’மொபைல் ஜர்னலிசம்; நவீன இதழியல் வழிகாட்டி’, புத்தகத்தின் நோக்கம், உள்ளடக்கம் தொடர்பாக சில அடிப்படையான விளக்கங்கள்:
- இந்த புத்தகத்தின் நோக்கம் என்ன?
இதழியல் உலகில், மோஜோ அலை வீசிக்கொண்டிருப்பதை உணர்த்துவதே இதன் முக்கிய நோக்கம். அதாவது செல்பேசியை மையமாக கொண்டு இதழியல் இயங்கத்துவங்கியிருக்கிறது. இந்த மாற்றத்தை உள்வாங்கி கொண்டு, செல்பேசியின் ஆற்றலை இதழியலுக்காக முழு வீச்சில் பயன்படுத்திக்கொள்வதற்கான தூண்டுகோளாக இந்த புத்தகம் அமைய வேண்டும் என்பது எதிர்பார்ப்பு.
- இந்த புத்தகம் யாருக்கானது?
செல்பேசி இதழியல் தொடர்பாக அறிந்து கொள்ள விரும்பும் எவருக்கும் இந்த புத்தகம் ஏற்றது. அதைவிட முக்கியமாக, செல்பேசியின் ஆற்றலை இன்னும் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறவர்களுக்கானது.
- இந்த புத்தகம் இதழியல் மாணவர்களுக்கானதா?
இதழியல் மாணவர்களையும் மனதில் கொண்டே எழுதப்பட்டுள்ளது. ஆனால், பாடப்புத்தகம் போல் அல்லாமல், வழக்கமான வாசகர்களும் எளிதாக வாசிக்க கூடியது போலவே எழுதப்பட்டுள்ளது. செல்பேசி இதழியிலுக்கான வழிகாட்டி நூல் இது.
செல்பேசி இன்று, எண்ணற்ற வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்திருப்பதால், சாமானியர்களும் இந்த வழிகாட்டியை பயன்படுத்தலாம்.
- செல்பேசி இதழியல் எல்லோருக்கும் சாத்தியமா?
கதை சொல்லுதலில் ஆர்வம் உள்ள எவருக்கும் சாத்தியமே. கதை சொல்லல் என்பது, பயனுள்ள தகவல்களை சுவாரஸ்யமான முறையில் பகிர்ந்து கொள்ளுதல் என்ற முறையில் இங்கு பயன்படுத்தப்படுகிறது.
- செல்பேசி இதழியலால் என்ன செய்துவிட முடியும்?
இதற்கு வியப்பையும், ஊக்கத்தையும் அளிக்க கூடிய நடைமுறை உதாரணங்கள், புத்தகத்தில் கட்டுரைகளாக இடம் பெற்றுள்ளன.
- பெரும்பாலானோர் ஏற்கனவே செல்பேசியை சிறந்த முறையில் பயன்படுத்தி வருகின்றனரே?
உண்மை. பலரும் செல்பேசியை நன்றாகவே பயன்படுத்துகின்றனர். அதற்கு தேவையான இதழியல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படை அமசங்களை இந்த புத்தகம் வலியுறுத்துகிறது.
- செல்பேசியிலேயே இதழியல் சாத்தியம் என்றால் பாதிப்பு ஏற்படாதா?
இல்லை. செல்பேசி இதழியலின் சாதகமான அம்சங்களை இந்த புத்தகம் பிரதானமாக பேசுகிறது. முற்றிலும் நல்லவிதமாக பயன்படுத்தப்பட்டால் செல்பேசி இதழியலின் முழு பலனை அடையலாம். அந்த வகையில், அறம் மற்றும் சட்டம் சார்ந்த விஷயங்களையும் இந்த புத்தகம் பேசுகிறது.
- இந்த புத்தகத்தின் மற்ற சிறப்பு அம்சங்கள்
செல்பேசி இதழியல் முன்னோடிகளை அறியலாம். செல்பேசி இதழியிலின் தொழில்நுட்ப அடிப்படை அம்சங்களை அறியலாம். முக்கியமாக செல்பேசி இதழியல் எந்த அளவுக்கு தவிர்க்க இயலாத அம்சமாக உருவாகி கொண்டிருக்கிறது என்பதை உணரலாம்.
- இந்த புத்தகம் இதழாளர்களுக்கானதா?
ஆம், தொழில்முறை இதாழளர்களும் இதன் மூலம் பலன் பெறலாம். சர்வதேச அளவில் செல்பேசி இதழியலில் நடைபெறும் முன்னோடி முயற்சிகள் ஊக்கம் அளிக்கும்.
மொபைல் ஜர்னலிசம்
கிழக்கு பதிப்பக வெளியீடு