Tag Archives: வடிவமைப்பு

-சொந்த வீடும் சொந்த இணையதளமும்.

சொந்த வீடு ,சொந்த இணையதளம் இரண்டுக்குமான எதிர்பார்ப்பும் சாத்தியங்களும் வேறு வேறானவை.சொந்த வீடு எல்லோருடைய கனவு.சொந்த இணையதளம் என்பது இண்டெர்நெட் யுகத்தில் உருவாகியிருக்கும் ஆர்வம்.

சொந்த வீடு வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு பலரும் சொந்த இணையதளம் தேவை என்று நினைப்பதில்லை.அதோடு சொந்த வீட்டிற்காக ஒரு இணையதளம் அமைக்க வேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை.ஆனால் ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த லூக் எவரிங்காம் என்பவர் தனது வீட்டிற்காக ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளார்.

சொந்த வீட்டிற்காக சொந்த இணையதளம் என்றவுடன் அந்த வீடு விஷேசமானதாக இருக்க வேண்டும் என்று யூகித்திருப்பீர்கள். உண்மை தான் லூக் உருவாக்கியுள்ளது சுழலும் வீடு.

வடிவமைப்பிலும் சரி தோற்ற‌த்திலும் சரி புதுமையான அம்சங்களை கொண்ட அந்த வீட்டின் பின்னே ஒரு கதை இருக்கிறது. ஒரு கொள்கையும் இருக்கிற‌து.

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாண‌த்தில் விங்காம் நகரில் இருந்து 40 கி மீ தொலைவில் அழகிய சூழலில் மலைகளுக்கு நடுவே அந்த வீடு அமிந்துள்ளது.

சுழலக்ககூடிய அந்த வீடு எண் முக வடிவம் கொண்டது.பெரும்பாலும் கண்ணாடி மற்றும் ஸ்டில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.இரண்டு மோட்டார் மூலம் சுழலக்கூடியது.

360 கோணத்திலான அதன் தாழவாரத்தில் சழற்ச்சிகு ஏற்ப சூரிய ஒளியினை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளக்கூடியது.

ஆனால் வெறு புதுமைக்காக மட்டும் உருவாக்கப்பட்ட வீடு அல்ல இது. அதைவிட முக்கியமாக வழக்கமாக வீட்டை கட்ட தேவைப்படக்கூடிய தொகையை விட குறைந்த செலவிலேயே வீடு கட்டப்பட்டுள்ளது.மேலும் சுற்றுச்சூழல் நோக்கில் சாதகமான அம்சங்களை கொண்டிருக்கிறது.

சரி, இந்த வீட்டிற்கான எண்ணம் எப்படி வந்தது?

ஆசை ஆசையாக வீட்டை கட்டி முடித்தாலும் கட்டி முடித்தப்பிறகு அப்படி இருக்கலாம் இப்படி இருக்கலாம் என்று தோன்றுவது இயற்கை தானே. இப்படி தான் லூக்கின் நண்பர்கள் பலர் தங்கள் வீடு இண்ணும் கொஞ்சம் வடக்கு நோக்கி தள்ளியிருந்தால் நன்றாக் இருகும் என்று கூறுவதை கேட்டிருக்கிறார். அப்போது தான் அவருக்கு அந்த பொறி தட்டியிருக்ககிற‌து.

வீட்டின் அமைப்பு பற்றி புலம்புவதை விட இஷடம் போல திருப்பிக்கொள்ளக்கூடிய வகையில் வீடு காட்டனால் என்ன என்பதே அந்த எண்ணம்.நாமாக இருந்தால இந்த யோசனை வந்தவுடனே இதெல்லாம் சாத்தியமா என விட்டிருப்போம்.ஆனால் லூக் கொஞ்சம் சிரத்தை எடுத்துக்கொண்டு யோசித்தார். பல விதங்களில் சுழலும் விடு சிறப்பாக இருகும் என தோன்ற்வே அடுத்த கட்டமாக இதை எப்படி சாத்தியமாக்குவது என ஆராயலானார்.

அதே நேரத்தில் அவரது பண்ணை வீடு ஒன்று பாழடைந்த நிலையில் கிடந்தது. அந்த வீட்டை புதிப்பிப்பதை விட புதிய விடு காடுவது மேல் என நினைத்தார். இப்படி தான் சுழலும் வீட்டிற்கான திட்டம் உருவானது.

