உங்களிடம் இண்டெர்நெட் இணைப்பு ,ஹெட்ஃபோன்,சாய்வு நாற்காலி இருக்கிறதா, அப்படியென்றால் வாருங்கள் வலை மூலம் வசியம் செய்து காட்டுகிறேன் என அழைப்பு விடுத்துருக்கிறார் பிரிட்டிஷ் மனோவசிய நிபுணர் ஒருவர்.
கிறிஸ் ஹுயுஜ்ஸ் என்பது அவரது பெயர்.முறைப்படி மனோவசிய கலையை கற்றுக்கொண்டு செயல்பட்டு வருவதாக கூறும் ஹுயுஜ்ஸ் இண்டெர்நெட் மூலம் அதிகமானோரை மனோவசியத்தில் ஆழ்த்தி கின்னஸ் சாதனை செய்ய திட்டமிட்டிருக்கிறாராம். இதற்கான முயற்சியில் நாளை(4 ம் தேதி) ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார். நாளை உலக மனோவசிய தினம் என்பது கவனிக்க தக்கது.
மனோவசியம் பலரும் அறிந்தது தான. மனோவசித்துடன் கலந்துள்ள ஒருவித புதிர்த்தன்மை மற்றும் அச்ச உணர்வை மீறி அந்த கலை அறிவியல் பூர்வமானது மற்றும் மருத்து ஆயுதமாக கருதப்படுகிறது.
இத்தகைய நம்பிக்கை கொண்ட ஹுயுஜ்ஸ் மனோவசியத்தின் சக்தியை உணர்த்துவதற்காக இண்டெர்நெட் வழியே மனோவசியம் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம். இதற்காக சோஷியல் டிரான்ஸ் என்னும் இணையதளத்தையும் அமைத்திருக்கிறார்.
இண்டெர்நெட் வழியே எப்படி மனோவசியம் செய்ய முடியும் என்ற சந்தேகம் ஏற்படலாம்.இது சாத்தியமே என்று சொல்லும் ஹுயுஜ்ஸ் ஹெட்ஃபோன் மூலம் தன்னிடம் காதுகளை கொடுத்தால் போதும் வசியம் செய்துவிடுவேன் என்கிறார்.எனவே ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் ஆகிய சமூக வலைப்பின்னல் இணையதளத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் இந்த முயற்சியில் பன்கேற்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.வலைப்பின்னல் தளங்கள் பரஸ்பரம் தொடர்பு கொள்ள சிறந்த வழி என்று கூறும் ஹுயுஜ்ஸ் மனோவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இவை ஏற்ற சாதனமாக இருக்கும் என்றும் நம்புகிறார்.
மனோவசியம் என்றதுமே சிலருக்கு சந்தேகமும் அச்சமும் இருக்கலாம்.ஆகவே நிகழ்ச்சி துவங்குவதற்கு முன் பல்வேறு கேள்விகளூக்கு பதிலளிக்கவும் திட்டமிட்டிருக்கிறார் ஹூயுஜ்ஸ்.
18வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்கலாம்.ஆனால் கர்ப்பினிகள் மற்றும் உளவியலிரச்ச்னை உள்ளவர்கள் பங்கேற்க கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிஅ ஒரு வகையான சமூக பரிசோதனை என்று அவர் குறிப்பிடுகிறார்.ம்னோவசியத்தின் ஆற்றல் மீது அளவில்லா நம்பிக்கை கோண்டுள்ள நான் பலரும் பலகலைகழகங்கள் போன்ற இடங்களில் நடைபெறும் ம்னோவசிய காட்சி நிகழ்ச்சிகளின் போது அதனை அறிமுகம் செய்து கொள்வதை குறிப்பிட்டுவிட்டு அதன் ஆதார குணமான நல்ல கட்டளைகளின் சக்தியை உணர்த்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
காட்சி நிகழ்ச்சிகளை நடத்தும் போது இண்டெர்நெட் மூலம் ஓரு மனோவசிய நிகழ்ச்சியை நடத்தினால் என்ன என்றும் கேட்டுள்ளார்.
…………
பின் குறிப்பு;மனோவசியத்தின் மீது எனக்கு ஈர்ப்பு உண்டென்றாலும் இந்த பதிவை தகவல் நோக்கத்துடனே எழுதியுள்ளேன். மேலும் இண்டெர்நெட் எத்தகைய வாய்ப்பிகளை எல்லாம் ஏறப்டுத்தி தருகிறது என்பதை உணர்த்துவதற்கான உதாரணமாகவே இதனை கருதுகிறேன். மற்றபடி இந்த மனோவசிய பரிசோதனையில் ஈடுபடலாம் என்று நான் பரிந்துரைக்கவில்லை. அது அவரவரின் சொந்த விருப்பம்.
………
அன்புடன் சிம்மன்
———

0 Comments on “இண்டெர்நெட்டில் மனோவசிய பரிசோதனை”
Muhammad Ismail .H, PHD,
அன்பின் நரசிம்மன்,
உண்மையில் மனோவேகம் என்பது இந்த பிரபஞ்சத்தில் ஒளியை விட வேகமானது. அதன் ஆற்றலும் அதிகம். மனதை சரியாக கையாளத்தெரிந்தவர்கள் அனைவரும் வெற்றியாளர்களே.
// 18வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்கலாம்.ஆனால் கர்ப்பினிகள் மற்றும் உளவியல் பிரச்ச்னை உள்ளவர்கள் பங்கேற்க கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.//
மேலுள்ள முன்னெச்சரிக்கையில் கிறிஸ் ஹுயுஜ்ஸ் சேர்க்க மறந்த ஒன்றை நான் தருகிறேன்.
” BSNL இணைய இணைப்பு வைத்திருப்பவர்களும் இதில் பங்கேற்க அனுமதி இல்லை”
காரணம் மனோவசியத்தில் ஈடுபட்டு பாதிக்கிணறு தாண்டிய நிலையில் பட்டென்று இணைய இணைப்பு அறுபட்டு விட்டால் , அதில் ஈடுபட்டிருந்த நபரின் நிலை என்னவாகும்?. அந்தோ , நினைத்துப்பார்க்கவே படு பயங்கரமாக உள்ளது. ஆகவே BSNL ஐ நம்பி இது போன்ற விபரித விளையாட்டில் ஈடுபட வேண்டாம். என்ன நான் சொல்வது சரியா? எதையும் மாத்தி யோசிக்கனும் !!! என்னப்போல !!!
குறிப்பு – கடந்த 2 மாதமாக தமிழகத்தில் BSNL இணைய இணைப்பில் உள்ள Modem களில் PPP Down என்ற தகவல் வந்து கணணி வல்லுனர்களின் உயிரை எடுக்கிறது. இதற்கு வழக்கம் போல் வாடிக்கையாளரே காரணம் என BSNL சாதிக்கிறது. ஆனால் அதற்கு Port மாற்றினால் பிரச்சினை தீர்கிறது. ஆனால் வரும் பில் கூடுதலாக வருகிறது. என்ன செய்வதனெ புரியவில்லை. இதற்கிடையில் நான் 100% BSNL ஆதரவாளன். காரணம் அதில் தான் அதிகமாக நம் சகோதர, சகோதரிகள் வேலை பார்க்கிறார்கள். அதற்காகவாவது அது நன்றாக இயங்கவேண்டும்.
cybersimman
மிகவும் சரி ஐயா
முஹ்ஸின்
வித்தியசமான முயற்சி.:)
IQBAL SELVAN
I Love this post
http://wp.me/KkRf
soundria
i hope