தகவல்கள் தேவை என்றால் கூகுலில் தேடிக்கொள்ளலாம்.ஆனால் அந்த தகவலின் செல்வாக்கை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்வது?அதாவது குறிப்பிட்ட செய்தி இணையத்தில் எந்த அளவுக்கு பிரபலமாக உள்ளது என்பதை அறிய வேண்டும் என்றால் என்ன செய்வது?
இதற்காக என்றே புதிய தேடியந்திர சேவை ஒன்று உதயமாகியுள்ளது.
கவனிக்க, புதிய தேடியந்திரம் அல்ல;புதிய தேடியந்திர சேவை!அதாவது தேடியந்திரமான கூகுலின் தேடல் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சேவை.
கூகுல் சார்ந்த சின்ன சின்ன தேடல் மேம்பாடுகளை வழங்கும் புத்திசாலி தேடியந்திரங்கள் பல இருக்கின்றன.அந்த வகையில் இப்போது சிடிஆரெல்ஜி தேடியந்திர சேவை அறிமுகமாகியுள்ளது.
எந்த தலைப்பையும் இதில் தேடிப்பார்க்கலாம்.குறிப்பிட்ட அந்த தலைப்பிற்கான கூகுல் முடிவுகளை இந்த தளம் பட்டியலிடுவதோடு ஒவ்வொரு முடிவில் உள்ள இணைப்பும் எத்த்னை முறை சமூக வலைப்பின்னல் தளங்களில் பகிரப்பட்டுள்ளது என்ற தகவலும் இடம் பெறுகிறது.
அதாவது ஒவ்வொரு செய்தியும் அல்லது கட்டுரையும் டிவிட்டரிம் எத்தனை முறை பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது,பேஸ்புக்கில் எத்தனை முறை விரும்ப பட்டுள்ளது என்ற தகவலும் தரப்படுகிறது.
இந்த தகவலின் மூலம் குறிப்பிட்ட கட்டுரை எந்த அளவுக்கு பிரப்லமாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் பகிர்வது பரவலாக இருக்கும் சமூக வலைப்பின்னல் யுகத்தில் ஒரு கட்டுரையின் இணைய செல்வாக்கை அறிந்து கொள்வது சுவாரஸ்யமானது தான்.பல விதங்களில் பயனுள்ளதும் கூட.
இந்தியாவின் முன்னணி வலைப்பதிவாளரான அமித் அகர்வாலின் டிஜிட்டல் இன்ஸ்பிரேஷன் சார்பில் இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி;http://ctrlq.org/google/