தந்தி சேவையின் வரலாறு- தானாக தட்டச்சு செய்த சொற்கள்!

தந்தி சேவையை காலாவதியான தொழில்நுட்பம் என்றே நினைக்கத்தோன்றும். அதிலென்ன சந்தேகம் என்றும் கேட்கத்தோன்றலாம். ஆனால், தந்தி நுட்பம் வரலாற்றில் நிலைத்து நிற்கிறது என்பதோடு, நவீன தொழில்நுட்பங்களிலும் தாக்கம் செலுத்துகிறது என்பதை நாம் பெரும்பாலும் அறிவதில்லை.

டிஜிட்டல் யுகத்தில் இருந்து திரும்பி பார்க்கும் போது தந்தி நுட்பம் கற்காலத்து கண்டுபிடிப்பாக தோன்றுவதை மீறி, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தந்தியின் மரபணு கலந்திருக்கிறது. தகவல் தொழில்நுட்ப நோக்கில் உலகலாவிய வலைக்கு தந்தியின் கட்டமைப்பு முன்னோடி என்பது மட்டும் அல்ல, அதன் அடிப்படையாக அமைந்த மோர்ஸ் குறியீட்டை, கம்ப்யூட்டருக்கான டிஜிட்டல் குறியீட்டின் துவக்கப்புள்ளிகளில் ஒன்றாக கருதலாம்.

ஆங்கில எழுத்துக்களை புள்ளிகளாகவும், சிறு கோடுகளாகவும் மாற்றுவதன் மூலம் அவற்றை மின் அடையாளமாக மாற்றி தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம் என்பதே தந்தியின் அடிப்படை. மிக எளிதாக டிஜிட்டல் மொழியின் பூஜ்ஜியம் மற்றும் ஒன்றுடன் இதை ஒப்பிட்டு புரிந்து கொள்ளலாம்.

ஆக தந்தியை காலாவதியான தொழில்நுட்பம் என்பதை விட நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு காரணமான முன்னோடி தொழில்நுட்பங்களில் ஒன்றாகவே கருதப்பட வேண்டும். இந்த கருத்திற்கு வலு சேர்க்கும் வகையில், இப்போது பரபரப்பாக பேசப்படும் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவுக்கான வரலாற்று வேர்களும், தந்தி நுட்பத்துடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது இன்னும் வியப்பை அளிக்கலாம்.

ஓசிஆர் எனப்படும் ஒளி எழுத்துணரி நுட்பத்தை நீங்கள் அறிந்திருக்கலாம்.

கம்ப்யூட்டர் மூலம் எழுத்துக்களை படித்துப்பார்த்து அதை டிஜிட்டல் வடிவிற்கு மாற்றும் திறன் கொண்ட நுட்பம் ஓசிஆர் எனப்படுகிறது. பார்கோடை ஸ்கேன் செய்தால் கம்ப்யூட்டர் திரையில் விலை தோன்றுவது போல, எழுத்து வடிவிலான பிரதியை ஸ்கேன் செய்து, டிஜிட்டல் வடிவில் அந்த எழுத்துக்களை மாற்றுவது மாயம் என்றே சொல்லலாம்.

மனித பேச்சை கம்ப்யூட்டர் புரிந்து கொள்ளும் பேச்சுணர்வு நுட்பம் போலவே, எழுத்துணரும் நுட்பமும், செயற்கை நுண்ணறிவு சாத்தியமாக்கிய அற்புதங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கூகுள் லென்ஸ் உள்ளிட்ட நவீன செயற்கை நுண்ணறிவு சேவைகள் ஓசிஆர் நுட்பத்தின் தொடர்ச்சியாகவே அமைகின்றன.

எழுத்து வடிவை மனிதர்கள் போலவே கம்ப்யூட்டர்களும் உணர்ந்து கொள்ளும் ஆற்றலை ஓசிஆர் நுட்பம் அளிக்கிறது.

ஓசிஆர் நுட்பம் தீர்வு காணப்பட்டுவிட்டதால் அது செயற்கை நுண்ணறிவு கீழ் வராது எனும் கருத்தும் முன்வைக்கப்படுகிறது. நிற்க, ஓசிஆர் ஆய்வு கம்ப்யூட்டர் காலத்தில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டாலும், அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே எழுத்து வடிவை குறியீடாக மாற்றும் தொழில்நுட்பத்திற்கான முயற்சி துவங்கிவிட்டது என்பதை ஓசிஆர் வரலாறு மூலம் அறிய முடிகிறது.

20 ம் நூற்றாண்டின் துவக்கத்தில், அப்போதைய முன்னணி தகவல் பரிமாற்ற தொழில்நுட்பமான தந்தி சேவை சார்ந்த பலவித ஆய்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் ஒன்றாக, எழுத்து வடிவிலான வாசகங்களை படித்து, தந்தி வாயிலாக அனுப்பும் மோர்ஸ் குறியீடாக மாற்றக்கூடிய இயந்திரத்தை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

1920 களில் இத்தகைய இயந்திரத்தை இமானுவல் கோல்ட்பர்க் என்பவர் உருவாக்கியிருக்கிறார்.

ஆங்கில எழுத்துக்களை மோர்ஸ் குறியீட்டிற்கு மாற்றுவது என்பது பெரிய பணி. பின்னர் குறியீட்டை எழுத்து வடிவில் மாற்றுவதும் பெரிய பணி. இதற்கென்று பிரத்யேக பணியாளர்கள் இருந்திருக்கின்றனர். இந்த பின்னணியில், எழுத்து வடிவிலான தகவல்களை ஒரு இயந்திரம் படித்து, மோர்ஸ் குறியீட்டிற்கு மாற்றுவது அந்த காலத்தில் மிகப்பெரிய நுட்பமாக தான் இருந்திருக்க வேண்டும்.

மோர்ஸ் குறியீட்டிற்கு எழுத்துக்களை மாற்றுவதில் இருந்து, எழுத்துகளை கண்டறிந்து டிஜிட்டல் வடிவில் மாற்றித்தரும் தொழில்நுட்பம் பின்னர் சாத்தியமானதற்கு செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆய்வுகள் தான் காரணம் என்றாலும், இந்த நுட்பத்தின் கருத்தாக்க முன்னோடியாக இமானுவல் கோல்ட்பர்கின் கண்டுபிடிப்பு விளங்குகிறது.

அதோடு, தந்தி சேவை ஒரு முன்னோடி தொழில்நுட்பமாக இருப்பதையும் உணரலாம்.

வால்: இமானுவல் கோல்ட்பர்க் பற்றி இன்னும் முக்கிய செய்தி ஒன்றும் இருக்கிறது. இன்னொரு கோல்ட்பர்க் ஒருவரும் இருக்கிறார்.

நிற்க, ஏஐ கருவிகளை பட்டியலிடும் இணையதளத்தில் ஏஐ வரலாறு தொடர்பாக மேலோட்டமாக எழுதப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில், இமானுவல் கோல்ட்பர்க் எனும் சாதனையாளர் ஒளிந்திருக்கிறார்.- https://aitoolsexplorer.com/ai-history/computer-vision-emergence/

ஓசிஆர் நுட்பம் தந்தி காலத்திலேயே துவங்கிவிட்டதால், செயற்கை நுண்ணறிவுக்கும் தந்திக்குமான தொடர்பை அறிய கூகுளில் தேடினால், அது டெலிகிராபில் வெளியான கட்டுரைகளாக பட்டியலிடுகிறது. எனினும் தற்செயலாக இந்திய ஏஐ ஆய்வாளர் தொடர்பாக சுவாரஸ்யமான கட்டுரை அகப்பட்டது. ஆனால், தந்தி- செயற்கை நுண்ணறிவு தொடர்பு குறித்த தகவல் கிடைக்கவில்லை: https://www.telegraphindia.com/my-kolkata/people/behrampore-boy-and-jadavpur-university-alumni-and-us-professor-amitava-das-is-working-to-civilise-artificial-intelligence/cid/2024579

வரலாற்றில் அறிய வேண்டிய இன்னொரு கோல்ட்பர்க்: https://bbc-blog.net/2022/11/hyman-eli-goldberg-and-emanuel-goldberg.html

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *