டிவிட்டர் ஒளிவிளக்கு.

timeline

உங்களுக்கென ஒரு டிவிட்டர் உதவியாளர் இருந்தால் எப்படி இருக்கும்?

பிரபலங்களின் செயலாள‌ர்கள் போல உங்களுக்கு ஒரு டிவிட்டர் உதவியாளர்.  உதவியாளர்கள் பிரப‌லங்களுக்கு வரும் கடிதங்களை வகைப்படுத்தி கொடுத்து, பதில் போட வேண்டிய கடிதங்களை தனியே பிரித்து வைத்து, சந்திக்க வேண்டியவர்களை நினைவு படுத்துவது என பிரபலங்களின் பணிச்சுமைய குறைத்து தருகின்றனர் அல்லவா? அதே போல டிவிட்டரில் உங்கள் டைம்லைனில் வந்து கொண்டே இருக்கும் குறும்பதிவுகளை அவற்றின் வகைக்கேற்ப பகுத்தளிக்கும் ஒரு உதவியாளர் .

டிவிட்டர் டைம்லைனை மனக்கண்ணில் காட்சிப்படுத்தி கொண்டால் இந்த சேவைக்கான தேவை புரியும். டைம்லைனில் புதிய் குறும்பதிவுகள் வரிசையாக சேர்ந்து கொண்டே இருக்கும். அதே தலை கீழ் வரிசையில் படித்து பார்க்கலாம்.

ஆனால் புதிது புதிதாக குறும்பதிவுகள் வந்து கொண்டே இருக்கும் போது பெரும்பாலும் பறவை போல் தான் அவற்றை மேலோட்டமாக பார்ப்போம். அப்போது சுவாரஸ்யமான பதிவுகளை தவற விடலாம் . பல நேரங்களில் அதிக பதிவுகள் அலுப்பை தரலாம்.அந்த அலுப்பில் நல்லதொரு இணைப்பு கண்ணில் படாமல் போகலாம். அருமையான புகைப்படம் தாங்கிய குறும்பதிவை தவற விடலாம்.

இந்த விபத்தை தவிர்க்க டைம்லைனை பொறுமையாக படித்து பார்த்தாக வேண்டும். டைம்லைனின் நீளம் அதிகமாயின் நேரம் அதிகமாகும்.

எல்லா டிவிட்டர் பயனாளிகளும் எதிர்கொள்ளும் சோதனை தான் இது.

ஆம் எனக்கும் இந்த சங்கடமான அனுபவம் உண்டு என்று நீங்கள் நினைத்தால் டிவிட்லாம்ப் உங்களுக்கான சேவை. டிவிட்டர் விளக்கு என்று பொருள் த்ரும் இந்த தளம் உங்களுக்கான டிவிட்டர் வழிகாட்டி.

டிவிடலாம்ப் சேவையை பயன்படுத்தும் போது டிவிட்டர் குறும்பதிவுகள் ஒன்றன் பின் ஒன்றாக தோன்றாமல் அவற்றின் வகைக்கேற்ப தனித்தனி தலைப்புகளில் போய் உட்கார்ந்து கொள்கின்றன.

புகைப்படம் உள்ள குறும்பதிவுகளா? அவை புகைப்படங்கள் என்னும் தலைப்பில் காணப்படுகின்றன. இணைப்புகள் கொண்டவை இணைப்பு தலைப்பில் இடம் பெறுகின்ற‌ன. வீடியோ தலைப்பில் வீடியோக்களும் ஆடியோ தலைப்பில் இசை சார்ந்த கோப்புகளும் இருக்கின்றன.

யாரோ உங்களுக்காக வகைப்படுத்தி தந்தது போல இப்படி வகை வகையாக பிரிக்கப்பட்ட அழகாக தொகுத்தளிக்கப்படுவதால் ஒரு முறை மேலோட்டமாக பார்க்கும் போதே முக்கிய பதிவுகளை கண்டு கொண்டு விடலாம்.

இதில் இருந்தே ரீடிவீட் செய்யலாம்.

டிவிட்டர் சார்ந்த சேவைகளில் புதிது. பயனுள்ளது. அடிப்படை சேவை இலவசமானது. ஆனால் முழுமையாக பயன்ப‌டுத்த கட்டணம் செலுத்த வேன்டும்.

இணையதள முகவரி.http://twitlamp.com/auth

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *