செயற்கை நுண்ணறிவு என்று வரும் போது, நான் மொழி மாதிரிகளின் எதிர்பாளர்கள் முகாமில் இருக்கிறேன். மொழி மாதிரிகளின் அடிப்படை கருத்தாக்கத்திலும், அவற்றின் செயல்பாட்டிலும் எனக்கு உடன்பாடு இல்லை என்பதை மீறி, இந்த நுட்பத்தை புரிந்து கொள்ள தொடர்ந்து முயற்சிக்கிறேன். அந்த வகையில், வாசிப்பில் ஏஐ தாக்கம் தொடர்பாக தமிழ் மென்பொருளாலர் நீச்சல்காரன் தனது வலைப்பதிவில் பகிர்ந்திருந்த கருத்துக்கள் தொடர்பாக மொழி மாதிரிகளை மையமாக கொண்டு யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
வாசிப்பில் செய்யறிவு நுட்பத்தின் தாக்கம் இருக்கும் எனும் நீச்சல்காரன் கருத்தில் எனக்கு உடன்பாடு இருந்தாலும், இந்த தாக்கம் எவ்விதம் இருக்கும் என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இருக்கிறது. அதிலும் குறிப்பாக அவர் குறிப்பிடும் தனிபயனாக்கம் தொடர்பாக எனக்கு தீவிர மாற்று கருத்து இருக்கிறது. செய்யறிவின் மிக தீங்கான பயன்பாடுகளில் ஒன்றாக இதை காண்கிறேன்.
ஏஐ வாசிப்பு பற்றி விரிவாக தனியே எழுதுகிறேன். இப்போதைக்கு ஏஐ வாசிப்பு தொடர்பான ஆய்வில் தற்செயலாக கவனித்த ஏஐ தேடல் குழப்பம் அல்லது போதாமை குறித்து சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மெக்ஃபன்லே என்பவர், ஏஐ புத்தகத்தை ஏஐ கொண்டு வாசிப்பது பற்றி விரிவான பதிவை எழுதியிருக்கிறார். இந்த பதிவின் துவக்கத்தில், ஏஇ வல்லுனர் ஈத்தன் மோலிக் புத்தகம் பற்றி குறிப்பிட்டுவிட்டு, அடுத்த பத்தியில், கூகுள் தேடல் குழப்பம் பற்றி விவரிக்கிறார்.- https://mcfunley.com/i-tried-to-use-ai-to-read-an-ai-book
இதில் அவர் சுட்டிக்காட்டும் உதாரணம், தேடல் கடவுள்(!) கூகுளின் தற்போதைய பரிதாப நிலையை உணர்த்துகிறது.
ஆப்பிரிக்காவில் கே எனும் எழுத்துடன் துவங்கும் நாடு ஏதேனும் இருக்கிறதா? எனும் கேள்விக்கு, கூகுளின் ஏஐ ஓவர்வீயூ, ” இல்லை, கே எழுத்துடன் துவங்கும் ஆப்பிரிக்க நாடுகள் எதுவும் இல்லை, ஆனால், கென்யா அருகாமையில் வருகிறது, அது கே எனும் ஒலியுடன் துவங்குகிறது” என குழப்பமான பிழையான பதிலை அளித்துள்ளது.
கூகுள் ஏஐ இப்போது இந்த பதிலை மேம்படுத்திவிட்டது என்றாலும், அதன் பழைய தவறான பதில் இன்னமும் திரைப்பிடிப்பாக இருக்கிறது. கூகுளின் புதிய பதிலும் பரிதாபமாக இருப்பது வேறு விஷயம் என்றாலும், கூகுள் ஏஐ இப்படி மோசமான பதில் அளிக்க என்ன காரணம் என யோசிக்க வேண்டியிருக்கிறது.
இந்த தேடலில், கூகுளையும், செய்யறிவையும் மனித குசும்பு மண்ணைக்கவ்வ வைத்திருப்பதை உணரலாம்.
கூகுள் அதன் தேடல் வசதிக்காக பல விதங்களில் ஏஐ நுட்பங்களை பயன்படுத்தினாலும், ஏஐ ஓவர்வியூ வசதி அதன் மொழி மாதிரி நுட்பம் கொண்டு செயல்படுவதாக அனுமானிக்கலாம். அதாவது தேடப்படும் சொல்லுக்கு ஏற்ப, முடிவுகளை கூகுள் மொழி மாதிரி அலசி ஆய்வு செய்து அதன் சாரம்சத்தை பதிலாக அளிக்கிறது. கேட்கப்படும் கேள்விக்கான நேரடி பதிலாக இது அமையலாம். சரியான பதிலா என்பது தான் பிரச்சனை.
கே எழுத்து நாடு தொடர்பான கேள்விக்கு கூகுள் ஏஐ, தேடல் முடிவுகளை பரிசீலித்து, இத்தகைய நாடு இல்லை என பதில் அளித்துள்ளது. அதோடு கென்யாவை கே ஒலி வடிவம் கொண்ட நாடு என குறிப்பிடுகிறது. இந்த பதில் அபத்தமானது என எளிதில் புரிந்து கொள்ளலாம்.
கூகுள் இந்த பதிலை எப்படி அளித்திருக்கிறது என்றால், தேடல் முடிவில் இந்த கேள்வி தொடர்பான ரெட்டிட் விவாத சரடு ஒன்று இருக்கிறது.
சுவையான தகவல்: கே எனும் எழுத்துடன் துவங்கும் ஒரு ஆப்பிரிக்க நாடு கூட இல்லை” எனும் அந்த பதிவில், அதன் கேலியை புரிந்து கொண்டு, கேதென்ஆப்பிரிக்கா என குறிப்பிட்டு இப்போது இருக்கிறது (Ksouth Africa Now there is) என ஒருவர் கிண்டலாக பதில் அளித்துள்ளார்.
மற்ற உறுப்பினர்கள் இந்த கிண்டலை மேலும் தொடர்ந்துள்ளனர். அதில் ஒருவர், ஆப்பிரிக்காவில் 54 நாடுகள் இருந்தாலும், கே என எந்த நாடும் துவங்கவில்லை. கென்யா தான் அருகாமையில் வருகிறது. … என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.
இன்னொருவர் இதை சிலாகித்து மகிழ்ந்துள்ளதோடு, ரெட்டிட் தளத்திற்கு தகவல்களை திருட வரும் சாட்பாட்களுக்கு இது நெத்தியடி என்பது போல குறிப்பிட்டுள்ளார்.
விஷயம் இது தான், ரெட்டிட் விவாத சரட்டில் உள்ள தகவல்களை ஏஐ பயிற்சிக்காக பயன்படுத்திக்கொள்ளும் சாட்பாட்களை குழப்ப வேண்டும் என்றே இந்த பிழைத்தகவலை அவர் கிண்டலாக பகிர்ந்துள்ளார்.- https://www.reddit.com/r/teenagers/comments/o8i3as/fun_fact_theres_not_a_single_country_in_africa/
ரெட்டிட் விவாத சரட்டில் தான் பயனுள்ள தகவல்களை பெற முடியும் என்பதால், கூகுள் தேடலில் ரெட்டிட் பதிவுகளுக்கு அதிக மதிப்பு இருப்பதை நீங்கள் அறியலாம். மேலும், ரெட்டிட் தரவுகளை ஏஐ பயிற்சிக்காக பயன்படுத்திக்கொள்ள ஓபன் ஏஐ உள்ளிட்ட நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ரெட்டிட் மீதான நம்பிக்கையில் கூகுள் ஏஐ இந்த கிண்டல் பதிலை உண்மைத்தகவல் என சுட்டிக்காட்டி மூக்குடைப்பட்டு பின்னர் திருத்திக்கொண்டுள்ளது.
ரெட்டிட் விவாத சரட்டை ஏஐ சாட்பாட்கள் அணுகுவது அத்தனை எளிதல்ல. எது பதில், எது துணைக்கேள்வி, எது பதிலுக்கு பதில், அதில் கிண்டல் எது என கண்டறிவது சிக்கலானது.
இந்த காரணத்தினால் தான் மொழி மாதிரிகள் திறனை சந்தேகிக்கிறேன். மனிதர்கள் போல மொழி மாதிரிகளால் நுட்பமாக பகுத்தாய முடியாது என்பதோடு, மனித பதில்களை அவை பிரதியெடுத்து தருகின்றன.
நிற்க, இங்கு மொழி மாதிரிகள் செயல்பாடு தொடர்பாக சில கேள்விகள். கே எழுத்துடன் துவங்கும் நாடு எனும் போது, மொழி மாதிரிகள், இணையத்தில் உள்ள பதில்களை அலசி ஆராய்ந்து பொருத்தமான பதிலை கண்டறிந்து சொல்கின்றனவா? அல்லது ஆப்பிரிக்க நாடுகள் பட்டியலை பார்த்து, அவற்றில் கே எழுத்து துவங்கும் நாடு இருப்பதை உறுதி செய்கின்றனவா? எனத் தெரிய வேண்டும்.
எப்படியும் மொழி மாதிரிகள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை, ஈர்ப்பு இருக்கிறது. கேள்விகளும் இருக்கின்றன.
வாசிப்பு தொடர்பாக மொழி மாதிரிகள் கொண்டு கேட்க பல கேள்விகள் உள்ளதை பின்னர் பார்க்கலாம்.
வால்: கே எழுத்து நாடு கேள்விக்கு, சாட்ஜிபிடி சரியாக பதில் அளிக்கிறது. ஏஐ தேடியந்திரம் பெர்ப்ல்க்சிட்டி, சரியாக பதில் அளிப்பதோடு, இணையத்தில் இது தொடர்பான தவறான பதிலும் இருக்கிறது என தேடல் முடிவுகளை மேற்கோள் காட்டி குறிப்பிட்டு, சரியான தகவலை அளிக்கிறது. ஒன்று நிச்சயம், கூகுள் மற்றும் சாட்ஜிபிடியை விட பெர்ப்லக்சிட்டி பல நேரங்களில் சிறப்பான பதில் அளிக்கிறது.
–