யூடியூப் வீடியோக்களை மேம்படுத்த ஒரு இணைய சேவை.

யூடியூப் வீடியோக்களை பார்த்து ரசிக்காதா இணையவாசிகள் தான் உண்டா?இத்தகைய யூடியூப் பிரியர்களுக்காக என்று பல இணையதளங்களும் சேவைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

யூடியூப் வீடியோக்களை தேடுவதற்கான தளங்கள்,இசை தொடர்பான கோப்புகளை காட்டும் தளங்கள் என யூடியூப் சார்ந்த இணையதளங்களின் வரிசையில் இப்போது எம்பெட் பிளஸ் என்னும் இணையதளம் அறிமுகமாகியுள்ளது.

யூடியூப் சார்ந்த சேவைகளிலேயே மிகவும் விஷேசமானது என்று இதனை குறிப்பிடலாம்.

யூடியூப்பில் பார்க்கும் வீடியோக்களை மேலும் மெம்படுத்திக்கொள்ள இந்த சேவை உதவுகிற‌து.

அதாவது கையில் ரிமோட் சாதனத்தை வைத்துகொண்டு யூடியூப் வீடியோக்களை கண்டு களிக்க முடிந்தால் எப்படி இருக்கும்?இந்த சேவை அத்தகைய வசதிகளை தான் வழங்குகிறது.

வழக்கமாக யூடியூப் வீடியோக்களை பார்க்கும் போது கிளிக் செய்து விட்டு திரையில் தோன்றுவதை காண்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.பிடித்திருந்தால் மீண்டும் ஒரு முறை முதலில் பார்ப்பதை தவிர வேறு எதுவும் செய்ய வாய்ப்பில்லை.

ஆனால் இந்த சேவையின் மூலம் யூடியூப் வீடியோ காட்சிகளுக்கு பல கூடுதல் அம்சங்களை ஏற்படுத்தி தருகிறது. முதலாவதாக டிவிடியில் பார்ப்பது போல வீடியோ காட்சியை கட்டுப்படுத்தலாம்.அதாவது வேகமாக நகர‌ச்செய்வதோ அல்லது பின்னோக்கி செல்வது போன்றவை சாத்தியமாகும்.

இதில் என்ன விஷேசம் என்றால் வீடியோவின் தரம் பாதிக்கப்படாமலேயே இதனை செய்து கொள்ளலாம்.அதே போல வீடியோவின் எந்த பகுதியை வேண்டுமானாலும் ஸ்லோ மோஷனில் பார்க்கலாம். விளையாட்டு வீடியோ அல்லது செய்முறை வீடியோ காட்சிகளை காணும் போது இப்படி ஸ்லோமோஷனில் பார்ப்பது பயனுள்ளதாக  இருக்கும்.

ஸ்லோமோஷனில் மட்டும் அல்ல வீடியோவின் எந்த இடத்தை வேண்டுமானாலும் தேர்வு செய்து அதனை தனிப்பகுதியாக குறித்து வைத்து கொள்ள முடியும்.பதிவர்கள் தங்கள் கருத்துக்கு ஆதரவாக இந்த குறித்து வைத்த பகுதியை இணைப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

தேவைப்பட்டால் விடீயோ காட்சியின் பகுதியை அப்படியே புகைப்படத்தின் குறிப்பிட்ட இடத்தை பெரிதாக்கி பார்ப்பது போல அளவில் பெரிதாக்க முடியும்.

காட்சிரீதியாக மேம்பட்ட அனுபவத்தை பெற இவை உதவும்.இவை எல்லாவற்றையும் விட வீடியோ கோப்பு தொடர்பான சமூக அனுப‌வத்தை பெறுவதற்கான வசதியும் உள்ளது என்பதே குறிப்பிடத்தக்க அம்சம்.சமூக அனுபவம் என்றால் குறிப்பிட்ட வீடியோ தொடர்பாக டிவிட்டரில் பகிரப்படும் கருத்துக்களை அதனோடு சேர்த்து பார்க்கலாம் என்பதாகும்.அதே போல யூடியூப் பின்னூட்டங்களையும் காணலாம்.

இதன் மூலம் குறிப்பிட்ட வீடியோ பற்றி இணையத்தில் என்ன பேசப்படுகிறதோ அவற்ரை தெரிந்து கொள்ள முடியும்.மேலும் பார்த்து கொண்டிருக்கும் விடியோ பற்றி கருத்து தெரிவிக்க விரும்பினால் அதன் கீழேயே குறிப்புகளாக நம் கருத்துக்களை இடம் பெற வைக்கலாம்.

யூடியூப்பில் இந்த வசதிகள் எல்லாம் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து ஏங்கிய வீடியோ பிரியர்கள் ஒன்றிணைந்து தங்களை போன்றவர்களின் வசதிக்காக இந்த சேவையை உருவாக்கியுள்ள்னர்.

இதில் மேலும் பல புதிய வசதிகள் சேர்க்கப்பட இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.இசை பிரியர்களுக்காக என்று தனி திட்டம் இருப்பதாவும் தெரிவித்துள்ளனர்.

இனையதள முகவரி;http://www.embedplus.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “யூடியூப் வீடியோக்களை மேம்படுத்த ஒரு இணைய சேவை.

  1. M.Mani

    மிகவும் பயனுள்ள மென்பொருள். தகவலுக்கு நன்றி.

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *