இணையத்தின் கொடை வள்ளல்

chennai.craigslist.co.inஒரு இமெயில் பட்டியலை வைத்துக்கொண்டு என்ன செய்துவிட முடியும். ஒரு மாபெரும் வர்த்தக சாம்ப்ராஜயத்தையே உருவாக்கிவிடலாம் தெரியுமா? இணையத்திற்கு வரிவிளம்பரத்தை கொண்டு வந்த கிரேக்லிஸ்ட் தளமே இதற்கு உதாரணம். எந்தவித திட்டமிடலோ, பெரிய எதிர்பார்ப்போ இல்லாமல் எளிமையான இமெயில் பரிந்துரையாக துவக்கப்பட்ட கிரேக்லிஸ்ட், இணையத்தின் மாபெரும் வெற்றிக்கதைகளில் ஒன்றாக உருவானது. ஆனால் கிரேக்லிஸ்ட் இணையத்தின் வழக்கமான வெற்றிக்கதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அதன் நிறுவனர் கிரேக் நியூமார்க்கும் வழக்கமான இணைய வெற்றியாளர் அல்ல. என் வழி தனி வழி என்பது போல், கோடிகளின் பின்னே போகாமல், போதும் என்ற மனதுடன் அமைதியாக செயல்பட்ட அதிசயமான தொழில்முனைவார் அவர். அதனால் தான், அவர் இன்று தொழிலதிபராக அறியப்படுவதை விட, கொடை வள்ளலாக அறியப்படுகிறார்.

கிரேக்லிஸ்ட்டின் வித்தியாசமான தொழில் பயணத்தை பார்க்கலாம். இணையமும், வலையும், வர்த்தகமயமானதாக கருதப்படும் 1995 ம் ஆண்டில் தான், கிரேக் நியூமார்க், கிரேக்லிஸ்ட் சேவையை துவக்கினார். பின்னாளில் இதுவே இணையத்தில் வரிவிளம்பர சேவைக்கான துவக்கமாக அமைந்து, பத்திரிகைகள் மற்றும் நாளிதழ்களின் வருவாய்க்கு வேட்டு வைத்தது. அதே நேரத்தில் சாமானியர்களுக்கான எளிய வருவாய் ஆதாயமாக மாறியது.

இணையத்தை மாற்றி அமைத்த முன்னோடி சேவைகளில் ஒன்றாக கருதப்பட்டாலும், கிரேக்லிஸ்ட்டை அதன் நிறுவனர் கிரேக் எந்தவித எதிர்பார்ப்போ, திட்டமிடலோ இல்லாமல் தான் துவக்கினார்.

அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் பிறந்து வளர்ந்த கிரேக், ஐபிஎம் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் புரோகிராமராக, 18 ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பிறகு அவர் 1990 களின் துவக்கத்தில் சார்லெஸ் வெப் நிறுவனத்தில் பணியாற்றத்துவங்கினார். அடுத்த சில ஆண்டுகளில் அவர் வேலை இழக்க நேர்ந்தாலும், இந்நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தில் அவர் இணையத்தின் அற்புதத்தை அறிமுகம் செய்து கொண்டிருந்தார். அதோடு இந்த வேலைக்காக அவர் சான்பிரான்சிஸ்கோ நகரில் குடிபெயர்ந்திருந்தார்.

வேலை போனதால் கையை பிசையும் நிலை இல்லாததால், கிரேக் புதிய நகரத்தை அறிமுகம் செய்து கொள்வதிலும், இணைய பயன்பாடு தொடர்பாக மற்றவர்களுக்கு புரியவைப்பதிலும் ஆர்வம் காட்டி வந்தார். நண்பர்கள் பலர் அவருக்கு நகரின் முக்கிய இடங்களை அறிமுகம் செய்து கொள்ள உதவினர். இதற்கு நன்றிகடனாக, அவர் நகரில் நடக்கும் நிகழ்வுகளை பட்டியல் போட்டு இமெயில் மூலம் தனது நண்பர்களுக்கு அனுப்பி வைக்கத்துவகினார்.

அவர் சற்றும் எதிர்பாராத வகையில், இந்த இமெயில் பட்டியலுக்கு நண்பர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. துவக்கத்தில் அவர் 10 அல்லது 12 பேருக்கே பட்டியலை அனுப்பி வைத்தாலும், அதை பெற்றவர்கள் தங்கள் நண்பர்களுக்கு அதை அனுப்பி வைத்தனர். இதனால் வட்டம் பெருகியது. அது மட்டும் அல்ல, நண்பர்களும் அந்த பட்டியலில் தகவல்களை சேர்க்கத்துவங்கினர். நிகழ்ச்சிகள் என்றில்லாமல், வேறு விதமான தகவல்களும் பட்டியலில் இடம்பெறத்துவங்கின.

இந்த கட்டத்தில் தான், கிரேக்கிற்கு தனது இமெயில் பட்டியலுக்கு பெரிதாக எதிர்பார்ப்பும், தேவையும் இருக்கிறது என்பது புரிந்தது. உடனே அதில் அதிக கவனம் செலுத்த துவங்கினார். முதல் வேலையாக இந்த இமெயில் சேவைக்கு ஒரு பெயர் சூட்ட நினைத்தார். சான்பிரான்சிஸ்கோ நிகழ்வுகள் எனும் பெயர் அவர் மனதில் தோன்றியது. ஆனால், அதற்குள் நண்பர்கள் அந்த சேவைக்கு அவர்களே கிரேக்லிஸ்ட் என பெயர் சூட்டியிருந்தனர். எனவே கிரேக், அதே பெயரில் பட்டியல் சேவையை துவங்கினார்.

நாளடைவில் வரவேற்பு பல மடங்கு அதிகமான நிலையில், இந்த சேவையை இமெயில் பட்டியலில் இருந்து இணையதளத்திற்கு மாற்றினார். நிகழ்வுகளையும், தகவல்களையும் வகைப்படுத்தி வெளியிட்டார். மிக மிக எளிமையான இணையதளமாக இருந்ததை மீறி இந்த சேவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த தளத்தில் மக்கள் தங்களுக்கு பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது. அதே நேரத்தில் தங்கள் தேவைகளையும் இந்த தளத்தில் எளிதாக இடம்பெற வைக்க முடிந்தது.

இதன் பயனாக, இணையத்தில் செயல்படும் வரி விளம்பர தளம் போல இது அமைந்தது. ஆனால், வழக்கமான வரி விளம்பர சேவையை விட செலவு குறைந்ததாக இருந்தது. விளைவு மக்கள் உள்ளூர் வரிவிளம்பர சேவையை விட இந்த சேவையை அதிகம் நாடத்துவங்கினர். இதன் காரணமாக கிரேக்லிஸ்ட் மிகவும் பிரபலமானது.

அடுத்த கட்டமாக அது அமெரிக்காவின் மற்ற நகரங்களுக்கும் விரிவானது. அதில் இடம் பெற்ற வகைகளும் அதிகரித்தது. அதன் பிறகு பார்த்தால், நாளிதழிகளின் வரிவிளம்பர வருவாயை பாதிக்ககூடிய அளவுக்கான வர்த்தகமாக கிரேக்லிஸ்ட் வளர்ச்சி பெற்றிருந்தது. இது ஊடகத்துறையை அதிருப்தியில் ஆழ்த்தினாலும், பொதுமக்கள் மகிழ்ச்சியோடு இந்த தளத்தை பயன்படுத்தினர். அவர்கள் எந்த தகவலை வேண்டுமானாலும் விளம்பரமாக பகிர முடிந்தது. இது தேவை உள்ளவர்களை இணைக்கும் பாலமாக அமைந்தது.

கிரேக்லிஸ்ட் எல்லாவற்றுக்கமான சேவையாக வளர்ந்தது. நாய்க்குட்டி முதல் வீடு விற்பனை, வேலை வாய்ப்பு தேடல் என பலவிதமாக கிரேக்,லிஸ்ட் பயன்பட்டது. வில்லங்கமான பயன்பாடும் இருந்தாலும், பொதுவாக பார்க்கும் போது கிரேக்லிஸ்ட்டை மட்டும் நம்பி செயல்படலாம் எனும் நிலையை உருவாக்கியிருந்தது.

அடுத்த கட்ட வளர்ச்சியாக கிரேக்லிஸ்ட் அமெரிக்க நகரங்களில் மட்டும் அல்லாமல் உலக நகரங்களிலிலும் விரிவானது. எளிமையாக வரி விளம்பரங்களை வெளியிட வழி செய்த காரணத்தால் அறிமுகமான நரங்களில் எல்லாம் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை வைத்து கிரேக் இரண்டு விஷயங்களை எளிதாக செய்திருக்கலாம். வரிவிளம்பரங்களை வெளியிட அதிக கட்டணம் வசூலித்து கோடிகளை குவித்திருக்கலாம் அல்லது நிறுவனத்தை பொது பங்கு வெளியிட வைத்து கோடிகளை அள்ளியிருக்கலாம். சொல்லப்போனால், இணைய நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி, அதை பொதுச்சந்தைக்கு கொண்டு வருவது என்பதே பல தொழில்முனைவோரின கனவாக இருக்கிறது. ஆனால் கிரேக் இரண்டையுமே செய்யவில்லை. அது மட்டும் அல்ல, வழக்கமான சிலிக்கானவேலி தொழிலமுனைவோர் செய்வது போல, முதலீட்டாளர்களின் நிதியையும் அவர் பெறவில்லை.

கிரேக்லிஸ்ட் இணையதளம் பயனுள்ள சேவையாக இருக்க வேண்டும் என்பதில் மட்டுமே அவர் கவனம் செலுத்தினார். வழக்கமான வர்த்தக சிந்தனைக்கு மாறாக, தனது இணையதளத்தில் இருந்து குறைந்தபட்ச வருமான வந்தாலே போதும் என நினைத்தார். இந்த எண்ணத்துடனே, கிரேக்லிஸ்ட் தளத்தையும், அதன் செயல்பாடுகளையும் எளிமையாகவே வைத்திருந்தார். (கிரேக்லிஸ்ட் தளத்தின் லாபமில்லா நோக்கை பிரதிபலிக்கும் வகையில், அதன் முகவரி டாட்காமாக அல்லாமல் டாட் ஆர்க் என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது)

இடையே கிரேக்லிஸ்ட் தளத்தில் பேனர் விளம்பரங்களை இடம்பெற வைப்பதற்கான வாய்ப்பும் அவரை தேடி வந்தது. நீண்ட யோசனைக்குப்பின் அதையும் நிராகரித்துவிட்டார். விளம்பரங்கள் தளத்தை மெதுவாக்கிவிடும் என நினைத்தார். வழக்கமான பாணியில் விளம்பரங்கள் தேவையில்லை என தீர்மானித்தார். அவர் சந்தித்த வங்கியாளர்களும், முதலீட்டாளர்களும் தளத்தை பணமாக்குங்குகள் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தியும் அவர் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ளவில்லை.

கிரேக் போதும் என்ற மனநிலையை கொண்டிருந்தாலும், அந்த அணுகுமுறையிலேயே கிரேக்லிஸ்ட் தளம் வளர்ச்சி கண்டு, அவருக்கு வருவாயை அள்ளிக்கொடுத்தது. அவரை கோடீஸ்வரராகவும் ஆக்கியது. கிரேக் வர்த்தக வெற்றியை பெரிதாக நினைக்காமல், நிறுவனத்தின் தினசரி செயல்பாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, சமூகத்திற்கு திரும்பி அளிக்கும் நன்கொடை சார்ந்த செயல்பாடுகளிலேயே கவனம் செலுத்தி வருகிறார். கிரேக்கனெக்ட் எனும் இணையதளம் மூலமாக அவர் நன்கொடை மற்றவர்களுக்கு உதவும் செயலில் ஈடுபட்டு வருகிறார். தனது தளம் ஊடகங்களின், வரிவிளம்பர வருவாயை பாதித்தாக சொல்லப்படுவதையும் அவர் ஏற்கவில்லை. இந்த கருத்தை மீறி, இதழியல் செயல்பாடுகளுக்கான திட்டங்களுக்கு அவர் நன்கொடை அளித்திருக்கிறார்.

பி.கு: கிரேக்லிஸ்ட் தளம், சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்களிலிம் செயல்பட்டு வருகிறது. அதன் சென்னை பக்கத்திற்கு சென்றால், அந்த தளத்தின் எளிமை மற்றும் பயன்பாட்டு தன்மை ஆகிய இரண்டு அம்சங்களையுமே உணரலாம். https://chennai.craigslist.org/

தமிழ் இந்துவில் எழுதும் இணைய வரலாறு தொடரான வலை 3.0 ல் வெளியானதன் சுருக்கப்படாத வடிவம்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *