கம்ப்யூட்டர் எழுதிய டார்வீனிய கவிதை

சாட்ஜிபிடிக்கு முன்னதாகவே, இயந்திர அறிவு கொண்டு கம்ப்யூட்டரை கவிதை எழுத வைக்கும் முயற்சி துவங்கிவிட்டது என்பதற்கு டார்வீனிய கவிதை (“Darwinian Poetry” ) திட்டம் உதாரணம்.

ஆங்கிலத்தின் அதி சிறந்த கவிதையை கம்ப்யூட்டரை எழுது வைக்க முடியுமா? என்று அறியும் நோக்கத்துடன் இந்த சோதனை முயற்சி (http://www.codeasart.com/poetry/darwin.html ) மேற்கொள்ளப்பட்டது.

அமெரிக்காவின் டேவிட் ரியா ( ) எனும் கட்டிடக்கலை பேராசிரியர் கோட் ஆஸ் ஆர்ட் இணையதளம் வாயிலாக இந்த திட்டத்தை 2003 ம் ஆண்டு செயல்படுத்தினார்.

கம்ப்யூட்டர் கவிதை எழுதித்தள்ள, அதை வாசித்துப்பார்த்து மனிதர்கள் வாக்களிக்க, அதனடிப்படையில் கம்ப்யூட்டர் மேம்பட்ட கவிதையை உருவாக்க என ஒரு தொடர் சங்கிலியாக இந்த முயற்சி அமைந்திருந்தது. இதன் இறுதியாக ஆகச்சிறந்த ஆங்கில கவிதை எழுதப்படலாம் என்பதும், டார்வினின் இயற்கை தேர்வு கோட்பாடு இதற்கு அடிப்படையாக அமையும் என்பதும் எதிர்பார்ப்பு.

இந்த இயற்கை தேர்வு சார்ந்த கவிதை முயற்சி பற்றி இன்னும் விரிவாக பார்க்கலாம்.

இந்த திட்டத்திற்காக ஆங்கில மகாகவி ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட் உள்ளிட்ட நாடகங்களில் இருந்து ஆயிரம் வார்த்தை தேர்வு செய்து தொகுக்கப்பட்டன. இந்த வார்த்தை தொகுப்பில் இருந்து கம்ப்யூட்டர் இரண்டு கவிதைகளை உருவாக்கும். வாசகர்கள் இந்த கவிதைகளை வாசித்துவிட்டு அவற்றில் சிறந்ததை தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்படாத கவிதை நிராகரிக்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட கவிதை மேம்பட்டதாக கொள்ளப்படும்.

அடுத்ததாக இரண்டு கவிதை முன்வைக்கப்படும். தொடர்ந்து கவிதைகளை தேர்வு செய்ய வேண்டும். கம்ப்யூட்டர் தேர்வுகளை பதிவு செய்து கொள்ளும். இப்படி எண்ணற்ற வாசகர்கள் சமர்பிக்கும் தேர்வின் அடிப்படையில் கவிதைகள் நிராகரிக்கப்பட்டு, தேர்வாகும் கவிதைகளின் பொது அம்சங்கள் அடிப்படையில் அடுத்த கவிதைகள் உருவாக்கி போட்டிக்கு முன்வைக்கப்படும்.

கவிதைகள் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்படும். ஒவ்வொரு பிரிவுக்கும் சில தனித்தன்மைகள் உண்டு. கவிதைகள் சேர்த்து உருவாக்கப்படும் போது இந்த அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு, எந்த அம்சம் மற்ற எந்த அம்சத்துடன் அதிகம் சேரும் என்றும் கணக்கிடப்பட்டு கவிதை உருவாக்கப்படும்.

நிஜ உலகில் டார்வின் கோட்பாடு செயல்படுவது போலவே, மேம்பட்ட அம்சங்கள் கொண்ட சொற்களை உள்ளடக்கிய கவிதையை இந்த முறையில் கம்ப்யூட்டர் எழுத முயற்சிக்கும்.

எப்படி ஆயிரக்கணக்கான தலைமுறைகளின் வளர்ச்சியில் பரிணாம உருமாற்றம் ஏற்படுகிறதோ அதே போல, எண்ணற்ற மாறுதல்களுக்கு பிறகு இந்த முறையிலும் கம்ப்யூட்டரால் மிகவும் மேம்பட்ட கவிதையை உருவாக்க முடியும் என்பது நம்பிக்கை.

இந்த முயற்சி என்ன ஆனது என அறிய முடியவில்லை. ஆனால் டார்வின் கோட்பாடு அடிப்படையில் கம்ப்யூட்டரை கவிதை எழுத வைக்கும் முயற்சி சுவாரஸ்யமாக தோன்றுகிறது.

இப்போது என்ன ஏஐ எழுதுவதெல்லாம் படைப்பூக்கம் மிக்கதாகுமா? எனும் விவாதம் வெட்டி முறிகிறது. பாருங்கள், எப்போதுமே மனிதகுலம் இலக்கியத்தையும், படைப்பு உருவாக்கத்தையும் சோதனை முறையில் முயற்சித்து பார்த்திருக்கிறது. கம்ப்யூட்டர் ஒரு கருவி அவ்வளவு தான்.

நிற்க, இவ்விதமாக டார்வின் கோட்பாடு அடிப்படையில் கம்ப்யூட்டர் அல்கோரிதமை உருவாக்குவது மரபணு அல்கோரிதம் (“genetic algorithms”) என குறிப்பிடப்படுகிறது. அதாவது, கம்ப்யூட்டர் புரோகிராம் இரண்டு விதமான தீர்வுகளை உருவாக்கி, அதை மோதவிட்டு, வெற்றி பெறும் தீர்வில் உள்ள அம்சங்களை பதிவு செய்து கொண்டு, அதே போன்ற அம்சங்களை கொண்ட இறுதி தீர்வை நோக்கி நகர்வதாக இந்த அல்கோரிதம் அமைகிறது.

ஐ கால இணைய அகராதி

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *