போகாதே போகாதே பேஸ்புக் பக்கம் போகாதே.

முதலில் கூகுல்.அதன் பிறகு பேஸ்புக்,யூடியூப்.நடுவே டிவிட்டர்,ஜிமெயில்.

இப்படி தினந்தோறும் விஜயம் செய்யும் இணையதளங்களின் பட்டியல் எல்லோருக்குமே உண்டு.இதில் வரிசை மாறலாம்.ஆனால் தினமும் தவறாமல் செல்லும் இணையதளங்கள் என்று சில நிச்சயமாக இருக்கும்.இவற்றில் சில இணையதளங்களில் மணிக்கணக்கில் செலவிடும் ப‌ழக்கம் சிலருக்கு இருக்கலாம்.

கெட்ட பழக்கம் என்று சொல்லும் அளவுக்கு சிலர் குறிப்பிட்ட அந்த தளங்களுக்கு அடிமையாகி இருப்பதுண்டு.அதாவது அவர்கள் நினைத்தாலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அந்த தளங்களில் அதிக நேரத்தை வீண‌டித்து கொண்டிருப்பார்கள்.

உதாரணத்திற்கு பேஸ்புக்கே கதி என இருக்கும் பேஸ்புக் பிரியர்கள் இருக்கின்றனர்.சதா யூடியூப்பில் விடியோ காட்சிகளாக பார்த்து கொண்டிருக்கும் யூடியூப் பிரியர்களும் இருக்கின்றனர்.கூகுலின் இமெயில் சேவையான ஜிமெயில் பற்றி சொல்லவே வேண்டாம்.புதிய இமெயில் வந்துள்ளதா என்று பார்க்க கை அடிக்கடி பரபரக்கும்.

இப்படி குறிப்பிட்ட இணையதளங்கள் மற்றும் இணைய சேவைகளுக்கு அடிமையாகி போவதை இணைய யுகத்தின் பலவீனம் என்றும் சொல்லலாம்.இதற்கு மாற்று மருந்து தேவை என்று நினைத்தால் அதற்கும் ஒரு இணையதளம் இருக்கிறது.கீப்மீஅவுட் இது அந்த இணையதள‌ம்.

அதாவது,நானே விரும்பினாலும்  அந்த இணையதளத்தின் பக்கம் போக அனுமதிக்க கூடாது என நீங்கள் கருதும் இணையதளங்களின் பட்டியலில்  இந்த தளத்தில் சமர்பித்தீர்கள் என்றால் அந்த தளங்களின் பக்கம் செல்லாமல் இந்த தளம் பார்த்து கொள்ளும்.

இனி பேஸ்புக் பக்கமே போககூடாது என சபதம் எடுத்து கொண்டு இந்த தளத்தில் பேஸ்புக் பெயரை சமர்பித்தீர்கள் என்றால் அதன் பிறகு பேஸ்புக் பக்கம் உங்கள் அனுமதிக்காமல் இந்த தளம் உங்களை காப்பாற்றும் .அந்த அளவுக்கு எல்லாம் கட்டுப்பாடு வேண்டாம் என்று நினைத்தாலும் தேவைக்கேற்ப கட்டுப்படுத்தி கொள்ளலாம்.

ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரம் பேஸ்புக் பக்கம் போக அனுமதிக்காமல் இருக்கும் படி வரைமுறை செய்து கொள்ளலாம்.பேஸ்புக் என்பது உதாராணம் தான்.அவரவர் பழக்கம் மற்றும் விருப்பத்திற்கெ ஏற்ப எந்த தளத்தை வேண்டுமானாலும் குறிப்பிட்டு எப்படி வேண்டுமானாலும் கட்டுப்படுத்தி கொள்ளலாம்.

ஒவ்வொரு நாளும்,வாரத்தில் ஒரு நாள் அல்லது மாதத்தில் ஒரு நாள் விரதம் இருப்பது போல என எப்படி வேண்டுமானாலும் இணையவாசிகள் தங்களுக்கான கட்டுப்பட்டை நிர்ணயித்து கொள்ளலாம்.

இணையத்தில் சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களுக்கு இந்த சேவை நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்பதோடு தேவையானதாகவும் இருக்கும்.

