கூகுளில் மட்டும் தேடாதீர்கள்!

பெபோ ஒயிட் எனும் பெயரில் ஒரு பாடகர் இருப்பது உங்களுக்குத்தெரியுமா? இசையார்வம் கொண்டவர் இல்லை எனில் பெபோ ஒயிட்டை உங்களால் கண்டறிய முடியாமலே போகலாம் என்பது மட்டும் அல்ல, தேடலுக்கு கூகுளை மட்டுமே பயன்படுத்திக்கொண்டிருந்தாலும் இதே நிலை தான்.

பெபோ ஒயிட் அத்தனை பெரிய பாடகரா? என்பது விட்டுவிடலாம், இப்போதைக்கு அவரை கண்டறிவதற்கான வழிகளை மட்டும் பேசுவோம். அதற்கு முன், பெபோ ஒயிட் எனும் கம்ப்யூட்டர் அறிஞர் பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்வோம். ஏனெனில் அவரைப்பற்றிய தேடலில் இருந்து தான், இந்த கேள்வியோ துவங்குகிறது.

பெபோ ஒயிட் அமெரிக்காவின் முதல் வெப்மாஸ்டராக அறியப்படுகிறார். அதாவது அமெரிக்காவின் முதல் இணையதளத்தை அமைத்தவர் என புரிந்து கொள்ளலாம். இதன் பொருள், இணைய உலகின் முதல் வலைதளம், ஐரோப்பாவின் செர்ன் ஆய்வு கூடத்தில் அமைக்கப்பட்ட பிறகு, ஐரோப்பாவிற்கு வெளியே உருவாக்கப்பட்ட முதல் இணையதளமான ஸ்டான்போர்டு ஆய்வக (SLAC ) வலைதளத்தை அமைத்தார். உலகின் ஐந்தாவது வலைதளமாக இது கருதப்படுகிறது. இதெல்லாம் பலரும் அறியாத இணைய வரலாறு. ஆனால், பெபோ ஒயிட்டை வெறும் வெப்மாஸ்டராக மட்டும் பார்க்க முடியாது. வலை அறிவியல் எனும் பிரிவை உண்டாக்கிய மேதை அவை. இணைய வரலாற்றில் அவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

நிற்க, வெப்மாஸ்டர் என்பது இணையத்தில் முக்கிய பொறுப்பாக இருந்த காலத்தை இது திரும்பி பார்க்க வைக்கிறது. வெப்மாஸ்டர் என்றால், இணையதள நிர்வாகி அல்லது பொறுப்பாளர் என வைத்துக்கொள்ளலாம். இப்போதெல்லாம் வெப்மாஸ்டர் பற்றி யாரும் அலட்டிக்கொள்வதில்லை, யாரும் வெப்மாஸ்டர் பட்டத்தையும் மாட்டிக்கொண்டு திரிவதில்லை.

பழைய இணையதளம் ஒன்றில் (https://www.hobbyprojects.com/aboutus.html ) ஏதேனும் தகவல் தேவை எனில் அல்லது செயல்படாத இணைப்புகளை நீக்க வேண்டும் எனில் வெப்மாஸ்டரை தொடர்பு கொள்ளவும் எனும் வாசகத்தை பார்த்த போது தான், வெப்மாஸ்டர் தொடர்பாக பழைய தகவல்களை அறியும் ஆர்வம் உண்டானது.

இந்த ஆர்வத்தின் பயனாக தான், பெபோ ஒயிட் கம்ப்யூட்டர் அறிஞரை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவரைப்பற்றி மேலும் அறிய தொடர்ந்து தேடிய போது தான், பாடகர் பாப் ஒயிட் பற்றிய கேள்வி கேட்கும் நிலை வந்தது.

கூகுள் தேடலில் அறிஞர் பாப் ஒயிட்டின் இணையதள முதல் முடிவாக வந்து நின்றாலும், அடுத்த சில முடிவுகளும் அவரது தொடர்பாகவே அமைந்தாலும், ஏழாவது முடிவாக மீஷோ இணையதளத்தின் முடிவு கவனத்தை ஈர்த்தது. மீஷூவுக்கும் பெபோ ஒயிட்டுக்கும் என்ன தொடர்பு என பார்த்தால், பெபோ ஒயிட் துணி (BEBO-WHITE Fabric: ) எனும் குறிப்பு வருகிறது.

ஆக, துணி எனும் ஒற்றை சொல்லால், மிஷோ இணையதளம், பெபோ ஒயிட் தேடலில் முன்னுக்கு வந்துவிட்டது. அந்த தளத்தை நிர்வகிக்கும் நபர், தனது எஸ்.இ.ஓ ஆற்றலுக்காக பெருமிதம் கொள்ளலாம்.

அறிஞர் பெபோ ஒயிட் தொடர்பான தேடலில் சற்றும் தொடர்பில்லாத மிஷோ இணையதள முடிவு வந்து நிற்பது எப்படி? எனும் கேள்வி எழுகிறது. இதை இருவிதமாக பார்க்கலாம். கூகுள் தேடல் முடிவுகள் அந்த அளவுக்கு வர்த்தகமயமாகியுள்ளன. வெறும் எஸ்.இ.ஓ உத்திகள் கொண்டு மிஷோ போன்ற தளங்களை தொடர்பு இல்லாத தேடலில் கூட கூகுளில் முன்னிலை பெற வைத்துவிடலாம்.

இன்னொருவிதமாக பார்த்தால், பெபோ ஒயிட் என்றால் கம்ப்யூட்டர் அறிஞராக தான் இருக்க வேண்டுமா என்ன, பெபோ ஒயிட் துணை ரகத்தை தேடி வருபவர்களும் இருக்கலாம் என்பதால், கூகுள் மீஷோ முடிவை முன்னிறுத்துவதாக அதன் தேடல் திறனுக்கான உதாரணமாகவும் கொள்ளலாம்.

சரி மற்ற தேடியந்திரங்கள் பெபோ ஒயிட்டிற்கு என்ன விதமான முடிவுகளை அளிக்கின்றன என ஒப்பிட்டு பார்க்கலாம் என்பதற்காக பிங், யாண்டெக்ஸ், யாஹு மற்றும் ஸ்டாட்பேஜ் ஆகிய தேடியந்திரங்களில் வரிசையா தேடி பார்த்த போது தான், யாண்டெக்ஸ், பெபோ ஒயிட் எனும் பாடகருக்கான ஷாசம் பக்கத்தை காண்பித்தது. (https://yandex.com/search/?text=Bebo+White&lr=20902)

பெபோ ஒயிட் இணையதளம் விடுபட்டாலும், அவரது பிளிக்கர் பக்கம் உள்ளிட்டவை இடம்பெறுகிறது. ஆய்வுக்கட்டுரை இணைப்புகளையும் பார்க்க முடிகிறது.

மைக்ரோசாப்டின் பிங் தேடியந்திரத்தில் தேடிய போது, தேடல் முடிவுகள் மிகவும் செறிவாகவே இருக்கின்றன. அவரது இணையதளம் தவிர, ஆய்வு பக்கங்கள், அவர் எழுதிய புத்தகத்திற்கான கூகுள் புத்தக பக்கம், என சுட்டிக்காட்டப்படும் எல்லா முடிவுகளும் சிறப்பாக உள்ளன.

யாஹுவில் தேடினாலும், அவரது அருமையான பேட்டி இணைப்பு உள்ளிட்ட சிறந்த முடிவுகளை பார்க்க முடிகிறது. ஆனால் இரண்டிலும் முதல் பக்கத்தில் மிஷோ ரக முடிவுகள் இல்லை.

ஸ்டார்ட் பேஜ் எனும் தேடியந்திரத்தில் தேடிய போது, மற்ற முடிவுகளோடு மிஷோ முடிவும் வருகிறது. ஆனால் ஸ்டார்ட் பேஜ் கூகுள் உள்ளிட்ட தேடியந்திரங்களை சார்ந்து இயங்கும் தேடியந்திரம்.

கூகுள் தேடல் முடிவுகள் எந்த அளவு போதாமை கொண்டவையாகவும், வணிகதன்மை மிக்கவையாகவும் மாறியுள்ளன என்பதை உணர்த்தும் எண்ணற்ற தேடல்களில் இதுவும் ஒன்று.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கூகுள் தேடல் முடிவுகளை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அதன் பொருத்தத்தை கேள்விக்குள்ளாக்கி, எப்போதேனும் ஒரு முறையேனும் மாற்ற தேடியந்திரங்களோடு ஒப்பிட்டு பாருங்கள். மாறாக கூகுளை மட்டும் நம்பிக்கொண்டிருந்தீர்கள் என்றால் பாடகர் பெபோ ஒயிட்டை அறிந்து கொள்ள முடியாது.

பி.கு: கூகுளும் பெபோ ஒயிட் தேடலில், பாடகர் பெபோ ஒயிட்டின் ஆப்பிள் இசை பக்கத்தை சுட்டிக்காட்டுகிறது. ஆனால், 27 வது முடிவாக வருகிறது. மிஷோ தான் முந்திக்கொள்கிறது.

.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *