புத்தகங்களுக்கான புதுமையான சோதனை ந‌ட‌த்தும் இணைய‌த‌ள‌ம்

போர்டு மேடக்ஸ் போர்டை உங்களுக்கு தெரியுமா?மேடக்ஸ் ஒரு எழுத்தாளர்.ஆங்கில நாவலாசிரியர்,விமர்சகர்,கவிஞர்,மற்றும் பத்திரிகை ஆசிரியர் என விக்கிபீடியா கட்டுரை அவரை வர்ணிக்கிறது.அவர் எழுதிய நாவல்களில் தி குட் சோல்ஜர் புகழ் மிக்கதாக கருதப்படுகிறது.ஆயிரம் சிறந்த நாவல்கள் மற்றும் தலை சிறந்த 100 நாவல்கள் பட்டியலில் இந்த நாவல் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்டு ஆரம்பித்த இங்லீஷ் ரீவ்யூ போன்ற இதழ்கள் ஆங்கில இலக்கியத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியதாகவும் பாராட்டப்படுகின்றன.

அப்படியா,எனக்கு தெரியாதே என நீங்கள் குற்ற உணர்வுக்கு ஆளாக வேண்டாம்.ஹெம்மிங்வே போலவோ,ஜான் கிர்ஷாம் போலவோ ,மார்குவிஸ் போலவோ படித்திருக்காவிட்டாலும் கூட பெரும்பாலானோர் அறிந்திருக்க கூடிய எழுதாளர் இல்லை.

மிகத்தீவிர இலக்கிய வாசகர்கள் குறிப்பாக ஆங்கில வாசகர்கள் அவரை அறிந்திருக்கலாம்.மற்றபடி சராசரி வாசகர்கள் அவரை அறிந்திருக்க நியாயமில்லை.

ஆஸ்கர் ஒயில்டு போலவோ.மார்க் டுவைன் போலவோ ,பெர்னார்டு ஷா போலவோ போர்டு பொன்மொழிகளை உதிர்த்திருப்பதாகவும் தெரியவில்லை.ஆனால் போர்டு புத்தக வாசிப்பு தொடர்பான அழகான ஒரு கோட்பாட்டை முன் வைத்துள்ளார்.எந்த ஒரு புத்தகத்தின் தரத்தையும் கண்டறிய வாசகர்களுக்கு கை கொடுக்க கூடிய கோட்பாடு அது.

அதிலும் புதிய புத்தகங்களை பார்த்து வாங்கலாமா வேண்டாமா என குழம்பி நிற்கும் போது இந்த கோட்பாடு உதவகூடும்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல ஒரு புத்தகத்தின் தரம் 99வது பக்கத்தில் டெஹ்ரிந்து விடும் என்பது தான் அந்த கோட்பாட்டின் மையக்கருத்து.

அதாவது எந்த புத்தகத்தை எடுத்தாலும் அதன் 99 வது பக்கத்தை பிரித்து படித்து பாருங்கள்,புத்தகம் எப்படி இருக்கும் என்று தெரிந்துவிடும் என்கிறார் போர்டு.

பொதுவாகவே ஒரு புத்தகத்தின் தரத்தை தீர்மனிக்க ஒவ்வொருவரும் ஒரு வழிஅயை வைத்திருக்கின்றனர்.சிலர் அட்டையை பார்த்து வாங்குவார்கள்.சிலர் எழுத்தாளரின் பெயரை பார்த்து வாங்குவார்கள்.இன்னும் சிலர் புத்தகத்தை ஒரு புரட்டு புரட்டி ஏதாவது சில பக்கங்களை படித்து பார்த்து புத்தகம் எப்படி இருக்கும் என்று தீர்மானிக்க முயல்வார்கள்.

ஆனால் போர்டு அதிரடியாக 99 வது பக்கத்தை படியுங்கள்,புத்தகத்தின் தரம் உடனே தெரிய வரும் என்று கூறியிருக்கிறார்.

போர்டு கூறியதன் அடிப்படை பற்றி அதிக விவரம் தெரியவில்லை.ஆனால் சுவாரஸ்யமான இந்த கோட்பாடு 99 சோதனை என்று பிரபலமாக குறிப்பிடப்படுவதையும் இதனை சோதிக்க இணையதளங்கள் இருப்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

இப்போது பேஜ் 99 டெஸ்ட் என்னும் பெயரிலேயே ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டு ,இந்த கோட்பாடு சார்ந்த சுவாரஸ்யமான சேவைவை வழங்க இருக்கிறது.

புத்தகத்தின் 99 வது பக்கத்தை திறந்து படியுங்கள்,முழு புத்தகத்தின் தரமும் உங்களுக்கு விளங்கிவிடும் என்னும் போர்டின் வாசகத்தோடு வரவேற்கும் இந்த தளம் பல வாசகர்கள் புத்தக கடைகளில் 99 வது புத்தகத்தை படித்து பார்க்கின்றனர்,அதனையே இங்கேயும் செய்யலாம் என்று அழைப்பு விடுக்கிறது.

அதாவது இந்த தளத்தில் எழுத்தாளர்கள் தங்கள் புத்தகத்தின் 99 வது பக்கத்தை சம்ர்பிக்கலாம்.வாசகர்கள் அதனை படித்து பார்த்து புத்தகத்தை வாங்கலாமா என்று முடிவு செய்யலாம்.அறிமுக எழுத்தாளர்கள் ,அனுபவ எழுத்தாளர்கள் ,இரு தரப்பினருமே தங்கள் புத்தக பக்கத்தை இங்கு சமர்பிக்கலாம்.அதன் பிறகு வாசகர்களின் வாக்கு மற்றும் கருத்துக்களை தெரிந்து கொள்ளலாம்.

அடுத்த பெஸ்ட்செல்லரை இதன் மூலம் தீர்மானிக்கலாம் என்றும் இந்த தளம் ஊக்கமளிக்கிறது.

இதே போலவே பேஜ்99டெஸ்ட்.இலாக்ஸ்பாட் என்னும் வலைப்பதிவு புத்தக்ங்களின் 99 வது பக்கத்தை இடம்பெற வைத்து  அவை தொடர்பான வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொண்டு வருகிறது.

இணையதள முகவரி;http://page99test.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “புத்தகங்களுக்கான புதுமையான சோதனை ந‌ட‌த்தும் இணைய‌த‌ள‌ம்

  1. மிகவும் அருமையான பதிவு … புத்தகப் பிரியர்களுக்கு மிகவும் உபயோகமான தளம்..

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *