இணையத்தில் இடையூறு இல்லாமல் வாசிக்க!

டெக்ஸ்ட் மிரர் சேவை இணைய வன்முறை போன்றது தான். ஆனால் எளிமையையும்,சிக்கல் இல்லா தன்மையையும் விரும்புகிறவர்களுக்கு பயனுள்ளது.தவிர எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

டெக்ஸ்ட் மிரர் சேவை அப்படி என்ன செய்கிறது என்றால் இணைய பக்கங்களை உள்ளடக்கம் தவிர வேறு எந்த இடையூறுகளும் இல்லாமல் எளிமையாக படிக்க வழி செய்கிறது.

இடையூறுகள் என்றால் இணைய பக்கத்தில் இடம்பெற்றுள்ள விளம்பரங்கள்,புகைப்படங்கள் மற்றும் பிற இனைப்புகள் போன்றவை தான்.அழகுக்காகவும் அலங்காரத்துக்காகவும் சேர்க்கப்படும் கூடுதல் அம்சங்கள் எல்லாம் நீக்கப்பட்டு கட்டுரை அல்லது செய்தியை மட்டும் படிக்கலாம்.

ஒரு இணைய பக்கம் முழுமை பெறவும் அழகியல் ரீதியாக கவரவும் புகைப்படங்கள் போன்ற‌வை அவசியம்.கூடுதல் விவரங்களுக்காக இணைப்புகள் தேவை.வருவாய்க்காக விளம்பரங்கள் வேண்டும்.ஆனால் பலர் இந்த‌ அம்சங்களை தேவையில்லாத இடையூறாக ,கவன சிதறலாக கருதலாம்.குறிப்பாக இணைய விளம்பரங்க‌ளை பலர் வெறுக்கலாம்.

இவற்றை எல்லாம் பொறுத்து கொண்டு தான் இணையத்தில் உள்ள தகவல்களை பெற வேண்டியுள்ள‌து.ஆனால் டிவிடியில் படம் பார்க்கும் போது விளம்பரங்க‌ள் பாடல் காட்சிகளை வேகமாக ஓடவிட்டு பார்ப்பது போல இணைய‌த்திலும் விளம்பரங்கள்,புகைப்படங்கள் போன்றவற்றை நீக்கிவிட்டு கட்டுரையை மட்டுமே படிப்பதற்கு விரும்பினால் டெக்ஸ்ட் மிரர் இணைய சேவை அதற்கு உதவுகிற‌து.

எந்த கட்டுரையை படிக்க விருப்பமோ அதன் இணைய முகவரியை இந்த தளத்தில் சம‌ர்பித்தால் போதும்,கதிரடிக்கும் இயந்திரம் போல இந்த‌ தளம் விளம்பரம் உள்ளிட்ட இணைப்புகளை நீக்கிவிட்டு கட்டுரையை மட்டும் படிக்க தருகிற‌து.

இணையதள நிர்வாகிகள் மிகவும் ஈட்டுபாட்டோடு பார்த்து சேர்த்து அழகாக வடிவமைக்கும் தளத்தை இப்படி அந்த அம்சஙக்ளை எல்லாம் நீக்கி பார்ப்பது லேசான் வன்முறை தான்.இருந்தாலும் எளிமையை விரும்புகிற‌வர்களுக்கும்,நேரடியாக‌ விஷயத்தை பெற நினைப்பவர்களுக்கும் இந்த‌ சேவை பயனுள்ள‌தாக இருக்கும்.

அதிலும் ஆய்வாளர்கள் மற்றும் பேராசிரியர்களும் கட்டுரையை மட்டுமே படிக்க உதவும் இந்த சேவையை மிகவும் விரும்பக்கூடும்.அதே போல எதையுமே செய்திதாளில் படித்து பழகிய கடந்த தலைமுறையை சேர்ந்தவர்களும் இந்த‌ சேவையை விரும்புவார்கள்.

மேலும் இரண்டு விதங்களில் இந்த சேவையை பயன்ப‌டுத்தலாம்.ஏதாவது இணையதளம் பிளாக் செய்யப்பட்டிருந்தால் அதன் முகவரியை இதில் சமர்பித்து அதில் உள்ள கட்டுரைகளை மட்டும் படிக்கலாம்.அதே போல எந்த கட்டுரையாவது மிக நீள‌மாக இருந்தால் அதனை இங்கு சம‌ர்பித்து ஒரே பார்வையில் அதில் உள்ல விஷயங்க‌ளை பார்த்து படிக்கலாமா வேண்டாமா என தீர்மானித்து கொள்ளலாம்.

ட்கஸ்ட் மிரர் தளத்திற்கு சென்றால் நமக்கு தேவையாக பக்கங்களை சம‌ர்பிப்பதோடு ஏற்கனவே சம‌ர்பிக்கப்பட்ட பக்கங்களையும் பார்க்கலாம்.அந்த பக்கங்களை தேடியும் பார்க்க‌லாம்.முகவரிகள்,கட்டுரை வாசகங்கள்,தேதி ஆகியவற்றின் அடிப்படையில் தேடலாம்.

இணைய முகவரி;http://textmirror.net/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “இணையத்தில் இடையூறு இல்லாமல் வாசிக்க!

  1. மேக்ஸ்தான் 3 உலாவியில் உள்ள வாசகர் முறையையையும் பயன்படுத்தி பாருங்கள்
    http://maxthon.com/

    Reply
  2. Pingback: இணைய வாசிப்புக்கு உதவும் சேவைகள். « Cybersimman's Blog

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *