மே 15 ம் தேதியை குறித்து வைத்து கொள்ளுங்கள்;அப்படியே காமிராவையும் எடுத்து வைத்து கொள்ளுங்கள்!
அன்றைய தினம் உங்கள் உலகை ஒரு புகைப்படம் எடுத்து அதனை எங்கள் தளத்தில் சமர்பியுங்கள் என்கிறது ஏடே.ஆர்ஜி.
உலகை ஒரு நாளில் புகைப்படம் எடுத்து அந்த படங்களை பதிவு செய்யும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் இது.
தொழில்முறை புகைப்பட கலைஞர்கள் ஆர்வம் மட்டும் உள்ளவர்கள் என புகைப்படங்களை எல்லோரும் எடுக்கின்றனர்.அதிலும் டிஜிட்டல் காமிரா வருகைக்கு பின் புகைப்படம் எடுப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.புகைப்பட வழி பதிவுகளும் அதிகரித்துள்ளது.
புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதற்காக இணைய சேவைகளும் அதிகரித்துள்ளன.
ஆனால் எடுக்கப்படும் புகைப்படங்களும் பகிரப்படும் புகைப்படங்களும் இணையத்தில் சிதறிக்கிடக்கின்றன.
இந்நிலையில் புகைப்படங்கள் வாயிலாக உலகை புரிந்து கொள்ளும் ஒரு முயற்சியாக ஒரு நாளில் எடுக்கப்படும் அனைத்து புகைப்படங்களையும் திரட்டும் நோக்கத்தோடு ஏடே.ஆர்ஜி இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.இதற்காக தான் மே 15 ம் தேதி தேர்வு செய்ப்பட்டுள்ளது.
புகைப்படக்கலையில் ஆர்வம் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் அன்றைய தினம் புகைப்படம் எடுத்து அதனை இந்த தளத்தில் சமர்பிக்கலாம்.புகைப்படம் எடுப்பவர் முக்கியமாக கருதும் எந்த விஷயம் பற்றியும் படமெடுத்து சமர்பிக்கலாம். வேலை,வீடு மற்றும் தொடர்புகள் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ புகைப்படங்களை சமர்பிக்கலாம்.புகைப்படங்களோடு அவற்றின் குறிப்பு மற்றும் அதன் பின்னே உள்ள கதையையும் குறிப்பிடலாம்.
சமர்பிக்கப்படும் படங்கள் அனைத்தும் அந்தந்த பிரிவில் இந்த தளத்தில் இடம் பெற்றிருக்கும்.குறிப்பிட்ட படங்கள் தேர்வு செய்யப்பட்டு புகைப்பட புத்தகமாக வெளியிடப்பட உள்ளது.
புகைப்படக்கலையின் ஆற்றலை தினசரி வாழ்க்கையை புரிந்து கொள்ளவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக குறிபிடப்பட்டுள்ளது.புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதோடு நாளைய தலைமுறைக்காக அவற்றை பதிவு செய்வதும் நோக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்வீடனை சேர்ந்த மனித உணர்வுகளுக்கான அமைப்பு (எக்ஸ்பிரஷன் ஸ் ஆப் ஹுயுமைகைன்ட்) என்னும் தன்னார்வ அமைப்பு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.பல்வேறு பிரபலங்களும் இந்த அமைப்போடு கை கோர்த்துள்ளனர்.
இந்த தளம் சொல்வது போல ஒரு நாள்;பல லட்சம் பார்வைகள் இந்த திட்டத்தின் மூலம் காட்சி ரீதியாக பதிவாக வாய்ப்புள்ளது.உலகை அதன் அததனை வண்ணங்களோடும் புகைப்பட கொலாஜாக பார்க்கலாம்.
உங்களது புகைப்படமும் இதில் இடம் பெறட்டுமே!
இணையதள முகவரி;http://www.aday.org/

0 Comments on “புகைப்படத்தோடு வாருங்கள்! அழைக்கும் இணையதளம்.”
Panama
எனது படங்கள். http://vazhakkampol.blogspot.com/2007/07/photography-in-tamil.html ஒரு சந்தேகம். ‘புகைப்படம்’ என்னும் சொல் டிஜிடலையும் உள்ளடக்கியது தானே ?