Tag Archives: வீடியோ

யூடியூப் வீடியோக்களை சேர்த்து வைப்பதற்கான இணையதளம்.

ஆற‌ அம‌ர‌ இணைய‌த்தில் உலா வ‌ருவ‌தென்ப‌து வேறு.ஆனால் அந்த பாக்கியம் எல்லா நேரத்திலும் கிடைப்பதில்லை. பெரும்பாலும் வேலைக்கு நடுவே அவசர கதியில் தான் இணையத்தில் உலாவ நேர்கிறது.அதிலும் பலர் அலுவலக நேரத்தில் தான் இண்டெர்நெட்டை பயன்படுத்துபவர்களாகவும் இருப்பதால் அரக்க பரக்க சமைக்கும் இல்லத்தலைவியைப்போல தான் இணையதளங்களையும் பார்க்க வேண்டியுள்ளது.

சிலருக்கு இண்டெர்நெட்டில் உலாவுவதே வேலையாகவும் அமையலாம்.அவர்களும் கூட வேலைக்கு நடுவே தங்களுக்கு பிடித்தமான தளங்களை போகிற போக்கில் தான் மேய வேண்டும்.

இந்த பீடிகை எதற்காக என்றால் இப்படி அவசரமாக இனைய உலா மேற்கொள்ளும் இணையவாசிகளுக்கு உதவக்கூடிய அருமையான இணைய சேவையை அறிமுக செய்வதற்காக தான்.

அதிலும் குறிப்பாக‌ யூடியூப் பிரிய‌ர்க‌ளுக்கான‌து.இன்னும் குறிப்பிட்டு சொல்ல‌ வேண்டும் என்றால் இசைம‌ய‌மான‌ யூடியூப் பிரிய‌ர்க‌ளுக்கான‌து.

மியூப் என்னும் அந்த‌ இணைய‌த‌ள‌ம் உங்க‌ள் க‌ண்ணில் ப‌டும் யூடியூப் விடியோ கோப்புக‌ளை சேமித்து வைத்துக்கொள்ள‌ உத‌வுகிற‌து.

அதாவ‌து வேலைக்கு ந‌டுவே யூடியூப் ப‌க்க‌ம் எட்டிப்பார்க்கும் போது ந‌ல்ல‌தாக‌ ஒரு விடியோ தென்ப‌ட‌லாம்.3 அல்ல‌து 4 நிமிட‌ங்க‌ள் ஓட‌க்கூடியு வீடியோ என்றாலும் அப்போது உட‌ன‌டியாக‌ பார்ப்ப‌து சாத்திய‌ம் இல்லாம‌ல் போக‌லாம்.அதிலும் இசை ஆல்பம் தொடர்பான வீடியோ காட்சி என்றால் கொஞ்சம் ஆர அமர கேட்டும் பார்த்தும் ரசிக்க தோன்றும்.

உட‌னே என்ன‌ செய்வீர்க‌ள்?பின்னர் பார்த்து ரசிக்கலாம் என்று ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ வீடியோவை ம‌ன‌தில் குறித்து வைத்து கொள்வீர்க‌ள்.அத‌ன் பிற‌கு ம‌ற‌ந்து போய் விடுவீர்க‌ள்.நேர‌ம் கிடைக்கும் போது நினைத்துப்பார்த்தால் அந்த‌ முக‌வ‌ரியும் ம‌ற‌ந்து போயிருக்கும்.அல்ல‌து ச‌ரியாக‌ நினைவில் இருக்காது.

எதையும் காகித‌த்தில் குறித்து வைக்கும் ப‌ழ‌க்க‌ம் இருந்தால் பிர‌ச்ச‌னையில்லை.ஆனால் ந‌ம்மில் ப‌ல‌ருக்கு அந்த‌ ப‌ழ‌க்க‌ம் இல்லையே.

இது போன்ற‌ நேர‌ங்க‌ளில் இணைய‌ ப‌க்க‌ங்க‌ளை புக்மார்க்காக‌ குறித்து வைக்க‌லாம் .ஆனால் யூடியூப் வீடியோக்க‌ளுக்கு இது ச‌ரிப‌ட்டு வ‌ருமா?

ஒரு க‌ட்டுரையை ம‌ட்டும் பின்ன‌ர் ப‌டிக்கமாம் என்று சேமித்து வைப்ப‌து போல‌ யூடியூப் வீடியோவையும் அப்ப‌டியே செமித்து வைக்க‌ முடிந்தால் எப்ப‌டி இருக்கும்?மீயூப் த‌ள‌ம் அத‌னை தான் செய்கிற‌து.

இந்த‌ த‌ள‌த்தில் உறுப்பின‌ரான‌ பின்ன‌ர் அவ‌ப்போது யூடியூபில் க‌ண்ணில் ப‌டும் அழ‌கான‌ வீடியோக்க‌ளை உங்க‌ள் க‌ண‌க்கில் சேமித்து கொள்ள‌லாம்.நேர‌ம் கிடைக்கும் போது அவ‌ற்றை சாவ‌காச‌மாக‌ பார்த்து ர‌சிக்க‌லாம்.

ஆக‌ இந்த‌ சேவையை ப‌யன்ப‌டுத்தினால‌ யூடியூப் விடியோக்களை மற‌தியால் த‌வ‌ற‌விடும் வாய்ப்பே இல்லை.

இந்த‌ த‌ள‌த்தில் நீங்க‌ள் பார்க்க‌ வேண்டிய‌ வீடியோக்க‌ளை சேமித்து வைப்ப‌தோடு ஏற்க‌னெவே ம‌ற்ற‌வ‌ர்க‌ள் சேர்த்து வைத்துள்ள‌வ‌ற்றையும் க‌ண்டு ர‌சிக்க‌லாம்.அந்த‌ வ‌கையில் புதிய‌ வீடியோக்க‌ளை பார்த்து ர‌சிப்ப‌த‌ற்கான‌ வ‌ழியாக‌வும் இது விள‌ங்குகிற‌து.புதிய வீடியோ காட்சிகளை பார்ப்பதற்கான ஒன்னொரு வழியாக இந்த‌ த‌ள‌த்திலேயே பிர‌ப‌ல‌மான‌ வீடியோ காட்சிக‌ளூம் ப‌ட்டிய‌லிட‌ப்ப‌ட்டுள்ள‌து.

இந்த‌ த‌ள‌ம் ம‌ற்றும் யூடியூப்பில் தேடும் வ‌ச‌தியும் உண்டு.

——–

http://www.muube.com/

நீர்மேல் நடக்கும் வீடியோ

யூடியூப்பில் வெளியாகியிருக்கும் இளைஞர்களின் சாகச வீடியோ காட்சி ஒன்று இணையவாசிகள் மத்தியில் நம்ப முடியாத உணர்வை ஏற்படுத்தி, பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது.

வாட்டர் வாக்கிங் அதாவது நீர்மேல் நடப்பது என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த வீடியோ காட்சி யூடியூப்பில் லேட்டஸ்ட் ஹிட்டாக முடிசூட்டப்பட்டுள்ளது. வீடியோ பகிர்வு தளமான யூடியூப் இணையவாசிகள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. வீடியோ காட்சிகளை பதிவேற்றவும், மற்றவர்கள் பதிவேற்றிய வீடியோ காட்சிகளை பார்க்கவும் யூடியூப் உதவுகிறது.

கூகுல் நிறுவனத்தால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கப்பட்ட யூடியூப் வீடியோ பதிவு தளங்களில் பிரபலமானதாகவும், முன்னணி தளமாகவும் விளங்குகிறது. யூடியூப்பில் இடம் பெறும் வீடியோ கோப்புகளில் அலுப்பூட்டும் காட்சிகள் அதிகம் என்றாலும் அவற்றுக்கு மத்தியில் புன்னகைக்க வைக்கக்கூடியதும், பிரம்மிப்பில் ஆழ்த்தக்கூடியதுமான காட்சிகள் அவ்வப்போது இணையவாசிகளை கவர்ந்து உலகம் முழுவதும் பிரபலமாகி விடுவது உண்டு.

அந்தவகையில் இப்போது யூடியூப்பில் இளைஞர்களின் சாகச வீடியோ காட்சி ஒன்று பிரபலமாகி இருக்கிறது. பார்ப்பவர்களை யெல்லாம் வியப்பில் ஆழ்த்தியுள்ள அந்த வீடியோ காட்சியானது இதுவரை பல்லாயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டு, லட்சக்கணக்கானோரால் ரசிக்கப்பட்டுள்ளது.

3 இளைஞர்கள் தண்ணீர் மேல் வேகமாக நடந்து செல்லும் காட்சியை அந்த வீடியோ சித்தரிக்கிறது. இதுவரை யாரும் பார்த்தறியாத செயற்கறிய செயல் எனும் வர்ணனையோடு அல்ப் கார்ட்னர் மற்றும் அவரது நண்பர்கள் இந்த வீடியோ காட்சியை பதிவேற்றியுள்ளனர். போர்ச்சுகல் நாட்டில் உள்ள ஏரி ஒன்றில் தண்ணீர் மீது இந்த 3 இளைஞர்களும் மின்னல் வேகத்தில் நடந்து செல்லும் காட்சி உண்மையிலேயே வியப்பில் ஆழ்த்தக்கூடியதாக இருக்கிறது.

முதல் பார்வைக்கு பிரம்மிப்பை உண்டாக்கும் இந்த காட்சி உண்மையிலேயே நிகழ்த்தப்பட்டதா அல்லது ஏதாவது ஏமாற்று வேலையா என்னும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் காட்னர் மற்றும் அவரது நண்பர்கள் இந்த காட்சிக்கு பின்னே எந்த ஏமாற்று வேலையும் கிடையாது. இது முழுக்க முழுக்க சாகசம் என்று உற்சாகமாக கூறுகின்றனர்.

இப்படி தண்ணீர் மேல் நடக்கும் நம்ப முடியாத செயலை ஒரு புதிய விளையாட்டு என்று வர்ணிக்கும் கார்ட்னர் இந்த விளை யாட்டிற்கு நீர்மலையேறுதல் என்று புதியதோர் பெயரையும் சூட்டியுள்ளார். நீர்மேல் நடப்பது சாத்தியமில்லாதது போல் தோன்றினாலும் உண்மையில் தண்ணீர் புகாத ஷýவை அணிந்து கொண்டால் தண்ணீர் மேல் நடக்கலாம் என்றார் அவர்.

இத்தகைய ஷýவை அணிந்து கொண்டு தண்ணீர் மேல் கால் வைத்ததும் நிற்காமல் மின்னல் வேகத்தில் ஓடுவது போல நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறுகிறார். தையல் இயந்திரத்தின் செயல்பாட்டை போல கால்கள் படுவேகமாக நடக்கும் போது இது எளிதில் சாத்தியம் என்கிறார் அவர். இப்படி போர்ச்சுகல் ஏரியில் அவர்கள் 10 அடிகளை வைத்து நடந்து காட்டியிருக்கின்றனர். மெய்யோ பொய்யோ தெரியாது. ஆனால் இந்த சாகச விளையாட்டு இன்டெர்நெட்டில் ஆச்சர்ய அலைகளை பரப்பி வருகிறது.

டிவிட்டர் வழியே யூடியூப் விடியோ

யூடியூப்பில் வெளியாகும் வீடியோக்களை பார்த்து ரசிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன.அவற்றில் இன்னும்  ஒருவழியாக ஜூப்ஸ் இணையதளத்தை கொள்ளலாம்.

யூடியூப்பில் பதிவேறும் வீடியோ படங்களை பார்க்க யூடியூப் தளமே போதுமானது தான். ஆனால் யூடியூப்பில் மூழ்கி திளைத்தவர்களுக்கு தான் அதில் உள்ள பொக்கிஷங்களை தேடிப்பிடிக்கும் நுணுக்கம் தெரியும்.மற்றவர்களுக்கு குறிப்பாக புதியவர்களுக்கு யூடியூப்பில் கொட்டிக்கிடக்கும் வீடியோ கோப்புகள் மிரள வைக்கலாம்.

யூடியூப் வீடியோ கடலில் சுவாரஸ்யமானவற்றை கண்டுபிடிப்பது சவால் தான்.

யூடியூப்பிலியே ஊறிக்கொன்டிருந்தால் தான் லேட்டஸ்ட் ஹிட்டை சட்டென்று அடையாளம் காண முடியும்.

இத‌ற்கு மாறாக‌ அவ‌ப்போது யூடியூப்பில் ஹிட்டான வீடியோ என்று மீடியா ஊதிப்பெரிதாக்கும் காட்சிக‌ளை க‌ண்டு ர‌சிக்க‌லாம் தான். ஆனால் எல்லா ந‌ல்ல‌ காட்சிக‌ளையும் காண்ப‌த‌ற்கில்லை.

ஒரு சில‌ த‌ள‌ங்க‌ள் யூடியூப்பின் சிற‌ந்த‌ வீடியோக்க‌ளை திர‌ட்டித்த‌ருகின்ற‌ன‌.அந்த‌ வ‌கையில் ஜூப்ஸ் டிவிட்ட‌ர் வ‌ழியே மேலோங்கும் யூடியூப் காட்சிக‌ளை தொகுத்து அளிக்கிற‌து.

அதாவ‌து டிவிட்ட‌ர் ப‌திவுக‌ளில் அதிக‌ம் குறிப்பிட‌ப்ப‌டும் வீடியோ காட்சிக‌ளை அப்ப‌டியே உருவி பார்வைக்கு வைக்கிற‌து.

இப்போது தான் ந‌ல்ல‌தாக‌ எதைப்பார்த்தாலும் டிவிட்ட‌ரில் ப‌கிர்ந்து கொள்ளும் ப‌ழ‌க்க‌ம் இணைய‌வாசிக‌ளூக்கு இருக்கிற‌து அல்ல‌வா? என‌வே யூடியூப் பிரிய‌ர்க‌ள் தாங்க‌ள் பார்க்கும் வீடியோ ப‌ற்றி டிவிட்ட‌ரில் குறிப்பிடுகின்ற‌ன‌ர்.வ‌ர்க‌ளின் பின்தொடர்பாள‌ர்க‌ள் ம‌ட்டுமே ப‌டிக்க‌ கூடிய‌ இந்த‌ குறிப்புக‌ளை அல‌சி ஆராய்ந்து அத‌ன‌டிப்ப‌டையில் வீடியோ காட்சிக‌ளை ஜூப்ஸ் தொகுத்த‌ளிக்கிற‌து.

இதன் முக‌ப்பு ப‌க்க‌த்தில் பெட்டி பெட்டியாக‌ விடியோ காட்சிக‌ள் க‌ண் சிமிட்டுகின்ற‌ன‌. எது ந‌ம்மை க‌வ‌ர்கிறதோ அத‌னை கிளிக்கி பார்க்க‌லாம்.

ஒவ்வொரு வீடீயோவிலும் எத்த‌னை முறை பார்க்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து,எத்த‌னை முறை டிவிட்ட‌ரில் குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து போன்ற‌ விவ‌ர‌ங்க‌ளூம் இட‌ம்பெற்றுள்ள‌ன.
ச‌மீப‌த்திய‌ வீடியோக்க‌ள் ,ம‌ற்றும் ப‌ல‌வேறு த‌லைப்புக‌ளீன் கீழும் வீடியோக்க‌ளை காண‌ முடியும். க‌ட்டாய‌ம் பார்க்க‌ வேண்டிய‌வை ர்ர்ன்னும் ப‌ரிந்துரையும் உண்டு.

அறிமுக‌மாகி ஒரே வார‌த்தில் அபார்மான‌ வ‌ர‌வேற்பை இந்த‌ த‌ள‌ம் பெற்றிருப்ப‌தாக‌ அத‌ன் உரிமையாள‌ர்க‌ள் பெருமையோடு குறிப்பிட்டுள்ள‌ன‌ர். இணைய‌வாசிக‌ள் யோச‌னைப்ப‌டி தேட‌ல் வ‌ச‌தி உள்ளிட்ட‌வ‌ற்றை அறிமுக‌ம் செய்ய‌ உத்தேசித்திருப்ப‌தாக‌வும் கூறியுள்ள‌ன‌ர்.

டிவிட்ட‌ரில் பேசப்ப‌டுவ‌தை கொண்டு யூடியூப் வீடியோக்க‌ளை பார்ப்ப‌த‌ற்கான‌ புதிய‌ வ‌ழி என்று வ‌ர்ணிக்க‌ப்ப‌டும் இந்த‌ த‌ள‌ம் ஓயாம‌ல் டிவிட்ட‌ரில் யூடீயூப் தொட‌ர்பான‌ ப‌திவுக‌ளை ப‌ரிசிலித்து அதிக‌ம் பேச‌ப்ப‌டும் வீடியோக்க‌ளை தேர்வு செய்வ‌தாக‌ தெரிவிக்கிற‌து.

யூடியூப்பில் ச‌மீப‌த்திய‌ ம‌ற்றும் சுவார‌ஸ்ய‌மான‌ வீடியோக்க‌ளை க‌ண்டு ர‌சிப்ப‌த‌ற்கான‌ இட‌ம் இந்த‌ த‌ள‌ம் என்று குறிப்பிட‌ப்ப‌ட்டிருப்ப‌தோடு, க‌வ‌ன‌மாக‌ இருங்க‌ள் இந்த‌ த‌ள‌ம் ஒரு மோக‌மாக‌ மாறிவிடும் அள‌வுக்கு உங்க‌ளை க‌வ‌ர்ந்து விடும் என்றும் எச்ச‌ரிக்கிற‌து.

யூடியூப் ம‌ற்றும் வீடியோ பிரிய‌ர்க‌ளுக்கான‌ விருந்து இந்த‌ த‌ள‌ம்.

———-

http://www.zoofs.com/

ஜாக்சனுக்கு கைதிகளின் நடன அஞ்சலி

mj-jailமைக்கேல் ஜாக்சன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உலகம் முழுவதும் உணர்வுப்பூர்வமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் சிறைக்கைதிகள் அவருக்காக நடத்திய நடன அஞ்சலி நிகழ்ச்சி யூடியூப்பில் பதிவேற்றப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அநாட்டில் உள்ள செபு மாகாண சிறைச்சாலையில் உள்ள கைதிகள் தான் இப்படி நடன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

யூடியூப்பில் புகழ்பெரும் வீடியோக்களை கவனித்து வருபவர்களுக்கு இந்த சிறை கைதிகளை நினைவிருக்கலாம். ஏற்கனவே இந்த சிறைப்பறைவகளின் நடனம் யூடியூப்பில் பதிவேற்றப்பட்டு பல லட்சம் இணையவாசிகளால் பார்க்கப்பட்டு பிரபலாமானது. (இது ப‌ற்றி இந்த‌ வ‌லைப்ப‌திவிலும் எழுத‌ப்ப‌ட்டுள்ள‌து)

இந்த சிறைக்கைதிகள் ஜாகச்னின் த்ரில்லர் ஆல்பத்தில் வரும் பாடலுக்கு ஏற்ப நடனமாடி புக‌ழ்பெற்ற‌வ‌ர்க‌ள் என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.

என்வே தான் ஜாக்ச‌ன் இற‌ந்த‌ செய்தி கேள்விப்ப‌ட்ட‌தும் இவ‌ர்க‌ள் ம‌றைந்த‌ பாப் இசை ம‌ன்ன‌னுக்கு இசையாஞ்ச‌லி செலுத்த‌ தீர்மானித்த‌ன‌ர். இத‌ற்காக‌ 1500 கைதிக‌ள் சுமார் 9 ம‌ணிநேரமடினமான பயிற்சி மேற்கொண்டு சனிக்கிழமை காலை திரில்லர் ஆல்பத்தின் பாடலுக்கு நடனமாடினர்.

ஜாக்சன் நினைவை போற்றும் வகையில் அறங்கேறிய இந்த நடன நிகழ்ச்சி பின்னர் யூடியூப்பிலும் பதிவேற்றப்பட்டது. முன்ன‌தாக‌ ஜாக்ச‌ன் குடும்ப‌த்தின‌ருக்காக சிற‌ப்பு பிராத்த‌னையும் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌து.

இங்குள்ள கைதிக‌ள் ப‌ல‌ர் ஜாக்ச‌னின் ர‌சிக‌ர்க‌ள் என்ப‌தோடு அவ‌ரை க‌டவுளாக‌வே நினைத்துக்கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள்.

—-

link;
http://www.youtube.com/watch?v=hMnk7lh9M3o

அமைதியான யூடியூப்

யூடியூப் அற்பதமானது தான். விதவிதமான வீடியோ காட்சிகளை யூடியூப்பில் நம் விருப்பம் போல பார்த்து ரசிக்கலாம். யூடியூப்பில் ஹிட்டாகும் வீடியோக்களோடு நம்மைப்போன்ற ரசிகர்கள் பதிவேற்றியுள்ள காட்சிகளையும் பார்த்து ரசிக்கலாம்.

நமது ரசனைக்கேற்ற காட்சிகளை தேர்வு செய்து கொள்ளும் வசதியும் உண்டு. நாம் ரசிக்கும் காட்சிகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். கருத்துக்களை தெரிவிக்கலாம். உண்மையில் இப்படி காட்சிகளையும் அதனடிப்படையில் கருத்துக்களை பகிந்து கொள்வதும் தான் யூடியூப்பின் பலம்.

இதன் மூலம் புதிய வீடியோ கோப்புகளை கண்டறிய முடியும்.புதிய நண்பர்களையும் தெடிக்கொள்ள முடியும்.

எல்லாம் சரிதான். ஆனால் ஒரு சிலர் இவற்றை தேவையில்லாத இடையூறாக கருதலாம்.யூடியூப் முகப்பு பக்கமே கூட அவர்களுக்கு சிக்கலானதாக குழப்பமானதாக தோன்றலாம். காட்சிகளை மட்டும் பார்த்து ரசிக்க முடிந்தால் எப்படி இருக்கும் என அவர்கள் ஏங்கலாம்.

இத்தகைய ரசிகர்களுக்காகவே , கியுடியூப் என்னும் சேவை இருக்கிறது.இது இறைச்சல் இல்லாமல் யூடியூப் காட்சிகளை பார்த்து ரசிக்க உதவுகிறது.

கியுடியூப் தளத்தில் இருந்து இதற்கான டூல்பாரை பதிவிறக்கம் செய்து கொண்டால் கருத்துக்கள் . பின்னுட்டங்கள் போன்றவை இல்லாமல் அமைதியாக காட்சிகளை மட்டும் ரசிக்கலாம்.

இதை படிக்கும் போதே அடடா, செய்திகளுக்கும் இதே போன்ற வசதி இருந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றுகிறதா? .

பெரும்பாலான இனைய பக்கங்களில் செய்திகளுக்கு அருகே விள‌ம்பரங்கள் , கிரபிக்ஸ்கள், இதர இணைப்புகள்,போன்றவை இடம்பெற்று வெறுப்பை ஏற்படுத்தலாம். இந்த தொல்லைகள் எல்லாம் இல்லாமல் தேவையான செய்தியை மட்டும் படிக்க முடிந்தால் எப்படி இருக்கும் ?

கவலையே வேண்டாம் அத்ற்கும் ஒரு இணைய தளம் இருக்கிறது.

ரீடபிலிட்டி என்னும் அந்த தளத்தில் நாம் படிக்க விரும்பும் இணைய பக்கத்தை தெரிவித்தால் நாம் விரும்பும் பகுதியை மட்டும் படிக்க முடியும்.

வாசகர்களுக்கான சரியான சேவை இது.

———–
link1;
http://quietube.com/

———

link2;
http://lab.arc90.com/experiments/readability/