இப்படி இணையவாசிகள் தங்களுக்கு தாங்களே விலங்கு மாட்டிக்கொள்ளும் இணையதளங்களில் இருந்து முன்ன‌ணி 10 இணையதளங்களின் பட்டியல் முகப்பு பக்கத்தில் இடம் பெறுகிறது.உங்களூக்கான தளம் அந்த பட்டியலில் இருந்தால் அதனை கிளிக் செய்து கொள்ளலாம்.

அதோடு சக இணையவாசிகள் எந்த தளங்களுக்கு எல்லாம அடிமையாக இருக்கின்றனர் என்னும் தகவலையும் இந்த‌பட்டியலை பார்த்து தெரிந்து கொள்ள‌லாம்.சுய கட்டுப்பாடு தேவை என்னும் அளவுக்கு எந்த தளங்கள் எல்லாம் இணைய உலகில் பிரபலமாக உள்ளன என்ற த‌கவலையும் இது தெரிவிக்கும்.

ஆங்கிலம் உள்ளிட்ட சில மொழிகளில் இந்த தளம் செயல்படுகிறது.பிரபலமான தளங்களின் பட்டியலில் ஆங்கிலம் தவிர பிற மொழி தளங்கள் சிலவும் இடம் பெறுகின்றன.அந்த வகையில் மற்ற மொழிகளில் கோலோச்சும் தளங்களையும் இதை பார்த்தே அறிய முடியும்.

இணையவாசிகள் தங்களை தாங்களே கட்டுப்படுத்தி கொள்ளவும் இந்த தளத்தை பயன்படுத்தலாம்.அல்லது பெரியவர்கள் தங்கள் பிள்ளைகள் பேஸ்புக் போன்ற தளங்களில் அதிக நேஅர்ம் செலவிடுவதை கட்டுப்படுத்த விரும்பினாலும் அவர்கள் சார்பில் இந்த  சேவையை பயன்படுத்த‌லாம்.

இணையதள முகவரி;http://keepmeout.com/en/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “போகாதே போகாதே பேஸ்புக் பக்கம் போகாதே.

  1. மிக மிக உபயோகமான தகவல். நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்க வேண்டிய விஷயம்.

    Reply
  2. தகவல் அருமை … குடிக்காரர்களைக் காப்பாற்ற மறுவாழ்வு மையம் போல இணைய அடிமைகளைக் காக்க அருமையான ஒரு தளம். மிக்க நன்றிகள் அய்யா

    Reply
  3. thank you for best and useful information

    Reply
  4. ரொம்ப பயனுள்ள பதிவு! பலர் இப்படி சமூக இணையதளங்களில் நீண்ட நேரம் கழிக்கின்றனர்!

    Reply
  5. நிறைய பேருக்கும் உதவும் பதிவு தான் !

    Reply
  6. submit செய்து விட்டால் இனி அந்த இணையதள பக்கம் போக முடியாதா

    Reply
    1. cybersimman

      இல்லை .உங்கள் விருப்பம் போல எப்போது வேண்டாம் என்று நினைக்கிறீகளோ அப்போது மட்டும் அனுமதி மறுக்க செய்யலாம்.மற்றபடி புக்மார்கிங் சேவை போலதான்.

      ச்ன்புடன் சிம்மன்.

      Reply
  7. இந்த பழக்கத்திற்கு நானும் அடிமை

    Reply
  8. நல்ல பதிவு ..நன்றி

    Reply
  9. ஐயா! வேர்ட்பிரசு தமிழ் தளங்களிடையே இணைப்புக்கள் பரிமாற்றப்பட்டால் என்ன? எனது தளமுகவரி அருவிஒலி.wordpress.com தயை செய்து மறுமொழி அனுப்பவும். -சானக்கியன்

    Reply
    1. cybersimman

      பரிமாறிக்கொள்ளலாம் நண்பரே.

      அன்புடன் சிம்மன்.

      Reply
  10. nandri anbudan balu

    Reply
  11. V.Dayanandhan

  12. V.Dayanandhan

    pogathe pogathe arumy

    Reply
  13. மிகவும் பயனுள்ள தகவல்கள் – வாழ்த்துக்கள். – நீலவன். http://www.neelavan.wordpress.com

    Reply
    1. cybersimman

  14. “எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து !!! “
    என சிலிர்ப்புடன்
    பெயர் சொல்லி அழைக்கும்
    நண்பனுடன் பேசுகையில்

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *