Tag Archives: இணைய தளம்

பதிவுகளை” கேட்டு” ரசிக்க ஒரு வழி

unசெல்போனும், வாய்ஸ்மெயிலும் இணைந்த புதுமையான சேவை அன் வயர்டுனேஷன் .
இந்த சேவை உண்மையிலேயே புதுமையானது.

அதிலும் கேட்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு இது மிகவும் இனிமையானது. படிப்பதை விட கேட்டல் நன்று என்று நினைப்பவர்கள் இதனை போற்றிப் புகழ்வார்கள்.

எப்படி என்று கேட்கிறிர்களா?

இன்டெர்நெட் உலகில் பாட்காஸ்டிங் சேவை பிரபலமாக இருக்கிறது அல்லவா?

இதுவும் ஒரு வகையான பாட்காஸ்டிங் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

இணைய தளம் மற்றும் பிளாக் தளங்களில் நீங்கள் படிக்க விரும்பும் தகவல்களை இது ஒலிப்பதிவாக மாற்றி தருகிறது.அதோடு அந்த பதிவை உங்களது செல்போன் மூலம் கேட்டுக்கொள்ள வழி செய்கிறது.

நீங்கள் அடிக்கடி விஜயம் செய்யும் தளங்களில் உள்ள செய்திகளை இப்படி செல்போன் மூலம் ஆடியோ கோப்பாக பெற்றுக்கொள்ளும் வசதி இருக்கிறது. இந்த சேவை இலவசமானது.

விளம்பரங்களின் மூலம் வருவாயை தேடிக்கொள்ளலாம் என்னும் உத்தேசத்தோடு இந்த தளம் சேவையை இலவசமாக வழங்குகிறது.

இணையதளங்களை செல்போனுக்கு கொண்டு வரும் முயற்சியில் மற்றொரு

link;
http://www.unwirednation.com/

ஒலி நூலகம் தெரியுமா?

soundsnap4நீங்கள் இசையமைப்பாளராகவோ அல்லது இசைப்பிரியராகவோ இருந்து புதிய வித்தியாசமான ஒலியை தேடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.அவ்வாறாயின் நீங்கள் செல்ல வேண்டிய இடம் எது தெரியுமா?

அது இடம் அல்ல இணைய தளம்; இல்லை ஒலி நூலகம்.

சவுண்டுஸ்நேப் என்பது அதன் பெயர்.
நுலகம் என்றால் புத்தங்கள் இருக்கும் என்பது போல இந்த தளத்தில் ஒலிகள் குவிந்து கிடக்கின்றன‍. இல்லை அழகாக ,வரிசையாக, வகை வகையாக அடிக்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தரம் வாய்ந்த ஒலிகள் இடம்பெற்றுள்ளன. எல்லமே ஹாலிவுட் இசையமைப்பாளர்கள்,மற்றும் தொழில் முறை இசையமைப்பாளர்கள் வுருவாக்கியவை.

விலங்குகளின் ஒலிகள், தொழிற்சாலை ஓசைகள், இசை மெட்டுக்கள், வீட்டில் கேட்கும் ஒலிகள், இயற்கை ராகங்கள் என எண்ணற்ற ஒலிகள் கொட்டிகிடக்கின்றன.

இதில் எவற்றை வேண்டுமாலும் பதிவிறக்கம் செய்து கேட்டு பார்க்கலாம் . பயன்படுத்தலாம்.காப்புரிமை தொல்லை கிடையாது.எனினும் நிபந்தனைகளை கவனமாக படித்துக்கொள்ளவும்

ஆனால் அதற்கு முன்னால் உறுப்பினாராக பதிவு செய்து கொள்ள வேண்டும்.பதிவு செய்த பிறகு ஒலிகளை தேட துவங்கிவிடலாம்.

ஒலிகளை கேட்பது மட்டும் அல்ல உங்கள் வசம் உள்ள ஒலிகலையும் இங்கே சமர்பிக்கலாம்.

ஆரம்பத்தில் எத்தனை முறை வேன்டுமானாலும் இலவசமாக பதிவிறக்கம் செய்ய அனுமதித்து வந்தனர். ஆனால் இப்போது முதல் 5 ஒலிகள் மட்டுமே இலவசமாக உள்ளது. அதன் பிறகு கட்டணம் உண்டு.

அதிகமானோர் பதிவிறக்கம் செய்வதால் தளத்தை பராமரிக்க அதிக செலவு ஆவதாலும், ஒலிகளை வழங்குபவர்கள் அதற்கான பலனை கேட்பதாலும் பகுதி இலவசம் பகுதி கட்டண முறை அமலுக்கு வந்துள்ளது.

ஆனால் ஒன்று நீங்கள் ஒலிகளை சமர்பிப்பவராக இருந்தால் இதன் மூலம் வருமானம் வரவுன் வாய்ப்புள்ளது அல்லவா?

————-

ஒலிகளை கேட்டு ம‌கிழ….

linki;
http://www.soundsnap.com/

‘ஒய் 10 கே’ தெரியுமா?

e-mail1ஒய் 2 கே’வை விட்டுத் தள்ளுங்கள். ‘ஒய் 10 கே’ தெரியுமா? பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு உலகை பிடித்து ஆட்ட காத்திருக்கும் பூதம் இது! ‘ஒய் 10 கே’வை பார்ப்பதற்கு முன் ‘ஒய் 2 கே’ வரலாற்றில் சில சுவாரசிய மான விஷயங்களை பார்த்துவிடலாம்.
.
‘ஒய் 2 கே’ என்றால் இயர் 2000 பிராப்ளம் என்று பொருள். இயரை குறிக்க ‘ஒய்’ என்றும், 2000-த்தை குறிக்க 2 கே என்ற கிரேக்க சொல்லை யும் கடன் வாங்கி, ‘ஒய் 2 கே’ என்ற பதம் உருவாக்கப்பட்டது. இந்த பதத்தை முதன் முதலில் பயன் படுத்தியவர் ‘டேவிட் எட்டி’ என்னும் சாப்ட்வேர் நிபுணர். 1995-ம் ஆண்டு அனுப்பி வைத்த இ-மெயிலில் இந்த பதத்தை குறிப்பிட்டு-, பிரச்சனையை யும் அவர் விளக்கி இருந்தார்.

அதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பே, இன்டெர்நெட்டில் விவாத தொட்டி லான யூஸ்நெட் விவாத அரங்கில் இந்த பிரச்சனை முதல் முதலாக பதிவு செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது.
அதற்கு முன்பே ஒரு சில சாப்ட்வேர் நிபுணர்கள் இப்பிரச்சனை பற்றி யோசித்துள்ளனர்.

எனினும் 1990-கள் வரை யாரும் இப்பிரச்சனையை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. 90-களின் பிற்பகுதியில் தான், பிரச்சனை தொடர்பான விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்பு வந்தது.

அலட்சியம் ஆபத்தில் முடியும் என்று எச்சரிக்கும் வகையில், சாப்ட்வேர் நிபுணர்கள் பலர், ‘ஒய் 2 கே’ எச்சரிக்கை பிரச்சாரத்தை துவக்கினர். கட்டுரைகள் எழுதப்பட்டன. தொழில் நுட்ப விவரங்கள் விளக்கப்பட்டன. இணையதளங்கள் அமைக்கப்பட்டன.

‘கேரி நார்த்’ என்பவர் இந்த பிரச் சாரத்தில் முன்னிலையில் இருந்தார். ‘ஒய் 2 கே’வை நினைத்து உலகில் நடுங்கியதில் இவருக்கு பெரும் பங்குண்டு. ‘ஒய் 2 கே டைம் பாம்’ போன்ற இணையதளங்களும் அமைக்கப் பட்டன. இந்த பிரச்சனையை எதிர் கொள்ள சாப்ட்வேர் புலிகள் ஒரு படை யென தயாராகி மாற்று புரோகிராம் களை எழுதுவதற்கு இவை எல்லாம் காரணமாக அமைந்தன.

இதன் நடுவே, ‘ஒய் 2 கே’ பற்றி நாவல்களும், எழுதப்பட்டு திரைப் படங்களும் எடுக்கப்பட்டன. எல்லா துறையிலும் வியாபித்து நின்ற ‘ஒய் 2 கே’ கடைசி யில் ஒன்றுமில்லா மல் போனது. இப் போது ‘ஒய் 10 கே’வுக்கு வருவோம்.

‘ஒய் 2 கே’ போல, பத்தாயிரமாவது ஆண்டை தொட்டதுமே வெடிக்க காத்திருக்கும் பிரச்சனை இது என்கின்றனர். வருடங்களின் கடைசி இரண்டு இலக்கு ‘ஒய் 2 கே’வில் பிரச்சனை ஆனது என்றால், நான்கு இலக்கத்தின் வரையரை ‘ஒய் 10 கே’வாக உருவாகும் என்கின்றனர்.

அதாவது வருடங்களை நான்கு இலக்கமாக தானே குறிப்பிட்டு வருகிறோம். அடுத்து வரும் எட்டாயிரம் ஆண்டுகளுக்கு இதனால் பிரச்சனை கிடையாது. ஆனால், பத்தாயிரமாவது ஆண்டை தொட்ட துமே, புதிய ஆண்டை 5 இலக்கத் தோடு குறிப்பிட வேண்டி இருக்கும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நான்கு இலக்கம் மட்டுமே அறிந்து வைத்திருக்கும் கம்ப்யூட்டர்கள் ஐந்து இலக்க மாற்றத்தால் திகைத்து போய்விடாதா? என்று கேட்கின்றனர்.
இதுதான் ‘ஒய் 10 கே’ பிரச்சனை.

இதற்காக என்றே பிரத்யேக இணையதளங்களும் அமைக்கப் பட்டுள்ளன. நான்கு இலக்க ஆண்டு களை, ஐந்து இலக்கத்தோடு மாற்றி எழுதும் நடவடிக்கையிலும் சில தொலைநோக்கு சாப்ட்வேர் நிபுணர் கள் ஈடுபட்டிருப்பதாக ஒரு இணைய தளம் தெரிவிக்கிறது. இப்படி தயாராகிவிட்டால், அடுத்த 90 ஆயிரம் ஆண்டுகளுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்கின்றனர்.

இது உண்மையா, நகைச்சுவையா என்று தெரியாமல் திகைப்பதாக தான் இருக்கிறது. எப்படியும் பல்லாயிரம் ஆண்டு களுக்கு பின் வரப்போகும் பிரச்சனை தானே என்று இதனை மறந்து விடலாம். அதுசரி, ஆனால் ‘2038’ பிரச்சனையை என்ன செய்வது என்று ஒரு இணையதளம் கேட்கிறதே என்ன செய்ய!

1970-க்கு பிறகு வந்த ‘லீப் தொடர்களை’ கணக்கில் எடுத்துக் கொள்ளாததால் ஏற்படப்போகும் விபரீதம் இது என்கின்றனர். இதன் விளைவாக 2038-ம் ஆண்டும் கம்ப்யூட்டர்கள், அந்த ஆண்டை கவனத்தில் கொள்ளாமல் ‘1901’ என கணக்கில் எடுத்துக் கொள்ளுமாம். இதை ‘ஒய் 238 கே’ பிரச்சனை என்று சொல்கின்றன. ஆனால் நல்ல வேளை யாக வெகு சில சாப்ட் வேர்களே பாதிக்கப்பட உள்ளனவாம்.

காது கொடுத்து கேட்டால் காதில் பூ சுற்றத் தொடங்கி விடுவார்கள் போலும் என நினைக்க வைக்கும் விநோத தகவல்கள் ‘ஒய் 2 கே’ பிரச்சனை யோடு நிறையவே ஒட்டிக் கொண்டி ருக்கிறது. களைகளை விளக்கிவிட்டு தெளிவு பெறு வது இணையவாசி களின் பொறுப்பு.

———–
link;
http://en.wikipedia.org/wiki/Year_10,000_problem
—————

வாழைப்பழம் காட்டிய வழி

bகொஞ்சம் வித்தியாசமாக யோசிக்க முடிந்தால் இன்டெர்நெட்டில் வெற்றிக்கொடி நாட்டலாம் என்பதற்கு அழகான உதாரணமாக அந்த எளிய இணையதளத்தை சொல்லலாம்.
.
வாழைப்பழம்தான் அந்த இணைய தளத்தின் அடையாளம். அதன் பெயரில் இருப்பதும் வாழைப்பழம் தான். அதன் வெற்றிக்கு காரணம் அதுதான்.

‘வாழைப்பழ பெயர்’ (banana name.com) அதுதான் தளத்தின் முகவரி. அரிசி மீது பெயர் எழுதி தருவதாக சொல்வதில் ஒரு சுவாரசியம் இருக்கிறது. அதுபோலவே இந்த தளத்தில் வாழைப்பழத்தின் மீது பெயர் எழுதித் தருவதாக சொல்கிறது. இணையதளங்கள் மற்றும் இணைய நிறுவனங்களின் பெயர்களை இப்படி வாழைப்பழத்தின் மீது எழுதிக் கொள்ளலாம்.

வாழைப்பழத்தின் மீது எதற்கு பெயர் எழுதுவது? ஒரு புதுமைதான்! சரி இதனால் என்ன பயன்? பனானா நேம் தளத்தில் உலா வந்தால் இதற்கான பதில் கிடைக்கும். தளத்தின் உள்ளே நுழைந்ததுமே வரிசையாக வாழைப்பழங்கள் வரவேற்கிறது. ஒவ்வொரு பழத்தின் மீதும், இணைய தளங்களின் பெயர் பளிச்சிடுகிறது.

ஒவ்வொரு பழத்தை கிளிக் செய்ததும், அந்த தளம் தொடர்பான விவரங்களை படிக்கலாம். விஷயம் அதுதான் சுவையான இணைய தளங்களை அறிமுகம் செய்வதற்கான சுவாரசியமான வழியாக இந்த தளத்தை கருதலாம்.

பயனுள்ள பார்க்க வேண்டிய தளங்களை அறிமுகம் செய்யும் தளங்களே நிறைய உள்ளன. இந்த பிரிவில் புதிதாக ஒரு தளம் உதயமாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்ப்பது மிகவும் கஷ்டம்.

ஆனால் ‘பனானாநேம்’ இணைய தளம் நேரடியாக இந்த பணியை செய்யாமல் கொஞ்சம் சுற்றி வளைத்து செய்து வெற்றி பெற்றிருக்கிறது. வெறும் வாழைப்பழங்களின் படங்க ளாக இடம்பெற வைத்து அதில் பெயரை எழுதி வைப்பதன் மூலம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து விடுகிறது.

இந்த தளம் வெறும் பெயரை முன் வைப்பற்கு இல்லாமல் சம்பந்தப்பட்ட தளங்களை பற்றி அறிமுக குறிப்பை அளித்து ஒருவித பயன் நோக்கை ஏற்படுத்தி விடுகிறது. யார் வேண்டுமானாலும் இந்த தளத்தில் தங்கள் இணையதள முகவரியை சமர்ப்பித்து வாழைப்
பழம் மீது பெயரை பொறித்துக் கொள்ளலாம். இணையதளங்களுக்கும் புதுமை யான விளம்பரம் தான் இது.

மேலும் மேலும் பல தளங்கள் இந்த தளத்தில் இடம்பெறும் பட்சத்தில் இந்த தளம் பலரும் ஆர்வத்துடன் விரும்பி பார்க்கும் தளமாக மாறிவிடலாம். இணைய தளங்களை அறிமுகம் செய்யும் பணியை இன்டெர்நெட்டில் நிபுணத்துவம் மிக்கவர்கள்.

சிரத்தை யோடு செய்து வரும் நிலையில் மிகவும் வித்தியாசமான முறையை கையாண்டு சுலபமாக ஜெயித்து விடுகிறது. இந்த வாழைப்பழ தளம் வாழைப்பழத்தால் வெற்றிபெற்ற தளமாக இதனை சொல்லலாம்.

வாழைப்பழம் என்றதும் நினைவுக்கு வரக்கூடிய மற்றொரு விஷயம் வாழைப்பழ குடியரசு. (bananarepublic). பெயரளவுக்கு மட்டுமே குடியரசாக இருக்கும் முறையான ஜனநாயகம் இல்லாத நாடுகளின் கேலிக்கூத்தான நிலையை குறிப்பிட இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது.

லத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபிய பகுதிகளில் அமெரிக்காவின் கைப் பாவையாக இருந்த நாடுகளையே பெரும்பாலும் இந்த பதம் குறிக்கிறது.

ஜனநாயக தன்மை இல்லாமல் சர்வாதிகாரி ஒருவரின் பிடியில் இந்த நாடுகள் சிக்கி கொண்டிருக்கும். அமெரிக்காவோ சிஐஏ மூலம் இந்த நாடுகளை ஆட்டிப் படைத்து கொண்டிருக்கும்.

நவீன இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த ஓ ஹென்றி தான் முதன் முதலில் இந்த சொல்லை பிரயோகித்தவர். ஹான்டுராஸ் நாட்டை குறிக்கவே, வாழைப்பழ குடியரசு என்னும் பதத்தை அவர் பயன்படுத்தினார்.

குடியரசு என்றால் சர்வாதிகாரத்தை கேலியாக உணர்த்தும் வகையில் பயன் படுத்தப்பட்டது. என்றால் வாழைப்பழம் என்பது விவசாயத்தை குறிக்க பயன்பட்டது.

கோசும் அரசர்களும் (கேபேஜஸ் அன்டு கிங்ஸ்) என்னும் நாவலில் ஓ ஹென்றி இந்த வார்த்தையை பயன் படுத்தியிருந்தார். அதன் பிறகு இது மிகவும்
பிரபல மாகி, அரசியல் ரீதியாக நிலையில்லா மல் சர்வாதிகாரியின் பிடியில் தவிக்கும் நாடுகளை வர்ணிக்கும் வழக்கமும் வந்து விட்டது.

அந்த வகையில் பார்த்தால் நம் பக்கத்து நாடான பாகிஸ்தானிலும் இதே வகை குடியரசுதான்.

———
link;
banana2www.banananame.com

ஒரு தளம் பல வண்ணம்

ஒரு நல்ல இணைய தளம் எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணம் குறித்த பொது கருத்து இன்னமும் உருவாகவில்லை. சிறந்த இணைய தளம் என்பது எளிமையாக இருக்க வேண்டும் என்று பரவலாக கூறப்பட்டாலும் இதற்கான மிகச்சிறந்த உதாரணமாக எளிமையே வடிவான முகப்பு பக்கத்தை தேடியந்திர முதல்வனான கூகுல் பெற்றிருந்தாலும், அநேக இணைய தளங்கள் வண்ணப் படங்கள், வரைபடங்கள், வீடியோ வசதி என ஏராளமான அம்சங்களை கொண்ட தாகவே உருவாக்கப்படுகின்றன.
.
சில தளங்கள் கிராபிக்ஸ் மயமாகவும் அமைகின்றன. இத்தகைய தளங்கள் பார்ப்பதற்கு வேண்டுமானால் வசீகரமாக இருக்கலாமே தவிர, பயன்படுத்தும் போது சிக்கலான அனுபவத்தை தரலாம் என்று கருதப்படுகிறது. படங்கள், வரைபடங்கள் தவிர, இணையவாசிகளுக்கான சர்வே, ஒப்பிட்டு பார்க்கும் வசதி போன்ற கூடுதல் அம்சங்களையும் பல தளங்கள் கொண்டிருக்கின்றன.

எனவே, இதுதான் சிறந்த வடிவமைப்பு என்று சொல்ல முடியாத குழப்பமான நிலையே இன்டெர்நெட் உலகில் நிலவுகிறது. ஒரு தளம் எப்படி இருக்கிறது என்பதை விட, இணையவாசிகளுக்கு அது எத்தகைய அனுபவத்தை தருகிறது என்பதை பொறுத்தே அது சிறந்ததா, இல்லையா என்ற தீர்மானத்திற்கு வர வேண்டியிருக்கிறது.

ஆனால், இணையவாசிகள் பல தரப்பட்டவர்களாகவும் அவர்களின் எதிர்பார்ப்பு பலதரப்பட்டதாகவும் இருக்கும் போது என்ன செய்வது? எல்லோரையும் திருப்திபடுத்தக் கூடிய இணைய தளத்தை வடிவமைப்பு எப்படி? எளிமையான வடிவமைப்பை விரும்புகிறவர்கள், ஏராளமான அம்சங்களை கொண்ட தளத்தை விரும்பாமல் விலகிச் செல்லும் போது என்ன செய்வது?

வடிவமைப்பாளர்கள் மனதில் எழக்கூடிய இத்தகைய கேள்விகளுக்கு எல்லாம் பதில் தரக்கூடிய வகையில் புதுமையான இணைய தள வடிவமைப்பு முறை முன்வைக்கப்பட்டுள்ளது.

எம்ஐடி பல்கலையைச் சேர்ந்த ஸ்லோன் அமைப்பைச் சேர்ந்த ஆய்வாளர்கள் முன்வைத்துள்ள இந்த வடிவமைப்பு முறை உண்மையிலேயே சுவாரசியமானது. ஒரு குறிப்பிட்ட வகை தளத்தை வடிவமைக்காமல், நான்கைந்து வகையான தளங்களை வடிவமைக்க வேண்டும் என்பதே இந்த முறையின் மைய கருத்து. அதாவது நான்கைந்து வகையான இணைய தளங்களை ஒன்றன் மேல் ஒன்றாக இணைத்து, ஒரே தளமாக உருவாக்கி விட வேண்டும்.

இப்படி ஒரு தளத்தை உருவாக்கும் பட்சத்தில், இணையவாசிகளின் தன்மைக்கு ஏற்ப, அவர்களுக்கு ஏற்ற வகையான வடிவமைப்பு கொண்டதாக இணைய தளம் தானாக மாறிவிடும்.

உதாரணமாக, இணையவாசி எளிமையை விரும்புகிறவர் என்றால், இணைய தளமும் தானாகவே எளிமையான வடிவமைப்பு கொண்டதாக மாறிவிடும். அதே நேரத்தில் புகைப்பட பிரியராக விளங்கும் இணையவாசி என்றால், தளம் வண்ணப்படங்களை கொண்டதாக காட்சி தரும். இத்தகைய தளம் எவரையும் ஏமாற்றாது. எல்லோரையும் திருப்தி படுத்தக்கூடியதாக இருக்கும்.

எதிர்காலத்தில் இத்தகைய வடிவமைப்பு முறையே கோலோச்சப் போவதாக பேராசிரியர் ஜான் ஹாசர் கூறுகிறார். மேலே சொன்ன வடிவமைப்பு முறையை முன் வைத்துள்ள ஆய்வுக் குழுவின் தலைவராக ஹாசர், இந்த வகை இணைய தளம், இணையவாசிகளின் இயல்பை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப மாறும் தன்மை கொண்டதாக இருக்கும் என்று கூறுகிறார். இந்த தளம் மாறுகிறது என்பது கூட இணையவாசிகளுக்கு தெரியாமல், அது, அவருக்கு ஏற்றதாக மாறியிருக்கும் என்று இவர் கூறுகிறார்.

கிட்டத்தட்ட வடிவமைப்பு மாயம் என்று இதனை வர்ணிக்கலாம். இந்த மாயம் எப்படிசாத்தியமாகிறது? இணைய தளம் அந்த அளவுக்கு புத்திசாலித்தனமாக வடிவமைக் கப்படுகிறது என்பதே விஷயம்.

இணையவாசிகள் “கிளிக்’ செய்யும் முறையை வைத்தே அவர்களின் எதிர்பார்ப்பை யூகித்தறியும் ஆற்றல் கொண்டதாக இருப்பதன் மூலம் இது சாத்தியமாகிறது.
முகப்பு பக்கத்தை பார்த்தவுடன் இணையவாசி, விலைகளை ஒப்பிட்டு பார்க்கும் வசதியை கிளிக் செய்தார் என்றால், அவர் அலசி ஆராயும் மனோபாவம் கொண்டவராக இருக்கக்கூடும் என்ற அனுமானம் கொள்ளப்பட்டு, அதற்கேற்ற வடிவமைப்புடன் தளம் உருமாறிக் கொள்ளும். அதே போல இணையவாசி கேள்வி பதில் பகுதியை கிளிக் செய்தால் அவர், தளத்தோடு தொடர்பு கொண்டபடி இருக்கும் ஒருவித உரையாடல் தன்மையை விரும்புகிறவர் என்று புரிந்து கொள்ளப்படும்.

வரைபடங் களை கிளிக் செய்பவருக்கு தளம் கிராபிக் மயமாக காட்சி தரும். அதிகபட்சமாக இணையவாசிகளின் பத்து கிளிக்குகளுக்குள் இணைய தளம் அவரது எதிர்பார்ப்பை புரிந்து கொண்டு விடும் என்று பேராசிரியர் ஹாசர் நம்பிக்கையோடு சொல்கிறார்.
அது மட்டும் அல்ல, இணையவாசிகள் தொடர்ந்து பயன்படுத்தும் விதத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதன் மூலம் பொதுவாக எந்த வகையான அம்சங்கள் பெரிதும் விரும்பப்படுகின்றன என்பதையும் தளம் குறித்து வைத்துக் கொள்ளும்.

இந்த ஆய்வு இன்னமும் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது என்றாலும் எதிர்காலத்தில் இணைய தள வடிவமைப்பில் ஆய்வு மூலமான புரிதல் பெரிய அளவில் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்த முறையில் பிரிட்டிஷ் டெலிகாம் நிறுவனத்திற்கு சோதனை அடிப்படையில் ஒரு இணைய தளம் வடிவமைத்து தரப்பட்டுள்ளது. இந்த தளத்தின் செயல்பாடுகள் ஆர்வத்தோடு கவனிக்கப்பட்டு வருகிறது.

எம்ஐடியின் ஸ்லோன் பள்ளியைச் சேர்ந்த மற்றொரு பேராசிரியரான கிளன் அர்பன், இந்தக் குழு ஜப்பானிய வங்கிக்கு ஜப்பானிய மொழியில் ஒரு மாதிரி தளத்தை வடிவமைத்து வருவதாக கூறுகிறார். இந்த சோதனை முயற்சிகள் வெற்றி பெறுமானால் எதிர்காலத்தில் எல்லோருக்கும் ஏற்ற தளமாக மாறக் கூடிய தளங்கள் வடிவமைக்கப்படுவது சாத்தியமாகும் என்று அர்பன் கூறுகிறார்.