ஏஐ தேடலை நம்புவதில் உள்ள பிரச்சனைகள்

கூகுளுக்கு போட்டியாக ஓபன் ஏஐ, ஜிபிடிசர்ச் (SearchGPT ) தேடியந்திரத்தை அறிமுகம் செய்ய தயாராகி இருக்கிறது. ஏற்கனவே பிரப்ளக்சிட்டி.ஏஐ. ( ) தேடியந்திரம் இருக்கிறது. மைக்ரோசாப்டின் பிங் தேடியந்திரமும், ஏஐ நுட்பத்தை ஒருங்கிணைத்துள்ளது.

ஆக, ஏஐ தேடல் தான் எதிர்காலம் என சொல்லப்பட்டாலும், சாட்பாட்களையும், ஏஐ தேடியந்திரங்களையும் இணைய தேடலுக்காக பயன்படுத்துவதில் பலவித சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றில் ஒரு உதாரணத்தை இங்கே பார்க்கலாம்.

*

சமூகம் ஊடக உலகில் நீங்கள் எல்.ஓ.எல், ஓ.எம்.ஜி போன்ற சுருக்கெழுத்துக்களை அறிந்திருக்கலாம். அதே போல, எஸ்.என்.எஸ் மற்றும் ஒய்.எ.என்.எஸ் ஆகிய சுருக்கெழுத்துக்களையும் அறிந்து கொள்ள வேண்டும்.`    –

எஸ்.என்.எஸ். என்றால், சமூக வலைப்பின்னல் சேவை தளத்தை குறிக்கும். ஆங்கிலத்தில் சோஷியல் நெட்வொர்கிங் சைடஸ்.

ஒய்.ஏ.எஸ்.என்.எஸ் (YASNS) என்பது இன்னும் முக்கியமானது. ’இன்னொரு சமூகவலைப்பின்னல் தளம்’ என்பதை இது குறிக்கிறது. சமூக ஊடக போக்கை புரிந்து கொள்வதில் இந்த சுருக்கெழுத்து மிகவும் முக்கியமானது.

சமூக ஊடக சேவைகளுக்கு நீண்டதொரு வரலாறு இருக்கிறது. பொதுவாக நினைக்கப்படுவதைவிட மிகவும் பின்னோக்கி செல்லும் வரலாறு!

அந்த வரலாற்றின் ஒரு கட்டத்தில் தான் இந்த சுருக்கெழுத்து வருகிறது.

ஒய்.ஏ.எஸ்.என்.எஸ் (YASNS)ம் வெறும் சுருக்கெழுத்து அல்ல, சமூக வலைப்பின்னல் தளங்களின் பெருக்கம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட விமர்சனமும் கூட. இதை கூறியவர் ’கிளே ஷிர்கே’ எனும் இணைய வல்லுனர். ஷிர்கே பற்றி தனியே விரிவாக பார்க்கலாம்.

இப்போது ஷிர்கே கூறிய கருத்தை பார்க்கலாம். புத்தாயிரமாண்டு வாக்கில், பிரண்ட்ஸ்டர், மைஸ்பேஸ், ரெய்ஸ், லிங்க்டுஇன் என வரிசையாக சமூக வலைப்பின்னல் தளங்கள் அறிமுகமாகத்துவங்கின. (பேஸ்புக் பிந்தைய வரவு.)

சமூக வலைப்பின்னல் தளங்களின் வெற்றியை அடுத்து பலரும் இது போன்ற தளங்களை துவக்கினர். ஏற்கனவே இருந்த தளங்களும் சமூக வலைப்பின்னல் அம்சங்களை வரித்துக்கொண்டன. ஒவ்வொரு துறைக்கும், துணை துறைகளுக்கும் என சமூக வலைப்பின்னல் தளங்கள் உருவாகின.

இந்த போக்கை சுட்டிக்காட்டும் வகையில் கிளே ஷிர்கே, புதிதாக அறிமுகமாகும் சமூக வலைப்பின்னல் சேவை ஒன்றை, இன்னொரு சமூக வலைப்பின்னல் சேவை என அறிமுகம் செய்தார்.

சமூக வலைப்பின்னல் வரலாறு தொடர்பான ஆய்வுக்கட்டுரை ஒன்றில், ஷிர்கேவின் இந்த கருத்தை டேனா பாயட் எனும் சமூக ஊடக வல்லுனர் சுட்டிக்காட்டியுள்ளார். ஷிர்கே தான் இந்த பதத்தை உருவாக்கியதாக அவர் குறிப்பிடுகிறார்.

இந்த கட்டுரையை வாசித்த பிறகு, ஷிர்கே சுட்டிக்காட்டிய கருத்து தொடர்பாக விரிவாக அறிவதற்காக கூகுளில் தேடிப்பார்த்த போது, எங்கே எப்போது அவர் இந்த கருத்தை கூறினார் என்பதை அறியக்கூடிய தேடல் முடிவுகளை பார்க்க முடியவில்லை.

அடுத்த கட்டமாக, ஏஐ தேடியந்திரங்களை முயன்று பார்க்கலாம் என, புரப்ளக்சிட்டியிடம், கிளே ஷிர்கே YASNS.. பதத்தை எப்போது உருவாக்கினார்? என கேள்வியாக கேட்டால், 2008 ல் இந்த பதத்தை உருவாக்கியதாக பதில் அளித்து, தொடர்பில்லாத பொதுவான விளக்கத்தையும் தருகிறது. ஆனால், 2008 ல் அவர் இந்த பதத்தை உருவாக்கியதை உறுதியாக அறிவதற்கான சுட்டி இல்லை. இதே கேள்வியை அடுத்த முறை கேட்டால் வேறு பதில் அளிக்கிறது.

மைக்ரோசாப்ட் கோபைலட்டிடம் இந்த கேள்வியை கேட்டு பார்த்த போது, கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது என ஆரம்பித்து ஷிர்கே பற்றி பொதுவான விளக்கம் அளிக்கிறது. அடுத்த முறை கேட்டால் பதில் மாறுகிறது.

ஷிர்கே எப்போது இந்த கருத்தை முதலில் கூறினார் என்பதை அறிய வழியில்லாத நிலையில் மீண்டும் பாயட்டின் மூல கட்டுரைக்கு சென்று பார்த்தால் அடிக்குறிப்பில் 2003 ல் என குறிப்பிட்டு இணைப்பு அளித்துள்ளார். ஆனால் அந்த இணைப்பு இப்போது பயன்பாட்டில் இல்லை. பிறகு இணைய காப்பகத்தில் அந்த இணைப்பை தேடிப்பார்த்த போது, ஷிர்கேவின் மூல பதிவை காண முடிந்தது. –

ஆக, சாட்பாட்கள் அளிக்கும் பதில்கள் எல்லாம் சரியான வழிகாட்டுதல் என நினைத்துக்கொண்டிருந்தீர்கள் என்றால் மாற்றிக்கொள்ளுங்கள். அதற்காக கூகுள் தான் சிறந்தது என்றும் நினைத்துவிட வேண்டாம். அதில் உள்ள போதாமைகள் தனிக்கதை.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *