ஏஐ நுட்பம் பெருமளவில் வேலைவாய்ப்புகளை பறிக்கும் என்று சொல்லப்படும் கருத்து பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படும் பின்னணியில், இது தொடர்பான ரெட்டிட் தளத்தின் விவாத சரடு ஒன்றை பார்க்கலாம்.
பணி சூழல் மாறிவிட்டது, பெரும்பாலானோர் இன்னும் அதை உணராமல் இருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்ட எக்ஸ் தளத்தின் குறும்பதிவு ஒன்றை மையமாக கொண்டு இந்த ரெட்டிட் சரடு அமைந்துள்ளது.
அலிஸ்டர் மெக்லியே என்பவர் இந்த குறும்பதிவை பகிர்ந்ந்து கொண்டிருந்தார்.
‘ அமைப்பு பொறியாளரான என் வருங்கால மனைவியை, மிகவும் சிக்கலான பிரச்சனைகளை சாட்ஜிபிடி நவீன வடிவம் கொண்டு பரிசோதிக்க செய்தேன்.
எல்லா பிரச்சனைகளையும் அதனால் தீர்க்க முடிந்தது. ஒவ்வொன்றையும் 60 நொடிக்குள் தீர்த்தது” என அந்த குறும்பதிவில் குறிப்பிட்டிருந்தவர், அதன் பின் தீர்ப்பளிப்பது போல, பணி சூழல் மாறிவிட்டது, பெரும்பாலானோர் இன்னும் அதை உணராமல் இருக்கின்றனர் என தெரிவித்திருந்தார்.
இதை படிக்கும் எவருக்குமே, பொறியியல் சிக்கல்களுக்கே சாட்ஜிபிடி ஒரு நிமிடத்தில் தீர்வு அளிக்கிறது என்றால், இனி எல்லாமே ஏஐ தான் என நினைக்கத்தோன்றும். அப்படியே பொறியியல் வல்லுனர்களுக்கும் வேலை இல்லாமல் போகும் என நினைக்கத்தோன்றும். பொறியாளர்கள் நிலையே இது என்றால் என அச்சமும் உண்டாகும்.
கொஞ்சல் கலவரமாக தான் இருக்கிறது அல்லவா?
இனி இது தொடர்பான ரெட்டிட் விவாதத்தை கவனிப்போம்.
எனக்கு அமைப்பு பொறியியல் பற்றித்தெரியாது. ஆனால் இது முழு அபத்தம் என்று ஒருவர் இந்த விவாதத்தில் கருத்து தெரிவித்திருந்தார். 60 நொடிகளில், மொழி மாதிரியால் (LLM ) பழைய அடுக்குமாடி கட்டிடம் ஒன்றை அமைப்பு நோக்கில் வலுவாக்குவதற்கான வழிகளை அளித்துவிட்டது அல்லவா? என என கேலியாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கருத்தை ஆமோதிக்கும் வகையில், நானறிந்த வகையில் ஆய்வுக்கூட வேதியல் தொடர்பாக மொழி மாதிரி உருப்படியாக எதையும் அளித்தது இல்லை என தெரிவித்திருந்தார்.
தொடர்புடைய ஏஐ பதிவுகள்:
மொழி மாதிரிகளின் திறனை சந்தேகிக்கும் அல்லது கேள்விக்குள்ளாக்கும் பதில்கள் தான் அநேகம் என்றாலும், ஒரு சிலர், இது உண்மை என்றால் நிலைமை சிக்கல் தான் என கருத்து தெரிவித்திருந்தனர்.
இன்னும் சிலரோ, இப்படி சொல்வதற்கு என்ன ஆதாரம், குறிப்பிட்ட அந்த பொறியியல் பிரச்சனைகள் எவை, அவற்றுக்கு அளிக்கப்பட்ட தீர்வுகள் எங்கே என கேள்வி எழுப்பியிருந்தனர். இப்படி பொதுவாக ஏஐ நுட்பத்தின் திறன் பற்றிய மிகை மதிப்பீடு தான் பெரும்பாலான இடங்களில் முன்வைக்கப்படுகிறது என்றும் பலர் தெரிவித்திருந்தனர்.
