சாட்ஜிபிடியிடம் கேட்க கூடாத கேள்விகள்!

பொது பயன்பாடு தேடியந்திரங்களை மட்டும் சார்ந்திருக்க கூடாது என்பதும், பொது பயன்பாடு தேடியந்திரங்களில் கூகுளை மட்டும் நம்பியிருக்க கூடாது என்பது என் நிலைப்பாடு. இதன் பொருள், தேவை எனில் கூகுள் அல்லாத சிறப்பு தேடியந்திரங்களை நாட வேண்டும் என்பது.

எப்போதெல்லாம் சிறப்பு தேடியந்திரங்களை நாட வேண்டும் என்றும், சிறப்பு தேடியந்திரங்களை எப்படி நாடுவது என்றும் அறிந்திருப்பது அவசியம். சிறப்பு தேடியந்திரம் எனில் குறிப்பிட்ட துறை சார்ந்து செயல்படக்கூடியவை. உதாரணம், இசைக்கு மிடோமி.

இன்னும் எண்ணற்ற உதாரணங்களை குறிப்பிடலாம் என்றாலும், இப்போதைக்கு சிறப்பு தேடியந்திரத்தின் தேவை கச்சிதமாக உணர்த்தக்கூடிய ஒரு பழைய தேடியந்திரத்தை பார்க்கலாம். டிப்ளமேசி மானிட்டர் (http://www.diplomacymonitor.com/) எனும் அந்த தேடியந்திரம் இப்போது பயன்பாட்டில் இல்லை என்பது அதன் தேவையையும் இன்னும் கூடுதலாக புரிய வைப்பதாக அமைகிறது.

டிப்ளமேசி என்பது நாடுகளுக்கு இடையிலான உறவை கையாளும் ராஜாங்க சேவையை குறிக்கும். பொதுமக்களுக்கு பெரும்பாலும், ஆர்வத்தை ஏற்படுத்தாத துறையாக தோன்றாலும், ராஜாங்க செயல்பாடுகள் முக்கியமானவை. தூதர்களின் அறிக்கை, வெளியுறவுத் துறை அமைச்சரின் கருத்து என பலவிதங்களில் ராஜாங்கம் சார்ந்த தகவல் தொடர்பு அமைவதை பார்க்கலாம்.

இரு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்படும் போது, பரஸ்பரம் அதிகாரப்பூர்வமான முறையில் கருத்து வெளியிடப்படுவதை செய்திகளில் கவனிக்கலாம். மோதலின் போது மட்டும் அல்ல, பேரிடர் காலங்கள், சர்வதேச பிரச்சனை, போர் சூழல், உச்சி மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளின் போது நாடுகளின் அதிகாரப்பூவர் கருத்து, ராஜாங்கம் வாயிலாக வெளிப்படுவதையும் கவனிக்கலாம்.

இந்த கருத்துக்களை அறிவதில் பொதுமக்களில் எத்தனை பேருக்கு ஆர்வம் இருக்கும் என்பதை மீறி, நாடுகளின் ராஜாங்க தகவல் தொடர்பு சார்ந்த அனைத்து செய்திகளையும், தகவல்களையும் ஒரே இடத்தில் தொகுத்தளிக்கும் தளமாக ’டிப்ளமேசி மானிட்டர்’ உருவாக்கப்பட்டது. அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த செயிண்ட் தாமஸ் சட்டக்கல்லூரி (St. Thomas University School of Law ) இந்த தளத்தை உருவாக்கியது.

இதன் முகப்பு பக்கத்தில், ராஜாங்க செய்திகளுக்கு பின்னே உள்ள அதிகாரப்பூர்வ அறிக்கைகளை காணலாம். அறிக்கையின் சாரம்சத்தை விளக்கும் தலைப்புடன், மூல ஆவணமும் இணைக்கப்பட்டிருக்கும்.

எந்த நாடு எந்த பிரச்சனையில் என்ன கருத்து கொண்டுள்ளது அல்லது என்ன விளக்கம் அளிக்கிறது என்பதை அறிய இந்த தளம் உதவும். செய்திகள் தவிர, தற்போதைய முக்கிய பிரச்சனைகளுக்கான சொற்களை கிளிக் செய்தால், அந்த பிரச்சனை தொடர்பாக நாடுகளின் நிலையை அறிந்து கொள்ளலாம். இவைத்தவிர, ராஜாங்க ஆவணங்களை பல்வேறு தலைப்புகளில் விரைவாக அணுகும் வசதியும் இருக்கிறது. உதாரணமாக மனித உரிமைகள் அல்லது வர்த்தக உறவு என அணுகலாம்.

இவைத்தவிர, நாடுகள், பிராந்தியம், சர்ச்சைகள்/ பிரச்சனைகள், இரு தரப்பு உறவு என தனித்தனி தலைப்புகளில் ராஜாங்க தகவல் தொடர்பு தகவல்களை அலசி ஆராயலாம்.

ஆக, ராஜாங்க செய்திகளுக்கான தளம் என்றாலும், இதன் அடிப்படையாக அமைந்திருந்தது தேடியந்திரம் தான். ராஜாங்க தகவல்களை இணையத்தில் அங்கும் இங்கும் தேட வேண்டிய தேவை இல்லாமல், ஒரே இடத்தில் அவற்றை இந்த தளம் தொகுத்தளிப்பதோடு, தேவைக்கேற்ப அந்த தகவல்களை தேடிக்கொள்ளும் வசதியையும் அளிக்கிறது.

இதற்கு மூலாதரணமான தேடல் நுட்பம் இந்த தளத்தின் பின்னே உள்ள கல்வி அமைப்பு சொந்தமாக உருவாக்கியது. அரசு அமைப்புகள் சார்ந்த இணையதளங்கள் வாயிலாக வெளியாகும் ராஜாங்க தகவல் தொடர்பு தகவல்களை உடனுக்குடன் கவனித்து அவற்றை திரட்டித்தருகிறது. வெளியுறவுத்துறை அமைச்சரகம், தூதரகம், தலைவர்கள் அலுவலகம் என பல்வேறு இடங்களில் இருந்து தகவல்கள் நிகழ் நேரத்தில் சேகரிக்கப்பட்டு, ஆசிரியர் குழுவால் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த போது உலக நாடுகளின் நிலை என்ன என அறிய விரும்பினால் அல்லது, கோவிட் பெருந்தொற்று வெடித்த போது, பல்வேறு நாடுகள் வெளியிட்ட அறிக்கைகளை ஆய்வு செய்ய விரும்பினால் இந்த தளம்/ தேடியந்திரம் உதவியாக இருக்கும். ஆனால் என்ன, 2009 ல் இந்த சேவை நிறுத்தப்பட்டு விட்டதால் இவை சாத்தியம் இல்லை. மாறாக சூடான் உள்நாட்டு போர், ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் போன்ற விவகாரங்களில் உலக நாடுகளின் நிலையை அறிய இந்த தளம் கைகொடுத்திருக்கிறது.

சர்வதேச விவகாரங்களின் குறுக்குவெட்டு தோற்றத்தை அளிக்க கூடிய தளமாக இது விளங்கியதை உணர முடிகிறது. ராஜாங்க துறையை சேர்ந்தவர்களுக்கும், ராஜாங்க கருத்துக்களை அறிய விரும்பும் இதழாளர்கள், ஆய்வாளர்களுக்கு இந்த தளம் தகவல் சுரங்கமாக இருந்திருக்க வேண்டும். இத்தரப்பினருக்கான கூகுளாகவும் இந்த தளம் விளங்கியது.

இணைய யுகத்தின் உடனடி தகவல் பகிர்வு ஆற்றலை உணர்ந்து பல நாடுகள் இணையம் வாயிலாக தங்கள் ராஜாங்க பகிர்வுகளை உடனுக்குடன் பகிரும் நிலையில் மற்றும் பல நாடுகள் இந்த பணியை திறம்பட செய்ய தனி சர்வர் போன்ற வசதிகளை நாடும் நிலையில், இணையம் சார்ந்த ராஜாங்க முயற்சிகள் தீவிரமாகி இருக்கும் சூழலில், இந்த இணைய சேவை உருவாக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

துறை சார்ந்த சிறப்பு தேடியந்திரங்கள் ஏன் தேவை என இப்போது புரிந்திருக்கும்.

இனி விஷயத்திற்கு வருவோம். ராஜாங்க தகவல்களை தொகுத்தளித்த இந்த தளம், 2009 ம் ஆண்டில் மூடப்பட்டதாக விக்கிபீடியா தெரிவிக்கிறது. இதற்கான காரணத்தை அறிய வழியில்லை. இந்த சேவையை உருவாக்கிய கல்வி நிறுவன இணையதளத்தில் இதற்கான சுவட்டைக்கூட காண முடியவில்லை.

