எனக்கேற்ற ரெஸ்டாரண்ட் எது?

இண்டெர்நெட் சாப்பாட்டு ராமன்களுக்கானதாக இருப்பதாக சொன்னால் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

ஆனால் உண்மையிலேயே இண்டெர்நெட் சாப்பாட்டு ராமன்களின் சார்பானதாகவே இருக்கிறது.

இதில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால்,மேலே உள்ள தலைப்புக்கான அர்த்தம் என்னவாக இருக்கும் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்?ஒருவர் விரும்பக்கூடிய சுவைக்கேற்ற ரெஸ்டாரன்டை கண்டு பிடித்து தரும் இணையதளம் கேட்கும் கேள்வி என்றே இதனை நீங்கள் புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.

கார‌ண‌ம் இண்டெர்நெட்டில் சிற‌ந்த‌ ரெஸ்டார‌ண்ட் ம‌ற்றும் ஓட்ட‌ல்க‌ளை க‌ண்டுபிடிக்க‌ உத‌வும் இணைய‌த‌ள‌ங்க‌ள் அநேக‌ம் இருக்கின்றன.நீங்க‌ள் இருக்கும் ந‌க‌ரை குறிப்பிட்டு உங்க‌ளுக்கு எந்த‌ வ‌கையான் உண‌வு பிடிக்கும் என்று தெரிவித்தால் அத‌ன‌டிப்ப‌டையில் சிற‌ந்த‌ ரெஸ்டார‌ண்ட்க‌ள் எங்கே இருக்கின்ற‌ன‌ என‌ அடையாள‌ம் காட்டும் இந்த‌ த‌ள‌ங்க‌ள் அவ‌ற்றில் சாப்பிடுவ‌த‌ற்கான‌ இட‌த்தை முன்ப‌திவு செய்யும் வ‌ச‌தியையும் அளிக்கின்ற‌ன.

நீங்க‌ள் வெளிநாடுக‌ளூக்கு செல்லும் ப‌ட்ச‌த்தில் அங்கே உள்ள‌ நிற‌ந்த‌ ரெஸ்டார‌ன்ட்க‌ளை கூட‌ தெரிந்து கொள்ள‌லாம்.ரெஸ்டார‌ன்ட்க‌ளை செட்டுக்காட்டும் செய‌லியான‌ அர்ப‌ன் ஸ்பூன் ஐபோன் செய‌லிக‌ளில் மிக‌ பிர‌ப‌ல‌மான‌தாக‌ இருக்கிற‌து.
அது ம‌ட்டும் அல்ல குறிப்பிட்ட ரெஸ்டாரண்டகளில் சாப்பிட்டவ‌ர்கள்இந்த‌ த‌ள‌ங்க‌ளின் வ‌ழியே சாப்பாட்டின் சுவை ம‌ற்றும் சேவை,விருந்தோம்ப‌லின் தன்மை குறித்து க‌ருத்துக்க‌ளை விம‌ர்ச‌ன‌ங்க‌ளை ப‌கிர்ந்து கொள்ள‌லாம்.இந்த குறிப்புகளை பார்த்தே ரெஸ்டாரண்ட்களின் லட்சணம் எப்படி என்றும் கணீத்துவிடலாம்.

எல்லாம் ச‌ரி இத‌ற்கும் இண்டெர்நெட்டை சாப்பாட்டு ராம‌ன்களூக்கான‌து என‌ சொல்வ‌த‌ற்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்?இந்த‌ தேட‌ல் எல்லாம் சாப்பிடுப‌வ‌ர்க‌ள் சார்ந்த‌தாக‌ ம‌ட்டுமே இருக்கிற‌து என்பதே விஷ‌ய‌ம்.
அதாவ‌து சாப்பிட‌ சிற‌ந்த‌ ரெஸ்டார‌ன்ட் எது என‌ தெரிந்து கொள்கிறோமே தவிர‌ பணியாற்ற‌ ஏற்ற‌ ரெஸ்டார‌ண்ட் எவை என‌ தெரிந்து கொள்வ‌தில் ந‌ம்க்கு ஆர்வ‌ம் இருப்ப‌தில்லை.கார‌ண‌ம் நாம் சாப்பிட‌ செல்ல‌ப்போகிறோமே த‌விர‌ ரெஸ்டாரண்ட்களில் ப‌ணியாற்ற‌ செல்ல‌ப்போவ‌தில்லை.
ஆனால் ரெஸ்டார‌ண்ட்க‌ளில் ப‌ணியாற்றுப‌வ‌ர்க‌ள் அல்ல‌து ரெஸ்டார‌ண்ட்க‌ளீல் வேலை தேடிக்கொண்டிருப்ப‌வ‌ர்களில் நிலைஅயை யோசித்துப்பாருங்க‌ள்?ரெஸ்டார‌ண்ட் சார்ந்த‌ எல்லா த‌ள‌ங்க‌ளுமே சாப்பாடு எப்ப‌டி இருக்கும்.சேவை எப்ப‌டி இருக்கும்,பின்ன‌ணி சூழ‌ல் எப்ப‌டி இருக்கும் என‌ சுட்டிக்காட்டுகின்ற‌ன‌வே த‌விர‌ அங்கெல்லாம் ப‌ணி சூழ‌ல் எப்ப‌டி இருக்கும் என்ப‌து ப‌ற்றியெல்லாம் க‌வ‌லைப்ப‌டுவ‌தில்லை.

இப்ப‌டி எல்லாம் யோசிக்க‌ வைத்த‌து வைட்டர்பீ இணைய‌த‌ள‌ம்.

கார‌ண‌ம் இந்த‌ த‌ள‌ம் ப‌ணிபுரிவ‌த‌ற்கு ஏற்ற‌ ரெஸ்டார‌ண்ட‌ ம‌ற்றும் ஓட்ட‌ல்க‌ள் எவை என‌ தெரிந்து கொள்வ‌த‌ற்கான‌ சேவையினை வ‌ழ‌ங்கி வ‌ருகிற‌து.ம‌ற்ற‌ த‌ள‌ங்க‌ள் எல்லாம் சாப்பிட‌ச் செல்ப‌வ‌ர்க‌ளூக்கான‌து என்றால் இந்த‌ த‌ள‌ம் சாப்பிட‌ ப‌ரிமாற‌ச்செல்ப‌வ‌ர்களுக்கான‌து.
இப்போதைய‌ நிலையில் வெயிட்ட‌ராக‌ ப‌ணியாற்றுப‌வ‌ர்க‌ள் த‌ங்களுக்கான‌ சிற‌ந்த‌ ப‌ணியிட‌த்த்ங்க‌ளை தெரிந்து கொள்ள‌ அதிக‌ வாய்ப்புக‌ள் இல்லை.யாராவ‌து நண்ப‌ர்க‌ள் அல்ல‌து தெரிந்த‌வ‌ர்க‌ளை கேட்டுப்பார்ப்ப‌து ம‌ற்றும் செவி வ‌ழி செய்திக‌ளை சார்ந்திருப்ப‌தை த‌விர‌ வேறு வ‌ழிக‌ள் கிடையாது.இணைய‌ யுக‌த்தில் இது எத்த‌னை அப‌த்த‌மான‌து தெரியுமா?

பொதுவாக‌ த‌க‌வ‌ல்க‌ள் தெரிய‌ வேண்டும் அல்ல‌து கையில் உள்ள‌ விவ‌ர‌ங்க‌ளை ச‌ரி பார்க்க‌ வேண்டும் என்றால் இண்டெர்நெட்டில் எத்த‌னையோ வ‌ழிக‌ள் இருக்கின்ற‌ன‌.வ‌ர்த்த‌க‌ நிறுவ‌ன‌ங்க‌ளின் விள‌ம்ப‌ர‌ வாச‌க‌ங்க‌ளை க‌ண்டு ஏமாற‌ தேவியில்லை.ச‌க‌ இணைய‌வாசிக‌ள் க‌ருத்து மூல‌ம் அவ‌ற்றை அறிந்து கொண்டுவிட‌லாம்.

இத்த‌கைய‌ வ‌ச‌தி ரெஸ்டார‌ண்ட் ஊழிய‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் இல்லை என்ற‌ குறையை வெயிட்ட‌ர்பீ த‌ளாம் போக்கியுள்ள‌து.இந்த‌ த‌ள‌த்தில் ஒவ்வொரு ந‌க‌ரிலும் ப‌ணிபுரிய‌ சிற‌ந்த‌ ரெஸ்டார‌ண்ட்க‌ள் எவை என்ப‌தை எளிதாக‌ அறிய‌ முடியும்.இத‌ற்கான‌ தேட‌ல் ப‌குதி தான் இந்த‌ த‌ள‌த்தில் உள்ள‌து.

அதே போல‌ ரெஸ்டார்ண்ட் ஊழிய‌ர்க‌ள் த‌ங்க‌ள் ப‌ணியாற்றும் ரெஸ்டார்ண்ட‌க்ள‌ ப‌ற்றய‌ க‌ருத்துக்க‌ளையும் இங்கே ப‌திவு செய்ய‌லாம். அத‌ன‌டிப்ப‌டையில் ரெஸ்டார‌ண்ட்க‌ள் ம‌திப்பிட‌ப்ப‌டும்.

அமெரிக்க‌ ந‌க‌ர‌ங்க‌ளீல் உள்ள‌ ரெஸ்டார்ண்ட்க‌ளுக்காக‌ இந்த‌ சேவை உருவாக்க‌ப்ப‌ட்டுள்ளது.

 இதே இணையதளம் எல்லா நாடுகளுக்கும் தேவை அல்ல‌வா?

http://www.waiterbee.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “எனக்கேற்ற ரெஸ்டாரண்ட் எது?

  1. அருமை சிம்மன். பகிர்விற்கு நன்றி.

    உங்கள் பெயரிட்டு இதை முகப்புத்தகத்தில் பதியலாமா..? அனுமதி தேவை.

    நன்றி.

    Reply
    1. cybersimman

      பதியலாம் நண்பரே.

      Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *