Tag Archives: இணைய‌த‌ள‌ம்

செய்திகளை ஆடியோ வடிவில் மாற்ற உதவும் இணையதளம்

பாடல்களை மட்டும் தான் கேட்டு ரசிக்க வேண்டுமா? செய்திகளை கேட்டு ரசித்தால் என்ன?அதே போல வலைப்பதிவுகளையும் படிக்காமல் கேட்க முடிந்தால் எப்படி இருக்கும்?

அற்புதமாக தான் இருக்கும் ஆனால் இது எப்ப‌டி சாத்தியம் என கேட்பவராக இருந்தால் கவலையே வேண்டாம். இதற்காக என்றே ஒரு இணையதளம் இருக்கிறது.கேரி யுவர் டெக்ஸ்ட் என்பது அந்த தளத்தின் பெயர்.

பெயருக்கு ஏற்ப உங்கள் டெக்ஸ்ட்டை அதாவது வரி வடிவத்தை ஆடியோவாக மாற்றி எடுத்துச்செல்ல வழி செய்கிற‌து இந்த தளம்.

படிப்பதை விட கேட்பது நன்று என்னும் எண்ணம் கொண்டவர்களுக்கு உருவாக்கப்பட்ட ஆடியோ புத்தகங்களை பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம்.இதே போல நீங்கள் விரும்பி படிக்கும் செய்தி தளங்களில் உள்ள செய்திகள்,வலைப்திவாளர்களின் பதிவுகள்,ஆகிய‌வ‌ற்றை ஒலி வ‌டிவில் மாற்றிக்கொள்வ‌தை இந்த‌ த‌ள‌ம் சாத்தியாமாக்குகிற‌து.

அது ம‌ட்டும‌ல்ல‌ அவ‌ற்றை எம் பி 3 கோப்பாக ட‌வுண்லோடு செய்து கொள்ள‌லாம்.இத‌ன் பொருள் நாம் ப‌டிக்க‌ விரும்பும் செய்தி ம‌ற்றும் த‌க‌வ‌ல்க‌ளை ந‌ம்முட‌ன் கொண்டு சென்று விரும்பும் நேர‌த்தில் ஐபோட் போன்ற‌ சாத‌ன‌ங்களின்  மூல‌ம் கேட்டு ம‌கிழ‌லாம்.

இத‌ற்கென‌ த‌னியே எந்த‌ சாப்ட்வேரையும் ட‌வுண்லோடு செய்ய‌ வேண்டிய‌தில்லை.சும்மா க‌ட் காபி பேஸ்ட் செய்தால் போதும் எம் பி 3 கோபாக‌ மாற்றி விட‌லாம்.

எதையும் கேட்க‌ நினைப்ப‌வ‌ர்களுக்கு மிக‌வும் ப‌ய‌னுள்ள‌ சேவை. இப்போதைக்கு இல‌வ‌ச‌மாக‌ உள்ள‌து.
 ———-

http://www.carryouttext.com/

தமிழ்நேஷன் மூடலும் வாசகரின் கடிதமும்

தமிழ்நேஷன் டாட் ஆர்ஜி இணையதளம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பதை வாசகர் ஒருவர் சுட்டிக்காட்டி தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

உண்மையில் இது வருத்தம் தரும் செய்தி. தமிழ்நேஷன் தளம் நல்லதொரு ஆவண காப்பகமாக விளங்கி வந்தது.தமிழ் இலக்கியம் உட்பட பல தகவல்களை அதன் மூலம் பெற முடிந்தது. வேறு பகுதிகளையும் கொண்டிருந்தது.

அதன் மூடலுக்கான காரணம் தெரியவில்லை.எப்படியும் நல்ல தமிழ் தளங்கள் மூடப்படுவது வருத்தம் தருவதே.

இந்த செய்தியை பகிர்ந்து கொண்டுள்ள வாசகர் எழுதிய கடிதத்தை அப்படியே கிழே கொடுத்துள்ளேன்.அவர் வேண்டுகோளூக்கு ஏற்ப பெயர் குறிப்பிடப்படவில்லை.உண‌ர்வை ப‌கிர்ந்து கொண்ட‌ வாச‌க‌ருக்கு ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி. முய‌ற்சிக்கு வாழ்த்துக்க‌ள்.

”தங்களது தளத்திற்கு இன்றுதான் இரண்டாவது முறையாக வந்தேன். இணையத்தில் எல்லாவற்றையும் அலசும் தங்களுக்கு, http://www.tamilnation.org தளத்தை தெரிந்திடாமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை.  இன்று முதல் இந்தத் தளம் விடை பெறுகிறது என்று காலையில் படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது.  Digital Renaissance என்ற பகுதி தமிழ் தொழில்நுட்பத் தகவல்களுக்கு என்னை போன்றோருக்கு பேருதிவியாக இருந்தது.  அதிலிருந்து பெற்ற தகவல்களைக் கொண்டுதான் தமிழில் சிறு நிரல்கள் எழுதிப் பழகி வருகிறேன்.  அண்மையில் எனக்கு எழுதும் எண்ணமே இல்லை, ஏனெனில் இன்னும் படிக்க வேண்டியது நிறைய உள்ளது.
 
இணைய இணைப்பு இல்லாததால் இதில் என்னை முழுமையாக இணைத்துக்கொள்ள மிகுந்த சிரமமாக இருக்கிறது.  எனினும் இந்தத்(tamilnation) தளம் மூடப்பட்ட அதே நாளில், என்னால் ஆன சிறு பங்கை சமூகத்திற்கு அளிப்பது tamilnation, cybersimman போன்ற தன்னலமற்ற முயற்சிகளுக்கு செய்யும் மரியாதையாகக் கருதுகிறேன்.  தமிழ் மென்பொருள் உருவாக்குவதற்கான தொழில்நுட்ப தகவல்கள் குறித்து ஒரு group/blog உருவாக்கி விட்டு தங்களுக்கு தெரிவிக்கிறேன். அது ஒத்த கருத்துடையவர்களை சென்றடைய தாங்கள் உதவ வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
சேமித்து வைத்ததோடு கிடப்பில் கிடக்கிறது. இனிமேல்தான் தங்கள் கட்டுரைகளையே படிக்க வேண்டும். படிப்பவர்களை எழுதத் தூண்டுவது எல்லோராலும் முடியாது. அதை தாங்கள் செய்திருக்கின்றீர். நன்றியும் வாழ்த்துக்களும்.
தற்போது தமிழ் எழுதியை உருவாக்கி வருகின்றேன். அதன் மூல நிரலை இலவசமாக பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.
தங்களை அறிமுகப்படுத்திய பொறையார் நூலகத்திற்கும், ஆனந்த விகடனுக்கும் நன்றி.
tamilnation தளம் மூலம் அந்த நிரலை வெளியிடலாம் என நினைத்தால், இது என்ன சோதனை?
தளர்வுற மாட்டேன்.  என்னுடைய எழுத்து tamilnation தளத்திற்கும், அதன் பயனாளிகளுக்கும் சமர்ப்பனம்.”

உங்கள் இணையதளத்திற்கான கூகுல் கிளினிக்

பந்திக்கு முந்து என்று சொல்வது போல இணையதளங்களை பொருத்தவரை தேடியந்திரங்களில் முந்து என்பதே வேத வாக்காக இருக்கிறது.காரணம் தேடியந்திரத்தில் முந்தி இருந்தால் தான் இணையவாசிகளின் கவனத்தை ஈர்க்க முடியும்.

அதாவது கூகுல் போன்ற தேடியந்திரங்களில் தேடல் பட்டியலில் முதல் பக்கத்தில் அல்லது முதல் சில பக்கங்களிலாவது இடம் பெற்றிருக்க வேண்டும்.இல்லை என்றால் இணைய‌வாசிக‌ள் க‌ண்ணில் ப‌டுவ‌த‌ற்கான‌ வாய்ப்பு குறைவு.

என‌வே தான் எந்த ஒரு இணையதள‌மும் தேடக்கூடியதாக இருக்க வேண்டும் என்று ஆலோச‌னை சொல்கின்றனர்.அது மட்டுமல்ல இணையத‌ளத்தில் வெளியாகும் கட்டுரைகள் மற்றும் த‌கவலகள் தேடப்படும் போது க‌ண்ணில் படும் வகையில் த‌குந்த‌ குறிச்சொற்க‌ள் போன்ற‌வ‌ற்றோடு அவை அல‌ங்க‌ரிக்க‌ப்ப‌ட்டாக‌ வேண்டிய‌து அவ‌சிய‌ம் என்று க‌ருத‌ப்ப‌டுகிற‌து.

இவ்வ‌ள‌வு ஏன் இனைய‌த‌ள‌ங்க‌ளை தேடிய்ந்திர‌ங்க‌ளீல் முன்னுரிமை பெற‌ வைக்க‌ ஆலோச‌னை வ‌ழ‌ங்குவத‌ற்கு என்றே நிறுவ‌ன‌ங்க‌ளும் நிபுண‌ர்க‌ளும் உருவாகியிருக்கின்ற‌ன‌ர்.இதெற்கென‌ த‌னித்துறையும் உருவாகியுள்ள‌து. தேடிய‌ந்திட‌ ச‌ந்தைப்ப‌டுத்த‌ல் (ச‌ர்ச் இஞ்ஜின் மார்க்கெட்டிங்) என்று இத்துறை குறிப்பிட‌ப்ப‌டுகிற‌து.இதில் குறுக்குவ‌ழிகளும் உண்டு. தேடிய‌ந்திர‌த்தை ஏமாற்றும் வ‌ழிக‌ளும் உண்டு.

அதாவ‌து தேட‌ல் பட்டிய‌லில் முன்னுரிமை பெறுவ‌த‌ற்காக‌ என்றே சில‌ உத்திக‌ளை க‌டைபிடிக்க‌ முடியும்.ச‌ர‌க்கில்லாத‌ த‌ல‌ங்க‌ளை கூட‌ இப்படி புத்திசாலித‌ன‌மான‌ உத்திக‌ளால் முன்னுக்கு கொண்டு வ‌ர‌ முய‌ற்சிக்க‌லாம். வ‌ர்த்த‌க‌ நோக்கிலான‌ த‌ள‌ங்க‌ள் அதிலும் விற்ப‌த‌ற்கு த‌ர‌மான‌ ச‌ர‌க்கு இல்லாத‌ த‌ள‌ங்க‌ள் இவ்வாறு செய்கின்ற‌ன‌.
இதெல்லாம் எத‌ற்காக‌ என்றால் உங்க‌ளுடைய‌ ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்க‌ளை கொன்டிருந்தால் ம‌ட்டும் போதாது அது தேடிய‌ந்திர‌த்திற்கு ந‌ட்பான‌ வ‌கையிலும் இருந்தாக‌ வேண்டும்.

இத‌ற்கு என்ன‌ செய்வ‌து?

கூகுலே வ‌ழி காட்டுகிற‌து இப்போது.

ஒரு இணைய‌த‌ள‌ம் தேட‌ல் நோக்கில் எப்ப‌டி இருக்கிற‌து என‌ ஆராய்ந்து சொல்வ‌த‌ற்காக‌ கூகுல் இந்தியா இணைய‌ கிளினிக் ஒன்றை மைத்துள்ள‌து.இந்த‌ கிளினிக்கில் ச‌மர்பிக்க‌ப்ப‌டும் த‌ள‌ங‌க‌ளை கூகுலின் தேட‌ல் நிபுண‌ர் குழு அல‌சி ஆராய்ந்து அத‌ன் குறை நிறைக‌ளை எடுத்துச்சொல்லி அத‌னை மேம்ப‌டுத‌த் ஆலோச‌னை வ‌ழ‌ங்க‌ உள்ள‌து.

இத‌னை கூகு இந்தியா த‌ன‌து வ‌லைப்ப‌திவில் தெரிவித்துள்ள‌து.(ந‌ன்றி;http://techie-buzz.com/webmaster-tips/google-site-clinic-search-quality.htmல்)
இத‌ற்கான‌ விண்ன‌ப்ப‌ ப‌டிவ‌த்தின் மூல‌ம் உங்கள் த‌ள‌த்தை ச‌ம‌ர்பிக்க‌லாம். ஆனால் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ த‌ள‌ங்க‌ள் ம‌ட்டுமே ஆராய்ந்து சொல்ல‌ப்ப‌டும்.

————

http://googleindia.blogspot.com/2010/01/get-your-site-checked-today.html

டிவிட்டர் மூலம் கிடைத்த வேலை

தினமும் எத்தனையோ பேருக்கு வேலை கிடைக்கிறது.இருப்பினும் அமெரிக்காவின் ஹால் தாமசுக்கு வேலை கிடைத்த விதம் குறித்து வைத்து கொள்ளக்கூடியது.

மனிதர் டிவிட்டர் மூலம் வேலைக்கு விண்ணப்பித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

வேலை வாய்ப்புக்கு என்று சில விதிகளும் இலக்கணமும் இருக்கின்றன அல்லவா?ஒரு நல்ல அறிமுக கடிதம் எழுத வேண்டும்.பயோ டேட்டா என்று சொல்லப்படும் தன் விவரக்குறிப்பு விரிவானதாகவும் வேலைக்கான ஒருவரின் தகுதியை சரியாக எடுத்துறைப்பதாகவும் இருக்க வேண்டும்

.ஒரு நல்ல தன் விவரக்குறிப்பை தாயரிக்க தலை பிய்த்துக்கொள்பவர்கள் எல்லாம் இருக்கின்றனர்.இத‌ற்காக‌வே ப‌யிற்சி எடுத்து கொள்ப‌வ‌ர்க‌ளும் உண்டு.

ஆனால் தாம‌ஸ் அறிமுக‌ க‌டித‌மும் எழுத‌வில்லை.த‌ன் விவ‌ர‌க்குறிப்பையும் அனுப்ப‌வில்லை.டிவிட்ட‌ர் மூல‌ம் விண்ண‌ப்பித்தார், அவ்வ‌ள‌வே.வேலை அவ‌ருக்கே கிடைத்து விட்ட‌து. எப்ப‌டி?

தாம‌ஸ் டிவிட்ட‌ரை ச‌ரியாக‌ ப‌ய‌ன்ப‌டுத்தி அசத்தியிருந்தார்.

 பி எப் ஜி க‌ம்யூனிகேஷ‌ன்ஸ் என்னும் நிறுவ‌ன‌ம் தான் டிவிட்ட‌ர் மூல‌மெ அவ‌ரை ப‌ணிக்கு அம‌ர்த்திய‌ நிறுவ‌ன‌ம்.மார்க்கெட்டிங் துறையில் செய‌ல்ப‌ட்டு வ‌ரும் இந்நிறுவ‌ன‌த்தில் ச‌மூக‌ மீடியா என்னும் புதிய‌ துறை ஏர்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து.

பெரும்பாலான‌ நிறுவ‌ன‌க்க‌ளில் மக்க‌ள் தொட‌ர்பு என்னும் த‌னித்துறை இருப‌ப்து போல் இப்போது ப‌ல‌ நிறுவ‌னங்க‌ளில் ச‌மூக‌ மீடியா என்னும் துறை உருவாக்க‌ப்ப‌டுகிற‌து. டிவிட்ட‌ர் ம‌ற்றும் ஃபேஸ்புக் போன்ற‌ ச‌முக‌ வ‌லைப்பின்ன‌ல் சேவைக‌ளை நிறுவன வள‌ர்ச்சி மற்றும் மக்கள் தொடர்பிற்காக திறம்பட பயன்ப‌டுத்தி கொள்ள‌ வேண்டும் என்ப‌தே இத‌ன் பின்னே உள்ள‌ நோக்க‌ம்.

வ‌ர்த்தக‌ உல‌கில் இது புதிய‌ போக்காக‌ உருவாகி வ‌ருகிற‌து. டிவிட்ட‌ரில் நிறுவ‌ன‌ம் ப‌ற்றி தெரிவிக்க‌ப்ப‌டும் க‌ருத்துக்க‌ளை க‌ண்காணித்து அத‌ற்கு ப‌தில் அளித்து நிறுவ‌ன‌த்தின் ந‌ற்பெய‌ரை காப்ப‌தும் இந்த‌ துறையின் க‌ட‌மையாக‌ க‌ருத‌ப்ப‌டுகிற‌து.

நிறுவ‌ன‌த்தின் புதிய‌ திட்ட‌ங்க‌ள் ப‌ற்றியும் டிவிட்ட‌ரில் ப‌திவு செய்வ‌தும் இந்த‌ துறைட‌மிருந்து எதிர‌ப்பார்க்க‌ப்ப‌டும் ப‌ணி. இத‌ன் விளைவு என்ன‌ தெரியுமா? அநேக‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் இத‌ற்காக‌ என்றே புதிய‌ ப‌ணியிட‌ம் உருவாக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து. பி எப் ஜி நிறுவ‌ன‌மும் இதோ போன்ற‌ ப‌ணியிடத்தில் புதிதாக‌ ஒருவ‌ரை நிய‌மிக்க‌ விரும்பிய‌து.

ஆனால் வ‌ழ‌க்க‌மான‌ முறையில் இந்த‌ ப‌ணிக்கான‌ நேர்முக‌த்தேர்வை ந‌ட‌த்த‌ விரும்பாம‌ல் டிவிட்ட‌ர் மூல்மே ந‌ட‌த்த‌ எண்ணிய‌து. புதிய‌ துறைக்கான‌ ப‌ணி நிய‌ம‌ன‌த்தை ப‌ழைய‌ முரையில் ந‌ட‌த்துவ‌தைவிட‌ புதிய‌ முறையிலேயே செய்வ‌து தானே பொருத்த‌மாக‌ இருக்கும் என்று நிறுவ‌ன‌ம் க‌ருதிய‌து

.இத‌ன் ப‌ய‌னாக‌ வேலை வாய்ப்பு அறிவிப்பு டிவிட்ட‌ர் ப‌திவாக‌வே வெளியான‌து. அந்த‌ ப‌திவிலேயே அறிமுக‌ க‌டித‌ம் எல்லாம் வேண்டாம்,த‌ன் விவர‌க்குரிப்பும் வேன்டாம். இந்த‌ வேலைக்கான‌ த‌குதியை டிவிட்டர் மூல‌மே வெளிப்ப‌டுத்துக‌ என்றும் குறிப்பிட‌ப்ப‌ட்டிருந்த‌து.

டிவிட்ட‌ர் மூல‌ம் நிறுவ‌ன‌ பொருட்க‌ள‌ விற்க‌ உங்க‌ளால் முடியும் என்ப‌தை நிருபிக்க‌ டிவிட்ட‌ர் மூல‌ம் உங்க‌ள் திற‌மையை வெளிப்ப‌டுத்துவ‌தை விட‌ சிற‌ந்த‌ வ‌ழி உண்டா என்றும் கேட்க‌ப்ப‌ட்டிருந்த‌து.

டிவிட்ட‌ரில் க‌ருத்துக்க‌ளை ப‌திவு செய்ய‌ அதிக்ப‌ட்ச‌ம் 140 எழுத்துக்க‌ள் ம‌ட்டுமே ப‌ய‌ன்ப‌டுத்த‌ முடியும் என்ற‌ நிலையில் டிவிட்ட‌ர் மூல‌ம் விண்ண‌பிப்ப‌து எத்த‌னை ச‌வாலான‌து என‌ புரிந்து கொள்ள‌லாம்.வேலைக்கான‌ விள‌ம்ப‌ர‌த்தைப்பார்த்த‌ ப‌ல‌ரும் இப்ப‌டி நினைத்திருக்க‌லாம்.

ஆனால் இளைஞ‌ரான‌ தாம‌ஸ் ஹால் அப்ப‌டி நினைக்க‌வில்லை.ஏற்க‌ன‌வே டிவிட்ட‌ர் ப‌ய‌ன்பாட்டில் ப‌ரிட்ச‌ய‌ம் மிக்க‌ அவ‌ர் டிவிட்ட‌ர் மூல‌ம் விண்ண‌ப்பிக்க‌ உற்சாக‌மாக‌ த‌யாரானார். அவ‌ர் அனுப்பிய‌ டிவிட்ட‌ர் செய்தியை பார்த்து விய‌ந்து போன‌ நிறுவ‌ன‌ அதிகாரி சோல‌னே கெல்லி தாம‌ஸ் வேலைக்கு தேர்வான‌தாக‌ அறிவித்தார்.

க‌ற்ப‌னை ம‌ற்றும் ப‌டைப்பாற்ற‌ல் இர‌ன்டையும் க‌ல‌ந்து அவ‌ர் அனுப்பிய‌ டிவிட்ட‌ர் செய்தி இது தான்;பி எஃப் ஜி நிறுவ‌ன‌த்திற்கு ந‌ல்ல‌ எதிர்கால‌ம் இருப்ப‌தாக‌ தோன்றுகிற‌து. இந்த‌ வாச‌க‌த்திற்கு முன் நிறுவ‌ன‌ பெய‌ர் ம‌ற்றும் அதிகாரியின் பெய‌ரை குறிப்பிட்டிருந்த தாம‌ஸ் அத‌ன் முடிவில் மேலும் த‌கவ‌ல்க‌ளுக்கு என்று ஒரு இணைப்பையும் அத்தோடு த‌ன‌து வ‌லைப்ப‌திவுக்கான‌ இணைப்பையும் கொடுத்திருந்தார்.

முத‌ல் இணைப்பை கிளிக் செய்தால் புக‌ழ் பெற்ற‌ தொழில்நுட்ப‌ இத‌ழான‌ வ‌ய‌ர்டு ப‌த்திரிக்கையின் புக‌ப்பு ப‌க்க‌த்தின் புகைப்ப‌ட‌ம் இட‌ம்பெற்றிருந்த‌து. அதில் தாமஸ் பேட்டி கொடுப்பது போன்ற‌ ப‌ட‌ம் இருந்த‌து.அந்த‌ பேட்டியில் தான் அவ‌ர் நிறுவ‌ன‌த்தின் வ‌ள‌மான‌ எதிர்கால‌ம் ப‌ற்றி பேசுவ‌து போல‌ வடிவ‌மைக்க‌ப்ப‌ட்டிருந்தது. புதுமையான‌ சிந்த‌னை தானே.

மேலும் அவ‌ரது வ‌லைப்ப‌திவு இனைப்புக்கு சென்றால் டிவிட்ட‌ர் போன்ற‌ த‌ள‌ங்க‌ளை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தில் அவ‌ருக்கு உள்ள‌ ப‌ரிட்ச‌ய‌ம் புல‌ப்ப‌ட்ட‌து. இப்ப‌டி டிவிட்ட‌ரின் 140 எழுத்துக்க‌ள் வ‌ரைய‌ரையை புத்திசாலித்த‌ன‌மாக‌ கையாண்டதால் தாம‌ஸ் வேலைகாக‌ தேர்வானார்.

வ‌ருங்கால‌த்தில் மேலும் ப‌ல‌ நிறுவ‌ன‌ங்க‌ள் டிவிட்ட‌ர் மூல‌ம் நேர்க்காண‌ல் ந‌ட‌த்த‌லாம்.அத‌ற்கு நிங்க‌ளும் த‌யாராக‌ இருங்க‌ள்.

————

http://www.stuckonbrandaid.com/

கூகுலின் (மேலும் ஒரு)புதிய சேவை

கூகுல் எதையும் விட்டு வைப்பதாக இல்லை போலும்.புது புது சேவைகளை அறிமுகம் செய்த வண்னம் இருக்கும் கூகுல் இப்போது இணையதள முகவரிகளை சுருக்கும் சேவையை ஓசைப்படாமல் அறிமுகம் செய்திருக்கிற‌து.

Goஒ.க்ல் என்னும் முகவரியில் இந்த சேவையை அணுக முடியும்.எனினும் தனி இணையதளமாக அல்லாமல் கூகுல் டூல்பார் மற்றும் ஃபீட்பர்னர் விரிவாக்கமாக செயல்படக்கூடியதாக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ள‌து.

இணையதள முகவரி சுருக்கச்சேவை நீண்ட காலமாகவே அமலில் இருக்கிறது என்றாலும் டிவிட்டர் பிரபலாமாகி இணைப்புகளை பகிர சுருக்கமான இணையமுகவரி தேவை அதிகரித்துள்ள நிலையில் இந்த சேவைக்கான மவுசும் அதிகரித்துள்ளது.

இந்த சேவையை வழங்கி வந்த ஒரு சில தளஙகள் மூடப்பட்டு வரும் நிலையில் எல்லாம் வல்ல கூகுல் இந்த பிரிவில் அடியெடுத்து வைத்துள்ளது.(நிற்க‌ ஃபேஸ்புக்கும் இதே போன்ற‌ சுருக்க‌ சேவையை அறிமுக‌ம் செய்துள்ள‌து.fb.me )

கூகுல் போன் ப‌ற்றிய‌ செய்தி இணைய் உல‌கில் ப‌ர‌ப‌ர‌ப்பை ஏற்ப‌டுத்தி வ‌ரும் சூழ‌லில் ச‌த்த‌மே இல்லாம‌ல் இந்த‌ சேவை உத‌ய‌மாகியுள்ள‌து.

கூகுல் நெக்ச‌ஸ் ஒண் என்னும் பெய‌ரிட‌ப்ப‌ட்ட‌ போனை அத‌ன் ஊழிய‌ர்க‌ள் ப‌த்தியில் புழ‌க்க‌த்திற்கு விட்டிருப்ப‌தாக‌ ஒரு செய்தி வெளியாகி ப‌ர‌ப‌ர்ப்பை உண‌டாக்கியிருக்கிற‌து.

அது ம‌ட்டும‌ல்ல‌ கூகுல் ச‌மீப‌த்தில் ஐந்து புதிய‌ சேவைக‌ளையும் அறிமுக‌ம் செய்துள்ள‌து.அவை ப‌ற்றி அடுத்த‌ ப‌திவில்..

———–
link;
http://goo.gl/