டிவிட்டரால் விடுதலை ஆன இளைஞர் – ஒரு வரலாற்று கதை!

அமெரிக்க இளைஞர் ஜேம்ஸ் பக்கிற்கு டிவிட்டர் வாயிலாக நிகழந்த அனுபவம் இப்போது நிகழ்ந்தாலும், அது உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாகும். ஆனால், அது போன்ற அற்புதம் மீண்டும் நிகழுமா? என்று தெரியவில்லை. ஏனெனில், இடைப்பட்ட காலத்தில் டிவிட்டரும் மாறியிருக்கிறது. சமூக ஊடக பரப்பும் வெகுவாக மாறிவிட்டது.

இருப்பினும், ஒற்றை குறும்பதிவு மூலம் ஜேம்ஸ் பக் விடுதலை ஆனது டிவிட்டரின் மைல்கல் தருணங்களில் ஒன்றாகவும், சமூக ஊடகத்தின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

2008 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எகிப்தில் நிகழ்ந்த சம்பவம் இது. டிவிட்டர் சேவை அறிமுகமாகி இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலம். அப்போது, அமெரிக்காவின் பெர்கிலி பல்கலை மாணவர் ஜேம்ஸ் கார்ல் பக் (James Karl Buck ), கல்லூரி பாடத்திட்ட புகைப்பட ஆய்விற்காக எகிப்து சென்றிருந்தார்.

எகிப்தில் அப்போது போராட்டம் நடந்து கொண்டிருந்தது. மஹல்லா எனும் பகுதியில் நடைபெற்ற அந்த போராட்டத்தை ஜேம்ஸ் பக் புகைப்படம் எடுத்து பதிவு செய்ய முயற்சித்த போது அந்நாட்டு காவலர்களால் கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவியாக இருந்த உள்ளூர் மொழிபெயர்ப்பாளர் ஒருவரும், இன்னொரு செயற்பாட்டாளரும் சேர்த்து கைது செய்யப்பட்டனர்.

டிவிட்டருக்கு முந்தைய காலத்தில் இப்படி அயல்நாடு ஒன்றில் கைதாக நேர்ந்தவர் எத்தகைய இன்னல்களுக்கு உள்ளாகியிருப்பார் என்று தெரியவில்லை. ஜேம்ஸ் பக் சிறைக்கு கொண்டு செல்லப்படும் வழியில், தன்னிடம் இருந்த செல்போன் மூலம் டிவிட்டரில் குறும்பதிவு ஒன்றை பகிர்ந்து கொண்டார்.

கைதானேன் (Arrested.” ) எனும் ஒற்றை வார்த்தை தான் அந்த குறும்பதிவு.

அவ்வளவு தான், அடுத்த சில நொடிகளில் அவரது பின் தொடர்பாளர்கள் பட்டியலில் இருந்தவர்கள், இளைஞர் பக் அயல்நாட்டில் கைதானதை அறிந்து பதறிப்போனார்கள். அவர்களில் சிலர் எடுத்த முன்முயற்சி காரணமாக, அடுத்த சில மணி நேரங்களில் பக் விடுதலை செய்யப்பட்டார்.

அவரது நிலையை அறிய பதற்றத்துடன் காத்திருந்த பின் தொடர்பாளர்களுக்கு மீண்டும் ஒற்றை வார்த்தை குறும்பதிவில் அவர் விடுதலையானேன் என தகவல் தெரிவித்தார்.

ஆக, ஒற்றை குறும்பதிவால் ஜேம்ஸ் பக் விடுதலை ஆன செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, குறும்பதிவு சேவையான டிவிட்டரின் ஆற்றலையும் உணர்த்தியது. இந்த நிகழ்வு தொடர்பான சி.என்.என் செய்தி, டிவிட்டர் என்பது, பயனாளிகள் அப்டேட் அல்லது டிவீட்களை தங்கள் போன், மெசேஜிங் சேச்வைகள் மற்றும் பேஸ்புக்கில் இருந்து 140 க்கும் குறைவான எழுத்துக்களில் வெளியிட வழி செய்யும் சமூக வலைப்பின்னல் சேவை என அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. https://edition.cnn.com/2008/TECH/04/25/twitter.buck/

ஜேம்ஸ் பக் தான் விடுதலை ஆனதோடு நிற்கவில்லை, தனக்கு துணை நின்று காவலர்களிடம் சிக்கி கொண்ட உள்ளூர் நண்பர்கள் நிலை குறித்தும் தொடர்ந்து குறும்பதிவுகள் வெளியிட்டு அவர்கள் விடுதலை ஆக உதவினார்.

இந்த நிகழ்வின் போது எகிப்து முன்னணி வலைப்பதிவாளர் ஒருவரும் ஜேம்ஸ் பக் விடுதலைக்காக வலைப்பதிவு மூலம் குரல் கொடுத்துக்கொண்டிருந்தார்.

குறும்பதிவு சேவையான டிவிட்டர் ஒரு தவிர்க்க முடியாத சமூக வலைப்பின்னல் சேவையை உருவாக வழி செய்த முக்கிய வரலாற்று தருணங்களில் ஒன்றாக இந்த நிகழ்வு பதிவாகிறது.

2011 ம் ஆண்டு அரபு வசந்தம் எனும் சமூக ஊடக புரட்சி நிகழ்வதற்கு முந்தைய எகிப்து என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டுமா அல்லது அரபு வசந்தத்திற்கு எகிப்தையும் உலகலையும் தயார் செய்த முன்னோடி நிகழ்வுகளில் ஒன்று என இதை கருதலாமா? என்பது சிந்தனைக்குரியது.

பி.கு: சமூக ஊடக முக்கிய தருணங்கள் எனும் தேடலில் இந்த மைல்கல் நிகழ்வை பெரும்பாலும் கண்டறிய முடியாது. டிவிட்டர் தொடர்பான ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அமெரிக்க பேராசிரியர் தீரஜ் மூர்த்தி (https://www.dhirajmurthy.com/wp-content/uploads/2012/04/Twitter-Microphone-for-the-masses.pdf) இந்த நிகழ்வை குறிப்பிட்டுக்கிறார்.

டிவிட்டர் வரலாற்று நிகழ்வு

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *