கூகுல் கொடுத்த கிக்

உலக உதை திருவிழா இன்று துவங்குகிறது.இதற்காக தென்னாப்பிரிக்கா கோலகலமாக தயாராகி உள்ள நிலையில் தேடல் முதல்வன் கூகுல் தனது பாணியில் உலககோப்பை கால்பந்து போட்டிகளை வரவேற்றுள்ளது.

ஆம் கூகுல் முக்கிய நிகழ்வுகளின் போது தனது லோகோவை அந்த நிகழ்வுகளை கவுரவிக்கும் வகையில் மாற்றியமைக்கும் வழக்கத்தின் அடிப்படையில் உலகிலேயே அதிகம் பார்த்து ரசிக்கப்படும் கால்ப‌ந்து உலககோப்பையை முன்னிட்டு கால்பந்து சார்ந்து லோகோவை மாற்றி அமைத்துள்ள‌து.

கூகுலில் உள்ள ஒ எழுத்து கால்பந்தால மாறி ,உதைக்கும் கால்களோடு இந்த லோகோ அருமையாக உள்ளது. அதோடு லோகோவை கிக் செய்தால் உலககோப்பை தொடர்பான தேடல் பக்கம் வருகிறது.ஆக இன்று உலககோப்பை விவரங்களை தனியே தேட வேண்டிய அவசியமில்லை கூகுல் லோகோவை கிக் செய்தால் போதும் தகவல்கள் தானாக‌ வந்து நிற்கும்.

கூகுல் ம‌ட்டும‌ல்ல‌ யாஹுவும் த‌ன்ப‌ங்குக்கு லோகோவை கால்ப‌ந்து சார்ந்த‌தாக‌ மாற்றியுள்ள‌து.கூகுலை விட‌ யாஹு லோகோ சுறுசுறுப்பான‌தாக‌ ,கால்ப‌ந்து உதைக்க‌ப்ப‌டும் அனிமேஷ‌ன் சித்திர‌மாக‌ வ‌டிவ‌மைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

ஆக‌ இண்டெர்நெட்டிலும் கால்ப‌ந்து ஜுர‌ம் ப‌ற்றிகொண்டுவிட்ட‌து.

மேலும் கால்ப‌ந்து +இண்டெர்நெட் தொட‌ர்பான‌ த‌க‌வ‌ல்க‌ளை எதிர்பாருங்க‌ள்…

அப்டேட்

கூகுல் லோகோ கால்பந்து மயமானதோடு கூகுலின் தேடல் பக்கத்தின் கீழ் வழக்கமான கூ ….ல் எழுத்துக்களிலும் சிறிது மாற்றம் செய்யப்பட்டு கோல் என வரும் வரையில் அமைக்கப்பட்டுள்ளது.(இந்த தகவலை சுட்டிக்காட்டிய பதிவர் வினோவிக்கு ந‌ன்றி)

கூகுல் லோகோவில் கால்பந்து இடம்பெற்றாலும் இது உலகின் மற்ற நாடுகளில் மட்டும் தான். அமெரிக்காவில் இந்த லோகோ இல்லை. அதற்கு பதிலாக ழாக் கவுஸ்டே என்பவரை கவுரவிக்கும் லோகோ இடம்பெற்றுள்ளது.பிரெஞ்சு கண்டுபிடிப்பாளரும் திரைப்பட மேதையுமான இவரது பிறந்த நாளை முன்னிட்டு கூகுல் இந்த லோகோவை உருவாக்கியுள்ளது.

பின்னர் இந்த லோகோ மாற்றப்பட்டு கால்பந்துக்கு உரிய மரியாதை அமெரிக்க தளத்திலும் அளிக்கப்படும் என கூகுல் தெரிவித்துள்ளது.

—————

http://www.google.co.in/#q=FIFA+World+Cup&ct=worldcupopen10-hp&oi=ddle&fp=3795ce5cc1cf766d

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “கூகுல் கொடுத்த கிக்

  1. இதே போல், world cup என தேடி, அதன் முடிவுகள் பக்கம் தோன்றும் போது, பக்கத்தின் அடியில், gooooooooogle எனும் பகுதி, gooooooooooooal! என மாறி இருக்கும்

    Reply
    1. cybersimman

      that s great.thanks for the info

      Reply
  2. Thanks for sharing info with us

    Reply
  3. Thank you very much for this info.

    Reply

Leave a Comment

Your email address will not be published.