Tag Archives: ஒபாமா

கூகுலுக்கு ஆதரவாக ஒபாமா சீனாவுக்கு எச்சரிக்கை

கூகுல் மீது சீனாவில் இருந்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதலுக்கு சீன அரசு தகுந்த பதில் அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூகுல் மீதான தாக்குதலை அடுத்து ஏற்பட்டுள்ள நிலை ஒபாமாவை கவலை கொள்ள வைத்திருப்பதாகவும் இதற்கு சீனா சரியான விளக்கம் தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது .

 மேலும் இந்த தாக்குதலின் பின்னே உள்ளவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள‌து. சமீபத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி சீனிவின் இண்டெர்நெட் தணிக்கை முறையை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் ஒபாமாவின் எச்ச்ரிக்கை வெளியாகியுள்ளது.

 அமெரிக்க‌ எல்லாவ‌ற்றுக்கும் சீன‌ அர‌சை குற்ற‌ம் சாட்ட‌க்கூடாது என‌ ஹிலாரி குற்ற‌ச்சாட்டுக்கு சீனா பொத்த‌ம் பொதுவாக‌ ப‌தில‌ளித்து ச‌மாளிக்கப்பார்த்தாலும் அமெரிக்கா இந்த‌ பிர‌ச்சனையில் தீவிர‌மாக‌ இருப்ப‌தை வெள்ளை மாளிகை அறிக்கை உண‌ர்த்துகிற‌து.

————

http://cybersimman.wordpress.com/2010/01/13/google-34/

http://cybersimman.wordpress.com/2010/01/17/china/

ஒபாமாவின் முதல் டிவீட்

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா முதல் முறையாக டிவிட்டரை பயன்படுத்தியிருக்கறார். ஹைதி பூக‌ம்ப‌ நிவார‌ண‌ ப‌ணிக‌ளை ஊக்குவிக்கும் வ‌கையில் அவ‌ர் டிவிட்ட‌ரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

ஒபாமா டிவிட்ட‌ருக்கு புதிய‌வ‌ர் அல்ல‌. அவ‌ர‌து பெய‌ரில் டிவிட்ட‌ர் முக‌வ‌ரி க‌ண‌க்கு இருக்கிற‌து.மேலும் அதிப‌ர் தேர்த‌லின் போது ஒபாமா பிர‌சார‌த்திற்காக‌ டிவிட்ட‌ர் ம‌ற்றும் ஃபேஸ்புக் போன்ற‌ வ‌லைப்பின்ன‌ல் சேவைக‌ள் தீவிர‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ன.வ‌லைப்பின்ன‌ல் சேவை மூல‌ம் ஒபாமா குழு நிதி திர‌ட்டிய‌ வித‌மும் வேக‌மும் ப‌ர‌வ‌லாக‌ பார‌ட்ட‌ப்ப‌ட்ட‌ன.

தேர்த‌ல் பிர‌சார‌த்தில் இண்டெர்நெட்டை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தில் ஹாவ‌ர்டு டீன் போன்ற‌வ‌ர்க‌ள் முன்னோடியாக‌ க‌ருத‌ப்ப‌டும் வேளையில் ஒபாமா வ‌லைப்பின்ன‌ல் சார்ந்த‌ பிர‌சார‌த்தில் முன்னோடியாக‌ புக‌ழ‌ப்ப‌ட்டார்.

அதிப‌ராக‌ ப‌த‌வியேற்ற‌ பிற‌கும் ஒபாமா நிர‌வாக‌த்தில் பொதும‌க்க‌ளின் க‌ருத்தை அறிய‌ இண்டெர்நெட் ப‌ய‌ன்பாட்டை ஊக்குவித்தே வ‌ந்துள்ளார். மேலும் டிவிட்ட‌ரில் அதிக‌ பின்தொட‌ர்ப‌வ‌ர்க‌ளை கொண்ட‌வ‌ர்க‌ள் ப‌ட்டிய‌லில் அவ‌ரே முத‌ல் இட‌த்தில் இருந்து வ‌ந்தார்.

இந்நிலையில் க‌ட‌ந்த‌ ஆண்டு சீன‌ விஜ‌ய‌த்தின் போது ஒபாமா டிவிட்டரை தான் பயன்படுத்தியதில்லை என்றும் டிவிட்டர் தனக்கு புரியவில்லை என்றும்  ஒரு குண்டை தூக்கி வீசினார்.ஒபாமா டிவிட்ட‌ரில் பிர‌ப‌ல‌மாக‌ இருப்ப‌தாக‌ க‌ருதப்ப‌ட்டு வ‌ந்த‌ நிலையில் இந்த‌ க‌ருத்து பெரும் அதிர்ச்சியை அளித்த‌து.

ஒபாமா டிவிட்ட‌ர் ப‌ய‌ன்பாட்டில் முன்னுதார‌ன‌மாக‌ திக‌ழ்கிறார் என்று பார‌ட்டிய‌வ‌ர்க‌ள் எல்லாம் அவ‌ர‌து டிவிட்ட‌ர் அறியாமையை கேட்டு திகைத்துப்போயின‌ர்.

பின்ன‌ர் தான் விஷ‌ய‌ம் விள‌ங்கிய‌து.ஒபாமா பெய‌ரில் டிவிட்ட‌ர் க‌ண‌க்கு இருக்கிற‌தே த‌விர‌ உண்மையில் அவ‌ர் அத‌னை நேர‌டியாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த்வில்லை. தேர்த‌ல் பிரசார‌த்தின் போது அவ‌ர‌து பிர‌ச்சார‌ குழுவின‌ர் அவ‌ர் சார்பில் டிவிட்ட‌ர் செய்து ஆத‌ர‌வு திர‌ட்டியுள்ள‌ன‌ர்.அதிப‌ரான‌ பின்ன‌ரும் இதே முறையை அவர‌து உத‌வியாள‌ர்க‌ள் பின‌ப்ற்றி வ‌ந்துள்ள‌ன‌ர்.

நோப‌ல் ப‌ரிசு அறிவிக்க‌ப்ப‌ட்ட‌ போது கூட‌ அதிப‌ர் சார்பில் நெகிழ்ந்து போனேன் என்று டிவிட்ட‌ர் செய்துள்ள‌ன‌ர்.

இதையெல்லாம் வைத்து தான் ஒபாமா டிவிட்ட‌ர் செய்கிறார் என்று க‌ருத‌ப்ப‌ட்ட‌து.

இப்ப‌டியிருக்க‌ ஒபாமா இப்போது முத‌ல் முறையாக‌ டிவிட்ட‌ர் செய்துள்ளார்.

ஹைதியில் ஏற்ப‌ட்ட‌ பூக‌ம்ப‌ம் பெரும் சேத்தையும் பேர‌விவையும் உண்டாக்கியுள்ள‌ நிலையில் ச‌ர்வ‌தேச‌ செஞ்சிலுவை ச‌ங்க‌ம் நிவார‌ண‌ப்பணிக‌ளை மேற்கொள்வ‌தில் ப‌ம்ப‌ர‌மாக‌ சுழ‌ன்று கொண்டிருக்கிற‌து.தாம‌திக்கும் ஒவ்வொரு நிமிட‌மும் உயிர் ப‌லி என்ப‌தை உண‌ர்ந்து நிவார‌ண‌ப் ப‌ணிக‌ளை ச‌ங்க‌ம் ஒருங்கிணைத்து வ‌ருகிற‌‌து.

உயிர் காக்கும் உன்ன‌த‌ ப‌ணியில் ஈடுப‌ட்டுள்ள‌ செஞ்சிலுவை ச‌ங்க‌த்தின் செய‌ல்பாடுக‌ளை ஊக்குவிப்ப‌த‌ற்க்காக‌ ஒபாமா ம‌னைவியோடு ச‌ங்க‌த்தின் த‌லைமை அலுவ‌ல‌க‌த்திற்கு விஜய‌ம் செய்தார்.அரும்பணி ஆற்றி வ‌ரும் உங்க‌ளை பாராட்டி ஊக்க‌ப்ப‌டுத்த‌வே வந்துள்ளேன் என்று அறிவித்த‌ ஒபாமா பின்ன‌ர் அங்கு சுற்றிப்பார்த்து வ‌ருகையில் ஒரு க‌ம்ப்யூட்ட‌ரில் டிவிட்ட‌ர் ப‌க்க‌த்தை க‌ண்டார்.

அதிப‌ர் ம‌ற்றும் அவ‌ர் ம‌னைவி நிவார‌ண‌ப்ப‌ணிக‌ளை பார்வையிட்டு வ‌ருகின்ற‌ன‌ர் என‌ அவ‌ர் குறிப்ப்ட்டு டிவிட்ட‌ர் செய்தார்.அத‌ன் பிற‌கு ஒபாமா முத‌ன் முத‌லில் டிவிட்ட‌ர் செய்துள்ளார்‌ என அவரே உறுதிப்ப‌டுத்தி அடுத்த‌ செய்திய‌ ப‌திவு செய்தார்.

நிற்க‌ பூக‌ம்ப‌ நிவார‌ன‌ முய‌ற்சிக‌ளில் டிவிட்ட‌ர் போன்ற‌ தொழில்நுட்ப‌ சேவைக‌ள் பெரும் ப‌ங்காற்றி வ‌ருகின்ற‌ன‌.எஸ் எம் எஸ் மூல‌ம் நிதி திர‌ட்டுவ‌திலும் திவிராம் காட்ட‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.

கூகுலின் தர்மசங்கடம்

தேடல் முடிவுகளை துல்லியமாக தருவதற்காக கூகுல் தலை நிமிர்ந்து நிற்பதே வழக்கம்.ஆனால் எப்போதாவது தேடல் முடிவுக்காக தலை குணிந்து நிற்கும் நிலையும் ஏற்படுவதுண்டு. இந்த நிலை மிகவும் அரிதானது தான் எனறாலும் அப்படியொரு தர்மசங்கடம் கூகுலுக்கு ஏற்பட்டிருக்கிறது.அதற்காக கூகுல் மன்னிப்பும் கேட்டிருக்கிறது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி தொடர்பான ஒரு ஆட்சேபகரமான புகைப்படம் தேடல் பட்டியலில் முதலில் இடம்பெற்றிருந்ததை அடுத்து கூகுல் மன்னிப்பு கேட்டுள்ளது.

வகுப்பில் முதல் இடத்தைபிடிக்கும் மாணவணுக்கு ஒரு இலக்கணம் இருப்பது போல் தேடல் பட்டியலில் முதல் இடத்தை பிடிபதற்கும் ஒரு இலக்கணம் இருக்கிறது.பெரும்பாலும் பொருத்த‌மான‌ முடிவுக‌ளே முத‌ல் இட‌த்தை பிடித்திருக்கும்.

பிர‌ப‌ல‌ங்க‌ள் என‌றால் அவ‌ர்க‌ளின் அதிகார‌பூர்வ‌ இணைய‌த‌ள‌ம்,இல்லை விக்கிபீடியா ப‌க்க‌ம் இப்ப‌டி முத‌ல் முடிவு அநேக‌மாக‌ ந‌ச் சென்று இருக்கும்.புகைப்ப‌ட‌ தேட‌லிலும் இதே நிலை தான்.

ஆனால் ஒபாமா ம‌னைவியின் பெய‌ரை குறிப்பிட்டு புகைப்ப‌ட‌ தேட‌லில் ஈடுப‌டும் போது முத‌ல் ப‌ட‌ம் திடுக்கிட‌ வைக்கிற‌து.மிச்சிலி ஒபாமாவை இனரீதியாக இழிவுப‌டுத்தும் வ‌கையில் அந்த‌ ப‌ட‌ம் அமைந்துள்ள‌து.

இணைய‌த்தில் இது போன்ற‌ அவ‌தூறான‌ த‌க‌வ‌ல்க‌ளும் புகைப‌ட‌ங்க‌ளும் இருக்க‌வே செய்கின்ற‌ன‌. தேடிய‌ந்திர‌ங்க‌ளை இத‌ற்கு பொறுப்பேற்க‌ வைக்க‌ முடியாது தான்.ஆனால் பிர‌ச்ச‌னை என்ன‌வென்றால் இத்த‌கைய‌ த‌க‌வ‌ல் அல‌து புகைப்ப‌ட‌ம் தேட‌ல் ப‌டிய‌லில் முத‌லில் வ‌ந்து நிற்ப‌து தான்.

முத‌ல் முடிவு ம‌ணி ம‌ணியான‌ முடுவுக‌ளாக‌ இருக்க‌ வேண்டும் என்று எதிர‌ப்பார்க்க‌ப‌டும் நிலையில் முத‌ல் முடிவே சோதிக்க‌ கூடியாதாக‌ இருந்தால் எப்ப‌டி? ஒபாமா ம‌னைவியின் மோச‌மான‌ ப‌ட‌த்தை பார்த்த‌வ்ர்க‌ளுக்கும் பெரும் அதிர்ச்சியாக‌ இருக்கும்.

ஆனால் ந‌ல்ல‌வேளையாக‌ அந்த‌ ப‌ட‌த்தின் மேல் கூகுல் ஒரு விள‌ம்ப‌ர‌ பெட்டியை போட்டு வைத்துள்ள‌து. அதில் எப்போதாவ‌து அவ‌தூறான‌ த‌க‌வ‌ல்க‌ள் கூகுல் தேட‌ல் பட்டிய‌லில் இட‌ம் பெறுவ‌து சாத்திய‌மே என்று குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து.

தேடல் முடிவுக‌ளை ப‌ட்டிய‌லிட‌ சிக்க‌லான‌ சூத்திரம் பின்ப‌ற்ற‌ப்ப‌டுவ‌தால் சில‌ நேர‌ங்க‌ளில் த‌வ‌று நிக‌ழ‌ வாய்ப்புள்ல‌து என்றும் விள‌க்க‌ம‌ளிக்க‌ப்ப‌டுள்ள‌து.
சில‌ நேர‌ங்க‌ளில் இத்த‌கைய‌ த‌க‌வல்க‌ள் அல்ல‌து புகைப்ப‌ட‌ம் நீக்க‌ப்ப‌ட‌லாம் என்றும் கூறியுள்ள‌ கூகுல் இந்த‌ புகைப்ப‌ட‌த்தால் ம‌ன‌ வேத‌னை ஏற்ப‌ட்டிருந்தால் ம‌ன்னிப்பு கோருவ‌தாக‌வும் தெரிவித்துள்ள‌து.

ஆனால் மிச்சிலியின் இந்த‌ புகைப‌ட‌ம் எப்ப‌டி முத‌ல் இட‌த்தைபிடித்த‌து என்று விள‌க்க‌ம‌ளிக்க‌வில்லை.

பொதுவாக‌ ப‌திவுக‌ளுக்கு தொட‌ர்புடைய‌ இணைப்புக‌ளை வ‌ழ‌ங்குவ‌து என் வ‌ழ‌க்க‌ம்.இருப்பினும் இந்த‌ ப‌திவைப்பொருத்த‌வ‌ரை இணைப்பை த‌ராம‌ல் இருப்ப‌தே ச‌ரி என‌ க‌ருதுகிறேன்.

ஃபிளிக்கரில் ஒபாமா குடும்ப படங்கள்

obama-family-portraitபாரக் ஒபாமா அதிபர் பத‌விக்கான‌ தேர்தலில் இண்டெர்நெட்டை மிகவும் தீவிரமாக பயன்படுத்திக்கொண்டவர்.டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் தளங்களை அவர் பிரசாரத்திற்கும் பிரச்சார நிதி திரட்டவும் பயன்படுத்திய விதம் இண்டெர்நெட் பயன்பாடிற்கான முன்னுதாரணமாக கருதப்படுகிறது.

ஒபாமா அதிபராக பதவியேற்றப்பிறகும் தன்னை பதவியில் அமர்த்திய இண்டெர்நெட்டை மறந்துவிடாமல் இருக்கிறார்.மக்களோடும்,ஆதரவாள‌ர்களோடும் தொடர்பு கொள்ள அவர் இண்டெர்நெட்டை பயன்படுத்தி வருகிறார்.

இத‌ன் தொட‌ர்ச்சியாக‌ த‌ற்போது ஒபாமா த‌ன‌து குடும்ப‌ புகைப்ப‌ட‌ங்க‌ளை புகைப‌ட‌ ப‌கிர்வு த‌ள‌மான‌ ஃபிளிக்க‌ரில் வெளியிட்டிருக்கிறார்.அதிப‌ர் மேற்கொண்ட‌ வெளிநாட்டு ப‌ய‌ண‌ங்க‌ளின் போது எடுக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ட‌ங்க‌ள் உள்ளிட்ட‌வை இதில் இட‌ம்பெற்றுள்ள‌ன‌.அததைத்த‌விர‌ தின‌ச‌ரி நிக‌ழ்ச்சிக‌ளின் ப‌டங்க‌ளும் இட‌ம்பெற்றுள்ள‌ன‌.

ஒபாமா த‌ன‌து ம‌னை ம‌ற்றும் பிள்ளைக‌ளோடு ம‌கிழ்ழ்ச்சியொடு காணும் இந்த‌ ப‌ட‌ங்க‌ள் பார்ப்ப‌த‌ற்கு ப‌ர‌வ‌ச‌த்தை த‌ருகின்ற‌ன‌,

நாட்டின் த‌லைவ‌ர‌து நிக‌ழ்ச்சி நிர‌ல் சார்ந்த‌ ப‌ட‌ங்க‌ளை பார்ப்ப‌த‌ற்கு ப‌ல‌ருக்கும் ஆர்வ‌ம் இருக்க‌த்தானே செய்யும்.ஒபாமா அத‌னை ஃபிளிக‌ர் மூல‌ம் நேர‌டியாக‌வே நாட்டு ம‌க்க‌ளோடு ப‌கிர்ந்து கொண்டுள்ளார்.

ஆனால் இந்த‌ ப‌ட‌ங்க‌ளை ப‌ய‌ன்ப‌டுத்தும் போது வெள்ளை மாளிகை காப்புரிமை குறித்து க‌வ‌ன‌மாக‌ இருக்க‌ வேண்டும்.

—-
link;
http://www.flickr.com/photos/whitehouse/

ஒபாமா பற்றி டிவிட்டர் என்ன நினைக்கிறது.

obasmaதிரைப்படங்களின் வெற்றி தோல்வியை இப்போது டிவிட்டர் தான் நிர்ணயிக்கிறது என்கின்ற‌னர்.படம் பார்த்த உடனேயே படம் பற்றி உள்ளத்தில் தோன்றுவதை ரசிகர்கள் டிவிட்டரில் பதிவு செய்து விடுவது அந்தபடத்தை பார்க்கலாமா? வேண்டாமா?என முடிவெடுக்க வைத்து விடுகிறது.

பட தாயாரிப்பு நிறுவனங்களின் மார்க்கெட்டிங் முயற்சியை மீறி ரசிகர்கள் தங்கள் டிவீட்களிலேயே தன் வெற்றி தோல்வியை தீர்மானித்து விடுகின்றன.நாளிதழ் விமர்சனங்கள், வலைப்பதிவு விமர்சனங்கள் கூட பிறகு தான் வெளியாகின்றன.ஆனால் டிவிட்டர் விமர்சனங்கள் தியேட்டரிலிருந்தே வெளியாகி படம் குறித்த பொது அபிப்ராயத்தை உண‌ர்த்திவிடுகின்றன.

டிவிட்டர் விமர்சனத்தை எப்படி சமாளிப்பதென பட நிறுவனங்கள் குழ‌ம்பித்த‌விப்ப‌து ஒரு புற‌மிருக்க‌ டிவிட்ட‌ர் க‌ருத்துக்களால் அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ளின் செய‌ல்பாடுக‌ள் எந்த அளவுக்கு வரவேற்பை பெர்றுள்ளன என க‌ண்ட‌றிய‌ முடியும் தெரியுமா?

உதார‌ண‌த்திற்கு அர‌சைய‌ல் த‌லைவ‌ர் ஒருவ‌ர் எதிர்கால‌ திட்ட‌ம் குறித்து முக்கிய‌ உரை நிக‌ழ்த்துவ‌தாக‌ வைத்துக்கொள்வோம்.அந்த‌ உரை ம‌க்க‌ள் ம‌த்தியில் எத்த‌கைய‌ பாதிப்பை ஏற்ப‌டுத்திய‌து என்ப‌தை டிவிட்ட‌ரை பார்த்தே தெரிந்து கொண்டு விட‌லாம்.

எப்ப‌டி என்கிறிர்க‌ளா?

உரையை கேட்ட‌வுட‌னே ப‌ல‌ரும் அதௌ ப‌ர்றி தாங்க‌ள் என்ன‌ நினைக்கிறோம் என்ப‌தை டிவிட்ட‌ரில் ப‌திவு செய்ய‌ப்போகின்ற‌ன‌ர்.ஆஹா பேச்சு பிர‌மாதம்,என்ப‌தில் துவ‌ங்கி பெரும் ஏமாற்ற‌ம் என்ப‌து வ‌ரை உரையை பாராட்டியும் விம‌ர்சித்தும் க‌ருத்துக்க‌ளை டிவிட்ட‌ர் செய்ய‌லாம்.

இத்த‌கைய‌ டிவிட்ட‌ர் க‌ருத்துக்களை அல‌சி ஆராய்வ‌த‌ன் மூல‌ம் த‌லைவ‌ரின் உரை எந்த‌ அள‌வுக்கு தாக்க‌த்தை ஏற்ப‌டுத்திய‌து என‌ தெரிந்துகொள்லாம். மேற்பூச்சோ மிகைப்ப‌டுத்த‌லோ இல்லாம‌ல் உள்ள‌தை உள்ள‌ ப‌டி பிர‌திப‌லிக்கும் க‌ண்ணாடியாக‌ டிவிட்ட‌ர் க‌ருத்துக்க‌ள் அமைய‌லாம்.

ச‌மீப‌த்தில் அமெரிக்க‌ அதிப‌ர் சுகாதார‌ சீர்திருத்த‌ திட்ட‌ம் தொட‌ர்பாக நாடாளும‌ன்ற‌த்தில் உரை நிக‌ழ்த்திய‌ போது அவ‌ர‌து உரை ஏற்ப‌டுத்திய‌ தாக்க‌த்தை இப்ப‌டி டிவிட்ட‌ர் க‌ருத்துக்க‌ளின் மூல‌ம் அறிய‌ முடிந்த‌தாக‌ சொல்கிறார்க‌ள்.உரை நிக‌ழ்த்த‌ப்ப‌ட்ட‌ பின் டிவிட்ட‌ரில் ப‌திவான‌ க‌ருத்துக்க‌லை வைத்துக்கொண்டு பார்த்த‌ போது 36 ச‌த‌வீத‌ம் பேர் அத‌னை ஆத‌ரித்த‌தும் 32 ச‌த‌வீத‌ம் பேர் விம‌ர்சித்த‌தும் தெரிய‌ வ‌ந்துள்ள‌து.

ஒபாமாவின் சுகாதார‌ திட்ட‌ம் பெரும் ச‌ர்ச்சையை ஏற்ப‌டுத்தியுள்ள‌ நிலையில் அத‌னை ஆதிரித்து அவ‌ர் ஆற்றிஅய‌ உரை ம‌க்க‌ள் ம‌ன்ற‌த்தில் வ‌ர‌வேற்பை பெற்ற‌தா என்ப‌தை டிவிட்ட‌ர் ச‌ரியாக‌ ப‌ட‌ம் பிடித்து காட்டிய‌தாக‌ க‌ருத‌ப்ப‌டுகிற‌து.

ஆக‌ டிவிட்ட‌ரை இனி உல‌கின் ம‌ன‌சாட்சியாக‌ க‌ருத‌லாம் போல்.