100 மாநில இந்தியா

எத்தனை மாநிலங்கள் இந்தியாவில் இருந்தால் சரியாக இருக்கும்? தற்போதுள்ள மாநிலங்களின் எண்ணிக்கையை கூட்டுவது சரியாக இருக்குமா? குறைப்பது சரியாக இருக்குமா? மாநிலங்களின் எண்ணிக்கையை யும், அவற்றின் எல்லைகளையும் வரையறுக்க சிறந்த வழி எது? மாநிலங்களை சரியாக வரையறுப் பதன் மூலம் முக்கிய பிரச்சனைகளை தீர்க்க முடியுமா?சுதந்திரத்திற்கு பிறகு இந்திய மாநிலங்கள் மொழிவாரி மாநிலங்களாக மொழி பேசுபவர்களை அடிப் படையாக கொண்டு பிரிக்கப் பட்டுள்ளது. இது சரியானது என்று வாதிடுவோர் களும், நவீன இந்தியாவின் பிரச்சனைக்கு காரணமே மொழிவாரி மாநிலங்கள் தான் என்றும் கூறுபவர் களும் இருக்கிறார்கள். இதில் எது சரியானது, இந்தியாவை எப்படி பிரித்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்?

இதெல்லாம் சிந்தனைக்குரிய கேள்விகள். இந்த கேள்விகளுக்கு சுவாரசியமான பதில்களை சிந்திக்க முடியும். அதற்கு அமெரிக்க புவியியல் நிபுணர் இசல் பியர்சி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

கலிபோர்னியா பல்கலைக் கழகத்தை சேர்ந்த புவியியல் பேராசிரியரான பியர்சி வரைப் படங்களை வைத்து நாட்டின் வளம் மற்றும் பிரச்சனை களை பற்றி தீவிரமாக சிந்தித்தவர்.
புவியியலில் தனக்கு இருந்த நிபுணத்துவத்தை அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆகியவற்றோடு ஒப்பிட்டு அந் நாட்டுக்கான புதுமையான தீர்வை அவர் முன் வைத்தார். அமெரிக்கா வுக்கான புதிய வரைப் படத்தை அவர் உருவாக்கி கொடுத்தார்.

அமெரிக்க மாநிலங்களின் எண்ணிக் கையை 50லிருந்து குறைத்து 38ஆக குறைத்து, அவற்றின் எல்லைகளை வரையறை செய்து இந்த வரை படத்தை அவர் உருவாக்கி இருந்தார்.

மாநிலங்களின் எண்ணிக்கையை குறைத்து அமெரிக்காவுக்கான புதிய வரைப்படத்தை உருவாக்க வேண்டியதன் அவசியம் பற்றி பியர்சி விரிவாக விளக்கி புத்தகம் ஒன்றை எழுதியிருந்தார்.

இந்த புத்தகத்தில் மறுவரையறை செய்யப்பட்ட எல்லைகளோடு 38 மாநிலங்களை உருவாக்குவது அமெரிக்காவுக்கு எப்படியெல்லாம் சாதகமானது என்பதை அவர் புள்ளி விவரங்களோடும், புதிய கண்ணோட் டத்தோடும் எடுத்து சொல்லியிருந்தார்.

அமெரிக்காவின் வரைப்படத்தை புதிதாக உருவாக்க வேண்டும் என்று பியர்சி கூறியதற்கு முக்கிய காரணம், அந்நாட்டின் வரைப்படம் மக்கள் தொகை குறைவாக இருந்த காலத்தில் உருவாக்கப்பட்டது என்பதே. மக்கள் தொகை ஒரு பிரச்சனையாக இல்லாத தால் நிலப்பரப்பின் குணாதிசயங் களை, அதாவது அவற்றின் நடுவே பாய்ந்தோடும் நதிகள், நிமிர்ந்து நிற்கும் மலைகள், பசுமையாக பளிச் சிடும் வயல்கள், அடர்ந்த காடுகள் ஆகியவற்றை கொண்டு மாநிலங்க ளின் எல்லை வரையறை செய்யப் பட்டது.

எனினும் நாடு மற்றும் நகரங்களின் வளர்ச்சி காரணமாக ஒரு மாநிலத்தின் எல்லைக்கோடு மற்றொரு மாநிலத் தில் ஊடுருவும் நிலை உருவாகி விட்டது. உதாரணமாக பெரு நகரமாக உருவான நியூயார்க், பக்கத்தில் இருக்கும் இரண்டு மாநிலங்களில் ஊடுருவி இருந்து விட்டது. அதே போல வாஷிங்டன், சிகாகோ, செயின்ட் லூயிஸ் போன்ற நகரங்கள் இரண்டு, மூன்று மாநிலங்களில் எட்டிப் பார்க்கிறது.

இதனால் என்னவென்று கேட்க லாம்? சம்பந்தப்பட்ட மாநிலங்கள் இவற்றுக்கு பொருளாதார மற்றும் அரசியல் விலையை கொடுக்க நேர்கிறது என்று பியர்சி குறிப் பிடுகிறார். நியூயார்க் நகரத்தில் அமைக்கப் படும் புதிய ரெயில் பாதைக்கான செலவை யார் ஏற்றுக் கொள்வது? அந்த நகரத்தை சேர்ந்தவர்கள் மட்டுமா? அல்லது பக்கத்தில் உள்ள நகரத்தை சேர்ந்தவர்களுமா? என்பது போன்ற கேள்விகளை பியர்சி எழுப்புகிறார்.

இதே போல மேலும் பல சிந்தனைக் குரிய கேள்விகளை எழுப்பி, மாநிலங் களின் எல்லையால் ஏற்படும் கண்ணுக்கு தெரியாத மற்றும் கவனிக் கப்படாத பிரச்சனை களை அவர் விரிவாக அலசி ஆராய்கிறார்.

இதற்கு மாறாக, வளர்ந்து விட்ட நகரங்களின் தன்மைக்கும், அவற்றின் மக்கள் தொகைக்கும் ஏற்ப மாநிலங் களை சரியாக பிரித்து விட்டால், இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு விடலாம். அதாவது 38 மாநிலமாக வரையறை செய்வது சரியாக இருக்கும் என்கிறார் அவர்.

பியர்சி வரையறை செய்த விதத்தின் அனுகூலங்களை நாளை தொடர்ந்து பார்க்கலாம்…
புவியியல் பேராசிரியரான பியர்சி, அமெரிக்க மாநிலங்களை 38 எனும் எண்ணிக்கையில் மாற்றியமைக்க வேண்டும் என்று ஆணித்தரமான வாதங்க ளோடு தனது கருத்தை முன்வைத்தார். இப்படி மாநிலங்களை மாற்றியமைப் பதன் மூலம் அந்தந்த மாநிலத்தின் நிதி ஆதாரம் அந்த மாநிலத்திலேயே செலவு செய்யப்பட வழி ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

இதற்கு எடுத்துக்காட்டாக டெக்சாஸ் மற்றும் ரோடு ஐலேண்ட் மாநிலங் களை சேர்ந்த கவர்னர்கள் அவற்றுக்கு ஏற்ற சம்பளத்தை பெறவில்லை யென்று அவர் கூறினார். இதனை புரிந்து கொள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஜீப் வழங்கப் பட்டு அந்த ஜீப்பில் கவர்னர் நகர் உலா வந்து நிர்வாகம் செய்கிறார் என்று வைத்து கொள்வோம்.

பெரிய மாநிலத்தை சேர்ந்த கவர்னர் அதிக தூரம் ஜீப்பில் உலாவ வேண்டியிருக்கும். சிறிய மாநிலத்தை சேர்ந்த கவர்னர் குறைவான தூரமே பயணம் செய்ய வேண்டியிருக்கும்.
நிர்வாக விஷயத்திலும் இப்படித் தான் நடக்கிறது என்றார் பியர்சி. எனவேதான் நிர்வாக செலவுகள் சீராக கூடிய வகையில் மாநிலங்களின் எல்லைகளை நிர்ணயித்தாக வேண்டும் என்றார் அவர்.

பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு, 38 மாநிலங்களை அவர் உருவாக்கி கொடுத்தார்.
அவர் உருவாக்கிய புதிய மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலமும் ஒரு பெரு நகரத்தை கொண்டதாக இருந்தது. அந்த நகரமும் மாநிலத்தின் மையப் பகுதியில் இருந்தது.
மையப் பகுதியில் முக்கிய நகரம் இல்லாத இடங்களில் அனைத்து சிறு நகரங்களி லிருந்தும் அந்நகரை வந்தடையும் வகையில் மாநிலத்தை அவர் உருவாக்கி இருந்தார்.
எல்லா நகரங்களுமே மற்ற பகுதிக்கு செல்ல ஏறக்குறைய ஒரே அளவிலான போக்குவரத்து தூரத்தை கொண்டு இருக்கும் வகையில் அமைந்திருந்தன.

ஒரு மாநிலம் பெரிது, மற்றொரு மாநிலம் சிறியது என்ற நிலை இல்லாமல் எல்லாமே சீராக இருந்தன. இந்த மாநிலங்களுக்கு பெயர் வைக்கும் பொறுப்பை புவியியல் மாணவர்களிடம் விட்டு விடலாம் என்றும் பியர்சி ஆலோசனை கூறியிருந்தார்.
மாநிலத்தின் கலாச்சார மற்றும் பண்பாட்டு கூறுகளுக்கு ஏற்ப அவற்றுக்கு பெயர் வைக்கப்பட வேண்டும் என்பது அவரது எண்ணம்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் பொருத்த மான பெயர் என்ன என்பதற்கான உதாரணங் களையும் அவர் கூறியிருந்தார். தான் கூறிய விஷயங்களோடு ஒரு மாநிலத்தின் வளம், அவற்றின் நீர் ஆதாரம் போன்றவற்றையும் கருத்தில் கொண்டு மாநிலங்களின் எல்லையை வரையறை செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் மாநில தலைநகரங்களை தீர்மானிப்பதற்கு தனியே விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

மாநில தலைநகரங்கள், அந்த மாநிலத்தின் தேவைகளை அரசியல் ரீதியாக மற்றும் பூகோள ரீதியாக நிறை வேற்றும் வகையில் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இப்போது யோசித்து பாருங்கள். இந்தியாவில் மாநிலங்களை வரையறை செய்தபோது நதிநீர் பங்கீடு பற்றி யோசித்து செயல் பட்டிருந்தால் காவிரி பிரச்சனையை தவிர்த்திருக்கக் கூடும்.
ஒவ்வொரு பகுதியிலும் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப அவற்றுக் கான நீர் ஆதார வினியோகமும் இருக்க வேண்டும் எனும் தொலை நோக்கு பார்வை இருந்திருந்தால் அவற்றோடு மொழி, கலாச்சாரம், அரசியல் போன்ற அம்சங்களை யும் ஒருங்கிணைத்து பிரச்சனைக்கும் சிக்கல் இல்லாத வகையில் மாநிலங்களின் எல்லைகளை வரையறை செய்திருக்க முடியும். எப்படி பார்த்தாலும் புவியியல் ரீதியாக வரைப்படத்தை வைத்துக் கொண்டு ஒரு நாட்டின் பிரச்சனையை புரிந்து கொள்ள முயல்வது புதிய விஷயம்தான்.
கால மாற்றத்திற்கேற்ப நம்முடைய சிந்தனை மற்றும் திட்டமிடுதலை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை யும், அதற்கு வரைப் படங்கள் மிகச் சிறந்த ஆயுதமாக இருக்கும் என்பதை யும் உணர்த்தும் உதாரணம் இது.

வரைப்படம் சார்ந்த இத்தகைய புதுமை யான சிந்தனைகள் அநேகம் இருக்கின்றன. தி மேப் ரூம் எனும் பிளாக் தளத்தில் இந்த சிந்தனைகளை எதிர்கொள்ளலாம். உதாரணமாக அமெரிக்காவின் தற்போ தைய மாகாணங்கள் மீது வெவ்வேறு நாடுகளின் பெயர்கள் எழுதப்பட்டிருக்கும் வரைபடம் ஒன்றை பார்க்க முடிகிறது.

இதன் உள்ளர்த்தம் என்னவென்றால், இந்த நாடுகளின் ஒட்டுமொத்த வருமானம் குறிப்பிட்ட அமெரிக்க மாநிலத்தின் வருமானத்துக்கு நிகராக இருக்கிறது என்று பொருள். உலக நாடுக ளின் வறுமையையும், அமெரிக்காவின் வல்லாதிக்கத்தையும் ஒரே நேரத்தில் உணர்த்தி விடும் விமர்சன வரைபடம் இது. இதேபோல உலக நாடுகள் கோல் களாக இருந்தால் எப்படி இருக்கும் என்று கேள்வி கேட்கும் வரைபடம் ஒன்று இருக்கிறது.

இந்த வரைபடம் சூரிய மண்டலத் தில் உள்ள கோள்களையெல்லாம் நாடுக ளாக்கி, அவற்றை வரை படத்தில் இடம் பெற வைத்திருக்கின்றன. அதன்படி வியாழன் கிரகம் ரஷ்யாவாக வும், சனிக்கிரகம் கனடாவாகவும், நெப்டி யூன் சவுதி அரேபியாகவும், செவ்வாய் கிரகம் ஸ்விட்சர்லாந்தாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது. அதாவது கோல்களின் பரப்பளவை பூமியின் பரப்பளவோடு ஒப்பிட்டு அவற்றை சுருக்கிக்கொண்டால் ஒவ்வொரு கிரகமும் எந்த நாட்டின் பரப்பளவுக்கு நிகராக இருக்கிறதோ அந்த நாடு இடத்தில் அந்த கிரகத்தை வரை படத்தில் பொருத்தி விடலாம்.

கோல்கள் பிரம்மாண்டமானவை என்பதால் அவற்றின் பரப்பளவை புரிந்து கொள்ள இந்த வரைபடம் கைகொடுக்கும். இந்த வரைபடத்தின் படி, சமீபத்தில் கிரகம் என்னும் அந்தஸ்திலிருந்து நீக்கப்பட்ட புளூட்டோ எத்தனை சிறியதாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். புளூட்டோ கிரகமாக அங்கீகரிக்கப்படாமல் போனதில் அதன் பரப்பளவு ஒரு முக்கிய காரணம் என்னும் போது இந்த வரைபடத்தின் அருமையை தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.

————–

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “100 மாநில இந்தியா

  1. புதுசுபுதுசா மாநிலங்களை உருவாக்குனா அதே அளவு அரசியல் வியாதிகளும் லஞ்சப்பேய்களும் பெருகிக்கிட்டே போவாங்க.

    சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க.

    மக்கள் தொகையை அதே நூறால் வகுத்தா நல்லா இருக்கும்.(-:

    Reply
  2. நிறையா விஷயம் சொல்லி இருக்கீங்க. சூடா சுட்டியும் தந்திருந்தா போய் பார்க்க வசதியா இருந்திருக்குமே!

    Reply
  3. புதிய தகவல்கள். நன்றி…

    Reply
  4. இதில் உள்ள நடைமுறை சிக்கல் என்ன என்று தெரியவில்லை..

    ஆனால் கேட்க நல்லா இருக்கு

    Reply

Leave a Comment to சரவணகுமரன் Cancel Reply

Your email address will not be published.