வீட்டின் எடை மற்றும் செலவு தான் சவாலாக இருகும் என நினைத்தவர் அது குறித்து ஆய்வு செய்த போது வழக்கத்தைவிட குறைவான எடையில் ,செலவில் வீடு சாத்தியமே என புரிந்தது.அதற்கு தேவையான தொழில்நுட்பங்கள் இருபது நிம்மதியை உற்சகத்தை தரவே பணியை துவக்கி விட்டார்.மேலும் வட்ட வடிவம் காரணமாக அறைகளையும் தேவைக்கேற்ப வடிவமைத்துக்கொள்ளலாம் என்ப‌து கூடுதல் உற்சாகத்தை தந்தது.

நீண்ட தயாரிப்பு மற்றும் விரிவான திட்டமிடலின் உதவியோடு இரண்டு வருட காலத்தில் வீட்டை உருவாக்கினார்.

இன்று அந்த வீடு கம்பிரமாக‌ சுழன்றுக்கொண்டிருக்கிறது.

காண்போரை கவரும் வீடு என்பதால் அனைவருக்கும் அதுபற்றி அறிய ஆவல் இருக்கும் என்பதால் அதற்காக என்று ஒரு இணையதளத்தை அமைத்து அதில் வீடு உருவான கதை மற்றும் அதன் சிறப்பம்சங்களை குறிப்பிட்டுளார்.

மேலும் தனது அனுபவத்தை இதே போன்ற சுழலும் வீடு கட்ட விரும்புகிரவர்களோடு பகிர்ந்து கொள்ள தயாராக‌ இருபதாகவும் தெரிவித்துள்ளார்.

நீங்க‌ளூம் அது போல ஒரு சுழலும் வீடு கட்டலாம். அல்லது வேறு புதுமையான‌ வீட்டை உருவாக்கி அதன் பெருமையை இனைய‌தளம் மூலம் உலகுக்கு உணர்த்தலாம்.


link;
http://www.everinghamrotatinghouse.com.au/PageId/pg749731065edoras

மேலும் எளிமையாகும் கூகுல் முகப்பு பக்கம்

simplegoogleசோதனை மேல் சோதனை என்பது தான் கூகுலின் அதிகாரபூர்வ கொள்கையாக இருக்க வேண்டும்.அந்த அளவுக்கு தொடர்ந்து கூகுல் தொடர்ந்து பரிசோசதனைகளில் ஈடுபட்ட வண்ணம் இருக்கிறது.

கூகுலின் ப‌ரிசோத‌னைக‌ளின் நோக்க‌ம் புதிய‌ சேவைக‌ளை அறிமுக‌ம் செய்வ‌து ம‌ட்டும‌ல்ல‌ அத‌ன் அடிப்ப‌டை சேவையான‌ தேட‌லை மேலும் மேம்ப்டுத்துவ‌த‌ற்கான‌ முய‌ற்சியும் கூட‌.

தேட‌ல் உத்தியை ப‌ட்டை தீட்டுவ‌தில் கூகுல் காட்டும் தீவிர‌மும் ஈடுபாடும் கொஞ்ச‌ம் ஆச்ச‌ர்ய‌மான‌து தான்.தேடிய‌ந்திர‌ங்க‌ளில் கூகுல் முன்னிலை வ‌கிப்ப‌தோடு இணைய‌வாசிக‌ளை பொருத்த‌வ‌ரை தேட‌ல் என்றால் கூகுல் என்றாகிவிட்ட‌து.

கூகுலுக்கு போட்டியாக‌ எண்ண‌ற்ற‌ தேடிய‌ந்திர‌ங்க‌ள் இருந்தாலும் கூகுலை மிஞ்ச‌க்கூடிய‌ தேடிய‌ந்திர‌ம் என்னும் அந்த‌ஸ்தை பெறுவ‌து அநேக‌ தேடிய‌ந்திர‌ங்களுக்கு சாத்திய‌மாக‌வில்லை.இப்போது மைக்ரோசாப்ட்டின் பிங் கூட‌ கூகுலோடு ம‌ல்லு க‌ட்டுகிற‌தே த‌விர‌ கூகுலை வெல்ல‌ வேண்டும் என்றால் அத‌ற்கு தேட‌ல் உத்தியில் ஒரு புர‌ட்சி தேவை.

முடிசூடா ம‌ன்ன‌ன் என்பார்க‌ளே தேட‌லைப்பொருத்த‌வ‌ரை கூகுல் தான் முடிசூடா ம‌ன்ன‌ன்.அது ம‌ட்டும‌ல்ல‌ ந‌ம்மூரில் அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ளை நிர‌ந்த‌ர‌ முத‌ல்வ‌ர் என்றெல்லாம் பாராட்டுவார்க‌ளே கூகுலையும் கிட்ட‌த்த‌ட்ட‌ அப்ப‌டி நிர‌ந்த‌ர‌மான‌ முன்ன‌ணி தேடிய‌ந்திர‌ம் என்று பார‌ட்டிவிட‌லாம்.

கூகுலை எப்ப‌டி பாராட்டினாலும் த‌கும் என்றாலும் தேட‌ல் உல‌கின் நிர‌ந்த‌ர‌ நம்ப‌ர் ஒன் தேடிய‌ந்திர‌ம் என்று அத‌னை குறிப்பிடுவ‌து அதீத‌ம‌ன‌து என்று தோன்ற‌லாம்.நாளையே கூகுலை வெல்ல‌க்கூடிய‌ ஒரு தேடியந்திர‌ம் உருவாகும் வாய்ப்பிருக்கிற‌தே.

இந்த‌ உண்மையை வேறு எவ‌ரையும்விட‌ கூகுல் நன்கு உண‌ர்ந்திருக்கிற‌து.அத‌னால் தான் கூகுல் த‌ன்னுடைய‌ முத‌லிட‌த்தை த‌க்க‌ வைத்து கொள்ள‌ வேண்டும் என்ப‌தில் விழிப்புட‌ன் உள்ள‌து.இந்த‌ விழிப்புண‌ர்வே கூகுலை த‌ன‌து தேட‌ல் தொழில்நுட்ப‌த்தை மேலும் மேலும் கூறாக்கி கொண்டே இருக்க‌ தூண்டுகிற‌து.

தேட‌லின் சிக‌ர‌த்தை தொட்டுவிட்டோம் என்று இறுமார்ப்புட‌ன் இல்லாம‌ல் கூகுல் தேட‌ல் உத்தியை இன்னும் கொஞ்ச‌ம் மேம்ப‌டுத்தி விட‌ முடியாதா என்று எப்போதும் முய‌ன்று கொண்டிருக்கிற‌து.

தேட‌ல் அனுப‌வ‌த்தை இன்னும் சிற‌ப்பாக‌ ஆக்கித்த‌ருவ‌தில் கூகுல் போதும் என்ற‌ ம‌ன‌நிலையை கொண்டிருக்க‌வில்லை என்ப‌தே உண்மை.இணைய‌வாசிக‌ளுக்கு ம‌கிழ்ச்சி அளிக்க‌ கூடிய‌ சின்ன‌ சின்ன‌ நுணுக்க‌ங்க‌ளை கொண்டு வ‌ருவ‌தை கூகுல் த‌ன‌து க‌ட‌மையாக‌வே க‌ருதுகிற‌து.

இந்த‌ நீண்ட‌ முன்னுரை எத‌ற்காக என்றால் கூகுல் அறிமுக‌ம் செய்ய‌ உத்தேசித்துள்ள‌ சின‌ஞ்சிறிய‌ மாற்ற‌த்திற்காக‌ மேற்கொண்டுள்ள‌ சோத‌னையை விவ‌ரிப்ப‌த‌ற்காக‌ தான்.

கூகுலின் எளிமையான‌ முகப்பு ப‌க்க‌ம் ப‌ற்றி நீங்க‌ள் அறிந்திருக்கலாம்.ம‌ற்ற‌ முக‌ப்பு ப‌க்க‌ங்க‌ள் போல‌ எல்லாவித‌மான‌ த‌க‌வ‌ல்க‌ள் ம‌ற்றும் அம‌ச‌ங்க‌ளை போட்டு அடைக்காம‌ல் கூகுலின் முக‌ப்பு ப‌க்க‌ம் ம‌ட்டும் ப‌டு சிம்பிளாக‌ தேட‌ல் ம‌ட்டிமே எங்க‌ள் வேலை என்று சொல்லாம‌ல் சொல்வ‌து போல தேட‌ல் க‌ட்ட‌த்தையும் கூகுல் லோகோவை ம‌ட்டும் பெற்றிருக்கிற‌து.தேடல் குறிப்புகளுக்கான சொற்கள் பட்டுமே உடனிருக்கும்.

