இந்த இணையதளம், அறியப்படாத அறிவியல் பொக்கிஷம்

ஸ்டிரேஞ் சயின்ஸ் இணையதளத்தை கூகுள் தேடலில் மறைந்து கிடக்கும் அறிவியல் பொக்கிஷம் என்றே வர்ணிக்க தோன்றுகிறது. ஏனெனில், கூகுள் நேர் தேடலில் கண்டறிய முடியாத இணையதளமாக இது இருப்பது தான்.

ஸ்டிரேஞ் சயின்ஸ் இணையதளம் (https://www.strangescience.net/ ), கூகுள் தேடலில் உள்ள போதாமைகளை உணர்த்துவதோடு, கூகுள் தொடர்பான பயனாளிகள் எதிர்பார்ப்பில் உள்ள கேள்வி கேட்காத தன்மையையும் உணர்த்துவதாக அமைகிறது. அறிவியல் தொடர்பான அற்புதமான தளங்களில் ஒன்றாக இருப்பதை மீறி, கூகுள் தேடலில் இந்த தளம் முதன்மை பெறவில்லை என்பதே காரணம்.

புகழ் பெற்ற துப்பறியும் வல்லுனர் பாத்திரம் ஷெர்லாக் ஹோம்ஸ், சில்வர் பிளேஸ் கதையில் புலணாய்வின் போக்கில் முக்கிய துப்பு ஒன்றை கண்டறியும் போது, ஏற்கனவே விசாரணை செய்திருந்த போலீஸ் அதிகாரி கண்களில் அது சிக்காத பற்றி கேட்கப்படும் போது, ஏனெனில் நான் இந்த துப்பை எதிர்பார்த்திருந்தேன்’ என் தெரிவிப்பார்.

அது போல தான், குறிப்பிட்ட ஒரு இணையதளத்தை ஒருவர் எதிர்பார்க்கவில்லை எனில் கூகுள் தேடலில் அதை கண்டறிவதற்கான சாத்தியம் குறைவு. அந்த தளம் கூகுள் தேடலில் இருக்காது என்றில்லை- தேடல் பட்டியலில் முன்னிலை பெற்றிருக்காது. அதோடு, நீங்கள் பயன்படுத்தும் குறிச்சொல் அதை கொண்டு வந்து நிறுத்த போதுமானதாக இருக்காது. இதற்கு நீங்கள் துணை குறிச்சொற்களை பயன்படுத்த வேண்டும்.

எனவே தான், ஸ்டிரேஞ் சயின்ஸ் போன்ற தளத்தை கூகுள் தேடலில் கண்டறிய முடியாது என கருதுகிறேன். ஸ்டிரேஞ் சயின்ஸ் இணையதளத்தை கூகுள் மூலம் அல்லாமல், ஒரே மாதிரியான தளங்களை தேட உதவும் ’சிமிலர் சைட்ஸ்’ தேடலிலேயே கண்டறிய முடிந்தது. சைட்ஸ் லைக் என குறிப்பிட்டு தேடும் போது இந்த தளமும் பட்டியலிடப்பட்டிருந்தது.

சிமிலர் சைட்ஸ் தேடலை பயன்படுத்தாவிட்டால் ஸ்டிரேஞ் சயின்ஸ் தளத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த தளத்தை கூகுளில் கண்டறியும் வாய்ப்பை சோதிப்பதற்காக, ஸ்டிரேஞ் சயின்ஸ் என கூகுளில் தேடிப்பார்த்தால், இந்த தளம் முதலில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆக, கூகுள் தவறவிடவில்லை.

ஆனால், ஸ்டிரேஞ் சயின்ஸ் எனும் இணையதளம் இருப்பது தெரியாத நிலையில், இந்த தளத்தை கூகுளில் கண்டறிவது எப்படி என்பது தான் கேள்வி? அறிவியலில் எதேனும் விநோதமாக உள்ளதா? என அறிவதற்காக இந்த குறிச்சொல்லை பயன்படுத்தும் போது தற்செயலாக ஸ்டிரேஞ் சயின்ஸ் இணையதளத்தை கண்டறியலாமேத்தவிர, நேரடியாக கூகுள் தேடலில் அறிவதற்கான வாய்ப்புகள் குறைவு.

சிமிலர் சைட்ஸ் தளத்திலும், தற்செயலாகவே இந்த தளம் கண்ணில்பட்டது என்றாலும், அந்த தேடலின் நோக்கமே தற்செயலான முடிவுகளை எதிர்பார்ப்பது தான். கூகுள் தேடல் அப்படி அல்ல, அதில் நாம் குறிப்பிட்ட தளத்தை எதிர்பார்க்கிறோம். கூகுள் பல நேரங்களில் அதில் ஏமாற்றுகிறது அல்லது ஏமாற்றம் தருகிறது.

(தொடர்புடைய இணையதளத்தை கூகுள் தேடல் பட்டியலில் முதலில் அளிக்காமல் பின்னுக்குத்தள்ளும் தருணங்களும் அநேகம்).

கூகுள் ஏமாற்றம் தருகிறது என சொல்வதற்கு காரணம், அதன் தேடல் பட்டியல் ஸ்டிரெஞ் சயின்ஸ் இணையதளத்தை அடையாளம் கண்டு கொள்ள போதுமானதாக இல்லை என்பது தான். அதாவது இந்த தளத்தை அதற்குறிய கணத்துடன் கூகுள் அறிமுகம் செய்யவில்லை. ஏனெனில் ஸ்டிரேஞ் சயின்ஸ் இணையதளம் தொடர்பாக வேறு எந்த தகவலையும் கூகுள் மூலம் அறிய முடியவில்லை.

பொதுவாக ஒரு இணையதளத்தை சீர் தூக்கி பார்க்க உதவுவது, மூல  சுட்டிக்காட்டலை தவிர, தேடல் முடிவுகளில் இடம்பெறக்கூடிய இதர துணை தகவல்களை தான். அந்த தளம் தொடர்பான விமர்சனம் அல்லது அறிமுகமாக இது இருக்கலாம். குவோரா அல்லது ரெட்டிட் தளத்தில் இது தொடர்பான விவாதமாக இருக்கலாம். இன்னும் பல விதங்களில் ஒரு இணையதளத்தை பரிசீலிக்கலாம்.

ஸ்டிரேஞ் சயின்ஸ் தளத்தை பொருத்தவரை அதன் மூல முடிவு தவிர வேறு எந்த தகவலும் இல்லை. பொதுவாக இப்படி ஒற்றை முடிவு கொண்டிருக்கும் தளம் சுமாரான தளமாக அல்லது பயனற்ற தளமாகவும் இருக்கலாம். ஆனால், இந்த தளம் அவ்வாறு இல்லாமல், ஆகச்சிறந்த தளங்களில் ஒன்று என சொல்லக்கூடிய கூறுகளை கொண்டிருக்கிறது. கூகுள் தேடலில் இந்த கூறுகள் இடம்பெறவில்லை என்பதே விஷயம். இதை நாம் தான் தேடி கண்டறிய வேண்டியிருக்கிறது.

அதாவது, இந்த தளம் தொடர்பான விமர்சன கருத்துகள், அறிமுக குறிப்புகள், விக்கிபீடியா பக்கம் போன்ற எந்த சுட்டிக்காட்டலும் இல்லை. இதற்கு கூகுளை குறை சொல்ல முடியாது தான். இந்த தளம் பற்றி விமர்சன குறிப்பு இல்லாத போது கூகுளில் அதை எப்படி எதிர்பார்க்கலாம் என கேட்கலாம். அதிலும், குறிப்பாக இந்த தளம் மிக பழைய இணையதளமாக இருப்பதையும், தனிநபர் ஒருவரால் நடத்தப்படுவதையும் அறியும் போது, இது தொடர்பான பதிவுகளை கூகுள் சுட்டிக்காட்டாமல் இருப்பதை இயல்பாக கருதலாம்.

ஆனால், கூகுளின் பாராமுகத்தை மீறி, இந்த தளத்தில் சிறிது நேரத்தை செலவிட்டால் அதன் தன்மையை அறிய முடிகிறது. அது மட்டும் அல்ல, அந்த இணையதளம் தொடர்பாக அதன் இருபத்தைந்து ஆண்டுக்கும் மேலான இருப்பில் பதிவான பல அறிமுகங்களை அந்த தளத்திலேயே பார்க்க முடிகிறது. பிபிசி இணையதள அறிமுகம் துவங்கி, சிறந்த இணையதளத்திற்கான இண்டெர்நெட் ஸ்கவுட் விமர்சனம், சயின்ஸ் மேகஜைன், யூஎஸேடுடே உள்ளிட்ட இதழ்களின் அறிமுகம் என பெரிய பட்டியலே பார்க்க முடிகிறது.

இந்த அறிமுகங்கள், இது சராசரி தளம் அல்ல, பொருட்படுத்த தக்க தளம் என்பதை உணர்த்துகின்றன. இவற்றில் பெரும்பாலான பதிவுகள் இணையத்தின் நம்பிக்கையான தளங்களில் இருந்து வருபவை. எனில், கூகுள் ஏன் இந்த தளம் தொடர்பான தேடல் பட்டியலில் இந்த பதிவுகளை பட்டியலிடவில்லை? கூகுள் அளவுகோளின்படி இதற்கான காரணங்கள் இருக்கலாம் என்றாலும், இந்த இணையதளம் பற்றிய இணைய குறிப்புகளே இல்லை எனும் தோற்றம் ஏற்பட்டு இந்த தளத்தின் உண்மையான தன்மை குறித்து பலரும் அறிய முடியாமல் போகலாம் அல்லவா?

எனவே தான், இணைய கண்டறிதலுக்கு கூகுள் போதுமானதல்ல என்கிறேன். மேலும் ஒரு தளத்தை சீர் தூக்கு பார்க்கவும் கூகுள் போதுமானதல்ல.

அது மட்டும் அல்ல, ஸ்டிரேஞ் சயின்ஸ் தளத்தை அதன் பெயர் தொடர்பான குறிச்சொல் மூலம் மட்டும் அல்லாமல், அறிவியல் தொடர்புடைய வேறு எந்த குறிச்சொல் தேடல் மூலம் எல்லாம் கண்டறிய முடியும் என்று தெரியவில்லை. விநோத தளம் என்றால் வருமா அல்லது ஆகச்சிறந்த அறிவியல் தளம் என்றால் வருமா என்று தெரியவில்லை.

ஆனால் ஒன்று, ஆகச்சிறந்த அறிவியல் தளங்கள் எனும் தேடலுக்கு கூகுள் முன்னிறுத்தும் பட்டியலில் இந்த தளத்தை முதல் பார்வையில் கண்டறிய முடியவில்லை. அதைவிட முக்கிய விஷயம், இந்த தேடலில் முதன்மை பெறும், லைவ்சைன்ஸ் தளத்தின் சிறந்த அறிவியல் தளங்கள் பட்டியலில் பசுபிக் ஸ்டாண்டர்டு எனும் மிக அருமையான அறிவியல் தளமும் இடம்பெற்றுள்ளது. ஆனால், அந்த அற்புதமான தளம் 2019 ல் மூடப்பட்டுவிட்டது. இந்த தகவல் பற்றிய குறிப்பே இல்லாமல், 2018 ம் ஆண்டு வெளியான சிறந்த அறிவியல் தளங்கள் பட்டியலை கூகுள் சுட்டிக்காட்டுகிறது.

கூகுள் தேடல் தொடர்பாக விழிப்புணர்வு பெறுங்கள்!

இந்த விவாதத்திற்கு காரணமான ஸ்டிரேஞ் சயின்ஸ் அறிவியல் தளம் தொடர்பான விரிவான அறிமுகம் தனியே.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.