வைனோகிராட், கிரேசியா- மோலினா, ஜெப் உல்மான் மற்றும் மறைந்த ராஜீவ் மோட்வானி்! – இவர்கள் எல்லாம் யார் தெரியுமா? பேராசிரியர்கள்- சாதாரண பேராசிரியர்கள் அல்ல, கூகுளை உருவாக்கிய பேராசிரியர்கள்.
கூகுள் நிறுவனர்கள் செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ், அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக மாணவர்களாக இருந்த போது, இணையத்தில் சிறப்பாக தேடும் வசதியை உருவாக்குவதற்கான ஆய்வில் ஈடுபட்டிருந்ததையும், இந்த ஆய்வு திட்டமே கூகுள் நிறுவனமாக உருவானது என்பதும் பரவலாக அறியப்பட்ட தகவல்கள்.
1998 ல் முழுவீச்சில் அறிமுகமான பின் கூகுள் கண்ட வளர்ச்சியும், அதன் பயனாக இணையத்தில் செலுத்தி வரும் ஆதிக்கமும் அனைவரும் அறிந்தது தான்.
கூகுள் வெற்றிக்கதையில், பேராசிரியர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்பதே கவனிக்க வேண்டிய விஷயம். நம்மவர்கள் கூகுளை, கூகுளாண்டவர் என குறிப்பிடும் வழக்கம் கொண்டுள்ளனர். கூகுலின் எல்லாம் வல்ல தன்மையை இது குறிக்கிறது. கூகுள் வெற்றி பெற்ற பின் அதற்கு இத்தகைய வெண்பா பாடுவதெல்லாம் பெரிய விஷயம் அல்ல. ஆனால், கூகுளின் ஆரம்ப காலத்தில் அதன் தேடல் தொழில்நுட்பத்தில் நம்பிக்கை வைத்து, பேராசிரியர்கள் அதன் நிறுவனர்களுக்கு வழிகாட்டியதும், அதைவிட முக்கியமாக நிதியுதவி அளித்ததுமே உண்மையில் பெரிய விஷயம். இதுவே கூகுள் உருவாக முக்கிய காரணம்.
கூகுளின் வெற்றிக்கதையை விவரிக்கும் ஸ்டான்போர்ட் அலுமினி மேகஜைன், கட்டுரை ஒன்று, கூகுள் நிறுவனர்கள் தங்கள் திட்டத்தை செயல்படுத்த பேராசிரியர்களின் நிதி உதவியை நம்பியிருந்ததை சுட்டிக்காட்டுக்கிறது.
கூகுள் அப்போது செய்ய முயற்சித்துக்கொண்டிருந்தது, மொத்த இணையத்தையும் பட்டியலிட்டு, அதன் மூலம் தேடல் சேவையை அளிக்க முயன்று கொண்டிருந்தது. ஆனால் இதற்கு அதிக கம்ப்யூட்டர்களும், அதைவிட அதிக சேமிப்புத்திறனும் தேவைப்பட்டது. இவற்றை வாங்க தேவைப்பட்ட பணத்தை கூகுள் நிறுவனர்கள் தங்கள் பேராசியிரிடம் இருந்து தான் கடனாக வாங்கியிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக, பேராசிரியர் ஹெக்டர் கிரேசியா மோலினா, வழிகாட்டியாக இருந்ததோடு, அள்ளியும் கொடுத்திருக்கிறார். ’ அந்த காலத்தின் நான் தான் அவர்களின் வங்கியாக இருந்தேன் என்று இது பற்றி பேராசிரியர் மோலினா குறிப்பிட்டுள்ளார்.
கூகுள் ஆய்வு திட்டத்தை ஸ்டான்போர்ட் பல்கலையின் டிஜிட்டல் நூலக திட்டத்தின் கீழ் மேற்கொள்ள நிதி பெற்றுத்தந்ததும் அவர் தான். அவர் பெற்றுத்தந்த 10,000 டாலரில் தான், கூகுளுக்கு தேவையான டேட்டா சர்வர்களை அமைத்தனர்.
முதலில் கூகுள் ஸ்டான்போர்டு இணையதளத்தில் தான் அறிமுகமானது. அங்கு நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், அடுத்த கட்ட வளர்ச்சிக்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, செரிட்டன் எனும் பேராசிரியர், கூகுள் நிறுவனர்களால் கவரப்பட்டு அவர்கள் துவக்க இருந்த நிறுவனத்திற்கு ஒரு லட்சம் டாலர் காசோலையை எழுதிக்கொடுத்தது அவர் தான். அவருடன் Andreas Bechtolsheim அதே அளவு நிதி அளித்தார்.
இந்த ஆரம்ப முதலீடே கூகுள் வெற்றிக்கதைக்கு அடித்தளமிட்டது. இதற்கு பிரதிபலனாக, இந்த பேராசிரியர்கள் பின்னர் கூகுள் நிறுவன பங்குகளை பெற்று, மில்லினர்களாகவும், பில்லினர்களாகவும் ஆனார்கள் என்றாலும், மாணவர் பருவத்தில் கூகுள் நிறுவனர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு நிதி உதவி அளித்து ஊக்குவித்ததே கூகுள் சாம்ப்ராஜய்ம் உருவாக காரணமானது.
மாணவர்கள் மீது அக்கறை கொண்ட பேராசிரியர்கள் வாழ்க!
ஸ்டான்போர்ட் அலுமினி மேகசைன் கட்டுரை: https://stanfordmag.org/contents/starting-up