இன்னொரு தரப்பினரோ, மொழி மாதிரிகள் இத்தகைய திறனை எதிர்காலத்தில் பெறலாம், ஆனால் இப்போது அத்தகைய நிலை இல்லை என ஏஐ யதார்த்தததை சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதனிடையே, ஒரு சிலர், எக்ஸ் தளத்தில் வரும், பதிவெல்லாம் இப்படி தான் இருக்கும் என கூறியிருந்தனர் என்றால் ஒரு சிலர், நீல டிக் பதிவுகளை நம்பாதீர்கள் என கலாய்த்திருந்தார்.
நூற்றுக்கும் மேற்பட்ட இந்த கருத்துக்களை பொறுமையாக படித்துப்பார்த்தால், பணியிடத்தில் ஏஐ அப்படி எல்லாம் ஒன்றும் பெரிதாக மாற்றத்தை கொண்டு வந்துவிடவில்லை எனும் உணர்வை பெறலாம். அதே நேரத்தில் இந்த விவாதம் தொடர்பான பல்வேறு கோணங்களையும் அறியலாம்.
இந்த விவாதத்தை வைத்து என்ன முடிவுக்கு வரலாம் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். பாரபட்சமில்லாமல் முடிவுக்கு வர, இந்த விவாத கருத்துக்களை அப்படியே தொகுத்தளிக்குமாறு மொழி மாதிரிகளை கேட்டுகொண்டால் என்ன நடக்கும் சொல்லுங்கள்.
ரெட்டிட் விவாத சரட்டில் இடம்பெறும் கருத்துகள் பல வகைப்பட்டவை. சில தகவல் நோக்கில் இருக்கும் என்றால், சில பார்வையாக அமையும். சில கேள்விகளை எழுப்பும் வகையில் இருந்தால் ஒரு சில கேலியாகவும் கிண்டலாகாவும் இருக்கும். இவற்றை எல்லாம் தொகுத்தளிப்பதில் சாட்ஜிபிடி போன்ற சேவைகளின் திறனை பரிசோதிப்பது நல்லது.
அதே போல, இந்த விவாத சரட்டில் இருந்து, இதன் சாரம்சத்தை உணர்த்தும் ஒற்றை சிறந்த பதிலை தேர்வு செய்யுமாறும் கேட்டுப்பார்க்க வேண்டும்.
அது மட்டும் அல்ல, ரெட்டிட் விவாத சரடுகள் பல்வேறு அடுக்குகளை கொண்டவை. ஒரு கருத்திற்கு பதிலாக நடுவே பல துணை சரடுகளின் பின்னி பினைந்திருக்கும். எந்த கருத்திற்கு எது பதில் என்பதை கண்டறிவதே சிக்கலாக இருக்கும். இப்போதைய நிலையில், இவற்றை பகுத்தாய சாட்ஜிபிடி உள்ளிட்ட பாட்களுக்கு திறன் இல்லை. எதிர்காலத்தில் அளிக்கப்படலாம். ஆனால் இப்படி ஒவ்வொரு சிக்கலான பயன்பாடுகளையும் அறிந்து அதற்கேற்ப மனிதர்கள் தான் அதற்கு பயிற்றுவிக்க வேண்டும்.
ஏஐ விவாத சரட்டை வாசித்து நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்: https://www.reddit.com/r/artificial/comments/1g2306e/the_world_of_work_has_completely_changed_and_most/?utm_source=AIforWork&utm_medium=Newsletter&utm_campaign=ai-reskilling-ai-job-application-cheat-code-lenovo-s-focus-on-the-future&_bhlid=77beb84cc91edbd965a846357702523edd9dff53