டிவிட்டர் மூலம் மகளை கண்டுபிடித்த தந்தை

பிச்சைக்காரர்களுக்கு வங்கி கணக்கு இருந்தால் அது நகைச்சுவை.திரைப்படங்களில் அப்படிப்பட்ட காட்சிகள் தான் இடம்பெறுகின்றன.இப்போது பிச்சைக்காரர்களிடம் கூட செல்போன் இருக்கிறது என்று சொல்வதும் நகைசுவைக்கானதாக தான் இருக்கிறது.

என்ன செய்வது பிச்சைக்காரர்கள் என்றாலே எல்லோருக்கும் இளக்காரம் தான்.அதிகபட்சம் பிச்சைக்காரர்களை பரிவோடு பார்த்து பரிதாபப்ப‌டுகிறோமே தவிர அவர்களை மனிதர்களாக நடத்துகிறோமா என்பது கேள்விக்குறியது தான்.

அப்படியிருக்க பிச்சைக்கார‌ர்களின் குரல் டிவிட்டரில் கேட்க வேண்டும் என்று யாருக்காவது நினைக்கத்தோன்றுமா?

நியூயார்க்கை சேர்ந்த  மூன்று பயிற்சி மாணவிகளுக்கு இத்தகைய எண்ணம் தோன்றிய‌து.விளம்பர நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இந்த பயிற்சி மாணவிகள்   ஒன்று சேர்ந்து  அன்டர் ஹியர்டு என்னும் பெயரில்  இதற்கான ஏற்பாட்டையும் செய்த‌னர்.

இந்த அமைப்பு சார்பில் நியூயார்க் நகரை சேர்ந்த நான்கு வீடில்லாத‌வர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு என்று தனி டிவிட்டர் பக்கங்கள் அமைத்து தரப்பட்டன.அவ‌ர்களிடம் கம்ப்யூட்டரோ ,லேப்டாப்போ கிடையாது என்பதால் செல்போன் மூலம் டிவிட்டர் பதிவிடும் வகையில் செல்போன்களும் வழங்கப்பட்டன.

டேனி,டெர்ரிக்,ஆல்பர்ட்,மற்றும் கார்லோஸ் ஆகிய அந்த நால்வரும் எஸ் எம் எஸ் வாயிலாக தங்கள் தினசரி வாழ்க்கை தொடர்பான தகவல்களை ஒரு மாத காலத்துக்கு டிவிட்டரில் பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

வீடில்லாதவர்கள் என்று சொல்லப்படுபவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிற‌து என்று மற்றவர்கள் புரிந்து கொள்வதற்காகவும்  ,தினமும் அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள் குறித்து உணர்ந்து கொள்வதற்காகவும் இவர்களின் டிவிட்டர் பதிவுகள் உதவும் என்ற நோக்கத்திலும் மிகுந்த நம்பிக்கையோடு இந்த திட்டம் துவக்கப்பட்டது.

அதோடு வீடில்லாதவர்களின் நிலை குறித்த விழிப்புணர்வையும் இந்த டிவிட்டர் பதிவுகள் ஏற்படுத்தும் என்று நம்பிக்கையும் இதன் பின்னே இருந்தது.அந்த நம்பிக்கையுடனே நான்கு வீடில்லாதவர்களுக்கும் செல்போன் வழியே டிவிட்டர் செய்ய கற்றுக்கொடுத்தனர்.

அவர்களும் தங்கள் தினசரி வாழ்க்கையை டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளத்துவங்கினர்.

பொதுவாக வீடில்லாதவர்களை பார்த்தால் அப்ப‌டியே கடந்து செல்வது தான் பலரது வழக்கம்.ஆனால் டிவிட்டரில் வீடில்லாதவர்களின் கருத்துக்களை தெரிந்து கொள்வதில் பலருக்கும் ஆர்வம இருந்தது.முதல் சில நாட்களிலேயே நால்வ‌ருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்தொட‌ர்பாளர்கள் கிடைத்தனர்.அதாவது அவர்களின் பகிர்வுகளை தினமும் படிக்க முன் வந்தனர்.

அது மட்டும் அல்ல பதிவுகளை படித்தவர்களில் பலர் தங்கள் எண்ணங்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.ஒரு சிலர் அவர்கள் மீது அனுதாபம் தெரிவித்தனர்.இன்னும் சிலரோ அவர்களுக்கு உதவ முன்வந்தனர்.ஒரு சிலர் வேலை வாங்கித்தரவும் விருப்பம் தெரிவித்தனர்.

இதனிடையே டேனி (மோரேல்ஸ்)தனது மனக்குறையையும் டிவிட்டர் பதிவாக வெளிப்படுத்தினார்.58 வயதாகும் டேனி பல ஆண்டுகளுக்கு முன் தனது மகளை பிரிய நேர்ந்ததை வேதனையோடு குறிப்பிட்டு ஆசை மகளை மீண்டும் சந்திக்க விரும்புவதாக கூறியிருந்தார்.மகளின் பெயர் மற்றும் இதர விவரங்க‌ளை குறிப்பிட்டு விட்டு மகளின் பழைய புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.

மகளை பிரிந்து வாழ்வதால் உடலின் ஒரு பகுதியை பறிகொடுத்தது போல உணர்வதாக கூறியவர் எப்படியும் மகளை சந்தித்து விடுவேன் என நம்புவதகவும் கூறியிருந்தார்.

அவரது நம்பிக்கை வீண் போகவில்லை.மிக விரைவிலேயே  மகள் அவரை தொடர்பு கொண்டு பேசினார்.அடுத்த நாளே பேரக்குழந்தைகளையும் அழைத்து வந்து அப்பாவை பார்த்து பேசினார்.

இதைவிட அவருக்கு வேறு என்ன ஆனந்தம் இருக்க முடியும்.

இந்த திட்டத்தின் முன்னேற்றம் குறித்து தகவல்களை தொகுத்து தருவதற்காக என்றே அன்டர்ஹியர்டு நியூயார்க் என்னும் பெயரில் வலைப்பதிவு ஒன்றையும் அமைத்திருந்தனர்.

வலைப்பதிவு முகவரி;http://underheardinnewyork.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “டிவிட்டர் மூலம் மகளை கண்டுபிடித்த தந்தை

  1. oh nice and all the best

    Reply
    1. cybersimman

      thank u very much

      Reply

Leave a Comment

Your email address will not be published.