இணைய காப்பகமான வேபேக்மிஷின் வாயிலாக தான் இந்த தளத்தை இப்போது அணுக முடிகிறது: https://web.archive.org/web/20051212112115/http://diplomacymonitor.com/stu/dm.nsf/opener?OpenForm

இப்படி ஒரு இணையதளம் செயல்பட்டது கூட அறியாத நிலையில் இந்த தளத்தை கண்டறிவது கடினம் தான். கூகுள் ராஜாங்க தேடியந்திரம் அல்லது இணையதளங்கள் எனும் தேடலில் இந்த தளத்தை பட்டியலிடவில்லை.

பயனுள்ள இணையதளங்களை பட்டியலிடும் சேவையை வழங்கி வந்த நூலகரின் இணைய அட்டவனை (Librarians’ Index to the Internet (LII) ) சேவை வாயிலாக தான் இந்த தளத்தை அறிய முடிந்தது. அதன் பழைய செய்திமடல் சேவை பட்டியலில், 2005 ல் அமெரிக்காவை உலுக்கிய காத்ரீனா சூறாவளி காலத்தில், பல்வேறு நாடுகள் வெளியிட்ட கருத்துக்கள், நேசக்கரம், உதவி போன்ற செய்திகளை தொகுத்தளிக்கும் இணையதளம் என டிப்ளமேசி மானிட்டர் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது: https://web.archive.org/web/20050921220441/http://lii.org/search?subsearch=New%20last%20week;query=New%20last%20week;searchtype=subject;title=New%20Last%20Week;or=CaPrmLII;start=0

இந்த இணைப்பை நாடிச்சென்ற போது தான், ராஜாங்க செய்திகளுக்கு என்று இப்படி ஒரு தேடியந்திரமா? என வியக்க நேர்ந்தது.

நூலகரின் இணைய அட்டவனை தளமும் இப்போது பயன்பாட்டில் இல்லை என்பது இன்னும் வேதனையானது.

சரி, இதற்கும் சாட்ஜிபிடிக்கும் என்ன தொடர்பு? என கேட்கலாம்.

டிப்ளமேசி மானிட்டர் போன்ற இணையதளம் ஏன் மூடப்பட்டது அல்லது கைவிடப்பட்டது என அறிய கூகுள் தேடிய போது, விக்கிபீடியா பக்கம் தவிர வேறு பயனுள்ள தகவல்கள் கிடைக்கவில்லை. இதே போன்ற தொடர்புடைய தளங்கள் அல்லது தேடியந்திரங்கள் என தேடிய போது, இந்த சேவை தேடியந்திரமாக எங்கும் பட்டியலிடப்படவில்லை.

டிப்ளமேசி மானிட்டர் தேடியந்திரமா? எனும் கேள்வியை சாட்ஜிபிடி ( பிங் வழி), மற்றும் பிரப்ளக்சிட்டி.ஏஐ சேவைகளிடம் கேட்ட போது, இரண்டு சேவைகளுமே, டிப்ளமேசி மானிட்டர் தேடியந்திரம் இல்லை என உறுதியாக தெரிவித்து, அதற்கான காரணமாக தேடல் பட்டியலில் வரும் தகவல்களை தொகுத்தளிக்கின்றன.

ஆனால், டிப்ளமேசி மானிட்டர்  சேவை செயல்பட்ட விதத்தை அறிந்தால் அது அருமையான ராஜங்க தேடியந்திரம் தான் என்பதை உணரலாம். இதற்கு தேடியந்திரம் சார்ந்த புரிதல் தேவை.

இணையத்தில் கொட்டிக்கிடக்கும் தகவல்களை திரட்டி தொகுத்தளிக்கும் ஏஐ சாட்பாட்களிடம் இந்த புரிதலையும், நுணுக்கமான பதிலையும் எதிர்பாக்க முடியாது. இந்த பதிவும் நோக்கும் இதுவே. தகவல் சார்ந்த தீர்மானமான கேள்விகள் எனில் சாட்ஜிபிடி வகை ஏஐ சாட்பாட்களை நாடலாம். மாறாக, ஆய்வும், அலசலும் தேவைப்படக்கூடிய பொருள் சார்ந்த கேள்விகளை இந்த சாட்பாட்களிடம் கேட்க கூடாது. அப்படி கேட்டாலும் அவை தரும் பதில்களை நம்பிவிடக்கூடாது.

நிற்க, அருமையான ராஜாங்க தேடியந்திரங்கள் வேறு சில இருக்கின்றன. அவற்றை தனியே பார்க்கலாம். உங்களுக்குத்தெரிந்திருந்தால் நீங்களும் பரிந்துரைக்கலாம்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *