20 ஆயிரம் புத்தகங்களோடு அழைக்கும் இணையதளம்.

இணையத்தில் புத்தகம் படிக்க உதவும் தளங்களை பொருத்தவரை ரீட் எனி புக் தளத்தை அடித்து கொள்ள முடியாது.கிடைக்கும் புத்தகங்களின் வகைகளிம் சரி அவற்றை இணையத்தில் படிக்க கூடிய அனுபவத்திலும் சரி இந்த தளம் விஷேசமானது.

புதிய புத்தக சேவை தளமான ஹாட் ப்ரி புக்ஸ் தளத்தை இதற்கு நிகரானது என்று சொல்ல முடியாவிட்டாலும் இணையத்தில் புத்தகம் படிக்க விரும்பினால் இந்த தளத்தையும் குறித்து வைத்து கொள்ளலாம்.

20 ஆயிரம் புத்தகங்களோடு அழைக்கும் இந்த தளம் அவற்றை இ புக் வடிவில் அப்படியே படிக்க உதவுகிற‌து.வடிவமைப்பில் பெரிதாக அலங்காரம் எல்லாம் இல்லாமல் மிக எளிமையாகவே இருக்கிறது.அந்த எளிமையும் பளிச் என கவரகூடிய ரகம் அல்ல.

புத்தகங்கள் வரிசையாக அட்டை படங்கலோடு பட்டியலிட்பபட்டுள்ளன.டாப் டென் புத்தகங்கள், டாப் டென் எழுத்தாள‌ர்கள் என தனித்தனியே பட்டியலிடப்பட்டுள்ளன.அவற்றின் கீழே தனியே வகைகள் மற்றும் எழுத்தாளர்கள் என்ற அட்டவனையும் இருக்கிறது.

எந்த புத்தகத்தை கிளிக் செய்தாலும் அவற்றின் பக்கங்கள் அப்படியே நீள்கின்றன.

நிச்சயமாக ரீட் எனி புக் வழங்கும் அழகான ரீடரோடு ஒப்பிட்டால் இது ஒன்றுமே இல்லை.ரீட் எனி புக்கில் புத்தகங்களை படிக்க தனியே ரீடர் இருப்பதோடு அந்த ரீடரும் கிளிக் செய்தவுடன் பக்கத்திலேயே தோன்றும்.இதனால ஏற்படக்கூடிய வாசிப்பு அனுபவம் தொடர்ந்து படிக்க தூண்டும்.

அந்த வகையில் ஹாட் ப்ரி புக்ஸ் தளம் மிக சாதாரணமாக இருந்தாலும் இந்த தளத்திலும் அழகான ஒரு சேவை இருக்கிற‌து.எந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று தெரிந்திருந்தால் இந்த தளத்தில் அந்த புத்தகம் இருக்கிறதா எனேஉ தேடிப்பார்த்து கொள்ளலாம்.

ஆனால் என்ன புத்தகத்தை படிக்கலாம் என்று தீர்மானிக்க முடியாத குழப்பம் இருந்தால் கவலையே வேண்டாம்,சும்மா என்னும் (ரேன்டம்)பகுதியில் கிளிக் செய்தால் இந்த தளமாக ஒரு புத்தகத்தை தேர்வு செய்து அதன பக்கங்களை படிக்க தருகிற‌து.என்ன புத்தகம் வரப்போகிற‌து என்று தெரியாமல் கிளிக்ச் எய்து விட்டௌ காத்திருக்கும் போது ஏதாவது ஒரு புத்தகம் முன்வைக்கப்படுவது சுவாரஸ்யம் தானே.

சில நேரங்களில் வரிசையாக கிளிக் செய்து கொண்டே இருந்தால் அடுத்தடுத்து பல புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்ளலாம்.

இந்த தளம் தரும் மற்றொரு வசதி இ புக வடிவில் படித்து கொண்டிருக்கும் போது ஏதாவது வார்த்தை புரியாவிட்டால் அதன் மீது கிளிக் செய்தால் அதற்கான அர்த்தம் வந்து நிற்கிற‌து.இந்த தளத்தில் உள்ள வை எலாமே ஆங்கில புத்தகங்கள் என்னும் போது இந்த அகராதி சேவை பயனுள்ளது என்பதை சொல்ல வேண்டாம்.

புரியாத சொற்களுக்கு பொருள் தேட அங்கும் எங்கும் அலையாமல் இங்கேயே தெரிந்து கொள்ளலாம்.

இணையதள முகவரி;http://www.hotfreebooks.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “20 ஆயிரம் புத்தகங்களோடு அழைக்கும் இணையதளம்.

  1. Thatchai Kannan

    தமிழ் புத்தகம் எந்த தளத்தில் கிடைக்கிறது…

    Reply
  2. Pingback: பயனுள்ள வலைத்தளங்களை அறிமுகப்படுத்தும் வலைப்பதிவு. « chalkpiece

Leave a Comment to Thatchai Kannan Cancel Reply

Your email address will not be published.