கோலிவுட்டில் டிவிட்டர் அலை

ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங்களின் வரிசையில் கோலிவுட் நட்சத்திரங்களும் குறும்வலைப்பதிவு சேவையான டிவிட்டரை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

நடிகர் தனுஷ், நடிகை நமீதா ஆகியோர் சமீபத்தில் டிவிட்டரில் இணைந்துள்ளனர். 140 எழுத்துக்கள் கொண்ட குறும் பதிவுகளின் மூலம் கருத்துக்களை பதிவிட உதவும் டிவிட்டர் சேவை இணைய உலகில் பெரும் செல்வாக்கை பெற்று விளங்கி வருகிறது. ஹாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

ரசிகர்களோடு நேரடியாக தொடர்பு கொள்ள டிவிட்டர் பதிவுகளை விட மிகச்சிறந்த வழி வேறில்லை என்பது இந்த சேவை பற்றி நன்கு அறிந்த பிரபலங்களின் கருத்தாக இருக்கிறது. பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக்கான், ஹிருத்திக், அமிதாப், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பலர் டிவிட்டரை பயன்படுத்தி வருகின்றனர். தென்னகத்தைச் சேர்ந்த மாதவன், டோலிவுட் நட்சத்திரமான மகேஸ்பாபு, அல்லு அர்ஜுனா ஆகியோரும் டிவிட்டரை பயன்படுத்தி வருகின்றனர். டிவிட்டர் பயன்பாட்டை பொறுத்தவரை கோலிவுட் நட்சத்திரங்கள் பின்தங்கியே உள்ளனர்.

தங்கள் பெயரில் போலி டிவிட்டர் பக்கம் அமைத்திருப்பதாக புகார் கூறும் போது மட்டுமே கோலிவுட் நட்சத்திரங்களோடு டிவிட்டர் தொடர்பு கொண்டதாக இருக்கிறது. டிவிட்டரில் பிரபல நட்சத்திரங்களின் அதிகாரப்பூர்வ கணக்கு இல்லாத போதே ரசிகர்கள் அவர்களின் பெயரில் தாங்களே கணக்குகளை துவங்கி விடுகின்றனர். இந்த போலி பக்கங்கள் குறித்து த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்கள் புகார் கூறியிருந்தாலும் தாங்களே டிவிட்டரில் இணைய வேண்டும் என்ற எண்ணம் ஏனோ பல நட்சத்திரங்களுக்கு இல்லை.

தற்போது இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு இளம்நடிகர் தனுஷ் டிவிட்டரில் நுழைந்திருக்கிறார். தனுஷ்கேராஜா என்னும் பெயரில் நடிகர் தனுஷ் டிவிட்டரில் செயல்படத் தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் நடால் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்ற போது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது உள்பட தன்னுடைய கருத்துக்களை அவர் டிவிட்டரில் தெரிவித்து வருகிறார்.

இதே போல நடிகை நமீதாவும் டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார். ஐ நமீதா என்னும் பெயரில் செயல்பட்டு வரும் நமீதா, தான் மிகவும் நேசிக்கும் ரசிகர்களோடு நெருக்கமாக தொடர்பு கொள்ள டிவிட்டரில் நுழைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஒளிப் பதிவாளரும், இயக்குனருமான கே.வி. ஆனந்த், இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் டிவிட்டரில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

———-

http://twitter.com/dhanushkraja

—–

http://twitter.com/inamitha

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “கோலிவுட்டில் டிவிட்டர் அலை

  1. praveena

    plz send me mahesh babu’s and allu arjuna’s twitter address? and how to contact with him

    Reply

Leave a Comment to praveena Cancel Reply

Your email address will not be published.