‌தையோ,அல்லது நாளிதழில் படித்ததையோ டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளலாம்.சிலருக்கு எதையுமே உடனுக்குடன் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டு விட வேண்டும் என்று கையும் மனதும் பரபர‌க்கும். எல்லாம் சரி மாரடைப்பு ஏற்படும் போது யாருக்காவது டிவிட்டரை நினைத்துப்பார்க்கத்தோன்றுமா? அமெரிக்காவைச்சேர்ந்த டாமி கிறிஸ்டோபர் என்பவர் சமீபத்தில் மார்டைப்பால் பாதிக்கப்பட்ட போது அந்த அனுபவத்தை அப்படியே டிவிட்டரில் பதிவு செய்து வியக்க வைத்திருக்கிறார். திரும‌ண‌ மேடையில் இருந்து டிவிட்ட‌ர் செய்த‌வ‌ர்க‌ள் எல்லாம் இருக்கின்ர‌ன‌ர்.விமான‌ […]

டிவிட்டரின் பலமே அதன் உடனடி தன்மை தான்.காலையில் டிபன் சாப்பிட்ட‌தையோ,அல்லது நாளிதழில் படித்ததையோ டிவிட்டரில் பகிர்ந்து க...

Read More »

ஒருவரும் பார்க்காத யூடியுப் வீடியோக்கள்

ஜீரோ வியூஸ்  இணைய தளத்தின் பெயரைக் கேட்டதுமே என்ன பொருத்தம் இந்த பொருத்தம் என்று சொல்லத் தோன்றுகிறது. கூகுலுக்கு நிகரான எளிமையான வடிவமைப்பை கொண்டுள்ள இந்த தளத்தை பார்த்ததுமே பூஜ்ஜியம் பார்வைகள் என்று பொருள் தரக்கூடிய இதன் பெயர் சாலப்பொருத்தம் என்பது விளங்கி விடுகிறது. பூஜ்ஜியம் பார்வை கொண்ட யூடியுப் வீடியோக்களை இணைய வாசிகளின் பார்வைக்காக தொகுத்து தருகிறது இந்த இணைய தளம்.  அதாவது யாருமே பார்க்காத யூடியுப் காட்சிகளை இந்த தளம் அரங்கேற்றி தருகிறது. யூடியுப் […]

ஜீரோ வியூஸ்  இணைய தளத்தின் பெயரைக் கேட்டதுமே என்ன பொருத்தம் இந்த பொருத்தம் என்று சொல்லத் தோன்றுகிறது. கூகுலுக்கு நிகரான...

Read More »

புகைப்பட கொலேஜ்க‌ளை உருவாக்கும் இணைய‌த‌ள‌ம்

புகைப்ப‌ட‌ங்க‌ளை சேமித்து வைக்க‌வும் ப‌கிர்ந்து கொள்ள‌வும் உத‌வும் இணைய‌த‌ள‌ங்க‌ள் எத்த‌னையோ இருக்கின்ற‌ன‌.அந்த‌ வ‌ரிசையில் ஸ்கிரேப்வால்ஸ் தள‌த்தையும் சேர்த்துக்கொள்ள‌லாம். இருக்கும் புகைப்ப‌ட‌ ப‌கிர்வு சேவை த‌ள‌ங்க‌ள் போதாதா என்ற‌ அலுப்பான‌ எண்ண‌ம் த‌லைதுக்காக்கினாலும் இந்த‌ தள‌த்தை அல‌ட்சிய‌ப்ப‌டுத்தி ஒதுக்கிவிட‌ முடியாது.கார‌ண‌ம் ம‌ற்ற‌ புகைப்ப‌ட‌ ப‌கிர்வு த‌ள‌ங்க‌ளில் இருந்து மாறுப‌ட்ட‌து.மிக‌வும் மாறுப‌ட்ட‌து என்று சொல்வ‌த‌ற்கில்லை.ஆனால் சின்னதாக அழகானதாக மாறுபட்ட ஒரு சேவையை வழங்குகிறது. புகைப்படங்களை சேர்க்கை சித்திரங்களாக மாற்றிக்கொள்ள உதவுவதே அந்த சேவை.சேர்க்கைச்சித்திரம் என்றால் கொலேஜ் என்று பொருள். வ‌ண்ண‌ங்க‌ளை […]

புகைப்ப‌ட‌ங்க‌ளை சேமித்து வைக்க‌வும் ப‌கிர்ந்து கொள்ள‌வும் உத‌வும் இணைய‌த‌ள‌ங்க‌ள் எத்த‌னையோ இருக்கின்ற‌ன‌.அந்த‌ வ‌ரிசைய...

Read More »

ஒரு தற்கொலை முயற்சியும் சில இணைய துடிப்புகளும்

அபயக்குரல் கேட்டால் இண்டெர்நெட்டில் ஆதரவு குரல் கேட்காமல் போகாது என உணர்த்தும் வகையில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இணைய உலகில் நிகழ்ந்திருக்கிறது. வாழ்க்கையின் சுமை தாள முடியாமல் விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவித்த முகமறிய வாலிபருக்காக பல்லாயிரக்கணக்கானோர் பதறி துடித்து மனித நேயத்தை வெளிப்படுத்தி இண்டெர்நெட்டின் ஆதார பலத்தை மீண்டும் அடையாளம் காட்டியுள்ளனர். எல்லாம் இண்டெர்நெட்டில் இடம்பெற்ற ஒரு துண்டு பதிவில் இருந்து ஆரம்பமானது. போஸ்ட்சீக்ரெட் என்று ஒரு இணையதளம் இருக்கிறது.உள்ள‌க்குமுற‌ல்க‌ளையும்,வெளியே […]

அபயக்குரல் கேட்டால் இண்டெர்நெட்டில் ஆதரவு குரல் கேட்காமல் போகாது என உணர்த்தும் வகையில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இணைய...

Read More »

ஒரு பாடகரின் டிவிட்டர் அனுபவம்

பிரபலங்களுக்கு டிவிட்டரில் பல பின் தொடர்பாளர்கள் கிடைப்பது வழக்கம்தான். ஆனால் பிரபலமாக இருப்பவர் டிவிட்டரில் ஒருவரை பின்தொடர தீர்மானித்தால் என்ன ஆகும் என்பதற்கு பாடகர் கென்யே வெஸ்டிற்கு ஏற்பட்ட அனுபவம் சுவாரஸ்யமான உதாரணம். ஒரு விதத்தில் வெஸ்ட்டின் மூக்குடைப்பட்டது போல் அமைந்த இந்த சம்பவம் டிவிட்டரைப் பொறுத்தவரை பிரபலங்களுக்கு ஒரு பாடம்தான். பிரபலங்களுக்கு மட்டுமா? டிவிட்டரில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதில் ரசிகர்களுக்கும் ஒரு பாடம்தான். இனி, என்ன நடந்தது என்பதை பார்ப்போம். கென்யே வெஸ்ட் பிரபலமான பாடகர். […]

பிரபலங்களுக்கு டிவிட்டரில் பல பின் தொடர்பாளர்கள் கிடைப்பது வழக்கம்தான். ஆனால் பிரபலமாக இருப்பவர் டிவிட்டரில் ஒருவரை பின்...

Read More »