Category: இணையதளம்

இணையத்தில் உங்களுக்கான‌ விளம்பர பலகை.

உங்களுக்கு என்று ஒரு இணைய வட்டம் இருக்கிறது.அந்த வட்டத்தில் உங்களுக்கு என்று நண்பர்கள் இருக்கின்றனர்.அந்த நண்பர்கள் நீங்கள் சொல்லப்போகும் விஷய்த்தை தெரிந்து கொள்ள ஆர்வத்தோடு இருக்கின்றனர்.உங்களுக்கும் கூட நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதற்கான விஷயங்கள் இருக்கின்றன. இணைய வட்டம் என்னும் போது பேஸ்புக்,டிவிட்டர் சார்ந்த நண்பர்களை உள்ளடக்கிய உங்களுக்கான சமூக வலைப்பின்னல் என்று புரிந்து கொள்ளலாம். இப்போது இந்த வட்டத்தில் உங்களுக்கான விஷயங்களை பகிர்ந்து கொள்வதற்கான வண்ணமயமான இணைய பலகை ஒன்றை பார்க்கலாம். அந்த பலகையை உருவாக்கி கொள்வதும் […]

உங்களுக்கு என்று ஒரு இணைய வட்டம் இருக்கிறது.அந்த வட்டத்தில் உங்களுக்கு என்று நண்பர்கள் இருக்கின்றனர்.அந்த நண்பர்கள் நீங்...

Read More »

புகைப்படங்களை பார்த்து ரசிக்க புதிய வழி!

திடிரென்று பார்த்தால் இணையத்தில் எங்கு பார்த்தாலும் புகைப்படங்களாக இருக்கின்றன.பேஸ்புக்கில் பார்த்தால் புகைப்படங்களாக இருக்கின்றன‌.டிவிட்டரில் பார்த்தால் புகைப்படங்களாக இருக்கின்றன.வலைப்பதிவு சேவையான டம்ப்லரிலும் புகைப்படங்கள் நிறைந்திருக்கிறது. இவற்றைத்தவிர இன்ஸ்டாகிராம் போன்ற பிரத்யேக புகைப்பட சேவைகளும் இருக்கின்றன.முன்னோடி புகைப்பட பகிர்வு சேவையான பிலிக்கரையும் மறந்துவிடுவதற்கில்லை. ஆக இணையம் புகைப்படமயமாகி வருகிறது. ஒரு விதத்தில் துல்லியமான படங்களை எடுக்க வல்ல காமிரா போன்களின் வருகையும் இதற்கு காரணமாக இருக்கலாம். புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதும் பகிர்ந்து கொள்வதும் சுலபமாகி இருக்கும் நிலையில் புகைப்படங்களை பார்த்து […]

திடிரென்று பார்த்தால் இணையத்தில் எங்கு பார்த்தாலும் புகைப்படங்களாக இருக்கின்றன.பேஸ்புக்கில் பார்த்தால் புகைப்படங்களாக இர...

Read More »

டிவிட்டர் மூலம் திட்டமிட உதவும் இணையதளம்.

‘பல்லும் இருந்து பசியும் எடுப்பதால் சீப்பு என் முடியை தின்கிறது’ என்னும் கவிஞர் கலாப்பிரியாவின் அழகான கவிதையை போல உங்களுக்கு டிவிட்டரிலும் நாட்டம் இருந்து திட்டமிடுதலிலும் ஆர்வம் இருந்தால் எதையும் அழகாக திட்டமிட்டு மேற்கொள்வதற்கான வழியை டுடுடிவீட் இணையதளம் காட்டுகிறது. இணையத்தில் செய்து முடிக்க விரும்பும் செயல்களை குறித்து வைத்து கொள்ள உதவும் தளங்கள் அநேகம் இருக்கின்றன.இந்த வகை தளங்களில் குறும்பதிவு சேவையான டிவிட்டரின் ஆற்றலை சரியாக பயன்படுத்தி கொள்ளக்கூடியதாக டுடுடிவீட் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை […]

‘பல்லும் இருந்து பசியும் எடுப்பதால் சீப்பு என் முடியை தின்கிறது’ என்னும் கவிஞர் கலாப்பிரியாவின் அழகான கவிதைய...

Read More »

ஆங்கில உச்சரிப்பை அறிய ஒரு இணையதளம்.

ஆங்கில மொழியில் புலமையை வளர்த்து கொள்ள விரும்புகிறவர்களுக்கான உப சேவை என்று ஹவ் ஜேசே தளத்தை கொள்ளலாம். அதாவது ஆங்கில சொற்களுக்கான அர்தத்தையும் அவற்றின் பயன்பாடு குறித்த விளக்கத்தையும் தரும் இணையதளங்களோடு சேர்த்து இந்த தளத்தையும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த தளம் ஆங்கில சொற்களை உச்சரிக்க கற்றுத்தருகிறது.இணைய அகராதிகளில் அப்படி வார்த்தையை அடித்து விட்டு அதற்கான அர்தத்தை பெருகிறோமோ அதே போல இதில் உச்சரிப்பு தேவைப்படும் சொல்லை சமர்பித்தால் அந்த வார்த்தையின் உச்சரிப்பை கேட்க முடியும். சுவாரஸ்யத்தை […]

ஆங்கில மொழியில் புலமையை வளர்த்து கொள்ள விரும்புகிறவர்களுக்கான உப சேவை என்று ஹவ் ஜேசே தளத்தை கொள்ளலாம். அதாவது ஆங்கில சொற...

Read More »

இமெயிலில் புதைந்த புகைப்படங்களை தேடி எடுக்க!

இமெயிலில் எத்தனையோ புகைப்படங்களை அனுப்பி வைத்திருப்பீர்கள்.எத்தனையோ முறை உங்களுக்கு இமெயில் வழியே புகைப்படங்கள் வந்து சேர்ந்திருக்கும்.எத்தனை புகைப்படங்கள் வந்தன,யாருக்கெல்லாம் அனுப்பினோம் என்பதை கூட மறந்திருப்பீர்கள்! ஆனால் இமெயில் அனுப்பிய அல்லது அனுப்பிவைக்கப்பட்ட படங்கள் இப்போது தேவை என்றால் என்ன செய்வீர்கள்? ஜிமெயிலில் பழைய மெயில்களை தேடும் வசதி இருப்பதால் கடந்த கால மெயில்களில் தேடிப்பார்க்கலாம்.இருந்தாலும் ஒவொரு மெயிலாக தேடி அதில் புகைப்படம் இருக்கிறதா என்று பார்த்து அவற்றை சேமித்து வைப்பது என்பது தலை சுற்ற வைத்துவிடும் தான். […]

இமெயிலில் எத்தனையோ புகைப்படங்களை அனுப்பி வைத்திருப்பீர்கள்.எத்தனையோ முறை உங்களுக்கு இமெயில் வழியே புகைப்படங்கள் வந்து சே...

Read More »