சிங்க‌ம் போன்ற தேடியந்திரம்.

21ம் நூற்றாண்டின் தேடலுக்கு வாருங்கள் என்று அழைக்கிறது தேடியந்திர உலகில் புதிய வரவான சர்ச் லயன்.தேடுவதற்கான புதிய வழியை காட்டுவதாக‌வும் இது பெருமிதம் கொள்கிறது.அப்படி என்ன புதிய வழி?இதுவரை அறிமுகமான தேடியந்திரங்கள் காட்டிடாத வழி என்று கேட்க நினைத்தால்?இந்த கேள்வியை தான் எதிர்பார்த்தோம் என்று ஆர்வத்தோடு என்று விரிவான விளக்கத்தை த‌ருகிறது.

கடந்த பத்தாண்டுகளாக இணைய தேடல் என்பது ஒரே மாதிரியாக தான் இருக்கிறது,பத்தாண்டுகளுக்கு முன் இணையத்தில் தேடினால் தேடல் பட்டியல் வந்து நிற்கும் இப்போது தேடினாலும் தேடல் பட்டியல் வந்து நிற்கிறது, என் துவங்கும் அந்த விளக்கம் ,தேடலை 21 ம் நூற்றாண்டுக்கு கொண்டு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும், அதை தான் சர்ச் லய்ன் செய்வதகாவும் சொல்கிறது.

இதுவரை தேடியந்திரங்கள் அளித்திராத அம்சங்கள் மூலம் இதனை செய்வதாகவும் சொல்கிறது.

அப்படியென்ன அம்சங்கள்.

தேடலுடன் இணைந்த உலாவுதால் தான் முதல் அம்சம்.அதாவ‌து தேடிக்கொண்டே இணையதளங்களையும் பார்வையிடுவது.

இப்போது என்ன செய்கிறோம்.கூகுலுக்கு செல்கிறோம் ;தேடுகிறோம்.தேடல் பட்டியலில் உள்ள ஒரு இணைப்பை கிளிக் செய்கிறோம்.வெளியே சென்றுவிடுகிறோம்.பின்னர் மீண்டும் கூகுல் பட்டியலுக்கு வருகிறோம்.மீண்டும் கிளிக் செய்து வேறு ஒரு தளத்திற்கு செல்கிறோம்.இப்படி ஒவ்வொரு முறையும் தேடல் பக்கத்தில் இருந்து வெளியே செல்வது தேவை தானா என்று சர்ச் லயன் கேட்கிற‌து.

இதை தவிர்ப்பதற்கான மாற்று வழியாக ஒவ்வொரு இணைப்பிற்கும் ஒரு டேபை பிரவுசருக்குள்ளேயே வரவைக்கலாம்.என்றாலும் ஒவ்வொன்றையும் தனியே கிளிக் செய்து பார்க்க வேண்டும்.

இப்படி அல்லாடுவதற்கு பதிலாக தேடல் பட்டியலில் விருப்பமான இணைப்பை தேர்வு செய்ததுமே அதை கிளிக்கினால் அதே பக்கத்தில் அந்த த‌ளம் தோன்றும்படி செய்கிறது சர்ச் லயன்.இப்படி தோன்றும் தளம் ஆகையால் தேடல் பக்கத்தில் இருந்து வெளியேறாமலேயே அதில் உள்ள இணையதளத்தை பார்க்கலாம்.இப்படி தோன்றும் தளம் ஒரு சில தேடியந்திரங்களில் காணக்கூடிய முன்னோட்ட வசதி இல்லை.அளவில் சிறியதாக இருந்தாலும் முழு தேடியந்திரத்தையும் அதே பக்கத்தில் பார்க்கலாம்.இதே போல எத்தனை தளங்களை வேண்டுமானாலும் அதே பக்கத்தில் திறந்து கொண்டேயிருக்கலாம்.
இதை தான் தேடலில் ஈடுபட்டவாறே இணையத்திலும் உலாவுதல் என்று சர்ச லைன் குறிப்பிடுகிறது.மிகச்சிறிய அம்சம் தான்,ஆனால் தேடல் அனுபவத்தை மேம்படுத்தக்கூடியது.

இதே போல மற்ற தேடியந்திரங்களில் இணையதளங்களை பார்க்க வேண்டும் என்றால் தனியே தேட வேண்டும்.புகைப்படங்கள் அல்லது விடியோக்களை தனியே தேட வேண்டும்.ஆனால் சர்ச்லைனில் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் ஒரே பக்கத்தில் தேடும் வசதி இருக்கிறது.இதை பல்நோக்கு பார்வை என்கிறது சர்ச் லயன்.

தேடும் போது கண்டுபிடித்த இணையதளங்களை அப்படியே சேமித்து வைத்து கொள்ளலாம்.எல்லா தளங்களையும் சேமித்து வைத்து கொள்வதால் மீண்டும் ஒருமுறை ஏற்கனவே பார்த்த தளங்களை பார்க்க விரும்பினால் திண்டாட வேண்டியிருக்காது.

தேடல் முடிவுகளை பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.இமெயில் மூலமும் பகிர்ந்து கொள்ளலாம்.

இவற்றை தவிர இணையவாசிகள் தங்களே புதிய வகையையும் சேர்த்து கொள்ளலாம்.அதாவது புகைப்படம்,வீடியோ போன்ற வழக்கமான வகைகளோடு பிரத்தயேக வகையையும் தேவைக்கேற்ப சேர்த்து கொள்ளலாம்.

இந்த வசதிகளை எல்லாம் அளிப்பதாக பெருமைபட்டு கொள்கிறதே தவிர அதற்கென சொந்தமாக தேடல் தொழில்நுட்பம் கிடையாது.கூகுலின் தேடல் தொழிநுட்பத்தையே பயன்ப‌டுத்துகிறது.இணையவாசிகள் விரும்பினால் கூகுலுக்கு பதிலாக யாஹூ அல்லது பிங் தேடலை பயன்ப‌டுத்தி கொள்ளும் வசதியும் உண்டு.

ஆக கூகுலை அண்டிபிழைக்கும் ஒட்டுண்னி வகை தேடியந்திரங்களில் இதுவும் ஒன்று.ஆனால் கூகுலில் இல்லாத வகையில் தேடல் முடிவுகளை மேம்பட்ட முறையில் பெற வழி செய்கிற‌து.

சர்ச் லயன் மேலும் பல வசதிகளையும் எதிர் காலத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.சொந்த தேடல் தொழில்நுட்பமும் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கிற‌து.

சர்ச லயன் வழங்கும் மற்றொரு வசதி கர்ஜிக்கும் சிங்கம் உடப விருஇம்பிய பின்னணி காட்சியையும் தேர்வு செய்ய முடியும் என்பது தான்.

தேடியந்திர முகவரி;http://www.searchlion.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “சிங்க‌ம் போன்ற தேடியந்திரம்.

  1. Thanks for these kind of informations !

    Reply
  2. LVISS

    melzoo.com gives a preview of the search item on the right side nicely

    Reply
    1. cybersimman

      thanks for sharing

      Reply
  3. pls add me to your circle

    Reply

Leave a Comment

Your email address will not be published.