விக்கி மூலம் ஆய்வு

wikiமக்கள் கலைக்களஞ்சியமான விக்கிபீடியா ஆகச்சிறந்ததா அல்லது அதிமோசமானதா என்னும் விவாதம் இன்டெர்நெட் உலகில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
.
விக்கிபீடியாவின் பலம் எளிதாக புரிந்துகொள்ளக்கூடியதே. யார் வேண் டுமானாலும் அதில் தகவல்களை இடம்பெற வைத்து ஏற்கனவே உள்ள தகவல்களை திருத்தி அமைக்கலாம். இதன் காரணமாக அது சாமானியர் களின் பங்களிப்போடு இதுவரை உலகம் கண்டிராத மிகப்பெரிய தகவல் களஞ்சியமாக உருவாகியிருக்கிறது.

மிகச்சிறந்த கலைக்களஞ்சியங்களை யெல்லாம் மிஞ்சக்கூடிய வகையில் மிக பிரம்மாண்டாக விக்கி பீடியா வளர்ந்திருக்கிறது. விக்கி பீடியாவின் பலவீனமும் எளிதாக புரிந்துகொள்ளக் கூடியதே. சொல்லப் போனால் அதன் பலம் தான் அதன் பலவீனமும்.
யார் வேண்டுமானாலும் தகவல் களை இடம்பெறவைத்து திருத்தலாம் என்பதால், வேண்டுமென்றே அதில் பிழைகளை இடம்பெற வைப்பதோ அல்லது தவறான நோக்கத்தோடு மாறுபட்ட தகவல்களை சேர்த்து விடுவதோ மிகவும் சுலபம்.

இதன் காரணமாக விக்கிபீடியாவின் நம்பகத் தன்மை கேள்விக்குறியது என்று வாதி டப்பட்டு வருகிறது. ஒரு கலைக் களஞ் சியத்தின் ஆதார பலமான நம்பிக்கை விக்கிபீடியாவில் ஒரு போதும் கை கூடாது என்றும் கூறப் படுகிறது.

அறிஞர்களின் மேற்பார்வை இல்லா மல் சாமானியர்களால் உருவாக்கப் படுவதே விக்கிபீடியாவின் பலம் என்றால் அதுதான் அதன் மிகப்பெரிய குறையும்கூட. எனவே விக்கி பீடி யாவை இன்டெர்நெட்டின் சக்தியை பிரதிபலிக்கும் மாபெரும் முயற்சி என கொள்வதா? அல்லது நம்பகத் தன்மையற்ற ஒரு முயற்சி என்று எடுத்துக்கொள்வதா என இன்னமும் இறுதி செய்யப்பட வில்லை.

இந்த விவாதத்துக்கு நடுவே விக்கி பிரியாவின் தனிச்சிறப்பு அதனை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதைப்பொறுத்தே அமையும் என்று கூறக்கூடிய வகையில் இஸ்ரே லைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அதனை புதுமையாக பயன்படுத்த முற்பட்டு இருக்கின்றனர்.
ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ட்ஸ் அதாவது செயற்கை மூளை துறையில் ஆய்வில் ஈடுபட்டு வரும் ஆய்வாளர் கள் சாப்ட்வேரை புத்திசாலித்தனமாக ஆக்க விக்கிபீடியாவின் உதவியை நாடியுள்ளனர். சாப்ட்வேர் சொன்ன பணியை செய்து முடிக்கும் திறன் படைத்தது.

ஆனால் சில நேரங்களில் அவற்றால் மிகச்சாதாரண விஷயங் களைக் கூட புரிந்துகொள்ள முடியாது. மனிதர்கள் பார்த்தாலே தெரிந்து கொண்டு விடும் விஷயங்களை சாப்ட்வேர் அறிந்துகொள்வதில்லை. செயற்கை மூளையை நோக்கிய பய ணத்தில் இதுவே பெரும் தடையாக இருக்கிறது.

இந்நிலையில், சாப்ட்வேருக்கு விக்கிபீடியாவை பக்கபலமாக ஆக்க இஸ்ரேல் ஆய்வாளர்கள் தீர்மானித்து உள்ளனர். அதாவது தகவல்களை தேடும்போது அல்லது விவரங்களை புரிந்துகொண்டு செயல்பட வேண்டி இருக்கும்போது, சாப்ட்வேரை விக்கி பீடியாவின் தகவல்களை பின்புலமாக கொள்ளும் வகையில் அவர்கள் அமைத்துள்ளனர்.

உதாரணத்துக்கு வேண்டாத இ- மெயில்களை தடுக்கும் சாப்ட்வேர் ஒன்றை எடுத்துக்கொள்வோம். இந்த சாப்ட்வேர் எப்படி செயல்படுகிறது என்றால், குறிப்பிட்ட சில சொற்கள் இடம்பெற்றால் அந்த இ-மெயிலை தடுத்து நிறுத்த அவை முற்படுகின்றன.

ஆனால் உண்மையிலேயே ஒரு இ- மெயில், நல்லதா அல்லது வீணானதா என்பதை சாப்ட்வேரால் கண்டு பிடிக்க முடியாது. ஆனால் நாம் ஒரு இ-மெயிலை படித்துப்பார்க்கும்போதே அதன் பயன்பாட்டை நொடிப்பொழுதில் தீர்மானித்து விடுவோம்.

சாப்ட்வேர் இந்த விஷயத்தில் தடுமாறும். அது மட்டுமல்லாமல், வைட்டமின் என்ற வார்த்தை இடம்பெற்றால் அது குப்பை மெயிலாக இருக்கும் என்று அறிவுறுத் தப்பட்டால், சாப்ட்வேர் ரொம்ப அழகாக வைட்டமின் என்ற வார்த்தை எங்கே தென்பட்டாலும் அந்த இ- மெயிலை தடுத்துவிடும்.

ஆனால் வைட்டமினுக்கு பதிலாக பி-12 என்ற வார்த்தை இடம்பெற்றால் சாப்ட்வேர் விஷயம் தெரியாமல் அந்த மெயிலை அனுமதித்துவிடும். மனிதர்கள் இதைப்பார்த்தால் பி-12 என்றாலும் வைட்டமின் என்று புரிந்துகொண்டு அந்த மெயிலை விலக்கி விடுவார்கள். சாப்ட்வேருக்கு அந்த லாவகம் தெரியாது.

இந்த இடத்தில்தான் விக்கிபீடியா வின் உதவியை நாட இஸ்ரேல் ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதுபோன்ற நேரங்களில் சாப்ட்வேர், குறிப்பிட்ட வார்த்தைகளுக்கான தகவல்களை விக்கி பீடியாவில் தேடிப் பார்க்கும்.

விக்கி பீடியாவில் பார்க்கும்போது பி-12 என்பது ஒரு வைட்டமின் என்ற தகவல் இடம்பெற்றிருக்கும். உடனே சாப்ட்வேர் அந்த இ-மெயில், பயனற் றது என தீர்மானித்து விடும். இப்படி யாக, விக்கிபீடியாவில் இடம்பெற்றுள்ள தகவல்களை பின்புலமாகக்கொண்டு சாப்ட்வேர் மேலும் புத்திசாலித்தனமாக செயல்படும் என்று கருதப்படுகிறது.

மனிதர்கள் முடிவெடுக்கும்போது அவர்கள் ஏற்கனவே சேர்த்து வைத்திருக்கும் தகவல்களே முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் சாப்ட்வேருக்கான தகவல் கேந்திரமாக விக்கிபீடியா அமையும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்
———-

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.