கூகுலின் முகப்பு ப‌க்க‌த்தை எளிமையின் அடையாள‌மாக‌ சொல்ல‌லாம்.இதைவிட‌ ஒரு முக‌ப்பு ப‌க்க‌ம் இருக்க‌ முடியாது என்று க‌ருத‌ப்ப‌டும் நிலையில் கூகுல் இந்த‌ முக‌ப்பௌ ப‌க்க‌த்தை மேலும் எளிமையாக்கும் முய‌ற்சியில் இற‌ங்கியுள்ள‌து.

ஏற்க‌னெவே மெல்லிடை பெற்றுள்ள‌ இள‌ம்பெண் மேலும் இளைக்க‌ முய‌ற்சி செய்தால் எப்ப‌டி இருக்கும் .அது போல‌தான் கூகுலும் த‌ன‌து முக‌ப்பு ப‌க்க‌த்தை மேலும் எளிமையாக்க‌ திட்ட‌மிட்டுள்ள‌து.கொடியிடைக்கு மேல் இளைக்க முடியாமல் போகலாம் ஆனால் கூகுலுக்கு மேலும் எளிமை சாத்திய‌ம் என்றே தோன்றுகிற‌து.

அதாவது தேட‌ல் கட்ட‌ம் ம‌ற்றும் கூகுல் லோகோ த‌விர‌ வேறு எதுவுமே இல்லாமல் முக்க‌ப்பு ப‌க்க‌த்தை கூகுல் வ‌டிவ‌மைத்துள்ள‌து.தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ இணைய‌வாசிக‌ளை கொண்டு இந்த‌ ப‌க்க‌த்தை கூகுல் ப‌ரிசோதித்து வ‌ருகிற‌து.

ஏற்க‌ன‌வே கூகுலின் முக‌ப்பு ப‌க்க‌ம் 30 சொற்க‌ளை ம‌ட்டுமே கொன்டிருக்கிற‌து. புதிய‌ ப‌க்க‌த்திலே அவை குறைந்த‌ப‌ட்ச சொற்க‌ளாக‌ குறைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.தேவையற்றதை தவிர முகப்பு பக்கத்தில் இருக்க கூடாது,இருந்து இணையவாசிகளுக்கு இடையூறாக அமையக்ககூடாது என கூகுல் கருதுகிறது.அதன் பயனே இந்த பரிசோதனை.

இந்த‌ மாற்ற‌ம் ப‌ய‌னுள்ள‌தாக‌ அமைந்தால் கூகுல் அத‌னை ந‌டைமுறைக்கு கொண்டு வ‌ர‌லாம்.

பாருங்க‌ள் தேட‌ல் ம‌ன்னனாக‌ விள‌ங்க‌ கூகுல் எப்ப‌டியெல்ல‌ம் மென‌க்கெடுகிற‌து.அது தான் கூகுலின் வெற்றி ர‌க‌சிய‌ம்.
———

கூகுலின் இந்த‌ ப‌ரிசோத‌னை தள‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்தும் வ‌ழி ப‌ற்றி டெக்கிரென்ச் த‌ல‌ம் ஒரு ப‌திவை எழுதியுள்ள‌து.
link;
http://www.techcrunch.com/2009/10/08/how-to-enable-the-super-spartan-totally-buttonless-google-home-page/

புளு டூத் காதணி

eaqrringதொழிநுட்பம் என்பது எதோ தொழில்நுட்பமானது என நினைத்து விட வேண்டாம்.என்ன குழப்புவது போல தோன்றுகிறதா?குழம்ப ஒன்றுமில்லை. தொழில்நுட்பத்தை எதோ அன்னியமனது ,நமக்கு சம்பந்தமில்லாதது என கருத வேண்டாம் என்பதே விஷயம்.

தொழில்நுட்பத்தின் உண்மையான பயன்பாடு அது நம்முடைய நடைமுறை வாழ்க்கை சார்ந்த்ததாக இருப்ப்தில் தான் இருக்கிறது .அதாவது தொழில்நுட்பம் அன்றாட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பின்னி பினைந்திருக்க வேண்டும்.வ‌டிவ‌மைப்பாள‌ர்க‌ள் இத‌னை ம‌ன‌தில் கொண்டு செய‌ல்ப‌ட‌ வேண்டும்.

தொழில்நுட்பத்தை நம் வீட்டுக்குள்ளே கொண்டு வருவதன் மூலம் வடிவமைப்பிலும் பயன்பாட்டிலும் புதுமையை உருவாக்கலாம்.

இப்ப‌டி தொழில்நுட்ப‌ம் சார்ந்த‌ வாழ்விய‌ல் பொருட்க‌ளை உருவாக்கும் வித்த‌க‌ வ‌டிவ‌மைப்பு க‌லைஞ‌ர்க‌ள் ப‌ல‌ர் இருக்கின்ற‌ன‌ர்.இவ‌ர்க‌ளின் ப‌ட்டிய‌லில் சீனாவை சேர்ந்த‌ ஃபென்டி மெங்கையும் சேர்த்துக்கொள்ள‌லாம்.

இவ‌ரைப்ப‌ற்றி சொல்வதைவிட‌ இவ‌ர் வ‌டிவ‌மைத்த‌ பொருளை சொல்வ‌தே பொருத்த‌மாக‌ இருக்கும்.

மெங் ச‌மீப‌த்தில் உருவாக்கியிருப்ப‌து ந‌வீன‌ காத‌ணியை.அதாவது புளூடூத் காதணியை.
தற்போது நீக்கமற நிறைந்திருக்கும் செல்போன் ம‌ற்றும் புளூ டுத் தொழில்நுட்ப‌ங்க‌ளை அழ‌காக‌ இணைத்து இந்த‌ காத‌ணியை உருவாக்கியுள்ளார்.சிவ‌ப்பு நிற‌ புள்ளி போன்ற‌ ப‌குதியை ந‌டுவில் கொண்டுள்ள‌ இந்த‌ காத‌ணி செல்போன் அழைப்பு அந்தால் சிவ‌ப்பாக‌ மின்னும் .அத‌ன் பிற‌கு அத‌னை மெதுவாக் அமுக்குவிட்டு பேச‌ வேண்டிய‌து தான்.

நேர்த்தியான‌து ம‌ட்டுமல்ல‌ ந‌டைமுறை நோக்கில் ப‌ய‌னுள்ள‌து.ஆன்க‌ளுக்கு ச‌ரிப்ட்டு வ‌ருமா என்று கேட்க‌கூடாது.

மெங் உருவாக்கிய‌ ம‌ற்றொரு பொருள் ந‌வீன‌ அலார‌ம் .தூக்க‌த்திலிருந்து எழுப்ப‌ கைகாடிகார‌ங்க‌ளில் துவ‌ங்கி செல்போன் வ‌ரை ப‌ல‌வித‌ சாத‌ன‌ங்க‌ள் இருந்தாலும் இந்த‌ அலார‌ம் மிக‌வும் விசேஷ‌மான‌து.

இந்த‌ அலார‌ம் இர‌ண்டு ப‌குதிக‌ளை கொண்ட‌து.ஒரு ப‌குதியில் நேர‌த்தை செட் செய்துவிட்டு மோதிர‌ம் போல‌ இருக்கும் இன்னொரு ப‌குதியயை கையில் மாட்டிக்கொள்ள‌ வேண்டும்.ச‌ரியான் நேர‌ம் வ‌ரும் போது கையில் உள்ள‌ மோதிர‌ம் மெல்லிய‌ அதிர்வுகளை உண்டாக்கும் .

அலார‌ ம‌ணியை கேட்டு அல‌றி அடித்து எழுவதைவிட‌ அல்ல‌து அல‌ட்சிய‌ப்ப‌டுத்தி விட்டு தூங்குவதைவிட‌ இப்ப‌டி கையைப்பிடித்து எழுப்புவ‌து போல‌ துயில் எழுப்ப‌ப்ப‌டுவ‌து சிற‌ந்த‌து தானே.

மெங்கின் ம‌ற்றொரு ப‌டைப்பு ம‌ல‌ர் போன்ற‌ சூரிய‌ ஒளி செல்போன் சார்ஜ‌ர். மல‌ர்க‌ளினித‌ழ் விரிவ‌து போல‌ இத‌னித‌ழ்க‌ள் விரிந்து சார்ஜாகும்.அழ‌கும் ப‌ய‌ன்பாடும் இணைதிருப்ப‌து தான் மெங் வ‌டிவமைப்பின் சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ள்.

கூகுலின் கை ஓங்குகிறது

google1கூகுல் பற்றிய சமீபத்திய செய்தி கொஞ்சம் சுவாரசியமானது.கூடவே அதிர்ச்ச்சியானது.

கூகுல் தனது முகப்பு பக்கத்திற்கான காப்புரிமையை பெற்றுள்ளது என்பதே அந்த செய்தி.2004 ம் ஆண்டில் கூகுல் காப்புரிமை கோரி விண்ணப்பித்தது. 5 ஆண்டு பரிசிலனைக்கு பிறகு த‌ற்போது காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஒரு இணையதள‌த்தின் பின்னே உள்ள புதுமையான கருத்தாக்கம்,இணைய சேவை போன்றவற்றுக்கு காப்புரிமை கோரப்படுவதும் வழங்கப்படுவதும் வழக்கமானது தான். ஆனால் முகப்பு பக்கத்திற்கு காப்புரிமை கோரப்பட்டு வழ‌ங்கப்படுவது இதுவே முதல் முறை.

ச‌ரி இத‌னால் கூகுலுக்கு என்ன‌ லாப‌ம் என்று கேட்கலாம்.கூகுலுக்கு என்ன‌ லாப‌ம் என்று கேட்ப‌தைவிட‌ ம‌ற்ற‌ தேடிய‌ந்திர‌ங்க‌ளுக்கு என்ன‌ பாதிப்பு என்று யோசித்துப்பார்த்தால் இந்த‌ காப்புரிமை எத்த‌னை முக்கிய‌மான‌து என்று புரிந்து விடும்.

த‌மிழ் மொழியை பொருத்த‌வ‌ரை ‘முருக‌ன் என்றால் அழகு’ என்ப‌து போல‌ இண்டெர்நெட்டைப்பொருத்த‌வ‌ரை கூகுல் என்றால் அழ‌கு என்று அர்த்த‌ம்.அதாவ‌து எளிமை தான் அழ‌கு என்று எடுத்துக்கொண்டால் கூகுலின் முக‌ப்பு ப‌க்க‌த்தின் முன் வேறு எந்த‌ இணைய‌தள‌மும் நிற்க‌ முடியாது.எளிமையோடு தெளிவையும் சேர்த்துக்கொண்டால் கூகுலின் முக‌ப்பு ப‌க்க‌ம் தான் பேர‌ழ‌கான‌து.

மேக‌ங்க‌ள‌ற்ற‌ வெண்மையான‌ வான‌ம் போன்ற‌ அழ‌கான‌ பின்ன‌ணியில்,ந‌டுவே ஒரே ஒரு கட்ட‌ம் .அத‌ன் கீழே தேட‌லுக்கான‌ குறிப்பு.அவ்வள‌வு தான் கூலின் முக‌ப்ப‌ ப‌க்க‌ம். ப‌க்கா எளிமை என‌றாலும் நெத்திய‌டி ர‌க‌ம். த‌க‌வ‌ல்க‌லை தேட‌ வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு வேறு எந்த‌ க‌வ‌ன‌ப்பிச‌கும் இல்லாம‌ல் வ‌ந்தோமா தேடினோமா என்று போய் கொண்டே இருக்க‌லாம். வ‌டிவ‌மைப்பு என்றால் மெகா பட்ஜெட் படங்கள் போல ஏக‌ப்பட்ட கிர‌பிக்ஸ் ம‌ற்றும் இத‌ர‌ அம்ச‌ங்க‌ளோடு ப‌டு அம‌ர்க்க‌ள‌மாக‌ இருக்க‌ வேண்டும் என்று க‌ருத‌ப்ப‌ட்ட‌ கால‌த்தில் சும்மா எளிமையான‌ முக‌ப்பு ப‌க்க‌த்தின் மூல‌ம் வ‌டிவ‌மைப்பு இல‌க்கண‌த்தையே மாற்றிய‌மைத்த‌து.

கூகுலின் வெற்றிக்கு பிறகு எளிமை எனபது இணையதளத்திற்கான வடிவமைப்பு அம்சங்களில் முக்கிய விஷயமாகிவிட்டது.அது மாட்டும‌ல்லாம‌ல் தேடியந்திர‌ம் என்றால் அத‌ன் முக‌ப்பு ப‌க்க‌ம் கூகுலைப்போல‌ இருந்தாக‌ வேண்டும் என்ப‌து எழுத‌ப்ப‌டாத‌ விதியாகி விட்ட‌து.

ஆஸ்க் தேடிய‌ந்திர‌த்திலிருந்து சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன் துவ‌க்க‌ப்ப‌டட்ட‌ cuiல் வ‌ரை எந்த‌ தேடிய‌ந்திர‌மாக‌ இருந்தாலும் அத‌ன் முக‌ப்பு ப‌க்க‌ம் கூகுலை போல‌வே இருக்கும்.

பிர‌ச்ச்னை இது தான். இப்போது கூகுல் முக‌ப்பு ப‌க்க‌த்திற்கு காப்புரிமை வாங்கியிருப்ப்தால் புதிதாக‌ துவ‌ங்க‌ப்ப‌டும் தேடிய‌ந்திர‌ங்க‌ள் வேறு மாதிரியான‌ முக‌ப்பு ப‌க்க‌த்தை உருவாக்க‌ வேண்டும். ஏற்க‌ன‌வே உள்ள‌ யாகூ போன்ற‌ தேடிய‌ந்திர‌ங்க‌ளும் பாதிக்க‌ப்ப‌ட‌லாம்.

ஒரு தேடிய‌ந்திர‌த்தின் வெற்றிக்கு கூகுல் பாணி முக்ப்பு ப‌க்க‌ம் மிக‌வும் அவ‌சிய‌ம் என்ப‌தால் இனி கூகுல் ம‌ட்டுமே அத‌னை ப‌ய‌ன்ப‌டுத்த‌முடியும்.

ஏற்க‌ன‌வே தேட‌லில் கூகுலின் அதிக்க‌ம் நில‌வும் நிலையில் இது கூகுலுக்கு எதிர்ப்பே இல்லாம‌ல் செய்துவிட‌லாம்.

இன்டெர்நெட் டைலர்.

ctop_picபொதுவாக ஆடை வடிவமைப்பு என்று வரும்போது பெண்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் ம‌ற்றும் கவன‌ம் ஆண்களுக்கு கிடைப்பதில்லை.பெண்கள் என்றால் விதவிதமான ஆடைகளை வாங்கிக்கொள்ள முடியும் என்பதோடு புதிய வடிவமைப்பு குறிப்புகளையும் எளிதாக பெறமுடியும்.

ஆனால் ஐய்யோ பாவம் ஆண்கள் ஒரே மாதிராயான சட்டைகளையும் பேண்ட்களையும் அணிவதை தவிர வேறு வழியில்லை. அதிகபட்சம் வண்ணங்களை வேண்டுமானால் விருப்ப‌ப‌டி தேர்வு செய்ய‌லாம். ம‌ற்ற‌ப‌டி வ‌டிவ‌மைப்பில் புதுமைக‌ள் அதிக‌ம் சாத்திய‌மில்லை.

இந்த‌ நிலையை மாற்ற‌ வ‌ந்திருக்கிற‌து ஒரு இணைய‌த‌ள‌ம். ஷ‌ர்ட்ஸ்மைவே என்னும் இந்த‌ த‌ள‌த்தை இண்டெர்நெட் டைல‌ர் என்றும் சொல்ல‌லாம். இந்த‌ இணைய‌ டைல‌ரிட‌ம் உங்க‌ள் விருப்ப‌ம் போல் ச‌ட்டையை தைத்துக்கொள்ள‌லாம்.

இந்த‌ தள‌த்தின் மூல‌ம் ச‌ட்டை வ‌டிவ‌மைப்பை தேர்வு செய்வ‌து சுல‌ப‌மான‌து.ஆர்ட‌ர் செய்வ‌தும் சுல‌ப‌மான‌து.

டென்மார‌க் நாட்டைச்சேர்ந்த‌ வாலிபர்க‌ள் துவ‌ங்கியுள்ள‌ இந்த‌ த‌ல‌த்தை உல‌கின் எந்த‌ மூலையிலிருந்தும் ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம். ச‌ட்டையை உங்க‌ள் இருப்பிட‌த்திற்கே அனுப்பிவைத்து விடுகின்ற‌ன‌ர். க‌ட்ட‌ண‌த்தை ம‌ட்டும் பார்த்துக்கொள்ளுங்க‌ள்.

இனி ஒரே மாதிராயான‌ ச‌ட்டையை அணிய‌ விரும்பாத‌வ‌ர்க்ள் தாராள‌மாக‌ இந்த‌ இணைய‌ த‌ள‌த்திற்கு சென்று பார்க்க‌லாம்.

—-

link;
http://www.shirtsmyway.com/design_myshirt.php