ஒரு லட்சிய கூரியர் நிறுவனத்தின் இணையதளம்

மிரக்கில் கூரியர் நிறுவனத்தை ப‌ற்றி அறியும் போது விபூதி பூஷன் பாந்த்யோபாத்யா எழுதிய ‘லட்சிய இந்து ஓட்டல்’ என்னும் நாவல் தலைப்பு  தான் நினைவுக்கு வருகிறது.இந்த நாவல் தலைப்பு போலவே இந்நிறுவனத்தையும் லட்சிய கூரியர் நிறுவனம் என்று அழைக்கலாம்.

அப்படி இந்நிறுவனத்தில் என்ன சிறப்பு என்று கேட்கலாம். இங்கு பணியாற்றுபவர்கள் அனைவருமே காது கேளாதோர் என்பது தான் இதன் தனிச்சிறப்பு.

குறைபாடு உள்ளவர்களை அலட்சியப்படுத்துவதையும் அவமானப்படுத்துவதையும் வழக்கமாக கொண்ட ஒரு சமூகத்தில் காது கேளாதோருக்காகவே துவங்கி வெற்றிகரமாக செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் லட்சிய நோக்கு பாராட்டத்தக்கது தான்.

ஆனால் இந்நிறுவனத்தின் பின்னே பரிதாப எண்ணம் கிடையாது.மற்ற எந்த வர்த்தக நிறுவனத்தையும் போலவே இதுவும் லாப நோக்கோடு நடத்தப்படுவது தான்.லாபம் ஈட்ட முற்படும் அதே நேரத்தில் சமூக குறிக்கோளோடும் செயல்பட வேண்டும் என்பதை இந்நிறுவனம் தாரக் மந்திரமாக கொன்டிருக்கிற‌து.

காது கேளாதோரால் எதையும் செய்ய முடியும் என்று உணர்த்துவதோடு அவர்களுக்கான வேலை வாய்ப்பையும் இந்நிறுவனம் ஏற்படுத்தி தந்துள்ள‌து.

உலகிலேயே இந்தியாவில் தான் காது கேளாதோர் அதிகம் உள்ளனர் என்னும் புள்ளி விவரத்தையும் காது கேளாதோர் பெரும்பாலும் மெழுகு வர்த்தி தாயாரிப்பு போன்ற துறைகலிலேயே வேலைக்கு சேர்த்துக்கொள்ளப்படுகின்ற‌னர் என்னும் செய்தியையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது இது எத்தகைய முன்னோடி முயற்சி என்பதை புரிந்து கொள்ளலாம்.

காஷ்மீரை சேர்ந்த துருவ் லாக்ரா என்னும் வாலிபர் தான மிரக்கில் கூரியர் நிறுவனத்தை துவக்கி நடத்தி வருகிறார்.மும்பையில் வசிக்கும் இவர் சர்வதேச நிதி நிறுவனத்தில் பார்த்துக்கொண்டிருந்த பெரிய வேலையில் இருந்தவர். பின்னர் அந்த வேலை விட்டு தாஸ்ரா என்னும் அமைப்பில் பணியாற்றச்சென்று விட்டார்.

அரசு சாரா அமைப்புகள் நிர்வாகவியல் முறைகளின் மூலம் செயல்திற‌னை மேம்படுத்திக்கொள்ள வழி செய்து வரும் அமைப்பாக தாஸ்ரா செயல்படுகிறது. இங்கு இருந்த போது தான் அவருக்கு சமூக நோக்கிலான நிறுவனத்தை துவக்கும் எண்ணம் ஏற்பட்டுள்ள‌து.

காது கேளாதோரை கொண்டே நிறுவனம் ஒன்றை துவக்க விரும்பி எந்த துறை ஏற்றதாக் இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தார். அப்போது தான் தற்செயலாக கூரியர் ஊழியர் ஒருவரை பார்த்திருக்கிறார். உடனே கூரியர் சேவை காது கேளாதோருக்கு பொருத்தமாக‌ இருக்கும் என்று தோன்றியது.

இந்த எண்ண‌த்தின் மூலம் பிற‌ந்தது தான் மிரக்கில் கூரியர்ஸ் நிறுவனம்.

காது கேளாதோராக பணிக்கு அமர்த்தி அவர்களுக்கு முறைப்படி பயிற்சி அளித்து கூரியர் சேவை வழங்கி வருகிறார்.ஊழியர்கள் யாரிடமும் பரிதாபத்தை எதிரபார்ப்பதில்லை. சேவையின் தரத்தில் சமரசமே இல்லாமல் செயல்பட்டு வருகின்ரனர்.

ஊழியர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று கூரியர் தபால்களை சேர்க்க வசதியாக‌ நகரின் வரைபடம் மற்றும் இதர பணிக்குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.அதோடு எஸ் எம் எச் வசதி தகவல் தொடர்பிறகு பெருமளவு கை கொடுக்கிற‌து.

காது கேளாதோருக்கு என்று உள்ள சைகை மொழி அடங்கிய குறிப்புகளை கையோடு எடுத்துச்செல்கின்ற‌னர்.

இந்நிறுவனத்தின் இணையதளத்தில் எங்கள் நிறுவனம் ஒரு தர்ம ஸ்தாபனம் அல்ல மாறாக் வர்த்தக செயல்பாட்டில் சமூக சிந்தனையை உள்ளடக்கிய சமூக வர்த்தகம் என பெருமித்ததோடு குறிப்பிடப்பட்டுள்ளது.வர்த்தக் செயல் திறனோடு சமூக நோக்கை கலந்து செயல்படுகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காது கேளாதோர் தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் காது கேளாதோர் பற்றிய முக்கிய இணையதளங்களூக்கும் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

கொடை வள்ளல்களை விட சமுக நோக்கோடு வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்களே உலகில் மாற்ற‌த்தை கொண்டு வர உள்ளவர்களாக க‌ருதப்ப‌டுகின்ற‌னர்.

சமூக தொழில் முனைவோர் நெறு குறிப்படப்படும் இத்தகைய முன்னோடி மனிதர்கள் பற்றி இணையத்தின் மூலம் அறிய நேரும் போது அவர்களைப்பற்றியும் தொடர்ந்து எழுதலாம் என்று எண்ணியுள்ளேன் .

 ————-

(பின் குறிப்பு; இந்த  விபூதி பூஷன் பாந்த்யோபாத்யா தான் பதேர் பாஞ்சாலி நாவலை எழுதியவர்.)

——

http://www.miraklecouriers.com/index.htm

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “ஒரு லட்சிய கூரியர் நிறுவனத்தின் இணையதளம்

  1. நல்லதொரு பயனுள்ள தகவல். தொழிலும் சேவையும் இணைந்த இந்நிறுவனம் பாராட்டத்தக்கது.

    வாழ்த்துகள்.

    Reply

Leave a Comment to மஞ்சூர் ராசா Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *